உள்ளுரில் இருந்து உலகம் வரை........
காவிரியில் நீர்
வேண்டி இன்று பேச்சு வார்த்தைக்கு செல்கிறார் முதல்வர் நிச்சயம் இந்த
பேச்சு வார்த்தையில் அனைவரின் எதிர்பார்ப்பும் தண்ணீர் வேண்டும் என்பது
தான். கர்நாடகம் நமக்கு நதிநீர் ஆணையப் பங்கீட்டின் படி கொடுக்க வேண்டிய
நீரை கொடுத்தால் போதுமானது. மேட்டூர் அணையில் 50 கன அடி தண்ணீரை
வைத்துக்கொண்டு பல இலட்சம் ஏக்கர் பயிர்கள் கருகி வாடும் நிலையில் நமக்கு
தண்ணீர் கொடுத்தால் தான் நமது விவசாயிகளின் வாழ்வாதரார் பிரச்சனையின்றி
முடியும்...
தண்ணீர் இல்லை எனில் அந்த பயிர்களும் கருகி அதை நம்பி விவசயாயம் செய்த விவசாயிகள், கூலித்தொழிலாளிகள் முதல் விளைச்சலைப்பயன் படுத்தும் நாம் வரை அனைவரும் மிக பாதிக்கப்படுவாம் என்பது தான் நிதர்சனம்...
தண்ணீர் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் நானும்....

........................................................... .....
மணல் பிரச்சனை வெகுமாக இன்றைய நடுத்தரமக்களை மிகவும் பாதித்துள்ளது ஒரு லோடு மணல் 20 ஆயிரம் என்றால் எப்படி வீடு கட்டுபவர்களும், கட்டுமானப்பணி மேற்கொண்டவர்களும் கட்டிடங்களை கட்டுவது. 3 ஆயிரம் இருந்த மணல் 6 ஆயிரம் ஆகி இன்று 20 ஆயிரத்தில் வந்து நிற்கின்றது.
அரசு தைரியான பல நடவடிக்கைகள் எடுத்து இந்த மணல் பிரச்சனையை விரைவில் தீர்க்கும் என்று எதிர்பார்ப்போம்...
............................................................ ..............................
சில்லரை வணிகத்தில் அந்நிய முதலீடு இதற்கு கார்ப்பேரேட் நிறுவனத்தில் பணி புரிபவர்களும் அப்பர் மிடில் கிளாஸ்க்களும் நிச்சயம் ஆதரவு தெரிவிப்பார்கள். இதனால் பாதிப்படைவது நிச்சயம் சில்லரை வணிகர்கள் தான். சில்லரை வணிபத்தை பற்றி விரிவான கட்டுரையை விரைவில் எனது கருத்துக்களை பதிகிறேன்...
............................................................ .............................. ......
சமீபத்தில் கேரளாவிற்கு சென்று இருந்தோன் அதிக நேரம் ரயில்
பயணங்கள் தான் மேற்கொள்ள வேண்டி இருந்தது. தென் இந்தியாவில் அதிகமாக ரயில்
வண்டியை உபயோகிப்பவர்கள் கேரள மக்களாகத்தான் இருப்பர். சூப்பர் பாஸ்ட்
முதல் அனைத்து ரயில்களும் நிறைய இடங்களில் நின்று செல்கின்றன. அதோ போல்
முக்கிய தளங்களுக்கு எல்லாம் ரயில் போக்குவரத்து உள்ளது. கொச்சியில்
இருந்து தினமும் திருவனந்தபுரம் வரை வேலைக்கு சென்று திரும்புபவர்கள் நிறைய
பேர் உள்ளனர் அவர்களிடம் பேசியதில் அவர்கள் பேருந்தை விட அதிகம்
ரயிலைத்தான் பயன்படுத்துகிறோம் என்றனர்.
........................................................... .............................. ......
கேரளத்தில் ஒருவரிடம்
வழிகேட்டால் சரியாக சொல்ல மாட்டார்கள் மலையாளத்தில் கேட்டால் தான்
சொல்வார்கள் என்று நிறையபேர் சொல்லக்கேட்டதுண்டு ஆனால் கொச்சி, கோட்டயம்,
திருவனந்தபுரம் என அனைத்து இடங்களிலும் தமிழில் தான் வழிகேட்டேன் தவாறகவோ,
சொல்ல மறுத்தவர்களோ என யாரும் இல்லை கேட்டதற்கு சரியான விளக்கங்களை
சொன்னார்கள்..
கேரளாவில் அரசு அனுபமயுடன் கள் கிடைக்கிறது. சரக்கு கடையில் விசாரித்த போது நம்ம ஊரை விட அங்கு சரக்கு விலை குறைவுதான். எல்லா சரக்குகளும் தாராளமாக கிடைக்கிறது. என் நண்பர் இராணுவத்தில் வேலை செய்ததால் எனக்கு மிலிட்ரி சரக்கு ஏகபோகமாக கிடைத்தது..

......................................................... .............................. ........
சூரிய குடும்பத்தில் உள்ள கிரகங்களில் செவ்வாய் 4-வது கிரகமாக உள்ளது.
இது சூரியனில் இருந்து 22.79 கோடி கி.மீட்டர் தொலைவில் உள்ளது. இது ஒரு
முறை சூரியனை சுற்றிவர 687 நாட்கள் எடுத்துக் கொள்கிறது. பூமியில் இருந்து 5
கோடியே 46 லட்சம் கி.மீட்டர் தொலைவில் உள்ளது.
இதன்
மேற்பரப்பில் காணப்படும் கருப்பு ஆக்சைடு இக்கோளை சுற்றி சிவப்பாக
காணப்படுவதால் இது 'செவ்வாய்' என அழைக்கப்படுகிறது. இதன் மேற்பரப்பு
சந்திரனில் உள்ளது போன்று கிண்ணக் குழிகளையும், பூமியில் உள்ளது போன்ற
எரிமலைகள், பள்ளத்தாக்குகள், பாலைவனங்கள், பனி மூடிய துருவ பகுதிகளையும்
கொண்டது.
செவ்வாய் கிரகம் குறித்து அமெரிக்கா
உள்ளிட்ட நாடுகள் ஆய்வுகள் மேற்கொண்டன. பின்னர் 1965-ம் ஆண்டில் அங்கு
தண்ணீர் இருப்பதை கண்டு பிடித்தனர். இதை தொடர்ந்து அங்கு உயிரினங்கள் வாழ
கூடிய சாத்தியம் உள்ளனவா? என்பதை கண்டறிய அமெரிக்க நாசா விண்வெளி மையம்
ஆய்வு மேற்கொண்டுள்ளது.
அதற்காக கடந்த ஆண்டு நவம்பர்
மாதம் ரோவர் விண்கலத்தை செவ்வாய்க்கு அனுப்பியது. அது இந்த ஆண்டு ஆகஸ்டில்
செவ்வாயில் தரை இறங்கியது. ரோவருடன் கியூரியா சிட்டி என்ற ரோபோ ஆய்வு
கூடமும் இணைத்து அனுப்பப்பட்டுள்ளது. அது அதிநவீன தொழில் நுட்பத்துடன்
கூடிய கருவிகளை உள்ளடக்கியது.
அவை செவ்வாய்
கிரகத்தின் சுற்று சூழல், மண், மலை காற்று, தட்ப வெப்ப நிலை போன்றவற்றை
ஆராய்ந்து போட்டோ எடுத்து பூமிக்கு அனுப்பும் திறன் வாய்ந்தவை. தற்போது அவை
செவ்வாய் கிரகத்தில் உள்ள மண், பாறை போன்றவற்றை போட்டோ எடுத்து
அனுப்பியது.
சமீபத்தில் அங்கு வீசிய புழுதி
புயலையும் படம் பிடித்தது. அவற்றையெல்லாம் ஆராய்ந்த நாசா விஞ்ஞானிகள்
செவ்வாய் கிரகம் உயிரினங்கள் வாழ தகுதி வாய்ந்த கிரகம் என்பதை
கண்டுபிடித்துள்ளனர். எனவே செவ்வாய் கிரகத்தில் மக்களை குடியேற்ற
திட்டமிடப்பட்டுள்ளது. அதற்கான அறிவிப்பை அமெரிக்காவின் ஸ்பேஸ் எக்ஸ்
நிறுவனம் அறிவித்துள்ளது.
அமெரிக்கா, ரஷியா, ஜப்பான்
உள்ளிட்ட உலக நாடுகள் இணைந்து சர்வதேச விண்வெளி ஆய்வு மையம் அமைத்து
வருகின்றனர். அதற்கு தேவையான பொருட்களை விண்கலத்தில் ஏற்றிச் சென்று இந்த
நிறுவனம் சாதனை படைத்தது.
பரபரப்பான சாலைகளின் ஒரம் உள்ள வீடுகளில் வசிக்கும் குழந்தைகளுக்கு மனஇறுக்க நோயால் பாதிக்கப்படும் அபாயம் இரண்டு மடங்காக உள்ளது என சமீபத்திய ஆய்வு முடிவுகள் எச்சரிக்கை விடுத்துள்ளன. குழந்தையின் கருப்பருவத்தில் இருந்து, ஒரு வயது வரையிலான காலகட்டத்தில், வாகன போக்குவரத்து மிகுந்த பரபரப்பான சாலையோரங்களில் உள்ள வீடுகளில் வசிக்கும் குழந்தைகளுக்கு, வாகனங்கள் வெளியிடும் புகை மாசுக்களால் பாதிக்கப்படும் அபாயம் அதிகமாக உள்ளது.
இதனால், குழந்தைகளின் நோய் தாக்குதல் அபாயம் இரட்டிப்பு ஆகும் வாய்ப்புகள் அதிகம் உள்ளன. வாகன போக்குவரத்து மாசுக்கள் மிக அதிகமாக உள்ள பகுதிகளில் வசிக்கும் குழந்தைகளுக்கு 3 மடங்காகவும் இந்த ஆபத்து உயரக்கூடும் எனவும் கலிபோர்னியா ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
......................................................... .............................. ........
பரபரப்பான சாலைகளின் ஒரம் உள்ள வீடுகளில் வசிக்கும் குழந்தைகளுக்கு மனஇறுக்க நோயால் பாதிக்கப்படும் அபாயம் இரண்டு மடங்காக உள்ளது என சமீபத்திய ஆய்வு முடிவுகள் எச்சரிக்கை விடுத்துள்ளன. குழந்தையின் கருப்பருவத்தில் இருந்து, ஒரு வயது வரையிலான காலகட்டத்தில், வாகன போக்குவரத்து மிகுந்த பரபரப்பான சாலையோரங்களில் உள்ள வீடுகளில் வசிக்கும் குழந்தைகளுக்கு, வாகனங்கள் வெளியிடும் புகை மாசுக்களால் பாதிக்கப்படும் அபாயம் அதிகமாக உள்ளது.
இதனால், குழந்தைகளின் நோய் தாக்குதல் அபாயம் இரட்டிப்பு ஆகும் வாய்ப்புகள் அதிகம் உள்ளன. வாகன போக்குவரத்து மாசுக்கள் மிக அதிகமாக உள்ள பகுதிகளில் வசிக்கும் குழந்தைகளுக்கு 3 மடங்காகவும் இந்த ஆபத்து உயரக்கூடும் எனவும் கலிபோர்னியா ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
தகவல்
2013 இல் உங்கள் குழந்தை சுவிற்சர்லாந்தில் பிறக்கட்டும்!
2013 இல் ஒரு குழந்தை பிறக்க வேண்டுமாயின் சுவிற்சர்லாந்தில் பிறக்க வேண்டும் என்கிறார்கள் 'The Economist' ஆய்வாளர்கள்.அதாவது ஒரு நாட்டின் சுகாதாரத்தன்மை, வன்முறையற்ற சூழல், அரசியல் நிலைமை, பூகோள அமைப்பு என்பவற்றின் அடிப்படையில் இனி வருங்கால சந்ததியினருக்கு உலகின் எந்த நாடு மிகச்சிறந்த வளமான வாழ்க்கையை கொடுக்க கூடியது என The Economist இன் Econimist Intelligence Unit ஒரு ஆய்வு நடத்தியது. 2030 களில் அந்நாடுகளின் பொருளாதார, சமூக நிலைமைகள் எப்படி இருக்கலாம் எனவும் இதன் போது ஆராயப்பட்டது.
இறுதியில் வெளியான முடிவுகளின் படி இப்பட்டியலில் சுவிற்சர்லாந்து முதலிடத்தை பிடித்துள்ளது. ஆஸ்திரேலியா - நோர்வே ஆகிய நாடுகள் அடுத்தடுத்த இடங்களை பிடித்துள்ளன. முதல் பத்துக்குள் ஹாங்காங் - சிங்கப்பூர் போன்ற நாடுகளும் இடம்பிடித்துள்ளன.
முதல் 10 நாடுகளுக்குள் 50% வீதமானவை ஐரோப்பிய நாடுகளே. ஐரோப்பாவின் மிகப்பெரிய பொருளாதார வளம் கொண்ட ஜேர்மனி, பிரான்ஸ், இங்கிலாந்து ஆகிய நாடுகள் பட்டியலில் பின் தள்ளியே நிற்கின்றன. வாக்கெடுப்புக்கு தெரிவு செய்யப்பட்ட முதல் 71 நாடுகளில் இந்தியாவுக்கு 66 வது இடம் கிடைத்துள்ளது.
அறிமுக பதிவர்
இந்த வார அறிமுக திருபவனம் வலைத்தளம் என்ற பெயரில் எழுதி வருகிறார். இவருடைய மருத்துவக்குறிப்புகள் மற்றும் நிறைய அறியாத்தகவல்களை இவர் பதிவில் காணலாம்...
http://newstbm.blogspot.in/
தத்துவம்
நாம் செய்யும் தவறுகளுக்கு அனுபவம் என்னும் பெயர் சூட்டுகிறோம்.
உங்கள் குறைகளை நீங்களே அடையாளம் கண்டுகொள்வது தான் வளர்ச்சியின் அடையாளம்...
ஆயிரம் வீண் வார்த்தைகளைவிட இதமான ஒரு வார்த்தை சிறந்தது. - புத்தர்
உங்கள் குறைகளை நீங்களே அடையாளம் கண்டுகொள்வது தான் வளர்ச்சியின் அடையாளம்...
ஆயிரம் வீண் வார்த்தைகளைவிட இதமான ஒரு வார்த்தை சிறந்தது. - புத்தர்