Tuesday, May 22, 2012

கிராமத்து திருவிழாவும் ரெக்கார்டு டேன்சும் 1



கிராமத்து திருவிழாக்களில் திருவிழா அன்று நடக்கும் இரவு நிகழ்ச்சி தான் முக்கியத்துவம் வாய்ந்தது. பக்கத்தில் இருக்கும் ஒவ்வொரு கிராமமும் ஒரு நிகழ்ச்சியை நடத்துவார்கள் அதில் எந்த ஊரில் நன்றாக இருக்கிறது என்று ஊர் பெருமை பேசுவர்கள் அவர்களின் நிகழ்ச்சியை பற்றி. அதனால் இரவு நிகழ்ச்சிக்கு மிக முக்கியத்துவம் இருக்கும் இது ஒவ்வொரு பகுதிக்கும் வேறுபடும் இதில் என் அனுபவம் இரண்டாவது பதிவாக...

ஒரு 15 வருடங்களுக்கு முன்பு அப்போது தான் இந்த டேன்ஸ் பிரபலமானது நாங்க பசங்க எல்லாம் முடிவு செய்துவிடுவோம்  இன்னிக்கு இந்த ஊரில் நிகழ்ச்சி எல்லாரும் போகலாம் என்று. கிராமத்தில் வெய்யில் காலங்களில் வெளியில் தான் கயித்து கட்டிலில் படுத்து தூங்ககுவோம் அதனால் எல்லா நிகழ்ச்சிகளும் பார்த்திடுவோம். வெளியில் படுத்திருக்கும் ஒவ்வொருவராக சேர்ந்து பத்து பேர் சேர்ந்திடுவோம் பின் மாட்டு வண்டி அல்லது சைக்கிளில் போய் நிகழ்ச்சியை பார்த்து ரசித்து அவர்கள் மேடையில் ஆட கீழ நாங்க ஆட என்று நிகழ்ச்சிகளை கட்டும்...

இப்படி நிகழ்ச்சி பார்த்துக்கொண்டு இருக்கும் போது தான் டேய் இன்னிக்கு அந்த மலையோர ஊரில் ரெக்காடேன்சாம் என்றார்கள்.. ஆஹா நானும் ரெக்கா டேன்ஸ் பார்த்ததில்லை போயே ஆகவேண்டும் அங்க செல்ல வேண்டும் எனில் வண்டி வேண்டும் யாரிடமும் வண்டி இல்லை என்ன செய்வது என்று சங்க கூட்டத்தை கூட்டி எல்லாம் அலசி ஆராய்ந்தோம். அதற்குள் எங்க ஊர் அண்ணன்களுக்கெல்லாம் செய்தி பரவ அவர்கள் வருவதை அறிந்து அவர்களை விசாரித்தேன் அண்ணே ரெக்கா டேன்ஸ் எப்படி இருக்கும் என்று அவர்கள் காதில் குசு குசு என பிசுபிசுத்தார் டேய் அங்க எல்லாம் ம்ம்ம்ம்................ தான்  இருக்கும் என்றார். உடனே மனதில் ஓர் இனம் புரியாத சந்தோசம் எனக்கு உள் மனதில். ஆளுக்கு பத்து ரூபாய் போட்டு டெம்போவை வாடகைக்கு எடுத்து அந்த ஊருக்கு முன்னால் அரை கிலோ மீட்டர் தூரத்தில் வண்டியை நிறுத்தி விட்டு சென்றோம்..

நான் கூட்டம் குறைவாகத்தான் இருக்கும் முன்னாடி போய் பார்க்கலாம் என்று இருந்தால் அங்கு எங்கு பார்த்தாலும் ஆட்கள், புதிதாக முளைத்துள்ள தேநீர் கடைகள், ரங்கரக்கட்டை விளையாட்டு என களை கட்டியது அந்த இடம்.. இது எந்த இடம் என்று சரியாக யோசிக்கும் போது நான்கு நாட்களுக்கு முன் நாங்கள் கிரிக்கெட் விளையாடிய மைதானம் தான் அது... சரி நிகழ்ச்சி எப்ப ஆரம்பிக்கும் எத்தனை மணிக்கு ............ டேன்ஸ் என்று ஒவ்வொருவராக விசாரித்துக்கொண்டு சென்றோம் அப்படியே எங்களை எங்க ஊர்க்காரங்க யாரும் பார்க்க கூடாது என்று ஒளிந்து ஒளிந்து சென்றோம்.

நிகழ்ச்சியின் மேல் இருந்த ஆர்வம் பொங்கி பட்டை ஒரு டம்ளர் சாப்பிட்டுவிட்டு நிகழ்ச்சி மேடை எப்படி இருக்கும் என்று பார்த்தால் 4 அடி உள்ள  மேடை அந்த மேடையை சுற்று டியூப்லைட் மைடைக்கு முன்பு முள் போல போட்டு இருந்தார்கள். இதற்குள்  நிறைய கிசு கிசு போன வருசம் எல்லாம் உள்ள போய் ரகளை செய்துவிட்டார்கள் அதனால பாதுகாப்பு பலமாக இருக்கிறது என்றனர். இன்னும்  ஆர்வம் அதிகமாகி அதிகமாகி ஆசையுடன் நின்று கொண்டு இருந்தோம்..

நிகழ்ச்சி ஆரம்பமானது ஆரம்பத்தில் பக்தி பாடல்களும் அப்புறம் ஒவ்வொரு பாடலாக மேதுவாக போய்க்கொண்டு இருந்தது நாங்க அப்படியே நகர்ந்து நகர்ந்து மேடைக்கு 20 அடிக்கு முன் இருந்தோம்.. அடுத்த பாடல்கள் என்று அறிவித்தார்கள் நேத்து ராத்திரி யம்மா, வா வா வாத்தியாரே, நான் ஆளான தாமரை போன்ற பாடல்கள் என்று சொன்னதும் விர் என்று சந்தோசத்துடன் இருக்கும் போது திரும்பி பார்த்தால் பக்கத்தில் எங்க ஊர் மக்கள் ஆஹா மாட்டிக்கிட்டோம் என்று இருக்கும் போது அவர்கள் எங்களை பார்க்க நாங்கள் அவர்களை பார்க்க கடைசியில் பார்க்காதது போலவே டேன்ஸ் பார்க்க ஆரம்பித்தோம்.

எதிர்பார்த்த எல்லா பாடல்களும் வந்தது நன்றாக ஆட்டம் போட்டார்கள் இங்கு பக்கத்தில் கேக்க கேக்க அடுத்த பாட்டுக்காம் இல்ல இதற்கடுத்த பாட்டுக்காம் என்று சூடேற்றிக்கொண்டு இருந்தார்கள் எதிர்பார்த்த எல்லா பாடல்களும் வந்துது ஆனால் எதிர்பார்த்து வந்த டேன்ஸ் வரல... நொந்து போய் தலையை தொங்க போட்டுக்கொண்டு கடைசியாக வந்து சேர்ந்தோம்...  எங்கள் ஊரில் இருந்து 25 கிலோ மீட்டர் தூரம் நாங்க பார்க்க போன இடத்துக்கு...

அன்றில் இருந்து இன்று வரை நானும் விசாரிச்சு இந்த ஊர்ல நடக்குமாம் அந்த ஊர்ல நடக்குதாம் என்று போய் பார்த்து பார்த்து ஏமாந்தது தான் மிச்சம்...

••••••••

வருடா வருடம் நிகழ்ச்சி நடக்கும் போது இந்த வருடம் டேன்சுக்கு அனுமதி இல்லை என்பார்கள் அப்பதான் நாங்கள் யோசித்து நாடகம் போடுவது என்றும் நாடகத்தில் இரண்டு சீனுக்கு ஒரு முறை ஒரு பாடலுக்கு நடனம் என்ற புதிய முறையை அறிமுகப்படுத்தி வெற்றிகரமாக டேன்சை நடத்தினோம்..

இந்த முறை உயர்நீதிமன்றத்தில் அனுமதி வழங்காததால் எப்படி நிகழ்ச்சியை நடத்துவது என்று குழம்பிக்கொண்டு இருக்கும் எங்கள் சுற்று வட்டாரத்தில் எங்கும் நிகழ்ச்சி நடக்கவில்லை என்ன செய்வது என்று யோசிக்கும் போது தான் வக்கில் நண்பர் மறுபடியும் மனு தாக்கல் செய்யலாம் என்றார் மறுபடியும் மனுதாக்கல் செய்து 75 ஆயிரம் ரூபாய்க்கு டேன்ஸ் நிகழ்ச்சிக்கு அட்வான்ஸ் 5 ஆயரிம் கொடுத்து காத்துக்கொண்டு இருந்தோம் திருவிழாவிற்கு அடுத்த நாள் நிகழ்ச்சி நடத்து என்று எதிர்பார்த்து இருக்கும் போது வெள்ளிக்கிழமை மதியம் 1 மணிக்கு எங்களுக்கு அனுமதி கிடைத்தது அப்புறம் இந்த வருடம் என்றும் இல்லாதது போல் வெற்றிகரமாக நடனத்தை நடத்தினார்கள் எம் நண்பர்கள்... எப்பவும் விட இந்த வருட ஆட்டம் கிளு கிளுன்னு இருந்தது...

3 comments:

  1. ரெக்கார்ட் டான்ஸ் பார்த்த அனுபவத்தை சொன்ன விதம் அருமை.

    ReplyDelete
  2. சினிமாவில் தவிர ரெகார்ட் டேன்ஸ் பார்த்ததே இல்லை. சுவையான கட்டுரை.

    ReplyDelete
  3. திரும்பி பார்த்தால் பக்கத்தில் எங்க ஊர் மக்கள் ஆஹா மாட்டிக்கிட்டோம் என்று இருக்கும் போது அவர்கள் எங்களை பார்க்க நாங்கள் அவர்களை பார்க்க கடைசியில் பார்க்காதது போலவே டேன்ஸ் பார்க்க ஆரம்பித்தோம்.

    ReplyDelete