உள்ளுரில் இருந்து உலகம் வரை........
தற்போது இணையஉலகில் பரபரபப்பான விசயம் சின்மயி ராஜன் விவகாரம் தான் இவர்கள் பிரச்சனையில் புகார் கொடுத்ததும் உடனே இதன் மேல் நடவடிக்கை எடுத்ததில் எனக்கு உடன்பாடில்லை ஊரில் எத்தனையோ முக்கிய பிரச்சனைகள் இருக்கும் போது இதற்கு மட்டும் ஏன் முக்கியத்துவம் இதற்கு முக்கியத்துவம் கொடுத்ததால் இனி இணையத்தில் தனிநபர் தாக்குதல் எதிர் கருத்துக்கள், மாற்றுக்கருத்துக்கள் நிச்சயம் இனி வரும் நாட்களில் குறையும்... இந்த பிரச்சனை பற்றி நண்பர் அதிஷா அவர்கள் வெட்டி எறியப்படும் சிறகுகள் என்ற தலைப்பில் எழுதி கட்டுரை மிக உண்மையான ஒன்று...
............................. .............................. .....
நீலம் புயல் ரொம்ப நீண்டு சென்னையை மிக பாதிப்புக்களாக்கிவிட்டது...
மழையைக்காணம் மழையைக்காணம் என்று கூப்பாடு போட்டோம் இன்று நின்றால் போதும்
என்ற அளவில் உள்ளது. இந்த புயலுக்காக மாவட்ட நிர்வாகங்கள் எடுத்த
முன்எச்சரிக்கை நடவடிக்கை மிக பாராட்டுக்குரியது. அதிக சேதம் இல்லை
என்றாலும் நிறைய இடங்கிளில் மரங்கள் விழுந்து கிடக்கின்றன.
............................................................ ..............................
தமிழகத்தில் தற்போதைய பிரச்சனையான மின்வேட்டு விரைவில் தீர்க்கப்படும் என்று சொல்கின்றனர் இது எந்த அளவிற்கு உண்மை என்று போக போகத்தான் தெரியும். இந்த மின்வெட்டால் மிக பாதிப்புக்குள்ளாவவது சிறு தொழில் மையங்கள் தான். தினமும் வேலை செய்யும் நேரத்தை விட சும்மா இருக்கும் நேரம் தான் அதிகம் என்று புலம்ப ஆரம்பித்துள்ளனர்..
............................................................ .............................. ......
கொசுவால் உருவாகும் டெங்கு காய்ச்சலுக்கு நிறைய
பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த காய்ச்சலுக்கு பப்பாளி இலையின் சாற்றைக்
குடித்தால் சரியாக நிறைய வாய்ப்புக்கள் உள்ளது என்கின்றனர்.
கொசுவை வீட்டினுள் ஒழிக்க சிறிய டம்ளரில் மண்ணெண்ணை ஊற்றி அதில் இரண்டு கற்பூர துண்டுகளை போட்டால் அந்த வாசத்திற்கு கொசுக்கள் வருவதில் என்று அறிவித்துக்கொண்டு இருந்தனர் பஸ்நிலையத்தில் நானும் வீட்டில் போய் செய்து பார்த்தேன்... உண்மைதான் கொசு வரவில்லை நீங்களும் முயற்சி செய்து பாருங்கள்...

........................................................... .............................. ......
குப்பை கூழங்கள் நிறைந்த புனேவின் குடிசைப் பகுதிகளில் வாழ்ந்து வரும்
ஜான்முகமதுவின் இரண்டு மகன்களின் ஒருவன் ரிஷ்வான் சேக். அவன் சிறுவயதிலேயே
1 - 100 வரையுள்ள அனைத்து வாய்ப்பாடுகளையும் சரளமாக கூறியுள்ளான். அவன் 5
வயதாக இருக்கும்போதே சிவில் சர்வீஸ் பரீட்சைக்கு தேவையான அனைத்து
கேள்விகளுக்கும் பதில் சொல்லியிருக்கிறான். பிறகு பொது அறிவு புத்தகங்கள்
மற்றும் கல்லூரி அளவிலான போட்டித் தேர்வு புத்தகங்களை வாங்கிக் கொடுக்க,
அவன் அனைத்தையும் படிக்க ஆரம்பித்திருக்கிறான்.
அவனது
திறமையைப் பாராட்டி ஜெர்மன் நிறுவனம் ஒன்று ஒரு பன்னாட்டு கல்வி நிறுவனம்
ஒன்றில் 5 வருடத்திற்கு அவனை சேர்த்துவிட்டது. பல்வேறு அவமானங்களுக்கிடையே
பள்ளியில் முதலாவது மாணவனாக திகழ்ந்தான். பின்னர் உலக பொருளாதார
வீழ்ச்சியை தொடர்ந்து அந்த நிறுவனம் அவனுக்கு அளித்த உதவியை
நிறுத்திவிட்டது. 10 வயதாகும் இந்த இளம் அறிவு ஜீவியான ரிஷ்வான் சேக்குக்கு
ஹிந்தி, மராத்தி, ஆங்கிலம் மற்றும் பிரெஞ்சு மொழிகளும் நன்றாக தெரியும்.
......................................................... .............................. ........
செவ்வாய் கிரகத்தில் உயிரினங்கள் வாழ முடியும் என ஆய்வு நடத்த
அமெரிக்காவின் 'நாசா' மையம் கியூரியாசிட்டி ஆய்வக விண்கலத்தை அனுப்பி
வைத்துள்ளது. அங்கு அது போட்டோக்களை எடுத்து அனுப்பியும், பல ஆய்வுகளை
மேற்கொண்டும் தகவல்களை பூமிக்கு அனுப்பி வருகிறது.
அங்குள்ள
பாறையை வெட்டி எடுத்து போட்டோ எடுத்து அனுப்பியது. தற்போது, அங்கு கனிம
வளங்கள் இருப்பதை கண்டுபிடித்துள்ளது. செவ்வாய் கிரகத்தின் மணலை
கியூரியாசிட்டி ஆய்வகத்தில் உள்ள அதிநவீன எக்ஸ்ரே டெலஸ்கோப் மிகவும்
உன்னிப்பாக ஆய்வு செய்தது. அதில், பளிங்கு கற்படி வங்கள் உள்ளன. இது
ஹவாயில் எரிமலை பகுதியில் இருப்பது போன்று உள்ளது. அதன் மூலம் செவ்வாய்
கிரகத்தில் உள்ள மணல் பூமியின் மணல் பரப்பை ஒத்துள்ளது.
எனவே
அங்கு பூமியை போன்ற கனிம வளங்கள் இருப்பதற்கான அதிக வாய்ப்பு உள்ளது. இந்த
தகவலை கியூரியாசிட்டி விண்கல ஆய்வகத்தின் தலைமை விஞ்ஞானி டேவிட் பிளேக்
தெரிவித்துள்ளார். தனது 22 ஆண்டு காலகட்டத்தில் தற்போதுதான் அதுபோன்ற அதிசய
நிகழ்வுகளை காணமுடிகிறது என தெரிவித்தார்.
உலக அளவில் திருமணமான பெண்களில் 3 பேரில் ஒருவர் தாம்பத்திய உறவில் முழு திருப்தி அடைவதில்லை என்று மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள். ஆகவே இவர்களுக்கு உதவுவதற்காக வயாகரா போன்ற மருந்து ஒன்றை கனடா மருந்து தயாரிப்பு நிறுவனம் உருவாக்கி இருக்கிறார்கள்.
பெண்களுக்காக விசேஷமாக தயாரிக்கப்பட்ட இத்தகைய மருந்து இதுவே முதல் முறை என கூறப்படுகிறது. தாம்பத்திய உறவுக்கு சற்று முன்பு இதை மூக்கு வழியாக நுகர வேண்டும். விரைவில் இது விற்பனைக்கு வர உள்ளது.
இது பற்றி கனடா மோனாஷ் பல்கலைக்கழக பெண்கள் சுகாதாரநல ஆராய்ச்சி திட்ட பேராசிரியர் சூசன் டாவிஸ் கூறுகையில், இது பெண்களுக்கு என்றே பிரத்யோகமாக உருவாக்கப்பட்ட வயாகரா ஆகும். 30 வயது முதல் 40 வயதுள்ள இளம்பெண்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றும் என்கிறார்.
......................................................... .............................. ........
உலக அளவில் திருமணமான பெண்களில் 3 பேரில் ஒருவர் தாம்பத்திய உறவில் முழு திருப்தி அடைவதில்லை என்று மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள். ஆகவே இவர்களுக்கு உதவுவதற்காக வயாகரா போன்ற மருந்து ஒன்றை கனடா மருந்து தயாரிப்பு நிறுவனம் உருவாக்கி இருக்கிறார்கள்.
பெண்களுக்காக விசேஷமாக தயாரிக்கப்பட்ட இத்தகைய மருந்து இதுவே முதல் முறை என கூறப்படுகிறது. தாம்பத்திய உறவுக்கு சற்று முன்பு இதை மூக்கு வழியாக நுகர வேண்டும். விரைவில் இது விற்பனைக்கு வர உள்ளது.
இது பற்றி கனடா மோனாஷ் பல்கலைக்கழக பெண்கள் சுகாதாரநல ஆராய்ச்சி திட்ட பேராசிரியர் சூசன் டாவிஸ் கூறுகையில், இது பெண்களுக்கு என்றே பிரத்யோகமாக உருவாக்கப்பட்ட வயாகரா ஆகும். 30 வயது முதல் 40 வயதுள்ள இளம்பெண்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றும் என்கிறார்.
தகவல்
ஆஸ்துமா என்பது உடல் நலக்குறைவை ஏற்படுத்தும் சுவாச நோயாகும். இது குழந்தை
பருவத்தில் இருந்தே உருவாகி பல வருடங்கள் கழித்து வெளிப்படும். இதற்கு
முக்கிய காரணம் 'நிக்கோடின்' பாதிப்பு என கண்டறியப்பட்டுள்ளது.
பெண்களின் கர்ப்ப காலத்தின்போது அவர்களின் கருவியில் வளரும் குழந்தை
நுரையீரலை சிகரெட்டில் பயன்படுத்தும் 'நிகோடின்' பாதிப்பை ஆஸ்துமாவை
உருவாக்குகிறது.
மேலும் அது சிகரெட் பிடிப்பவர்களின் 3-வது தலைமுறையையும் பாதிக்கிறது. இதன் மூலம் அவர்களின் பேரக்குழந்தைகளும் ஆஸ்துமா நோய் தாக்குதலுக்கு ஆளாகின்றனர். இந்த தகவல் கலிபோர்னியாவில் உள்ள ஹார்பர்-யூசி.எல்.ஏ. மெடிக்கல் சென்டர் நிபுணர்கள் நடத்திய ஆய்வில் தெரிய வந்தது. அவர்கள் கர்ப்பமாக இருந்த எலிகளிடம் ஆய்வு நடத்தி இதை கண்டறிந்துள்ளனர்.
சிகரெட் பிடிக்கும் அல்லது சிகரெட் புகையினால் பாதிக்கப்படும் கர்ப்பிணிகளின் வயிற்றில் வளரும் குழந்தைகளின் நுரையீரல் பாதிக்கப்பட்டு செயல்பாடு குறைகிறது. இதன் மூலம் ஆஸ்துமா உருவாகிறது. நிகோடினின் வீரியம் முதல் தலைமுறை குழந்தைகளை தாக்காவிட்டாலும், ரத்தத்தில் தேங்கியிருந்து அது அவர்களின் குழந்தையை பாதிக்கும் என புதிய ஆய்வு தெரிவிக்கிறது. எனவே சிகரெட் பிடிப்பது அவர்களின் உடல் நலத்துக்கு கேடு விளைவித்தாலும், பேரக் குழந்தைகளின் நலனையும் அது பாதிக்கிறது.

அறிமுக பதிவர்
இந்த வார அறிமுக பதிவர் பலே பிரபு என்ற பெயரில் எழுதி வரும் பிரபு கிருஷ்ணா
அவர்கள்.. இவரின் அனுபவங்களும், கவிதைகளும் இவருடைய எழுத்துடன் நம்மையும்
அழைத்து செல்லும்...
http://www.baleprabu.com/
http://www.baleprabu.com/
தத்துவம்
நல்ல யோசனையை தோன்றும்போது உடனே செய்து விடுங்கள், ஏனென்றால் காலம் உங்களுக்காக காத்திருக்காது.
அறிவைப் பெருக்குவதில் பேராசைக்காரனாய் இரு!
உன் மேல் நம்பிக்கை வை... வெற்றி உன்னைத் தேடி வரும்...