Tuesday, May 22, 2012

இன்று தமிழகத்தில் அதிகம் சம்பாரிப்பது யார்??? ஓர் அனுபவ அலசல்...


தமிழகத்தின் அதிக கூட்டமும், அதிக வருமானம் உள்ள கடை எது என்றால் டாஸ்மார்க் என்பது அனைவரும் அறிந்ததே. டாஸ்மார்க் பற்றி நிறைய செய்திகள்  வருகின்றன வருமானம் அதிகம் இருந்தால் அதைப்பற்றியான கிசுகிசுக்கள் வருவது என்பது இயற்கையே. டாஸ்மார்க்கால் அரசுக்கு மட்டுமே அதிக இலாபம் என்று இருந்தால் அது தவறு என்பதை அனுபவத்தால் உணர்ந்தேன்.

இன்றைய இணைய உலகில் படித்து முடித்ததும் உடனே வேலைக்கு சென்று அதிக சம்பளம் வாங்குபவர்கள் பட்டியலில் சாப்ட்வேர் இன்ஜினியர்களுக்கு உண்டு. சாப்ட்வேர் என்றாலே அனைவரும் மெச்சுவர் அந்த அளவிற்கு ஐடி சம்பளத்தை கொடுக்கிறது என்றால் அது மிகையாகது. இவர்களை மிஞ்சும் அளவிற்கு சம்பாரிப்பவர்களும் இருக்கிறார்கள் அவர்கள் யார் என்று பார்ப்போம்....

நேற்று டாஸ்மார்க் சென்றேன் ஒரு பீர் வாங்கினேன் பீரின் விலை 75 தான் பாட்டிலில் குறிப்பிட்டு இருந்தது ஆனால் பணியாளர் 80 ரூபாய் வாங்கினார். 75 தானே இங்கே குறிப்பிட்டு இருக்கிறது என்றேன் கரண்ட் சார்ஜ் கட்டனும் பிரிட்ஜ் வாங்கினதுக்கு பணம் கட்டனும் இது தான் விலை இஷ்டமா இருந்தா வாங்கு சார் இல்லைனா விடுங்க சார் என்றார். சரி கொடுங்க சார் என்று நின்றேன்.

அப்போது அருகில் ஒருவர் எம்.சி 4 குவாட்டர் கொடு என்றார். சார் எம்சி இல்ல ஹனிபி தான் இருக்குது வாங்கிக்கு என்றார். சார் 4 குவாட்டர் இங்க குடிக்கறீங்களா இல்ல பார்சலா ? பார்சலுக்கு அனுமதி இல்ல சார் என்றதும் அவர் இங்க தாம்ப்ப குடிக்கிறேன். பார்சலுக்கு அனுமதி இல்லை என்று விதிமுறை எல்லாம் அழகா சொல்ற தம்பி சரக்கு வாங்கினா பில் போட்டு கொடுக்கனும் என்று ஒரு விதிமுறை போட்டாங்களே ஏன் அதை ஏம்பா செயல்படுத்துதில்லை நானே பதில் சொல்றேன் ஏன் என்றல் குவாட்டருக்கு 1 அல்லது 2 ரூபாய் அதிகம் வைத்து விக்கறீங்க அதனால தான் பில் தருவதில்லை என்றதும் விற்பனையாளர் வாயடைத்து நின்றார்.

அதற்குப்பின் தான் சாப்பிடும் போது அங்க பணியாற்றும் சிறுவனை கூப்பிட்டு ஏத் தம்பி இங்க ஒரு நாளைக்கு எத்தனை பீர் விற்கும் ?

1000க்கும் மேல விற்கும் சார் !!

குவாட்டர் ?

எப்படியும் 2000க்கும் பக்கமா விற்குமுங்க !!

அப்படியா சரிப்பா என்று யோசித்தேன் அதிர்ந்தேன்...

ஒரு பீருக்கு 5 ரூபாய் அதிகம் என்றால் 1000க்கு 5000 ரூபாய் ஆச்சு

ஒரு குவாட்டருக்கு 2 ரூபாய் என்றால் 4000 ரூபாய் ஆச்சு

ஒரு நாளைக்கு 9000 ரூபாயா கரண்ட் பில் வரும், ஆக பணியாளர்களுக்கு ஒரு நாள் வருமானம் 9000 ரூபாய்.

டாஸ்மார்க் கடைகளில் தினம் பணிபுரிவது ஒரு விற்பனையாளர், ஒரு சூப்பர்வைசர் என இரண்டு பேர் எப்படி இந்த பணத்த பிரிச்சுக்குவாங்க என்று டாஸ்மார்க் நண்பரிடம் விசாரித்தேன் இருவரும் பாதிக்கு பாதி பிரித்து கொள்வார்கள் ஆனால் நீ சொல்லும் அளவிற்கு எல்லா கடைகளிலும் விற்காது குறைந்தபட்சம் ஒருவருக்கு தினம் 2000 கிடைக்கும் என்றார்.

குறைந்த பட்சம் 2000 என்றால் சூப்பர் வைசர் தினம் வரவேண்டும் அவர் வருமானம் மாதம் 60000, 15 நாள் வரும் விற்பனையாளர் வருமானம் 30000 ஆயிரம்.

இப்ப சொல்லுங்க சாப்ட்வேர்ரா ? டாஸ்மார்க்கா ?

சில கேள்விகள்
டாஸ்மார்க் பணியாளர் எல்லாம் நிரந்தரம் செய்ய வேண்டும் என்று அனைவரும் வேலைக்கு செல்லமாட்டோம் என போராட்டம் நடத்தினார்கள் அரசு வேலைக்கு வரவில்லை என்றால் வேலையை விட்டு தூக்கிவிடுவோம் என்றதும் 95 சதவீத பணியாளர்கள் வேலைக்கு சென்று விட்டார்கள் இப்பதான புரியுது ஏன்? என்று???

பாட்டிலுக்கு 2 அதிகமா விற்கும் போதே இவ்வளவு வருமானம் இது போலி மதுப்பாட்டில், பாட்டில் மூடிய கழட்டி சரக்க மாத்திவிடுகிறார்கள் என்று நிறைய செய்திகள் வேறு வருது அப்ப அதுல எவ்வளவு இலாபம்???

ஒரு புல் பாட்டிலை எடுத்து கட்டிங் ஊற்றுகின்றனர் இது சரியான அளவில் இல்லை என்று ஆரம்பத்தில் இருந்து பிரச்சனை இருந்து வருகிறது... இதுல வரும் வருமானம் எவ்வளவு??

டாஸ்மார்க்கு அரசை மட்டும் வாழவைக்கவில்லை அங்கு இருப்பவர்களையும் சுக போகமாக வாழ வைக்குது....
இது ஒரு மீள்பதிவு

9 comments:

  1. அந்த ஏரியா போலீஸ், டாஸ்மாக் உயர் அதிகாரிகள், அரசியல்வாதிகள் - இவர்களுக்கு ஏதுமில்லையா?

    ReplyDelete
  2. சரக்கடிக்க போன இடத்துல ஆராய்ச்சி பண்ணிட்டு இருந்தா போதை எப்படிங்க ஏறும்? டவுட்டு

    ReplyDelete
  3. இவ்வளவு விபரமா பேசுற நீங்க டாஸ்மாக் போகலாமா? சிந்திக்கிறவர் தண்ணியடிக்கக்கூடாது. தண்ணியடிப்பவர் சிந்திக்கக்கூடாது.

    ReplyDelete
  4. படிச்சாலே சரக்கு அடிச்சது போல தலை சுத்துதே.

    ReplyDelete
  5. என்னமோ நடக்குது போங்க

    ReplyDelete
  6. //சிந்திக்கிறவர் தண்ணியடிக்கக்கூடாது. தண்ணியடிப்பவர் சிந்திக்கக்கூடாது.//

    அதானே...

    ReplyDelete
  7. ஏன் அங்க போகணும்... எதுக்கு அவங்களுக்கு மீட்ருக்கு மேல 1 ரூபாய் 2 ரூபாய் கொடுக்கணும்...

    தகவலை இன்ட்ரஸ்டிங்காக எழுதியிருக்கிறீர்கள்.. அருமை.

    ReplyDelete
  8. நாத்ததுக்குப் போற பணம் அரசு திண்ணு..அரசு ஊழியர் திண்ணு!

    ReplyDelete
  9. இந்தப் பகல் கொள்ளையை கேட்பார் இல்லை !

    "{ ஒசை } at: May 22, 2012 12:40 AM said...
    ...சிந்திக்கிறவர் தண்ணியடிக்கக்கூடாது. தண்ணியடிப்பவர் சிந்திக்கக்கூடாது."

    ஓசை சார்...உங்க கணக்குல ஒரு நாலு நல்ல சிந்தனையாளர் பெயரைச் சொல்லுங்க சார்

    ReplyDelete