Saturday, February 20, 2010

வெள்ளரிக்காயும் உடல்நலமும்...

 குளிர்காலம் முடிந்து இப்பொழுது வெய்யில் ஆரம்பித்து விட்டது. கோவையில் இருக்கும் நாங்களே மதிய வேளையில் வெளியில் செல்ல முடிாத அளவு வெப்பம் இருக்கிறது. சென்னையில் சொல்ல வேண்டியதே இல்லை அனேகமாக அங்கேயும் தொடங்கி இருக்கும் என நினைக்கிறேன். குளிர்காலத்திற்கும், வெய்யில் காலத்திற்கும் நாம் நம்மை மாற்றிக்கொள்ள வேண்டி இருக்கிறது. வெய்யில் காலத்தில் நாம் நம் உடம்பிற்கு அதிகம் சேர்த்துக்கொள்ள வேண்டிய உணவுகளில் ஒன்று வெள்ளரிக்காய் இதன் மகத்துவம் நான் தெரிந்து கொண்ட வகையில் மிக அதிகம். அதை உங்களுட் பகிர்கிறேன் நீங்களும் பன் பெறுங்கள்...

வெள்ளரிக்காய்:
வெள்ளரிக்காயை நம்மில் சாப்பிடாதவர்கள் சிலர் தான் இருப்பர். மிக குறைந்த விலையில் உடல்நலத்திற்கு ஏற்றது. வெள்ளரியை மூன்று வகையாக பிரிக்கலாம்.
பிஞ்சு வெள்ளரிக்காய்
பச்சையாக சாப்பிடுவதற்கு ஏற்றது. இதில் விதைகள் சிறிதாக இருக்கும் இதனால் சாப்பிடவதற்கு சுவையாகவும் இருக்கும். இதை சாப்பிடும்போது கொஞ்சம் உப்பு, மிளகாய்த்தூள், மிளகு தூள் கலந்து சாப்பிட்டால் இதன் சுவை சொல்லிமளாது. அப்படியே சாப்பிடுவதற்கு ஏற்றது இதுதான். வெள்ளரி வாங்கும் போது பிஞ்சு வெள்ளரியாக பார்த்துவாங்க வேண்டும்.
வெள்ளரிக்காய்
இது பிஞ்சுக்கும் அடுத்தநிலை. இதை குழம்பு வைக்க பயன் படுத்தலாம். இதை வைத்து பழ வகை குழம்பு வைக்கலாம். அதற்கான பதிவு நம் வலைப்பூவில் நிறைய இருக்கின்றது.
வெள்ளரிபழம்
வெள்ளரி நன்கு பழத்து இருக்கும் பெரியதாகவும் இருக்கும். பழத்தை ஜூஸ் செய்து சாப்பிட ஏற்றது. இல்லை எனில் நாட்டுச்சக்கரை கலந்து அதனுடன் பழத்தை சேர்த்து சாப்பிடலாம். வெப்ப காலத்தில் உடலுக்கு அதிக குளிர்ச்சியைத் தரும்.
வெள்ளரியின் பயன்கள்:
விட்டமின் ஏ, பொட்டாசியம் அதிகம் உள்ளது
  1. சிறுநீர் பிரியாமல் அவதிபடுபவர்கள், நீரிழிவு நோயாளிகள் வெள்ளரிக்காய், வெள்ளரி விதை சாப்பிட உடனடி நிவாரணம் கிடைக்கும்.
  2. வெள்ளரிக்காய் சாறை கண்களை சுற்றி தடவி சிறிது நேரம் கழித்து குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும். வாரம் ஒரு முறை இவ்வாறு செய்ய கருவளையம் நீங்கும்.
  3. வெள்ளரிக்காயை நறுக்கி கண்களின் மேல் சிறிது நேரம் வைத்திருந்தாலும் கருவளையம் மறையும்.
  4. உடலுக்கு குளிர்ச்சியைத் தந்து சிறுநீர் வெளியேற உதவும்

Tuesday, February 16, 2010

எண்ணெய் குளியலும் உடல் நலமும்...


இன்றைய இளைய தலைமுறையினர் பலர் எண்ணெய் தேய்த்து குளிப்பார்களா என்பது சந்தேகம் தான். நம் முன்னோர்கள் நமது உடல் ஆரோக்கியத்திற்கு பல வழிமுறைகளை சொல்லி உள்ளனர். அதில் முக்கியமான ஒன்று எண்ணெய் குளியல். இன்று நம்ம ஊரைப்பொறுத்த வரை எண்ணெய்க் குளியல் அதிகம் நடக்கும் இடம் குற்றாலம் மற்றும் ஒகேனக்கல் அங்கு சென்றால் மட்டுமே நமக்கு எண்ணெய் குளியல் ஞாபகம் வருகிறது. ஒரு 15 வருடங்களுக்கு முன் எண்ணெய் தேய்த்துக் குளித்தல் என்பது நமது கிராமங்களில் சனிக்கிழமை அன்று எண்ணெய் குளியல் நிறைய வீடுகளில் நடக்கும் இன்று அது அரிதாகி விட்டது. தீபாவளி அன்று தான் நம் வீட்டில் எண்ணெய் தேய்த்துக் குளியல் நடக்கும் ஆனால் அதன் முழுப்பயனும் அன்று ஒரு நாள் மட்டும் குளித்தால் நடக்குமா? நிச்சயம் நன்மை இருக்காது.

எப்படிக் குளிப்பது

எண்ணெய் தேய்த்துக் குளிப்பதற்கு என்று நாட்கள் உள்ளன. ஆண்கள் புதன் மற்றும் சனிக்கிழமைகளிலும்,  பெண்கள் செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளிலும் செய்ய வேண்டும். 
 எண்ணெய்க் குளியலுக்கு ஏற்ற எண்ணெய் நல்லெண்ணெய் தான். அது கொஞ்சம் சூடு படுத்தி முதலில் உச்சந்தலையில் சூடு பறக்க தேய்க்க வேண்டும். பின் உடலின் ஒவ்வொரு பாகங்களிலும் மெதுவாக தேய்க்க வேண்டும் நன்கு தேய்த்த பின் கடைசியாக இரண்டு கண்களிலும் இரணஇடு சொட்டு எண்ணெய் விடவேண்டும். பின் சூரிய ஒளியில் ஒரு 20 நிமிடம் உடல் காய நிற்கவேண்டும். பின் வெந்நீரில் சீகக்காய் போட்டு எண்ணெய் போக குளிக்க வேண்டும்.

குழந்தைகளுக்கு

ஒரு வயது‌க்கு‌ள் இரு‌க்கு‌ம் குழ‌ந்தைகளாக இரு‌ந்தா‌ல் அவ‌ர்களு‌க்கான எ‌ண்ணெயை (பே‌பி ஆ‌யி‌ல்) வார‌த்‌தி‌ல் ஒரு நாளாவது உட‌ல் முழு‌க்க‌த் தட‌வி‌வி‌ட்டு வெதுவெது‌ப்பான ‌நீ‌ரி‌ல் கு‌ளி‌ப்பா‌ட்டு‌ங்க‌ள்.

ஒரு வயது‌க்கு மே‌லிரு‌க்கு‌ம் குழ‌ந்தைகளு‌க்கு ந‌ல்லெ‌ண்ணை வா‌ங்‌கி வ‌‌ந்து, ச‌னி‌க் ‌கிழமைக‌ளி‌ல் உட‌ல் முழுவது‌ம் தே‌ய்‌த்து ‌சி‌றிது நேர‌ம் ஊற‌வி‌ட்டு ‌பி‌ன்ன‌ர் கு‌ளி‌க்க வை‌க்கலா‌ம்.

முத‌‌ல் இர‌ண்டு மூ‌ன்று வார‌ங்களு‌க்கு ந‌ல்லெ‌ண்ணை தே‌ய்‌த்தது‌ம் கு‌ளி‌க்க வை‌த்து ‌விடு‌ங்க‌ள். பு‌திது எ‌ன்பதா‌ல் உடலு‌க்கு ஏ‌ற்று‌க் கொ‌ள்ள ‌சில நா‌‌‌ள் ‌பிடி‌க்கு‌ம்.

ந‌ல்லெ‌ண்ணைய புரு‌வ‌த்‌தி‌ல் தடவ ம‌ற‌க்க வே‌ண்டா‌ம். 4வது வார‌த்‌தி‌ல் இரு‌ந்து 10 ‌நி‌மிட‌ம் முத‌ல் ஊற ‌வி‌ட்டு‌க்‌ கு‌ளி‌ப்பா‌ட்டு‌ங்க‌ள்
கடினமான உழைப்பு, கால மாற்றம் ஆகியவை காரணமாக உடலில் உஷ்ணம் அதிகரிப்பது வழக்கம்.

நன்மைகள் :
  • உடல் சூட்டைத் தணிக்கும்
  • உடல் புத்துணர்ச்சி பெறும்
  • உடலில் உள்ள நரம்புகள் செயல்பாடு அதிகரிக்கும்
  • திருமணம் ஆன தம்பதிகளுக்கு இல்லற இன்பம் அதிகரிக்கும் (இதற்காகத்தான் திருமணம் ஆன இரண்டு நாட்கள் கழித்து எண்ணெய் தேய்த்து விருந்து வைக்கின்றனர்)
  • சளி தலைவலி தொல்லையில் இருந்து விடுபடலாம்
  • ஆரோக்கியமான தூக்கத்திற்கு வழி வகுக்கும்
நோயற்ற வாழ்விற்கும் உடல் ஆரோக்கியத்திற்கும் எண்ணெய் குளியல் அவசியம் என்பதே என் கருத்து.

Friday, February 12, 2010

தர்பூசணி: இது நம்ம ஊர் வயாகரா


இனி கோடை காலம் வந்து விட்டது உடல் சூட்டைத்தணிக்க தர்பூசணி சாப்பிடலாம் என்று தான் நானும் இருந்தேன் அதைப்பற்றிய ஒரு பதிவு போடலாம் என்று இருந்தேன் அதற்காக புதிய தகவல்களை நான் தேடும் போது ஒரு பழைய பத்திரிக்கையில் வந்த செய்தியை படிக்கும் போது ஆண்மை விருத்திக்கு தர்பூசணி மிகவும் உதவுகிறது சொல்லப்போனால் அது ஒரு வயகாரா என்று படித்தேன். இதை எப்படி பதிவு செய்வது நிறைய பெண் பதிவர்கள் இருக்கிறார்கள் அவர்கள் தலைப்பை பார்த்ததும் நம் பதிவிற்கு வந்து படிப்பவர்கள் படிப்பார்களா மாட்டர்களா என்று மனதில் உறுத்தல் ஆனால் தர்பூசணியில் இருக்கும் தகவல் மிகவும் முக்கியமான பயன்கள் வாழ்க்கைக்கு தேவையானதும் கூட, அதனால் இக்கட்டுரையை எழுதியே ஆகவேண்டும் என்று பதிகிறேன்.
நம் ஊரில் சர்வசாதாரணமாக கிடைக்கும் தர்பூசணி பழத்துக்கு ஆண்மையை அதிகரிக்கும் சக்தி உண்டு என்பதை அமெரிக்காவில் உள்ள இந்திய டாக்டர் தலைமையிலான மருத்துவக் குழு மேற்கொண்ட ஆராய்ச்சி முடிவில் தெரியவந்துள்ளது. ஆண்மையை தூண்டும் சக்தியை பொருத்தவரை, மேலை நாட்டு வயாகரா மாத்திரைக்கு நிகராக இன்னும் ஏன் அதனையே விஞ்சக்கூடிய தன்மை தர்பூசணி பழத்துக்கு உள்ளதாக கூறப்பட்டுள்ளது.
தர்பூசணியை பிழிந்தால் ஓர் சுவையான ஜூஸ் மட்டுமே கிடைக்கும் என்று நினைத்து கொண்டிருந்தவர் எல்லாம், 'ஐயையோ, இவ்வளவு நாளா இது தெரியாமல் போச்சே...!" என்று அங்கலாய்க்கும் தகவல் இது.
அதாவது, தர்பூசணி பழம் ஓர் இயற்கையான 'வயாக்ரா' என்பது தான்.
அமெரிக்காவில் உள்ள டெக்சாஸ் ஏ&எம் புரூட்ஸ் அண்ட் வெஜிடபிள் இம்ப்ரூவ்மெண்ட் மையத்தின் இயக்குனரான பீமு பாட்டீல் என்ற இந்தியர், இதுகுறித்து மேற்கொண்ட ஆய்வில் பல்வேறு ஆச்சரியமான தகவல்கள் தெரியவந்துள்ளன.
அதன்படி, தர்ப்பூசணியில் உள்ள ஃபைட்டோ - நியூட்ரியன்ட்ஸ் என்ற சத்துக்கள், உடம்பை ஆரோக்கியமாகவும், சுறுசுறுப்பாகவும் வைத்திருக்கின்றன.
இதில் உள்ள மூலப்பொருட்கள் ரத்தம் வழியாக சென்று நரம்புகளுக்கு கூடுதல் சக்தியை தருகிறது.
அதாவது, ஒரு வயாக்ரா மாத்திரையில் அடங்கியுள்ள சக்தி, தர்பூசணி பழத்திலும் இருப்பது தெரியவந்துள்ளது.

தர்பூசணிக்கு என்ன சிறப்பு?
தர்பூசணியில் வெறும் தண்ணீர் சத்துதான் உள்ளது. அதில் வேறு சத்து எதுவும் இல்லை என்று கூறி வந்தவர்களுக்கு இந்த புதிய தகவலை இன்ப அதிர்ச்சியாக அவர்கள் வெளியிட்டுள்ளார்கள். தர்பூசணிக்கு `ஆசையை' அதிகரிக்கும் ஆற்றலும் கூட உள்ளதாக அவர்கள் கூறுகிறார்கள்.
மனித உடலில் நல்ல மாற்றங்களை ஏற்படுத்தும் சத்து பொருள்கள் சில காய்கறிகளிலும், பழங்களிலும் உள்ளன. தர்பூசணியில் அதுபோல் உள்ள `சிட்ரூலின்' என்ற சத்துபொருள், வயாகராவை போல் ரத்த நாளங்களை விரிவடைய செய்து, ரத்த ஓட்டத்தை அதிகரிக்குமாம். தர்பூசணியை சாப்பிட்ட பிறகு, ஏற்படும் வேதியல் மாற்றம் காரணமாக `சிட்ரூலின்', `அர்ஜினைனாக' எனும் வேதிப்பொருளாக மாற்றப்படுகிறது. அது இதயத்துக்கும், ரத்த ஓட்டம் சம்பந்தமான உடல் உறுப்புகளையும் ஊக்குவிக்கிறது.
வெள்ளை பகுதியில்தான்...
இந்த சிட்ரூலின்-அர்ஜினைன் வேதி மாற்றமானது, சர்க்கரை நோய்க்காரர்களுக்கும், இதய நோயாளிகளுக்கும் கூட நன்மை பயக்குமாம். இதில், முக்கியமானது என்னவென்றால், தர்பூசணியில் உள்ள மேல்பகுதி அதாவது, வெண்மை பகுதியில்தான் ஆண்மையை அதிகரிக்கும் சத்து உள்ளதாம்.
இது தெரிந்தால் நம்மவர்கள், வாழைப்பழத்தை விட்டு தோலை மட்டும் சாப்பிடுவதைப் போல், தர்பூசணியின் சிவப்பு பகுதியை விட்டுவிட்டு வெறும் வெள்ளை பகுதியை மட்டுமே சாப்பிடுவார்கள் என்பது நிச்சயம்.
தர்பூசணியின் பயன்கள்:
கோடைக் காலத்தில் கிடைக்கும் தர்பூசணிப் பழம், உடலுக்குக் குளிர்ச்சியை தருவதோடு, இரும்புச் சத்தும் நிறைந்ததாகும். இதில் இருக்கும் இரும்புச் சத்தின் அளவு, பசலைக் கீரைக்கு சமமானதாகும்.
மிகச்சிறந்த vitamin C யும் vitamin A (ஒரு துண்டு பழத்தில் 14.59 mg of vitamin C and 556.32 IU of vitamin A) இதில் உண்டு. இதைவிட தேவையான அளவு vitamin B6 ம் vitamin B1 ம், கனியுப்புக்களான potassium and magnesium மும் உண்டு.
பழத்தின், சிவப்பு பகுதியை மட்டும், கத்தியால் செதுக்கி எடுத்து, முள் கரண்டியால் விதைகளை நீக்கி விட்டு, துண்டுகளாக்கி அப்படியே சாப்பிடலாம்.
சிறிது உப்பும், மிளகுத்தூளும் அதன் மேல் தூவியும் சாப்பிடலாம்.
மிகவும் எளிமையான, புத்துணர்ச்சியூட்டும் பானமாகவும் தயாரிக்கலாம்.
விதை நீக்கப்பட்ட, தர்பூசணித் துண்டுகளை, மிக்ஸியில் போட்டு, ஒன்று அல்லது இரண்டு வினாடி ஓடவிட்டு, குளிர்பதனப் பெட்டியில் வைத்து பரிமாறலாம். விருப்பமானால், சிறிது சர்க்கரை, எலுமிச்சம் பழச்சாறு, ஒன்றிரண்டு புதினாத் தழையும் சேர்க்கலாம்.
வெப்பத்தை தணிக்க, இந்தப் பழத்தை வேண்டுமட்டும் உண்ணுங்கள். கோடையைக் கொண்டாடுங்கள்.
இப்பதிவை படிக்கும் நண்பர்களே இப்பதிவை அனைவரும் அறிய தமிழ்மணத்திலும், தமிழிஸ்லியும் அப்படியே ஒரு குத்து குத்துங்க...

Wednesday, February 10, 2010

சர்க்கரைநோய்யும் உணவுகளும்....



சர்க்கரை நோய் இன்று இந்தியாவில் அதிகம் பேருக்கு உள்ள பிரச்சனை. நாம் தினமும் பார்க்கும் 100 பேரில் ஒருவருக்காவது சர்க்கரை நோய் இருக்க வாய்ப்பு உள்ளது. அந்த அளவிற்கு இன்று சர்க்கரை நோய் பரவக் காரணம் நமது உணவுப்பழக்கவழக்கம்தான். இதுவே இப்பொழுது 70 வயதைக்கடந்தவர்களில் அதிகம் பேருக்கு சர்க்கரை நோய் இருக்க வாய்ப்பு இல்லை ஏன் என்றால் அவர்களின் உணவுப்பழக்கம் தான் காரணம். நாமும் நமது உணவுப் பழக்கத்தை கொஞ்சம் மாற்றினால் சர்க்கரை நோயில் இருந்து தப்பிக்கலாம் இதற்காக நாம் என்ன சாப்பிட வேண்டும் என்பதை நான் அறிந்த தகவல்களை தொகுத்து அளித்து இருக்கிறேன்.
ஒரு குழந்தை இளம் வயதிலிருந்து வாலிப பருவத்திற்கு மாறுவதற்கு முக்கிய காரணமாக இருப்பது நாளமில்லா சுரப்பி மண்டலம்தான். இதை ஆங்கிலத்தில் எண்டோகிரைன் சிஸ்டம் என அழைப்பõர்கள். இந்த நாளமில்லாச் சுரப்பிகள் தான் மனித உடல் மற்றும் மன வளர்ச்சிக்கு தேவையான ஹார்மோன்களை உற்பத்தி செய்கின்றன. இந்த ஹார்மோன்களின் சுரப்பானது வாத, பித்த கபத்தை பொறுத்தே அமைகின்றன. இந்த மூன்றில் எதனுடைய நிலையில் மாறுபாடு ஏற்பட்டாலும் முதலில் பாதிக்கப்படுவது ஹார்மோன்களே. வாழ்க்கையில் ஏற்படும் மாற்றங்களுக்கு முக்கிய பங்கு வகிப்பது ஹார்மோன்கள் ஆகும். உடலுக்கு தேவையான சர்க்கரை அதாவது இன்சுலினை சுரக்கும் கணையம் பாதிக்கப்படுவதால் உடல் பருமன் ஏற்பட்டு நீரிழிவு நோய் உருவாக காரணமாகிறது.
இந்த நீரிழிவு நோயை முற்றிலும் குணப்படுத்த முடியாது. ஆனால் வராமல் தடுக்கவும், கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொள்ளவும் முடியும். இத்தகைய நோயின் தாக்கத்திலிருந்து விடுபட வைப்பது நம் உணவு முறையே.
முறையான உணவு, தேவையான உடற்பயிற்சியிருந்தால் நீரிழிவு நோயை நம் கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொள்ளலாம்.
கீழ்கண்ட உணவு முறைகளை தவறாமல் கடைப்பிடித்து வருவது நல்லது.

சர்க்கரை நோயைக் குணப்படுத்தும் காய்கறிகள்:
கத்தரி பிஞ்சு, சுரைக்காய், முட்டைகோஸ், முள்ளங்கி, வெண்டைக்காய், கோவைக்காய், பீன்ஸ், சாம்பல் பூசணி, புடலங்காய், வாழைத்தண்டு, காளி பிளவர், வெண்பூசணி, பாகற்காய், வாழைப்பூ, காராமணி, கொத்தவரங்காய், வெங்காயம், பீர்க்கங்காய், வாழை பிஞ்சு, நூல்கோல், முருங்கைக் காய், வெள்ளரிக்காய், சௌசௌ இவைகளுடன் கறிவேப்பிலை, இஞ்சி, கொத்தமல்லி, புதினா சேர்த்து பச்சடியாக தினமும் உணவில் சேர்த்து வந்தால் சர்க்கரை நோயின் பாதிப்பிலிருந்து எளிதில் மீளலாம்.

நோயைக் கட்டுப்படுத்தும் கீரைகள் :
சர்க்கரை நோயைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் தன்மை கீரைகளுக்கும் உண்டு.
கறிவேப்பிலை, தூதுவளைக் கீரை, ஆரைக்கீரை, முசுமுசுக்கைக் கீரை, வெந்தயக் கீரை, துத்திக் கீரை, முருங்கைக் கீரை, மணத்தக்காளிக் கீரை, அகத்திக் கீரை, சிறுகீரை, அரைக்கீரை, வல்லாரைக் கீரை, கொத்தமல்லிக் கீரை
இவற்றில் ஏதாவது ஒன்றை சூப் செய்து தினமும் 1 டம்ளர் வீதம் காலை அல்லது மாலை ஒருவேளை சாப்பிட்டு வரலாம், அல்லது இவற்றில் ஏதாவது ஒன்றை எதாவது ஒரு வகையில் உணவில் சேர்த்து வந்தால் சர்க்கரைநோய் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும்.

சர்க்கரை நோய்க் காரர்களுக்கு உகந்த பழங்கள்:
  • சாத்துக்குடி                                 1
  • ஆரஞ்சு                                         2
  • ஆப்பிள் (தோலுடன்)              1
  • கொய்யா (சிறியது)                  2
  • பேரிக்காய் (சிறியது)               2
  • வெள்ளரிக்காய்                         2
  • அன்னாசிப்பழம்                        4 வளையங்கள்
  • தர்பூசணி                                     1 துண்டு
மேல் சொன்ன பழங்களில் ஏதாவது ஒன்றை குறிப்பிட்டுள்ள அளவுகளில் தினமும் உண்ணலாம்.
உணவுக்கு இடைப்பட்ட நேரங்களில் பசி அல்லது தாகம் எடுத்தால்.
வெள்ளரி, அரிசிப்பொரி, மோர் (கறிவேப்பிலை, கொத்தமல்லி சீரகம் கலந்தது), கோதுமை உப்புமா, அவித்த சுண்டல், சிறுபயறு, கொண்டைக் கடலை, கொள்ளு, தட்டைப்பயிறு இவற்றில் ஏதாவது ஒன்றை சாப்பிடலாம்.

  • எலுமிச்சை சாறு                  200 மி.லி.
  • வாழைத்தண்டு சூப்             200 மி.லி.
  • அருகம்புல் சூப்                     200 மி.லி.
  • நெல்லிக்காய் சாறு             100 மி.லி
  • கொத்தமல்லி சூப்                100 மி.லி.
  • கறிவேப்பிலை சூப்             100 மி.லி.
    இவற்றில் ஏதாவது ஒன்றை சர்க்கரை சேர்க்காமல் சாப்பிடுவது நல்லது.
அசைவ உணவுகள்:
முட்டை                                       1 (வெள்ளைக் கரு மட்டும்)

மீன்                                                 2 துண்டுகள்

கோழிக்கறி                                 100 கிராம் (அவித்தது)


தவிர்க்க வேண்டிய உணவுகள்:
  1. வேர்கள் மற்றும் கிழங்கு வகைகள்.
  2. இனிப்பு வகைகள்.
  3. எண்ணையில் வறுத்த பொருட்கள்.
  4. காய்ந்து உலர்த்திய பழங்கள் மற்றும் கொட்டைகள்.
  5. சர்க்கரை.
  6. வாழை, சப்போட்டா, சீதா போன்ற பழவகைகள்.
மேற்கண்ட உணவுகளை முறையாக சாப்பிட்டும் தினமும் உடற்பயிற்சியும், நடைபயிற்சியும், ஆசனமும் செய்து வந்தால் சர்க்கரை நோய் நம் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும்.
தினமும் நான் நடைப்பயிற்சியும், ஆசனமும் தினமும் காலை நேரங்களில் தவறாமல் செய்து வருகிறேன் இதற்கு முக்கிய காரணம் உடல் வலிமை பெறும், ஆரோக்கியமாக இருக்கலாம் என நீங்கள் நினைத்தால் அது தவறு. நான் நன்றாக சாப்பிட்டு பழகிவிட்டேன் தினமும் வித விதமாக சாப்பிடுவேன் அது மட்டும் இல்லாமல் நிறைய நொறுக்குத் தீனிகள், மாலை வேளைகளில் தனியாக இப்படி நிறைய சாப்பிடுவேன் எனக்கு பயம் வந்து விட்டது நாளை நமக்கு சர்க்கரை வியாதியோ, கொலஸ்டிரலோ வந்து விட்டால் எதுவும் சாப்பிட முடியாது இதற்காகவே நடைபயிற்சியும் ஆசனமும் சிறிது உணவுப்பழக்கத்தையும் மாற்றிவிட்டேன்.

Monday, February 8, 2010

பூசணிக்காயின் மருத்துவக் குணங்கள்



பூசணிக்காய்க்கு வெண்பூசணி, கல்யாணப்பூசணி என்ற பெயரும் உள்ளது.

காய்கறி வகைகளில் ஒன்றான, இதைச் சமைத்துச் சாப்பிட்டால் நரம்பைப் பற்றிய நோய்கள், நரம்புத் தளர்ச்சி, வயிற்றுப்புண் மேகவெட்டை, பிரமேக நோய் ஆகியவை உள்ளவர்களுக்கு நோயின் தீவிரம் குறையும். உடல் சூட்டைத்தணிக்கும்.


சிறுநீர் வியாதிகளை நீங்கும். சதா காலமும் உடல் வலி இருப்பவர்கள் பூசணிக்காயை அடிக்கடி சமைத்துச் சாப்பிட்டால் உடல்வலி தீரும். புத்தி சுவாதீனம் இல்லாதவர்களுக்கு சிகிச்சையளிக்கும்போது தினசரி பூசணிக்காய் சேர்த்து சமைத்த உணவைக் கொடுக்க புத்தி சுவாதீனம் படிப்படியாக மாறி நல்ல நிலைமைக்குத் திரும்பும்.

மருத்துவத்தில் பூசணிக்காயின் கதுப்பு, நீர்விதை ஆகியவை பயன்படுத்தப் படுகின்றன. நுரையீரல் நோய், இருமல், ஜலதோஷம், நெஞ்சுச்சளி, நீரிழிவு, தீராத தாகம், வாந்தி, தலைசுற்றல் நீக்கப் பயன்படுகிறது.


ரத்த சுத்திக்கும், ரத்தக்கசிவு நீங்கவும், வலிப்பு நோய் சீராகவும், குடலில் உள்ள நாடாப்புழுக்கள் வெளியேறவும் சிறுநீரக நோய்கள், ரத்தம் கலந்த சிறுநீர் வெளியேறுதல், பெண்களின் வெள்ளைப் போக்கு நீக்கவும் வெண்பூசணி பயன்படுத்தப்படுகிறது.
வெண்பூசணிக்காயின் சாறு 30 மில்லியளவு எடுத்து ஒரு தேக்கரண்டி தேன் சேர்த்துச் சாப்பிட்டால் இதய பலவீனம் நீங்கும். ரத்தசுத்தியாகும்.
பூசணிக்காய் சாற்றைத் தயாரித்து தினசரி 30 மில்லியளவு சாப்பிட்டு வந்தால் தொடர்ந்த இருமல், நெஞ்சுச்சளி குணமாகும். நீரிழிவு நோய் கட்டுப்படும். அதிகத் தாகத்தைக் குறைக்கும். உடம்பின் எந்தப் பாகத்திலாவது ரத்தக்கசிவு ஏற்பட்டால் ரத்தக்கசிவை நிறுத்திவிடும்.

பூசணிக்காய் சாறு 30 மில்லியளவு சர்க்கரை சேர்த்து காலை, மாலை சாப்பிட்டு வந்தால் வலிப்பு நோயின் தீவிரம் குறைந்துவிடும்.


பூசணிக்காய் சாறு 120 மில்லியளவு தயாரித்து ஒரு தேக்கரண்டி தேனும், தேவையான அளவு சர்க்கரையும் கலந்து சாப்பிட்டு வந்தால், சிறுநீரகத்தில் ஏற்படும் நோய்கள் நிவர்த்தியாகும். சிறுநீரில் ஏற்படும் ரத்தம், சீழ் கலந்த சிறுநீர் வெளியேறுதல் நின்றுவிடும்.


பூசணிக்காயின் கதுப்புப் பகுதியை மட்டும் (தோல், பஞ்சுப் பகுதி நீக்கி) சிறுசிறு துண்டுகளாக நறுக்கி வேகவைக்கவேண்டும். வெந்தபின் இதை எடுத்து சாற்றைப் பிழிந்து நீரைச் சேகரித்து 60 மில்லியளவு தயாரித்து இதில் சிறிது கற்கண்டு சேர்த்து தினம் 2_3 வேளை சாப்பிட்டு வந்தால் கல்லீரல் பாதிப்பால் ஏற்பட்டு வரும் மஞ்சள் காமாலை நோய் குணமாகும். தடையில்லாமல் சிறுநீர் வெளியேறும்.


பூசணிக்காயின் விதைகளைச் சேகரித்து நன்கு காய வைத்துப் பொடியாகச் செய்து வைத்துக்கொண்டு ஒரு தேக்கரண்டியளவு பாலில் கலந்து சாப்பிட்டு வந்தால் தேகபுஷ்டி உண்டாகும். தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் தாது விருத்தி மிகுதியாக உண்டாகும். உடல் சூட்டைத் தணிக்கும். பித்த நோயைக் கண்டிக்கும். பித்தவாந்தியை நிறுத்தும்.


வெண்பூசணி லேகியம்
நன்கு முற்றிய பூசணிக்காயின் கதுப்புப் பகுதியை மட்டிலும் தேவையான அளவு எடுத்துக்கொண்டு இதில் 3.500 கிராம் எடுத்து சிறுசிறு துண்டுகளாக வெட்டி சிறிதளவு தண்ணீர் சேர்த்து நன்றாக வேகவைத்து எடுத்து மிக்சியில் நன்றாக மசியும்படி அரைத்துக்கொண்டு வடிகட்டி, நீரையும் கதுப்பையும் தனித்தனியாகப் பிரித்துக்கொள்ள வேண்டும். வடித்து எடுக்கப்பட்ட பூசணிச்சக்கையை 500 கிராம் நெய்யில் மொற மொறப்பாகும்படி வறுத்து எடுத்து, நெய்வேறு, பொறிக்கப்பட்ட சக்கை வேறாக வைத்துக்கொள்ள வேண்டும்.
பூசணிக்காய் பிழிந்த சாற்றில் கல்கண்டு சேர்த்து பாகுபதம் வரும்வரை காய்ச்சி, இந்த பாகில் வறுத்த பூசணிக்காய்த் தூளைக் கொட்டிக் கிளற வேண்டும். திப்பிலி, சுக்கு, சீரகம் இவற்றின் பொடிகள் தலா 70 கிராம், லவங்கப்பட்டை, ஏலரிசி, பச்சிலை, தனியா, மிளகு இவற்றின் பொடிகள் தலா 20 கிராம். இவைகளை மேற்கண்ட மருந்துடன் கலந்து, வடித்து வைத்துள்ள நெய்யையும் சேர்த்து, நன்றாக எல்லா மருந்துகளும் ஒன்று சேர கிளறி வைத்துக்கொண்டு வேளைக்கு 10 கிராம் அளவில் தினசரி 2_4 வேளை சாப்பிட்டு வந்தால், ஆஸ்துமா குணமாகும். சுவாச உறுப்புக்கள் பலப்படும். இருதய பலவீனம் நீங்கி பலப்படும். நல்ல பசியுண்டாகும். மலச்சிக்கல் இருக்காது. பொதுவாக உடல் ஆரோக்கியத்தைப் பேணிப் பாதுகாக்கும். ஈசனோபைல் நிவர்த்தியாகும். டான்சில்ஸ் தொல்லைக்குச் சிறந்தது. பூசணிக்காயைச் சாறு எடுத்து 30 மில்லி முதல் 60 மில்லி வரை வைத்துக்கொண்டு இதில் தேன் ஒரு தேக்கரண்டி சேர்த்து தினசரி கொடுத்து வந்தால், ஒல்லியான சிறுவர்களுக்கு சதைப்பிடிப்பு ஏற்படும். அழகான தோற்றத்திற்கும், எடை அதிகரிப்பதற்கும் நோய் எதிர்ப்புச் சக்தி கூடி ஆரோக்கியமான உடல் தேறவும் நல்ல பலனைக் கொடுக்கும்.
சிறுநீரகச் செயல்பாடு குறைந்தவர்களுக்கு பூசணிக்காயில் 25 கிராம் அளவிற்கு வெட்டி எடுத்து ஒரு டம்ளர் தண்ணீர் சேர்த்து மிக்சியில் நன்றாக அரைத்து வடிகட்டி தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், சிறுநீரகச் செயல்பாடு சீராக அமையும்.
சிறுநீரகம் சம்பந்தமான நோய் உள்ளவர்கள் பூசணிக்காய்ச் சாறு 120 மில்லியில் ஒரு தேக்கரண்டி சர்க்கரையும், இரண்டு  தேக்கரண்டி தேனும் கலந்து சாப்பிட்டு வந்தால், நோய்கள் முழுமையாக நிவர்த்தியாகும். பூசணிக்காயில் மருத்துவக் குணங்கள் அதிகம் இருப்பதால் சித்தா மற்றும் ஆயுர்வேத மருத்துவத்தில் பல மருந்துகள் தயாரிக்கப்பட்டு விற்பனைக்குக் கிடைக்கிறது. தனிப்பட்டவர்கள் மருந்து தயாரிக்கமுடியாத நிலையில் தயாரிக்கப்பட்ட மருந்துகளைப் பயன்படுத்திப் பயன்பெறலாம்.
இந்த லேகியத்தை வாங்கிச் சாப்பிட்டு வந்தால், ரத்தபித்தம், சயம், இளைப்பு, பலவீனம், இதய நோய், இருமல் உள்ளவர்கள் நல்ல நோய் நிவாரணம் கிடைப்பதைத் தெரிந்துகொள்ள முடியும்.

வெண்பூசணி லேகியத்தின் பயன்கள்

இந்த லேகியத்தை வாங்கிச் சாப்பிட்டால் காமாலை நோய், இரத்த சோகை, எலும்புருக்கி நோய், அஸ்தி வெட்டை, பிரமேகத்தால் ஏற்பட்ட வெள்ளை நோய் தீரும். உடல் வலிமை பெறும். தாது விருத்தி ஏற்பட்டு காம இச்சை மிகுதியாகும். வெண்பூசணி நெய் அல்லது கூழ்பாண்ட கிருதம் என்ற இந்தப் பூசணி நெய்யைச் சாப்பிட்டு வந்தால் சூலை நோய்கள் நிவர்த்தியாகும். தோல்
நோய்கள், பெண்குறிப்புற்று முதலியன நீங்கும். உடல் சூடு, சூட்டுடன் எரிச்சல், நீர்க்கட்டு, நீர்க்குத்து முதலியன ஆண்களுக்கும், பெண்களுக்கும் நிவர்த்தியாகும். அஸ்திவெட்டை, கிராணிக்கழிச்சல், எலும்புருக்கி (T.B.) முதலிய கொடிய நோய்கள் நிவர்த்தியாகும்.