Showing posts with label பட்டப்பெயர். Show all posts
Showing posts with label பட்டப்பெயர். Show all posts

Sunday, March 21, 2010

காக்காயன், மாட்டுவாயன், செத்தாடு...

இது எல்லாம் நண்பர்களின் பட்டப்பெயர்கள். பட்டப்பெயர்களைப்பற்றி நிறைய நண்பர்கள் எழுதி இருந்தாலும் இதன் சுவராரஸ்யமே தனி தான். கிராமம் ஆகட்டும் நகரம் ஆகட்டும் எங்கு வசிப்பவர்களும் பட்டப்பெயர்கள் சூட்டாமலும், அவர்களுக்கென பட்டப்பெயர்களும் நிச்சயம் இருக்கும். இடத்திற்கும் காலத்திற்கும் தகுந்தாற்போல் மாறும்.

நான் வளர்ந்த, படித்த, வாழ்ந்த என அனைத்து இடங்களிலும் எனக்கு பட்டப்பெயர் உண்டு. நானும் நிறைய பேருக்கு பட்டப்பெயர் வைத்துள்ளேன். நான் சிறியவனாக இருக்கும் போது எனக்கு நண்பர்கள் வைத்த முதல் பட்டப்பெயர் குச்சி ரொம்ப எழும்பா இருப்பேன் இது கொஞ்ச நாள் தான் அப்புறம் சென்டர் கட், கருவாயன், பல்ராயன், முந்திரிக்கொட்டை, எழும்பன், சித்தாரான், கஞ்சி, புலவன் இப்ப கடைசியா குண்டண், கருங்குண்டன் இவ்வளவு தாங்க எனக்கு இருந்த இப்ப இருக்கற பட்டப்பெயர்கள்.

கணவன் மனைவி தங்களுக்குள் அழைத்துக்கொள்ளும் போது பேர் சொல்லி அழைக்காமல் புனைப்பெயர் வைத்து தான் அழைப்பார்கள் நான் நிறைய நண்பர்கள் வீட்டில் பார்த்து இருக்கேன். என் பக்கத்து வீட்டு அக்கா ஒருவர் தன் கணவனை பன்னி என்று தான் அழைப்பார் பட்டப்பெயர் வைத்து அழைக்காமல் இருப்பவர்கள் குறைவு தான். இப்படி பட்டப்பெயர் வைத்துக்கூறும் போது அன்பு அதிகமாகும்.(அப்படின்னு சொன்னாங்க)

நான் வைத்த பட்டப்பெயர் கணக்கில் இல்லாதது பள்ளியில் படிக்கும் போது மீன் பிடிக்கச்செல்வோம் அப்ப என் ஜீனியர் ஒருவன் குளித்துக்கொண்டு இருந்தான் அவனை பார்த்து ஏய் நைனாமலை என்றேன் அவன் பெயர் முத்துக்குமார் ஆனாலும் இன்று வரை அவனுக்கு ஊரில் பெயர் நைனா மலை தான். சைக்கிள் கடைக்காரர் பையனுக்கு ஒட்டை சைக்கிள், ஓட்டல் கடை வைத்திருக்கும் நண்பனுக்கு புழுத்த புரோட்டா, டீ கடை வைத்திருக்கும் நண்பனுக்கு தண்ணிப்பால், கருவாயன் இந்த்பெயர் வைத்தவன் தான் பாவம் அவன் மனைவியை அனைவரும் கருவாயன் பொண்டாட்டி எனவும் மகனை கருவாய பையன் என்றும் அழைக்கின்றனர்.

விஜி் என்ற நண்பனுக்கு மாட்டுவாயன் என்ற பெயர் இன்றளவும் இவனுக்கு இந்தப்பெயர் நிலைத்திருக்கிறது. நண்பன் கண்ணன் என்பவன் கண் சிவப்பாக இருக்கும் எப்பவுமே அவனை என்னடா கண் செத்த ஆடு போல் இருக்கிறது என கேட்க அது மருவி செத்தாட்டுக்கண்ணன் என்று மாறி விட்டது.

மொன்டி சத்தி, கூளை கோபால், கொத்து வசந்த், சின்ன புரடையன், பெரிய புரடையன், மொட்டையன், சொட்டை செந்தில், ஒய்யா செந்தில், பொட்டை மொகரையன், டவுசர் சரவணன், வல்லக்காலன், காமாளையன், குட்டை ராசு, நெட்டையன், பனங்காயன், சரக்கு சண்முகம், ஆஞ்சி, தூக்குச்சட்டி, லட்டு நாகராஜ்,வளந்து கெட்டவன், தண்ணி வண்டி, செங்காயன், பொல்லி, ஒல்டு, அழுக்கான் இப்படி நிறைய சொல்லிகிட்டேப் போகலாம்....

நிறைய பேர் சொல்லுவாங்க கிராமத்தில் தான் அதிகம் பட்டப்பெயர் இருக்கும் என நிச்சயமாக இல்லை மனிதர்கள் இருக்கும் இடத்தில் எல்லாம் இப்பழக்கம் உண்டு. என் நண்பன் சென்னையில் ஒரு மிகப்பெரிய கம்பெனியில் பொட்டி தட்டும் வேலையில் இருக்கிறான் அவன் அவனது மேனேஜரை பட்டப்பெயர் வைத்து தான் பேசுகிறான். பட்டப்பெயர் என்பது நமது வாழ்வில் கலந்து விட்ட ஒன்று..
நண்பர்களே நீங்களும் உங்க பட்டபெயர் அனுபவத்தை பின்னூட்டமாகவோ முடிந்தால் ஒரு பதிவாகவே சொல்லாம்... சொல்லுங்க நானும் எதிர்பார்க்கிறேன்..