உள்ளுரில் இருந்து உலகம் வரை........
தொடர்ந்து 35 வாரங்கள்
எழுதிய அஞ்சறைப்பெட்டி கடந்த ஒரு மாதமாக சரியாக எழுத இயலவில்லை. அலுவலக
வேலை பளு முக்கிய காரணம். எனது தந்தைக்கு கடந்த இருவாரங்களாக உடல்நிலை
சரியில்லாத காரணத்தால் அவருடன் மருத்துவமனையில் இருக்க வேண்டியதாகிவிட்டது.
இனி வரும் காலங்களில் அஞ்சறைப்பெட்டியில் காரம் சாரமாக எதிர்பாருங்கள்...
............................................................ .............................. .....
மருத்துவமனையில் இருந்த நாட்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு அனுபவங்கள்...
ஒரு
பெண்ணின் கணவர் 25 நாட்களாக கோமா நிலையில் உள்ளார் அவரின் உறவினர்கள்
யாரும் பிழைக்க மாட்டார் என்று சொல்லியும் அப்பெண் பிழைக்க வைப்பேன் என்று
தனது கணவரை காப்பாற்ற முயற்சி செய்துள்ளார். 25 நாட்களுக்கு பின் அவரின்
கை, கால்கள் அசைந்துள்ளது. நாங்கள் சென்ற அன்று அவருக்கு பிடித்த இளையராஜா
பாடல்களை கேட்க வைத்திருந்தனர். அப்பெண்ணின் தீவிர முயற்சி பலன்
அளித்துள்ளது அப்பெண் மாமா என்று அழைத்தால் அவர் கண் விழித்துப்
பார்க்கிறார் தற்போது. நாங்கள் வந்த அன்று அவர் கையை அசைத்து கண்களை சிமிட்டும் அளவிற்கு முன்னேற்றம் இருந்தது...
தனது கணவனை காப்பாற்ற வேண்டும் அவருடன் வாழ வேண்டும் என்ற வைராக்கியம்
நிறைய இருக்கும் ஆனால் இப்பெண் தன் கணவன் மேல் கொண்ட காதலை சொல்ல
வார்த்தையில்லை...
அப்பெண்ணின் கணவர் மீண்டும் அப்பெண்ணிற்கு கிடைக்க எனது
வாழ்த்துக்கள்.... அந்த பெண்ணின் காதலுக்கும், தன்னம்பிக்கைக்கும் ஒரு
சல்யூட்...
............................................................ .............................. .....
எப்ப
வரும் எப்ப வரும் என்று காத்திருந்த மழை நேற்று வானத்தை பொத்துக்கொண்டு
ஊத்தியது. நேற்று மழை பெய்யும் போது கேன்டினில் நின்று கொண்டு இருந்தேன்
அடித்த பலமான மழையில் 30 அடி தூரமுள்ள பக்கத்து அபார்ட்மெண்ட் தெரியாத
அளவிற்கு பொத்துக்கொண்டு ஊற்றியது.
மாநகரங்களில் மழை பெய்தால் சாலையோர கழிவு நீர் எல்லாம் சாலையில் புகுந்தது வரும் இருசக்கர வாகன ஓட்டிகளை எல்லாம் நாற்றத்துடன் வீடு போய் சேர வேண்டி உள்ளது.
கோவையிலேயே இப்படினா சென்னை எல்லாம் கேக்க வேண்டியதில்லை....
............................................................ .............................. ......
உள்ளாட்சி தேர்தல் களை கட்டுகிறது தினமும் இரவு கோட்டரும், புரோட்டாவும்
உள்ளே போகிறது. சில பஞ்சாயத்துகளில் மக்கள் இரவு நேரங்களில் வீட்டுல்
அடுப்பு பற்றவைப்பதில்லையாம் தினமும் சூடான சோறு இலவசமாக...
எல்லாம் இன்னும் ஒரு நாலு நாளைக்குத்தான் அப்புறம் ஜெயிச்சவன் கண்டுக்கவே மாட்டானுக....
............................................................ .............................. ......
ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் அடுத்து கைதாகப்போவது யார் என்று பட்டி தொட்டி எல்லாம் பட்டிமன்றமே நடக்கிறது.. யாருன்னு பொறுத்திருந்து பார்ப்போம்....
............................................................ .............................. ........
அதுவும் காங்கிரஸ் வாக்குவங்கியை காண ஆவலுடன் இருக்கிறேன்....
............................................................ .............................. ........
கூடங்குளம் பிரச்சனை மீண்டும் கிளம்பி உள்ளது பிரதமரின் கடிதத்தால் முதல்வரின் முடிவு நிச்சயம் பொதுமக்கள் பக்கம் இருக்கும்....
............................................................ .............................. ........
பிஎட் மாணவர் சேர்க்கையில் ஊழல், டிஎன்பிசியில் ஊழல் என தினமும் ஒரு செய்தி வருகிறது... ஊழல் இல்லாத துறை என்று எதையும் சொல்ல இயலாது....
தகவல்
சந்திரனில் ஆய்வு மேற்கொள்ள அமெரிக்கா ஒரு விண்கலம் அனுப்பியுள்ளது.
அதில் பொருத்தப்பட்டுள்ள சக்தி வாய்ந்த கேமராக்கள் சந்திரனின் மேற்பரப்பை
போட்டோக்களை எடுத்து பூமிக்கு அனுப்பியுள்ளது.
அறிமுக பதிவர்
இந்த
வார அறிமுகப்பதிவர் யசோதாகாந்த். இதமான அலைகள் என்ற பெயரில்
வலைப்பூ எழுதிவருகிறார்.. இவரின் கவிதை வரிகள் ஒவ்வொன்றும் மீண்டும்
மீண்டும் படிக்கத்தூண்டுகிறது.
தத்துவம்
குழந்தைகளே, மனிதர்கள் மனிதர்களாக வாழ பல சிறந்த பொன்மொழிகளை மகான்களும், அறிந்தவர்களும் கூறியுள்ளனர். அவற்றை படித்து அதன்படி வாழ்ந்து காட்டுவோம்.
நம்பிக்கை குறையும் போது ஒவ்வொரு மனிதனும் நெறியற்ற கொள்கையை மேற்கொள்கிறான்.
ஊசி முனையில் தவம் செய்தாலும் உன்னதுதான் கிட்டும்.
அஞ்சறைப்பெட்டி சுவை எப்பவும் போலே
ReplyDeleteஒவ்வொரு தகவலும் சுவாரசியம்
அறிமுக பதிவர் யசோதாகாந்த் அவர்களுக்கு வாழ்த்துக்கள்..
தத்துவம் அருமை ..
ஒவ்வொரு மருத்துவமனையும் ஒரு தனி உலகம். நெகிழ்வான பல கதைகள் அங்கு கிடைக்கும். நீங்கள் வெளியிட்டுள்ள விஷயம் மனதைத் தொட்டது. அஞ்சறைப் பெட்டி (வழக்கம் போல்) பிரமாதம்!
ReplyDeleteநீண்ட இடைவெளிக்கு பிறகு வரும் உங்களை வரவேற்கிறேன்... அஞ்சரை பெட்டி கார சாரமாக வருவதற்கு காத்திருக்கிறேன்...
ReplyDeleteப்பெண்ணின் கணவர் மீண்டும் அப்பெண்ணிற்கு கிடைக்க எனது வாழ்த்துக்கள்.... அந்த பெண்ணின் காதலுக்கும், தன்னம்பிக்கைக்கும் ஒரு சல்யூட்...//
ReplyDeleteகண்டிப்பாக இந்த அன்பு அந்த மனிதரை சுகமாக்கி விடும் வாழ்த்துக்கள்...
பல்சுவை விருந்து தகவல்கள்...!!
ReplyDeleteஉங்கள் அலசல் சூப்பர்......
ReplyDeleteநன்றி,
கண்ணன்
http://www.tamilcomedyworld.com
சுவாரசியமான தொகுப்பு..
ReplyDeleteஅந்தப் பெண்ணின் கனவனுக்கு கடவுள் சுகத்தை குடுக்கட்டும்..
சந்திரன் பற்றிய ஆய்வு அருமை...
நல்ல தொகுப்பு
ReplyDeleteஅஞ்சறைப்பெட்டியின் மனம்
ReplyDeleteவீசு தென்றலாய் மணக்குது.
அறிமுகப் பதிவருக்கு வாழ்த்துக்கள்.
நல்ல தொகுப்பு நண்பரே.....
ReplyDeleteதொடரட்டும் அஞ்சறை....
hospital.....niraiya padam kodukkum.
ReplyDeletenalla pathivu.
உங்களின் இந்த இடுகையை வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தியிருக்கிறேன். நேரம் கிடைக்கும் போது பார்வையிடவும் :-)
ReplyDeletehttp://blogintamil.blogspot.com/2011/10/blog-post_29.html