Thursday, May 24, 2012

கோவையின் சொர்க்கபுரி புரூக்பில்ட்ஸ்..


சென்னை, பெங்களூர் போல இப்போது எங்கள் கோவையிலும் மிகப்பெரிய மால்.. கோவையில் இதுவரை லஷ்மி காப்ளக்ஸ், சேரன் டவர்ஸ் இது தான் பெரிய வணிகவளாகம் இதை விட்டால் தனியாக இருக்கும் துணிகடைகளைத்தான் சொல்வோம்... ஆனால் இப்போது இங்கேயும் பல கடைகளை கடல் போல் கொண்ட மால் புரூக்பீல்ட்ஸ்...

முதலில் ஆர்எம்கேவி தொடங்கிய போது சென்றிருந்தோன் அப்போது அனைத்து தளங்களிலும் கடைகள் அதிகம் இல்லை கடந்த 3 மாதங்களுக்கு முன்பு இங்கு உள்ள நான்கு தளங்களும்  நிரம்பின. போதாக்குறைக்கு சத்தியம்  தியேட்டர்கள்  என களை கட்டுகிறது புரூக்பீல்ட்ஸ்...


கோவை மக்கள் அதிகம் செல்வது கிராஸ்கட் ரோடு, ஆஎஸ்புரம், ஒப்பனக்கார வீதி என்று சொல்லாம் ஆனால் தற்போது அதிக மக்கள் படையெடுக்கும் இடமாக புரூக்பீல்ட்ஸ் இருக்கிறது இந்த இடத்தை தற்போது கோவையின் சொர்க்கபுரி என்று சொன்னால் மிகையாகது...

கோவையில் இருந்து வெளியில் வேலையில் இருக்கும் யுவன்களும், யுவதிகளும் தங்கள் பெற்றோரை கூட்டி வந்து இதை விட பலமடங்கு பெரிய மால் எல்லாம் சென்னையிலும், பெங்களூரில் இருக்குது என்று பெருமை சொல்லும் போது அந்த பெற்றோர்கள் வியந்து பார்க்கும் அளவிற்கு இருக்கிறது புரூக்பீல்ட்ஸ்.

 
இரண்டு தளங்களில் நான்கு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடம், இரண்டு இடங்களில் இருசக்கர வாகனங்கள் நிறுத்து தளம் ( இதற்கு 3 மணி நேரத்துக்கு 20 ரூபாய் இது தனிக்கதை) என்று அனைத்து நிரம்பி வழிகிறது விடுமுறை நாட்களில். அதுவும் இப்போதைய கோடை விடுமுறையில் அள்ளுகின்றனர்.

இங்கு கிடைக்காத பொருளே இல்லை என்னும் அளவிற்கு டெக்ஸ்டைல், மொபைல், டிபார்ட்மென்ட் ஸ்டோர்ஸ் என அனைத்தும் மனதை கொள்ளை கொள்கிறது. ( பணத்தையும் தான்) 


புட் பிளாசைத்தான் மிக முக்கியமாக சொல்ல வேண்டும் மூன்றாம் தளத்தில் இடப்பக்கம் எல்லா உணவுவகைகளும் கிடைக்கும் வண்ணம் பல பிரபல கடைகள் அங்கு கடை விரித்துள்ளன.. அதற்கு பக்கத்திலேயே குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் கவரும் விளையாட்டுக்கள். ஸ்நோபவுலிங் என ஒரு 5 மணி நேரம் செலவழிக்கலாம் ( பணத்தையும் சேர்த்து தான்).

இங்கு செல்வதற்கு மிக முக்கியமானது வேறென்ன பணம் தான்.. எங்கு சென்றாலும் பணத்தை கட்டி கார்டு வாங்கிக்கொள்ள வேண்டும் என்ன வேண்டுமோ வாங்கிக்கொண்டு ஸ்வைப் செய்துட்டு வந்துகிட்டே இருக்கலாம். இது இங்குள்ள மக்களுக்கு புதிதான ஒன்று தான்..


கோவையில் இருப்பவர்கள் வார இறுதி நாட்களை விட வார நாட்களில் செல்லலாம்.  பாப்கார்ன் ஒன்று 30 ரூபாய்க்கு வாங்கிவிட்டு விண்டோ ஷாப்பிங் செய்வதற்கு அருமையான இடம்...

நிச்சயம் கோவையில் இருந்தால் பார்க்கவேண்டிய இடம்...

10 comments:

  1. பாப்கார்ன் ஒன்று 30 ரூபாய்க்கு வாங்கிவிட்டு விண்டோ ஷாப்பிங் செய்வதற்கு அருமையான இடம்...
    ////////////////

    பாப்கார்ன் 30 ரூபாயா? செல்லாது...!செல்லாது.....!

    ReplyDelete
  2. அருமையான இடம்..
    பகிர்வுக்குப் பாராட்டுக்கள்..

    ReplyDelete
  3. பேசாம நம்ம குழும சந்திப்பை அங்கயே நடத்திடலாம் :-)

    ReplyDelete
  4. நீங்க போட்டிருக்கிற தியேட்டர் போட்டோ சென்னை சத்தியம் மெயின் ஸ்க்ரீன் ஆச்சே?

    ReplyDelete
  5. ///பாப்கார்ன் 30 ரூபாயா? செல்லாது...!செல்லாது.....!//

    தமிழகத்தில் தற்போது டீசண்டான திரையரங்குகளில் எல்லாம் பாப்கார்ன் விலை 20 ரூபாய்க்கு மேலேதான் தான் தலைவா இருக்கு

    லாஸ்ட் வேகசன்ல நான் பார்த்து திகைத்து போன விசயங்களில் இதுவும் ஒன்று ..!

    ReplyDelete
  6. http://www.kovaineram.com/2011/12/blog-post_21.html

    எனது பதிவில் கொஞ்சம் ...

    ReplyDelete
  7. //நீங்க போட்டிருக்கிற தியேட்டர் போட்டோ சென்னை சத்தியம் மெயின் ஸ்க்ரீன் ஆச்சே?//

    யுவா இங்கேயும் இதே மாடல் தான்...

    ReplyDelete
  8. ப்ருக் பீல்டில் ப்ரூக் பாண்ட் டீ கம்பெனி இடம். ஆனால் மாலில் குடிப்பதற்கு டீ கிடைக்காது

    ReplyDelete
  9. நல்ல பகிர்வு.
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  10. அருமையான பதிவு
    பகிர்வுக்குப் பாராட்டுக்கள்..

    ReplyDelete