Wednesday, May 16, 2012

அஞ்சறைப்பெட்டி 17/05/2012

உள்ளுரில் இருந்து உலகம் வரை........
கடந்த வாரம் நிறைய தூரம் பயணித்து செல்ல வேண்டி இருந்தது அதில் பவானியில் இருந்து மேட்டூர் செல்லும் சாலையில் ஒரு முறை சென்று வந்ததற்கே இடுப்பு கழன்டு விட்டது. தமிழகத்தின் மிக மோசமான சாலை எது என்றால் நிச்சயம் இந்த சாலையை சொல்லாம். இந்த சாலை வழியாக பயணிக்கும் இருசக்கர வாகன ஓட்டிகளை நினைத்தால் கொஞ்சம் வருத்தாமாகத்தான் இருக்கிறது.


...............................................................................................

அதிமுக ஆட்சியின் ஒராண்டுன் வெற்றிகரமான நிறைவு நிறைய சாதனைகளை செய்த மாண்புமிகு முதல்வர் அவர்களுக்க என் வாழ்த்துக்கள்... இந்த ஓராண்டின் முக்கிய சாதனையாக நான் கருதுவது டிஎன்பிசி தேர்வை நேர்மையான முறையில் நடத்தி ஆட்களை தேர்வு செய்வது, இலங்கை பிரச்சனையிலும், முருகன் உள்ளிட்டோர் தூக்கு தண்டனை பிரச்சனையிலும் அம்மா செயல்பட்ட வேகம் மக்களை மிக கவர்ந்தது...

...............................................................................................

15 மாதங்களுக்கு பின் 2 ஜி வழக்கில் கைதான ராசவுக்கு ஜாமீன் கொடுத்து ராசாவுக்கு ஜாமீனில் விடுதலையாகிவிட்டார். இனி 2ஜி வழக்கு இதே வேகத்தில் போகுமா? ஆமை வேகத்தில் போகுமோ???

................................................................................................

மதுரை அடுத்த ஆதினமாக நித்தியானந்தாவை நியமித்தது பெரும் சர்ச்சையை கிளப்பி உள்ளது. இதை மீட்க ஒரு குழு என தேவையில்லாமல் பொழுதை போக்குகிறார்கள்.. முதலில் இந்த சாமியார்களை நம்பும் மக்களைத்தான் நான் குறை சொல்வேன்.. அவர்கள் நம்ப நம்ப அனைவருக்கும் ஏமாற்றமே மிஞ்சம்... இதை நம்மக்கள் எப்ப புரிந்துகொள்ளப்போகிறார்களோ???
 
................................................................................................

இந்த வருடம் கத்திரி வெய்யிலின் தாக்கம் அதிகமாக ஆவதற்கு முன்பு ஆங்காங்கே மழை பெய்து வெய்யிலின் உக்கரத்தை குறைத்தது. கோவையைப்பொறுத்த வரை பகலில் நன்கு வெப்பமும் இரவில் குளிர்ச்சியாகவும் பருவநிலை நன்கு இருந்தது.. கோவையில் இருக்கும் சாலைகளில் இருபுறங்களிலும் உள்ள மரங்களை வெட்டியாதால் வாகனம் ஓட்டும் போதுதான் ரொம்ப சிரமப்படவேண்டி இருந்தது..

...............................................................................................

கோவை ப்ருக்பீல்டு மாலுக்க சென்றிருந்தேன் சென்னை, பெங்களூர் போல எங்கள் ஊரிலும் அனைத்து வசதிகளும் கொண்ட மால்.. 
எங்கள் ஊர் இளசுகளை எல்லாம் ரசிச்சு ரசிச்சு பார்க்க சிறந்த இடமாக இப்போது இது தான் உள்ளது.. வார விடுமுறை நாட்களில் கூட்டம் பிச்சுக்குது... 
ஊரில் உள்ள பாதி உணவு விடுதிகள் இங்கு கிளைகள் தொடங்கிவிட்டார்கள் அத்தனை இடங்களிலும் உட்கார இடம் இல்லாமல் சாப்பிட்டு தீர்க்கின்றனர் மக்கள்...
இங்கு எங்கு சென்றாலும் கார்டை கொடுத்து தான் பொருள் வாங்க வேண்டி இருக்கிறது அது ஒன்று தான் கடுப்படிக்கிற விசயம்....


..................................................................................................

கடந்த வாரம் எங்கள் ஊர் திருவிழாவை முன்னிட்டு நடன நிகழ்ச்சி ஏற்பாடு செய்திருந்தார்கள் நடன நிகழ்ச்சியை உய்ர்நீதிமன்றத்தில் அனுமதி வாங்கி நடந்தது.. ரொம்ப நாளைய குத்தாட்டு ஏக்கம் அன்று நிறைவடைந்தது. குத்தாட்டத்தில் தான் எத்தனை வகை அத்தனையும் ஈடுகட்டி ஆடினர் கலைஞர்கள்...

..................................................................................................

இங்கிலாந்தை சேர்ந்த விண்வெளி நிபுணர்கள் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது சூரிய குடும்பத்தை விட்டு தனியாக கண்ணுக்கு தெரியாத தூரத்தில் மறைந்து கிடந்த புதிய கிரகத்தை கண்டுபிடித்துள்ளனர்.
இந்த கிரகம் கே 01-872-0 என்ற நட்சத்திரத்தை சுற்றி உள்ளது. இது சனிக்கிரகம் அளவில் உள்ளது. புதிய கிரகத்தை 150 வருடங்களுக்கு முந்தைய தொழில் நுட்பத்தின் மூலம் கண்டுபிடித்துள்ளனர்.
இதே தொழில் நுட்பத்தை வைத்து தான் நெப்டியூன் கிரகத்தை விஞ்ஞானிகள் கண்டுபிடித்தனர். அமெரிக்காவின் நாசா விண்வெளி மையம் கெப்லர் டெலஸ்கோப்பை கடந்த 2009-ம் ஆண்டு முதல் நிறுவியுள்ளது. அதி நவீன தொழில் நுட்பம் கொண்ட இந்த டெலஸ்கோப் மூலம் புதிய கிரகங்கள் மற்றும் நட்சத்திரங்கள் கண்டறியப்படுகின்றன. இதன் மூலம் 1 லட்சத்து 50 ஆயிரம் நட்சத்திரங்கள் உள்ளிட்டவற்றை கண்காணிக்க முடியும். 

..................................................................................................


2 ஜி ஸ்பெக்ட்ரம் ஏலத்துக்கான குறைந்த பட்ச கட்டணத்தை உயர்த்த வேண்டும் என்று, தொலைத்தொடர்பு ஒழுங்கு முறை ஆணையம் (டிராய்) ஏற்கனவே சிபாரிசு செய்திருந்தது. கடந்த 2010-ம் ஆண்டில் 3ஜி ஸ்பெக்ட்ரம் ஏலத்தின் மூலம் மத்திய அரசுக்கு கிடைத்த வருமானம் ரூ.1 லட்சத்து 4 ஆயிரம் கோடி மட்டும்தான். ஆனால், டிராய் அமைப்பின் பரிந்துரை மூலம் 2 ஜி ஸ்பெக்ட்ரம் ஏலத்தின் மூலம் ஏறத்தாழ 7 மடங்கு அதிகமாக அதாவது ரூ.7 லட்சம் கோடி வருமானம் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் வோடபோன் உள்ளிட்ட பல்வேறு தனியார் தொலைத் தொடர்பு நிறுவனங்கள் டிராய் அமைப்பின் சிபாரிசுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளன. ஏர்டெல், வோடபோன், ஐடியா செல்லுலார், யூனினார், வீடியோகான் ஆகிய செல்போன் நிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரிகள் நேற்று டெல்லியில் மத்திய தொலை தொடர்பு மந்திரி கபில் சிபல், தொலை தொடர்புத்துறை செயலாளர் ஆர்.சந்திரசேகர் ஆகியோரை சந்தித்து பேசினர். தொலை தொடர்பு ஆணையம் செய்துள்ள பரிந்துரைகள் குறித்து அவர்கள் விவாதித்தனர்.
தொலை தொடர்பு ஆணையத்தின் பரிந்துரைகளை அமல் படுத்தினால், சில பகுதிகளில் செல்போன் கட்டணம் 2 மடங்காக அதிகரிக்க வாய்ப்பு உள்ளது என்று மந்திரி கபில் சிபலிடம் எச்சரிக்கை விடுத்தோம் என்று ஏர்டெல் தலைமை செயல் அதிகாரி சஞ்சய் கபூர் நிருபர்களிடம் தெரிவித்தார்.
முன்னதாக இதே பிரச்சினை குறித்து நேற்று காலையில் ரிலையன்ஸ், டாடா, சிஸ்டமா ஷியாம் டெலி சர்வீசஸ், ஆஸ்பி ஆகிய நிறுவனங்களின் உயர் அதிகாரிகளும் கபில் சிபலை சந்தித்து விவாதித்தனர்.
..................................................................................................


கோவையில் இருக்கும் பதிவர்கள் சார்பாக கோவையில் உள்ள பதிவர்கள் சந்திப்பு நடத்தலாம் அதானல் கோவையில் உள்ள பதிவர்கள், முகநூல் மற்றும் டிவிட்டர் நண்பர்கள் அனைவரும் விரைவில் ஒரு நாள் குறித்து சந்திக்கலாம்.

கோவையில் உள்ள பதிவர்கள் தங்கள் வலைப்பூவையும், தொடர்பு எண்ணையும் இநத் மின்மடலுக்கு kovaibloggers@gmail.com மடல் அனுப்பவும்.

கோவை, அதனை சுற்றி உள்ள பகுதியில் உள்ள பதிவர்கள் அனைவரையும் வரவேற்கிறோம்.

விரைவில் சந்திப்போம்...



தகவல்
எல்லோருக்கும் கோடீஸ்வரன் ஆகும் ஆசை இருப்பது சகஜம். எப்படியாவது பணம் சம்பாதித்து கோடீசுவரன் ஆகிவிட மாட்டோமா என்ற நினைப்பு இருக்கும். ஆனால் அரியானா மாநிலத்தில் விவசாயி ஒருவர் ரூ. 965 கோடிக்கு அதிபதி ஆகி, அது 40 நிமிடத்தில் கலைந்துபோன சம்பவம் நடந்துள்ளது.
அந்த விவசாயி பெயர் சுஷில்குமார். அரியானா மாநிலம் நெக்லா கிராமத்தில் வசிக்கிறார். நிலத்தில் உழுது, பயிர் செய்து பிழைப்பு நடத்தி வரும் ஏழை. இவர் பஞ்சாப் நேஷனல் வங்கி கிளையில் கணக்கு வைத்திருக்கிறார். நண்பர் ஒருவர் சுஷில்குமார் வங்கி கணக்குக்கு ரூ. 40 ஆயிரம் அனுப்பி இருந்தார். நேற்று அவர் தனது கிராமத்தின் அருகில் உள்ள ஏ.டி.எம். மையத்துக்கு பணம் சரி பார்க்கச் சென்றார். கார்டை சொருகி பேலன்ஸ் பட்டனை அழுத்தினார்.
அடுத்த நொடியே அவருக்கு இன்ப அதிர்ச்சி. தனது கணக்கில் ரூ. 965 கோடி இருப்பு இருப்பதாக காட்டியது. நண்பர் அனுப்பியது ரூ. 40 ஆயிரம். அனால் ரூ. 965 கோடி எப்படி வந்தது. அவருக்கு ஒன்றுமே புரியவில்லை. இன்ப அதிர்ச்சியில் தலை சுற்றியது. உடனே அருகில் உள்ள மற்றொரு ஏ.டி.எம். மையம் சென்று அங்கு இருமுறை கார்டை சொருகி பார்த்தார். அங்கும் அவரது கணக்கில் ரூ. 965 கோடி இருப்பதாக காட்டியது. ஏ.டி.எம். மிஷினில் இருந்து வந்த சிலிப்பிலும் அதே தொகையை காட்டியது.
ஏழையாக இருந்த தான் ரூ. 965 கோடிக்கு அதிபதியானது எப்படி? ஏதாவது அதிசயம் நடந்து விட்டதா? என்று கோடீஸ்வரர் கற்பனையில் வீட்டுக்கு சென்றார். அவரது கனவு 40 நிமிடம் கூட நிலைக்கவில்லை. தவறை தெரிந்து கொண்ட வங்கி அதிகாரிகள் சிறிது நேரத்தில் அவரது வீட்டுக்கு சென்று கதவை தட்டினார்கள். கதவை திறந்து வந்த சுஷில்குமாரிடம் உங்கள் கணக்கில் தவறு நடந்துள்ளது. எனவே உங்கள் கணக்கு முடக்கப்பட்டுள்ளது என்று கூறி விட்டுச் சென்றனர். 40 நிமிடம் கோடீஸ்வரராக இருந்தவர் மீண்டும் ஏழையாகி விட்டார்.
இதுபற்றி பஞ்சாப் நேஷனல் வங்கி முதன்மை மேலாளர் பி.ஆர்.சர்மா கூறுகையில், சுஷில்குமார் வங்கி கணக்கில் தவறு நடந்து உள்ளது. கம்ப்யூட்டர் மூலம் கணக்கில் பணம் வரவு வைக்கும்போது தவறு ஏற்பட்டு விட்டது. இந்த தவறு எப்படி ஏற்பட்டது என்பது குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மனித தவறா? அல்லது கம்ப்யூட்டர் கோளாறா? என ஆய்வு நடக்கிறது என்றார். சுஷில்குமார் வங்கி கணக்கில் தவறுதலாக மாற்றப்பட்டு இருந்த பணம் மீண்டும் பழைய நிலைக்கு கொண்டு வரப்பட்டது.
தற்போது சுஷில் குமார் கணக்கில் ரூ. 40 ஆயிரம் மட்டுமே இருப்பு உள்ளது. முடக்கப்பட்ட அவரது கணக்கு உடனடியாக விடுவிக்கப்பட்டது. கைக்கு கிடைத்தது வாய்க்கு கிடைக்கவில்லையே என்பதுபோல் விவசாயி ஏமாற்றம் அடைந்தார்.
அறிமுக பதிவர்

இந்த வார அறிமுக பதிவர்  என் ஜன்னலுக்கு வெளியே  என்று தன் வலைப்பூவிற்கு பெயரிட்டு தன் அனுபவங்களையும், பிடித்ததையும் எளிய நடையில் எழுதி நம்மை கவர்கிறார் நிரஞ்சனா.

http://nirusdreams.blogspot.com

தத்துவம்

பேசும்முன் கேளுங்கள், எழுதுமுன் யோசியுங்கள், செலவழிக்கும்முன் சம்பாதியுங்கள்

எதைக் கண்டு ஒரு மனிதனுக்கு சிரிப்பு வருகிறதென்று கவனி. அவன் எப்படிப்பட்டவனென்று மிக நன்றாகத் தெரிந்து கொண்டு விடலாம்.

வெற்றியை முழுமையாக அனுபவிக்கவேண்டும் என்றால் அவன் நிச்சயம் சிறு தோல்வியாவது சந்தித்திருக்க வேண்டும்...


வாழ்க்கையில் பொருள் செல்வத்தைச் சேர்ப்பது எளிது; அருள் செல்வத்தைச் சேர்ப்பதுதான் அரிதாகும்.

14 comments:

  1. புதிய கிரகம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்ட செய்தியும், சுஷில்குமாரின் வங்கிக் கணக்குல நடந்த குளறுபடியும் எனக்கு புதுத்தகவல்கள். அஞ்சறைப் பெட்டி மூலமா தெரிஞ்சுக்கிட்டதுல ரொம்ப சந்தோஷம், தத்துவங்கள் பிடிச்சிருந்தது. 2ஜி வழக்கு இனி ரொம்ம்ம்ப்ப மெதுவாயிடும்கறது என்னோட கணிப்பு ஸார்.

    புதிய பதிவரான என்னை அறிமுகம் செஞ்சிருக்கிறதைப் பார்த்ததுல மிகமிகமிக மகிழ்ச்சி எனக்கு. உங்களுக்கு நிறைய நிறைய நன்றிகள் ஸார்...

    ReplyDelete
  2. அருமை...அப்படியே எங்களையும் பிரபல படுத்தினா புண்ணியமா போகும்...ஹி ஹி ஹி

    ReplyDelete
  3. அஞ்சறைப்பெட்டி தகவல் களஞ்சியம் ..!

    ReplyDelete
  4. //அருமை...அப்படியே எங்களையும் பிரபல படுத்தினா புண்ணியமா போகும்...ஹி ஹி ஹி//
    இதுக்கெல்லாம் ஒரு நேரம் வரும் கோவை நேரம்.

    ReplyDelete
  5. அஞ்சறைப்பெட்டி - நிறை அறிந்து கொண்டேன்.

    ReplyDelete
  6. அஞ்சறை பெட்டி
    தகவல்கள் வழிந்தொழுகும்
    அறிவுப் பெட்(டி)டகம்

    நல்ல பதிவு சார்

    ReplyDelete
  7. விவசாயை அரசியல்வாதிகதான் நோகடிக்கறாங்கன்னா வங்கிக்காரங்களுமா.......

    ReplyDelete
  8. நடத்துங்க மக்கா நடத்துங்க......

    ReplyDelete
  9. /இந்த ஓராண்டின் முக்கிய சாதனையாக நான் கருதுவது டிஎன்பிசி தேர்வை நேர்மையான முறையில் நடத்தி ஆட்களை தேர்வு செய்வது, இலங்கை பிரச்சனையிலும், முருகன் உள்ளிட்டோர் தூக்கு தண்டனை பிரச்சனையிலும் அம்மா செயல்பட்ட வேகம் மக்களை மிக கவர்ந்தது... ///


    உண்மைதான்

    ReplyDelete
  10. சாதனையை சொல்ல முடியாத அளவு சோதனை தந்துவிட்டது மின்சாரம்

    ReplyDelete
  11. அஞ்சறைப் பெட்டி மனக்கிறது.

    ReplyDelete
  12. கொங்கு மண்டல பதிவர்களின் தல தளபதிகளான சதீஷ்-சுரேஷ் அவர்களே.....!!

    ReplyDelete
  13. அருமையான தொகுப்புகள்.
    வாழ்த்துகள்.

    ReplyDelete