என்னுடைய மொபைல் எண்ணாக ஏர்செல்லை பயன்படுத்துகின்றறேன் கிட்டத்தட்ட 8 வருடமாக போஸ்ட்பெய்டு இணைப்பில் இதே எண்ணை பயன்படுத்தி வருகிறேன். அதிகமாக வெளி மாநிலங்களுக்கு செல்லும் வேலை எனக்கு இல்லை. கடந்த வாரம் திடீரென பெங்களுர் செல்ல வேண்டியதாகி விட்டது நாம் எங்கே சென்றாலும் முதல் கேட்கும் கேள்வியே அங்க போன ஏர்செல் எடுக்குமா? எடுக்கும் என்றார்கள் ஆனால் ரோமிங் ஆக்டிவ் செய்ய வேண்டும் என நண்பன் விளக்கினார்.
நான் ஏர்செல் வாடிக்கையாளர் சேவை மையத்தை தொடர்பு கொண்டு விவரத்தை சொன்னேன். அவர்கள் பதிலுக்கு இல்ல சார் நீங்க எங்க மொபைல் வாங்குனீங்களோ அங்க போய் எழுதி கொடுங்க அப்ப தான் செயல்படுத்த முடியும் என்றார்கள் இல்லிங்க என்னால் செல்ல முடியாத அவசர கால உதவி செய்யுங்கள் என்றேன் ஒரு 3 நிமிடம் கழித்து சரி சார் நாங்க உங்க வேண்டுகோளை எடுத்துக்கொள்கிறோம் என்றார்கள் சரி என்றேன்.
அடுத்த நாள் காலை ஓசூர் தாண்டி கொஞ்ச நேரத்தில் ஏர்செல் டவர் அவுட் நண்பனிடம் சொல்லி வாடிக்கையாளர் சேவை மையத்தை கேட்க சொன்னால் சார் உங்க வேண்டுகோள் ஏற்கப்பட்டு இன்னும் 24 மணி நேரத்தில் சரி செய்யபடும் என்று கூறிஉள்ளனர்.
ஆனால் சரி செய்யப்படவில்லை. தினமும் 24 மணி நேரத்தில் தூங்கும் நேரம் தவிர மற்ற அனைத்து நேரங்களிலும் அருகில் இருப்பது செல்போன் தான் தினமும் நிறைய போன்கள் பேசிக்கொண்டு இருந்த நான் அன்று ஒரு நாள் கையில் செல் இருந்தும் எந்த அழைப்பும் அழைக்கவும் முடியாமல் பேசவும் முடியாமல் நான் பட்ட அவஸ்தை சொல்லி மாளாது. அன்று மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளானேன் ஏர்செல்லால்.
இன்று காலை மறுபடியும் ஏர்செல் வாடிக்கையாளர் மையத்தை தொடர்பு கொண்டு கேக்கும் போது வந்த பதில் Sorry sir Technical Problem நீங்க கேட்ட எந்த தகவலும் தற்போது தர இயலாது சிரமம் பார்க்காமல் ஒரு 1 மணி நேரம் கழித்து பேசுங்க இது தான் வாடிக்கையாளர் சேவை மையம் கூறிய பதில்...
எனது கிரிடிட் லிமிட் 3500 நான் மாதம் கட்டும் கட்டணம் 700 என்ற போதிலும் எப்ப பிரச்சனை வந்தாலும் சாரி சார் டெக்னிக்கல் ப்ராப்ளம் இதே பதிலை சொல்கிறார்கள்.
சரி தவறு நம் மேல் தான் இத்தனை பிரச்சனைக்கு அப்புறம் நாம் ஏன் இங்கு இருக்கவேண்டும் இதே எண்ணை எப்படி மற்றொரு தொலை தொடர்புக்கு மாற்றுவது தமிழ்நாட்டில் இந்த வசதி நடைமுறைக்கு வந்து விட்டதா தெரிந்தால் சொல்லுங்க மக்களே...