இத்தொடர் பதிவு எழுத என்னை அழைத்த கயலுக்கு என் நன்றி....
1) வலைப்பதிவில் தோன்றும் உங்கள் பெயர்?
சங்கவி
2) அந்தப் பெயர் தான் உங்கள் உண்மையான பெயரா? இல்லை எனில் பதிவில் தோன்றும் பெயரை வைக்க காரணம் என்ன?
எனது உண்மையான பெயர் சங்கமேஸ்வரன்.
இப்பெயர் வைக்க காரணம் என் மனைவியின் பெயர் கவிதா... எங்கள் இருவர் பெயரையும் சேர்த்து சங்கவி என்று ஆரம்பிச்சாச்சு...
இப்பெயர் வைக்க காரணம் என் மனைவியின் பெயர் கவிதா... எங்கள் இருவர் பெயரையும் சேர்த்து சங்கவி என்று ஆரம்பிச்சாச்சு...
3) நீங்கள் தமிழ் வலைப்பதிவு உலகில் காலடி எடுத்துவைத்ததைப் பற்றி....
கூகுளில் எதாச்சையாக நடோடிகள் என டைப் செய்தேன் அப்போது வந்த விமர்ச்சனங்களைப் பார்த்தேன் அப்போது தான் வலைப்பதிவு என்ற விசயம் தெரியவந்தது. அப்புறம் என்ன தொடங்கியாச்சு...
4) உங்கள் வலைப்பதிவை பிரபலமடையச் செய்ய என்ன என்னென்னவெல்லாம் செய்தீர்கள்?
பிரபலமா நானா? நானும் தமிழ்மணம், தமிழிஸ், தமிழ்10, பேஸ்புக் அப்புறம் இருக்குற மெயில் ஐடிக்கெல்லாம் அனுப்புறேன் ஆனா படிக்கறாங்களான்னு தெரியல... (எப்படி பிரபலமாவது என இன்னும் யோசிக்கிறேன்)
5) வலைப்பதிவின் மூலம் உங்கள் சொந்த விஷயத்தை பகிர்ந்து கொண்டதுண்டா? ஆம் என்றால் ஏன்?அதன் விளைவு என்ன? இல்லை என்றால் ஏன்?
இருக்கறதுல பாதி பதிவு சொந்த பதிவுதான் நமது ஒவ்வொரு நாளும் ஒரு அனுபவமே... அதை அப்படியே பதிவாக்கிவிட வேண்டியது தான்....
6) நீங்கள் பொழுதுபோக்குக்காக பதிவுகளை எழுதுகிறீர்களா அல்லது பதிவுகளின் மூலம் சம்பாதிப்பதற்காகவா?
பதிவின் மூலம் கோடி கொடுத்தாலும் நண்பர்களுக்கு ஈடு இணை எதுவுமில்லை நான் சம்பாரித்தது நண்பர்களை மட்டுமே....
7) நீங்கள் மொத்தம் எத்தனை வலைப்பதிவுகளுக்கு சொந்தக்காரர்? அதில் எத்தனை தமிழ் வலைப்பதிவுகள் உள்ளன?
இரண்டு பதிவு வைத்திருக்கிறேன் இரண்டும் தமிழ் பதிவுகள் தான் ஒன்று சங்கவி இன்னொரு பதிவு கிராமத்துக்காரன்...
8) மற்ற பதிவர்கள் மீது எப்போதாவது உங்களுக்கு கோபம் அல்லது பொறாமை ஏற்பட்டது உண்டா? ஆம் என்றால் யார் அந்த பதிவர்? ஏன்?
எனக்கு யார் மீதும் கோபம் கிடையாது ஏன் எனில் எழுத்து என்பது அவர்களுடைய சுதந்திரம்.. பொறாமை கொஞ்சம் நஞ்மல்ல நிறைய உண்டு அழகா கவிதை எழுதுறாங்க, அழகா கதை எழுதறாங்க, அழகா விமர்ச்சனம் எழுதுறாங்க நமக்கு வர மாட்டேங்குதே அப்படின்னு எல்லார் மேலேயும் பொறாமை உண்டு...
9) உங்கள் பதிவை பற்றி முதன் முதலில் உங்களை தொடர்புகொண்டு பாராட்டிய மனிதர் யார்? அவரைப் பற்றி, அந்த பாராட்டைப் பற்றி..
என் பதிவைப் பார்த்து முதன் முதலில் பாராட்டியது மணிஜீ தான்..
நிறைய தகவல்கள் கொடுத்து எழுதச்சொன்னதுடன் என்னை வலைபதிவர்களிடம் அறிமுப்படுத்தியது இவர்தான்...
10) கடைசியாக----விருப்பம் இருந்தால் உங்களைப் பற்றி பதிவுலகத்துக்கு தெரிய வேண்டிய அனைத்தையும் பற்றி கூறுங்கள்...
என்னைப்பற்றி பதிவுலகம் தெரிந்து கொள்ள வேண்டிய அணைத்தும் என் பதிவுகளில் இருக்குது எல்லாம் படிங்க என் சேட்டை அங்க தெரியும்.....
இப்பதிவை தொடர இதை படிப்பவர்கள் அனைவரையும் அழைக்கிறேன்... நிறைய பேர் எழுதி இருப்பீங்க எழுதாதவங்க எல்லாரும் எழுதுங்கோ.............


