Wednesday, September 18, 2013

அஞ்சறைப்பெட்டி 19.09.2013



  



உள்ளுரில் இருந்து உலகம் வரை........



வணக்கம் நண்பர்களே.

உங்களை எல்லாம் வலைப்பதிவில் சந்தித்து கிட்டத்தட்ட 15 நாட்கள் ஆகிவிட்டது கால ஓட்டத்தில் நானும் முகநூலில் அதிக நேரம் செலவிடுவதால் பதிவுகள் எழுத நேரம் வருவதில்லை. இத்தனைக்கும் தினமும் யோசிக்கும் பதிவுகளை எல்லாம் டைப் செய்து  draft ஆக வைத்திருக்கிறேன் 50க்கும் மேற்றபட்ட பதிவுகள் அதை சரி செய்ய சரியான நேரம் போதவில்லை என்பதால் தினமும் பதிவு எழுத இயலவில்லை. அஞ்சறைப்பெட்டியை மட்டுமாவது வாரம் தோறும் எழுத வேண்டும் என்று கங்கனம் கட்டிக்கொண்டு எழுதி முடித்துவிட்டேன் இன்று.

.......................................


நரேந்திர மோடியை பிரதமர் வேட்பாளராக களம் இறக்கி பாராளுமன்ற தேர்தலுக்கு தயாராகிவிட்டது பாஜக. நரேந்திர மோடி குஜராத்தில் நல்ல ஆட்சி நடத்துகிறார் என்று எல்லா ஊடகமும் சொல்லி இன்று நாட்டு மக்களிடம் மோடி நிறைய எதிர்பார்ப்புக்குள்ளாகி உள்ளார் அந்த எதிர்பார்ப்பை நிறைவேற்றுவாரா? முதலில் காங்கிரசின் வியூகத்தை உடைத்து வெற்றி பெறுவாரா? என்று பல கேள்விகள் தொடங்கி உள்ள நிலையில் 10 ஆண்டு காங்கிரஸ் ஆட்சிக்கு மாற்றாக ஒரு ஆட்சி வேண்டும் என்று எதிர்பார்க்கிறேன் நான்.

 .......................................

தமிழ் ஹிந்து பத்திரிக்கையை கடந்த 2 நாட்களாக படித்து வருகிறேன் நிறைய தகவல்கள் இருக்கின்றன நம் பதிவுலகை போல் நிறைய கட்டுரைகள் இருக்கின்றன ஆனால் அதை படிக்கத்தான் போதிய காலம் இல்லை. இந்த அவரச உலகத்தில் செய்தித்தாளை முழுக்க மேயும் ஆட்கள் குறைவுதான். விடுமுறை நாட்களில் நன்றாக உட்கார்ந்து படித்து பொழுதை போக்கலாம் இதே போல் தினமும் நேரம் செலவழித்து படிப்பது எதிர்பார்க்க இயலாது. லோக்கல் செய்திகளுக்கான முக்கியத்துவம் அதிகம் இல்லை அது போக போக சரியாகிடும் என்று நினைக்கிறேன். தந்தி. தினமலர் எல்லாம் அந்த வட்டார செய்திகளை அதிகம் வெளியிட்டுத்தான் பேர் வாங்கி இன்றும் நிரந்திரமாக நிற்கின்றனர்.. பார்ப்போம் வரும் நாட்களில்..

தமிழ் பத்திரிக்கைகள் அனைத்தும் நெட்டில் அவர்கள் பக்கத்தில் இலவசமாக தருகின்றனர் ஆனால் இந்து மட்டும் பணம் கொடுத்து படிக்க வேண்டி உள்ளது.

.......................................


சமீபத்தில் வருத்தமில்லா வாலிபர் சங்கம் படம் பார்த்தேன் மிக குறைந்த பொருட்செலவில் நல்ல நகைச்சுவையுடன் கூடிய படம். படம் முழுக்க சிரிக்கவேண்டி இருந்தது இருந்த மனச்சுமை எல்லாம் காணமல் போனது போல ஓர் எண்ணம். படம் பார்த்து கதையில் ஈர்த்து அதற்காக அழுத காலம் எல்லாம் போய் படத்துக்கு போனமா சிரிச்சமா வந்தமா என்பது தான் இன்றைய காலத்திற்கு ஏற்ற சினிமா. நகைச்சுவை நடிகர்கள் எல்லாம் கலக்குவது மிக சந்தோசத்திற்குரியது.. இனி இந்த மாதிரி படங்களை நிறைய எதிர்பார்க்கலாம்.
 
.......................................  
மால்களில் சினிமா பார்க்க சென்றால் குறைந்த பட்சம் 3 பேருக்கு டிக்கெட், பாப்கார்ன், பப்ஸ், கார்பார்க்கிங் செலவு என குறைந்த பட்சம் 1000 தொடுகிறது பட்ஜெட். எம் பட்ஜெட்டுக்கு மாசத்துக்கு ஒரு படம் தான் பார்க்க முடியும் போல.


..............................

முதல்வரின் 10 ரூபாய் குடிநீர் திட்டம் மக்களிடம் மிக வரவேற்பை பெற்றுள்ளது சந்தோசத்திற்குரியது. எல்லா இடங்களிலும் கிடைத்தால் இன்னும் மகிழ்ச்சியாக இருக்கும். அம்மாவின் உணவு திட்டம் மிக வெற்றியான திட்டம் என்பதில் மாற்றுக்கருத்துக்கு இடம் இல்லை.

..............................

சென்னையில் ஆட்டோ கட்டணம் வரைமுறைப்படுத்தப்பட்டது மிக சந்தோசத்திற்குரியது. வடபழனியில் இருந்து சென்ரலுக்கு வருவதற்கு செப் 1ம் தேதி 220 ரூபாய் கேட்டனர் அப்புறம் துரத்தி புடிச்சி நிறைய வண்டிகளை பார்த்து பேசி 160 ரூபாய்க்கு வந்தோம். அப்போது ஆட்டோக்காரர் கட்டண விகிதம் உள்ள அட்டையை காண்பித்தார் அதே தொலைவிற்கு 160 போட்டு இருந்தது. அப்போது அந்த ஆட்டோக்காரர் எதுக்கு சார் மக்கள் காசை புடுங்கனும் எனக்கு இந்த அட்டை கொடுத்த நாள் இருந்து இதில் உள்ள காசுக்குத்தான் ஆட்டோ ஓட்டுகிறேன் என்றார் மகிழ்ச்சியாக. இப்படியும் நிறைய நல்ல மனம் படைத்த ஆட்டோ ஓட்டுநர்களும் இருக்கத்தான் செய்கின்றனர். அதே தொலைவிற்கு அதிக 220 கேட்கும் நபர்களும் இருக்கத்தான் செய்கின்றனர்.




தமிழக அரசு பறக்கும் படை அமைத்து மீட்டர் உட்பட ஆட்டோவின் உரிமங்களை பரிசோதிப்பதை நிறைய பேர் வரவேற்றும் நிறைய ஆட்டோக்காரர்களும் எதிர்ப்பும் தெரிவிக்கின்றனர்.


எது எப்படியோ பொதுமக்கள் ஆட்டோவில் மீட்டர் போட்டால் மட்டுமே ஓட்டுவேன் என்று மீட்டர் போடாத வண்டியில் ஏறுவதை தவிருங்கள் நல்லதே நடக்கும் என்று எதிர்பார்க்கலாம்...


..............................

தொலைக்காட்சியில் செய்திகளை பார்க்கும் போது வாரத்திற்கு இருமுறை ஊரிற்குள் யாணை வந்தது பொதுமக்கள் பாதிப்பு என்று தலைப்பு செய்தியாக போடுகின்றனர் ஆனால் யாணை இருக்கும் இடத்தில் வீட்டை கட்டிவிட்டனர் இதனால் யாணை வழிதவறுகிறது என்பதை மட்டும் ஏனோ சொல்ல தயங்குகின்றனர். பொதுமக்களுக்கு பாதிப்பு சரிதான். விலங்குகளுக்கு பாதிப்பு என்பதை மட்டும் ஏனோ விழுங்குகின்றனர். விலங்குகள் தொலைக்காட்சி பார்ப்பதில்லை அதனால் ரேட்டிங் எகிறுவதில்லை என்பதாலோ...

..............................

வீட்டில் எப்போதும் மகனுடன் பேசும் போது அப்பா உன் நண்பர்கள் பெயரைச் சொல்லு என்பான் நான் Boy Friend ya., Girl Friend ya., என்பேன்...
தினமும் பல நண்பர்கள் பெயரை சொல்வேன் அப்படி நேற்று சொல்கையில் நம்ம ப்ளாக்கர் நண்பர்கள் ஞாபகம் வர உடனே

பன்னிக்குட்டி ராம்சாமி
விக்கியுலகம் வெங்கட்
ஆரூர் மூனா
இலக்கியச்செம்மல் வெளங்காதவன்
வால் பையன்
அஞ்சா சிங்கம்
மங்குனி அமைச்சர்
ஸ்கூல் பையன்
மாலுமி. ப்ரொபசனல் குடிகாரன்
இப்படி நம்ம மக்கள் பேரைச் சொன்னதும் அவன் நல்லாயிருக்குப்பா என்றான்.. அடுத்த நாள் மனைவியின் தோழிகள் வீட்டில் அவனிடம் பேசும் போது அப்பா எங்கே என்றதும் எங்கப்பா அவர் நண்பரை பார்க்க போய்யிருக்கிறார்.. யாருடா உங்கப்பா நண்பர் என்று கேட்க பன்னிக்குட்டி ராமசாமியும், வௌங்காதவனும் என்று அவன் சொல்ல வீட்டில் ஒரே சிரிப்பலையாம்... நான் உள்ளே போனதும் உங்களுக்கு நல்ல பேர்ல நண்பர்களே இல்லையா.. உங்க ப்ளாக் பேரை எல்லாம் பையங்கிட்ட சொல்லி மானத்த வாங்கதீங்கோ என்கிறாங்க... நான் மட்டும் தான் இப்படி பன்னு வாங்கிறேனா.. இல்ல எல்லாருக்கும் இதே நிலைமை தானா.... டவுட்டு...

 
தகவல்



திபெத்தில் 4,334 மீட்டர் உயரத்தில் இருக்கும் பாங்டா விமான நிலையமே உயரமான இடத்திலிருந்து செயல்படும் விமான நிலையம் என்ற பெருமையை இதுவரை பெற்றிருந்தது. தற்போது சுற்றுலாத்துறையை விஸ்தரிக்கும் வண்ணமும், நாட்டின் மேற்குப் பகுதியில் நடைபெறும் அரசியல் அமைதியின்மையைக் கண்காணிக்கவும் 4,411 மீட்டர் உயரத்தில் புதிய விமான நிலையம் ஒன்றினை சீனா அமைத்துள்ளது. டயோசெங் யாடிங் என்று பெயரிடப்பட்டுள்ள இந்த விமான நிலையம், உயரமான இடத்தில் அமைந்துள்ள முதல் சிவிலியன் விமான நிலையம் என்ற பெருமையைப் பெறுகின்றது.

இத்தகைய உயரத்தில் விமானத்தின் உந்துசக்தி குறைவாக இருக்கும் என்பதால் நீளமான ஓடுதளங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இங்குள்ள 4,200 மீட்டர் நீளமுள்ள ஓடுபாதை நியூயார்க்கின் ஜான் எப் கென்னடியில் உள்ளதைவிட 242 மீட்டர்தான் குறைவாக உள்ளது. பயணிகளுக்கும்கூட காற்றழுத்தக் குறைவினால் வரும் நோய்கள் ஏற்படக்கூடும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.

நேற்று முதல் இந்த புதிய விமான நிலையத்திலிருந்து பயண சேவைகள் தொடங்கப்பட்டுள்ளன. பொதுவாக இங்கிருந்து பேருந்து மூலம் சிச்சுவான் மாகாணத்தின் தலைநகரான செங்டுவிற்குச் செல்ல இரண்டு நாட்கள் பிடிக்கும். இந்த விமானப் பயணம் அதனை 65 நிமிடங்களாக குறைக்கின்றது. இந்த மாத இறுதிக்குள் மற்ற சேவைகள் தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

திபெத்தின் நுழைவாயிலாக விளங்கும் இந்தப் பகுதியின் கீழ் வாழும் திபெத்திய மக்களின் மத்தியில் உள்ள எதிர்ப்பைக் குறைத்து, பொருளாதார வளர்ச்சியை நிலைப்படுத்தி ஒரு சுற்றுலாப் பகுதியாக இந்த இடத்தை மேம்படுத்த சீனா முயன்று வருகின்றது.


தத்துவம்




பிறர் செய்யும் தவறுகளிலிருந்து பாடம் கற்றுக் கொள்ளுங்கள், ஏனெனில் நீங்களாகவே பட்டு உணர்ந்து பாடம் கற்கவேண்டுமெனில் இந்த ஆயுள் போதாது.

சிந்தித்து, சிந்தித்துப் பார்ப்பதால் மட்டும் சிறந்த
 எண்ணங்கள் உதிப்பதில்லை. மனம் மட்டும்
 ஒழுங்காக இருந்தால் நல்ல எண்ணங்கள் தாமாகவே உதிக்கும்.


 வலிமையே மகிழ்ச்சிகரமான, நிரந்தரமான, வளமான, அமரத்துவமான வாழ்க்கை ஆகும்.



17 comments:

  1. கங்கனம் கட்டிக்கொண்டு மேலும் தொடருங்கள்...

    /// மனம் மட்டும் ஒழுங்காக இருந்தால் நல்ல எண்ணங்கள் தாமாகவே உதிக்கும்... ///

    சிறப்பான தத்துவம் சங்'கவி'... வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி தனபாலன்...

      Delete
  2. பயங்கரவாத மிருகம் மோடி பிரதமராக வரவேண்டும் என்று நேரிடையாக சொல்ல துப்பில்லாமால் காங்கிரசுக்கு மாற்றான ஆட்சி வரவேண்டும் என்று சொல்லி இருப்பதிலிருந்து தெரிகிறது உங்களைப்போன்றோரால் நிச்சயம் நேர்மையாக இருக்க முடியாது என்று.....

    வெறும் மதவெறி பத்திரிகை விபச்சாரிகளின் செய்திகளை மட்டும் படித்துவிட்டு அந்த நாய் குஜராத்தில் நல்லாட்சி செய்கிறான் என்று சொல்வதிலிருந்து தெரிகிறது உங்கள் இதயங்களில் மதவெறிக் குப்பைகள் நிறைந்துள்ளன என்று.......

    வருத்தபடாத வாலிபர் சங்கம் என்ற குப்பை படத்தை நல்ல படம் என்பதிலிருந்து தெரிகிறது உங்கள் மூளை பழுதடைந்து உள்ளதென்று...

    ReplyDelete
    Replies
    1. //பயங்கரவாத மிருகம் மோடி பிரதமராக வரவேண்டும் என்று நேரிடையாக சொல்ல துப்பில்லாமால் காங்கிரசுக்கு மாற்றான ஆட்சி வரவேண்டும் என்று சொல்லி இருப்பதிலிருந்து தெரிகிறது உங்களைப்போன்றோரால் நிச்சயம் நேர்மையாக இருக்க முடியாது என்று.....//

      இன்னும் எங்கள் தலைவி முடிவு சொல்லவில்லை.. அதனால் இப்படி சொல்லி உள்ளேன். 3ம் அணி அமைத்து அதில் யாராவதும் பிரதமர் பொறுப்பேற்றாலும் வரவேற்பேன்.. இன்னும் சொல்லப்போனால் காங்கிரஸ்க்கு மாற்று வரவேண்டும் என்பது தான் அனைவரும் நினைக்கும் ஒன்று...

      பயங்கரவாத மிருகம் என்கிறீர்கள் அப்படியானால் எப்படி 3 முறை முதல்வரானார் என்பதை சொல்ல இயலுமா...

      //வெறும் மதவெறி பத்திரிகை விபச்சாரிகளின் செய்திகளை மட்டும் படித்துவிட்டு அந்த நாய் குஜராத்தில் நல்லாட்சி செய்கிறான் என்று சொல்வதிலிருந்து தெரிகிறது உங்கள் இதயங்களில் மதவெறிக் குப்பைகள் நிறைந்துள்ளன என்று.......//

      சரி குஜராத் போய் பார்த்து வந்த நீங்க சொல்லுங்க அங்க எப்படி ஆட்சி நடக்கின்றது என்று.. நல்லாட்சி இல்லை என்றால் நிருபிக்க வேண்டும்.. இல்லை அதற்கான ஆதாரம் உள்ள லிங்கை அனுப்பவேண்டும்... வெற்றுப்பேச்சுக்கு வேலை இல்லீங்கோ...


      // வருத்தபடாத வாலிபர் சங்கம் என்ற குப்பை படத்தை நல்ல படம் என்பதிலிருந்து தெரிகிறது உங்கள் மூளை பழுதடைந்து உள்ளதென்று...//

      அது குப்பை படமாக இருப்பதில் எனக்க கவலை இல்லை நான் மனதார 3 மணி நேரம் சிரிக்கும் படம் தான் எனக்கு வேண்டும்.. எனக்கு பிடித்தது எல்லோருக்கும் பிடிக்க வேண்டிய அவசியமில்லை. உங்களுக்கு பிடிக்கவில்லை என்பதற்கான என் மூளையை பற்றி குறை சொல்வதில் நியாயம் இல்லை.. என் கருத்துக்கு எதிர் கருத்து சொல்லுங்க விவாதிப்போம்.. மூளை எனக்கு இல்லை தங்களுக்கு இருந்தா ஒரு 1 ரூபாய்க்கு கடன் கொடுங்க..

      Delete
    2. நான் குஜராத் சென்று வந்துள்ளேன் அங்கு அகமதாபாத் சுரத் போன்ற நகரங்கள் வரல்ர்ச்சியடைந்த நகரங்கள் என்று சொன்னாலும், சென்னை அளவுக்கு கூட இல்லை..
      அந்த பயங்கரவாதி 3 முறை முதலமைச்சர் ஆனது நல்லாட்சி நடத்துகிறான் என்பதால் அல்ல...அதற்க்கு நான் லிங்க் கொடுத்துதான் உங்களுக்கு தெரியவேண்டும் எனபது மூடத்தனனம்...

      முன்னாள் நீதியரசர், பத்திரிகை பிரஸ் கவுன்சில் தலைவர் திரு மார்கண்டேய கட்ஜு அவர்களின் அறிக்கைகளை படித்தாலே பயங்கரவாதி மோடி என்பவனை பற்றி அறிய வரலாம்..
      அப்படியும் நம்ப மாட்டேன் எனபது பூனை கண்ணைமூடிக்கொண்டு உலகம் இருண்டு விட்டதாக நினைத்துக்கொள்வதை போன்றுதான்....

      அந்த லிங்க்

      http://marmayogie.blogspot.in/2012/12/blog-post_22.html

      Delete
    3. நான் குஜராத் சென்று வந்துள்ளேன் அங்கு அகமதாபாத் சுரத் போன்ற நகரங்கள் வரல்ர்ச்சியடைந்த நகரங்கள் என்று சொன்னாலும், சென்னை அளவுக்கு கூட இல்லை..
      அந்த பயங்கரவாதி 3 முறை முதலமைச்சர் ஆனது நல்லாட்சி நடத்துகிறான் என்பதால் அல்ல...அதற்க்கு நான் லிங்க் கொடுத்துதான் உங்களுக்கு தெரியவேண்டும் எனபது மூடத்தனனம்...

      முன்னாள் நீதியரசர், பத்திரிகை பிரஸ் கவுன்சில் தலைவர் திரு மார்கண்டேய கட்ஜு அவர்களின் அறிக்கைகளை படித்தாலே பயங்கரவாதி மோடி என்பவனை பற்றி அறிய வரலாம்..
      அப்படியும் நம்ப மாட்டேன் எனபது பூனை கண்ணைமூடிக்கொண்டு உலகம் இருண்டு விட்டதாக நினைத்துக்கொள்வதை போன்றுதான்....

      அந்த லிங்க்

      http://marmayogie.blogspot.in/2012/12/blog-post_22.html

      Delete
  3. வெகு நாட்களுக்கு பிறகு இந்த பதிவு...... படிக்க சந்தோசமாக இருந்தது ! அது என்ன ஒவ்வொரு வாரமும் சீனா பற்றி கண்டிப்பாக ! நடக்கட்டும், நடக்கட்டும்.....!

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும், கருத்துக்கும் நன்றி நண்பா...

      Delete
  4. என்னடா பதிவர் திருவிழாவுக்கு அப்புறம் ஆளையே காணோம்னு பாத்தேன்! சுவையான தகவல்கள்! தொடருங்கள்! நன்றி!

    ReplyDelete
  5. பன்னிக்குட்டி...வெளங்காதவன்....நல்ல காமெடி!

    ReplyDelete
  6. பல செய்திகளை சொல்லி சென்ற படி ப்ளாக் நண்பர்கள் பற்றியும் சொல்லியது சுவார்யஸ்யம்.

    ReplyDelete
  7. அன்பின் சங்கவி - அஞ்சரைப் பெட்டி அருமை - மோடி, தமிழ் இந்து பத்திரிகை,வ.வா.சங்கம் படம், அம்மாவின் 10 ரூபாய் குடிநீர திட்டம், ஆட்டோ கட்டணம், நண்பர்களை அறிமுகப் படுத்தும் போது வெளங்காதவன் பன்னிக்குட்டி என்று கூறலாமா - அனைத்தௌக் கருத்துகளும் நன்று - நல்வாழ்த்துகள் -நட்புடன் சீனா

    ReplyDelete
  8. அஞ்சறைப்பெட்டி நிறைந்து நிற்கிறது. ப்ளாக் நண்பர்கள் ரசித்தேன்.

    ReplyDelete
  9. வலிமையே மகிழ்ச்சிகரமான, நிரந்தரமான, வளமான, அமரத்துவமான வாழ்க்கை ஆகும்.

    பலமே வாழ்வு ..
    பலவீனமே மரணம்..

    அஞ்சரைப்பெட்டி அருமை..பாராட்டுக்கள்..!

    ReplyDelete
  10. பல்சுவையும் கொடுத்து கலக்கிட்டீங்க...
    பையன் வெவரமா இருக்கானே... போட்டுக் கொடுத்துட்டானே...

    ReplyDelete
  11. இடைவேளைக்கு அப்புறம் இந்த அஞ்சறைப் பெட்டி நல்லா இருக்கு..
    படமும் நல்லா இருந்துச்சு..
    மோடிய பத்தி நல்லது சொன்னாலும் திட்டுறாங்க.. தவறா சொன்னாலும் திட்டுறாங்க.. என்ன செய்யறதுனே தெரியல :(
    10ரூபா குடிநீர் பற்றி இரண்டு விதமான கருத்துகளும் இருக்கு.
    யானைய பற்றி எனக்கும் அதே கருத்து தான்..

    ReplyDelete
  12. அஞ்சறைப் பெட்டியின் செய்திகள் அனைத்தும் படித்தேன்.... ரசித்தேன்.

    தொடர்ந்து வலைப்பூவிலும் எழுதலாம்... ஒண்ணும் தப்பில்லை! ஒரேடியா முகப்புத்தகத்தில் தொலைந்து விடவேண்டாம்....

    ReplyDelete