Friday, January 29, 2010

வெற்றிலையின் மகத்துவம்....

 வெற்றிலை நமது பாரம்பரியத்தில் ஊரிய ஒன்று. நமது வீட்டிலோ, உறவினர் வீடடிலோ எங்கு விருந்துக்குச் சென்றாலும் விருந்து சாப்பிட்டவுடன் அனைவரும்   தேடுவது    வெற்றிலையைத்
தான். நமது முன்னோர்கள் நமக்கு பல நல்ல பழக்க வழக்கங்களை பழக்கி உள்ளனர் இதில் முக்கியமானது வெற்றிலை. வெற்றிலையை பற்றி பல பாடல்கள் வந்து இருக்கின்றது. வீட்டில் எந்த விசேசமானலும் வெற்றிலைக்கு முக்கியத்துவம் உண்டு. திருமணத்திற்கு முதன் நிச்சியதார்த்தம் என்று நடத்துவார்கள் இதில் வெற்றிலை தான் அனைவருக்கும் கொடுப்பார்கள். அந்த அளவிற்கு நம்முடன் ஊறிப்போனது வெற்றிலை.
கிராமங்களில் வசதி படைத்த ஆட்கள் வீட்டுக்குச்சென்றால் வாங்க வாங்க என்று வரவேற்றுவிட்டு தாம்பூலத்தட்டை நீட்டுவார்கள். அதில் வெற்றிலை தான் இருக்கும். தமிழர்களின் வாழ்வில் மருந்தாகவும், உணவாகவும், உணவிற்குப் பிறகான உபச்சார பண்டமாகவும் பயன்பட்ட வெற்றிலை நம் பண்பாட்டுச் சின்னமாகவும் திகழ்கிறது. திருமணத்திற்கு உறவினர்களை அழைக்கும் போது வெற்றிலை கொடுத்து அழைக்கும் பழக்கம் இன்றும் உண்டு. திருமணத்திற்கு வரும் உறவினர்களும், நண்பர்களும் அன்பளிப்பை வெற்றிலையில் வைத்து தான் கொடுப்பார்கள்.
கிராமங்களில் வெற்றிலை சமாதான சின்னமாக விளங்குகிறது. சண்டை போட்ட இருவரை சமாதானப்படுத்த ஊர்ப் பெரியவர்கள், வெற்றிலையைக் கொடுத்து ஒருவருக்கு ஒருவர் மாற்றிக் கொள்ளச் செய்வார்கள். உறவை விரும்பாதவர்கள் வாங்கி அதைக் கிழித்துப் போட்டு தன் எதிர்ப்பைக் காட்டுவர்.
வெற்றிலையின் மருத்துவப்பயன் :
வெற்றிலையில் கால்சியம், இரும்புச்சத்து ஆகியன அதிகம் உள்ளது.
 வயிற்றுவலி:
இரண்டு தேக்கரண்டியளவு சீரகத்தினை மைபோல் அரைத்து மூன்று தேக்கரண்டி வெண்ணெயில் போட்டு கலக்கி 5 வெற்றிலையை எடுத்து அதன் பின் புறத்தில் இந்தக்கலவையை கனமாக தடவி, மருந்து தடவிய பாகத்தை சட்டியில் படும்படி வைத்து வதக்க வேண்டும். ஒவ்வொரு வெற்றிலையையும் வதக்கிய பின் ஒரு டம்ளர் தண்ணீரை விட்டு நன்றாக கொதிக்க வைத்து இறக்கி வடிகட்டி அந்த கசாயத்தை ஒரு வேளை மட்டும் சாப்பிட்டால் வயிற்றுவலி நீங்கி விடும்.
தலைவலி:
வெற்றிலையைக் கசக்கிக் சாறு எடுத்து அந்த சாற்றில் சிறிதளவு கற்பூரத்தைச் சேர்த்துக் குழப்பி வலியுள்ள இடத்தில் தடவினால் தலை வலி உடனே குணமாகும்.
தேள் விஷம்:
இரண்டு வெற்றிலையை எடுத்து அதில் ஒன்பது மிளகை மடித்து வாயில் போட்டு நன்றாக மென்று விழுங்கி தேங்காய் துண்டுகள் சிலவற்றினையும் மென்று தின்றால் தேள் விஷம் உடனே முறியும்.
சர்க்கரை வியாதி:
சர்க்கரை வியாதி உள்ளவர்கள் இரண்டு வெற்றிலையுடன் வேப்பிலை ஒரு கைப் பிடியளவும் அருகம்புல் ஒரு கைப்பிடியளவும் ஒரு சட்டியில் போட்டு 500 மிலி தண்ணீர் விட்டு நன்றாக கொதிக்க விடவும். தண்ணீரின் அளவு 150 மிலி ஆக குறையும் வரை கொதிக்க விட்டு, பின்பு வடிகட்டி ஆற வைத்து வேளைக்கு 50 மிலி வீதம் மூன்று வேளை உணவுக்கு முன்பு சாப்பிடவும்.
அல்சர்:
அல்சர் உள்ளவர்கள் இரண்டு வெற்றிலையுடன் அத்தி இலை 1 கைப்பிடி வேப்பிலை 5 ஆகியவற்றை மேலே உள்ள முறைப்படி கசாயம் தயாரித்து மூன்று வேளை அருந்தி வரவும். முற்றின வெற்றிலையைச் சாறு பிழிந்து அதில் இரண்டு அவுன்ஸ் சாற்றுடன் 3 மிளகு அதே அளவு சுக்கு ஆகியவற்றை ஒரு தேக்கரண்டி தேனுடன் கொடுத்தால் இரைப்பு மூச்சுத் திணறல் குணமாகும்.
  • பொதுவான குணம். சீதம் நீக்கும், வெப்பம் தரும், அழுகல் அகற்றும், உமிழ்நீர் பெருக்கும், பசி உண்டாக்கும், பால் சுரக்க வைக்கும், காமத்தைத் தூண்டும். நாடி நரம்பை உரமாக்கும், வாய் நாற்றம் போக்கும்.
  • வெற்றிலைச் சாறு சிறுநீரைப் பெருக்குவதற்கும் பயன்படுகிறது. வெற்றிலைச்சாற்றுடம் நீர் கலந்த பாலையும், தேவையான அளவு கலந்து பருகி வர சிறு நீர் நன்கு பிரியும்.
  • வெற்றிலையை கடுகு எண்ணெயில் போட்டு லேசாக சூடு செய்து மார்பில் வைத்துக் கட்டிவர மூச்சுத் திணறல் மற்றும் இருமலுக்கு சுகம் தரும்.
  • குழந்தைகளுக்கு வரும் சுரம், சன்னிக்கு, வெற்றிலைச் சாற்றில் , கஸ்தூரி, கோரோசனை, சஞ்சீவி ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை மத்தித்து தேனுடன் கொடுக்க குணமாகும். சளி, இருமல், மாந்தம், இழுப்பும் குணமாகும்.
  • வெற்றிலையை அனலில் வாட்டி அதனுள் ஐந்து துளசி இலையை வைத்துக் கசக்கிப் பிழிந்து சாறு எடுத்து 10 மாத குழந்தைக்கு 10 துளிகள் காலை, மாலை கொடுக்க சளி, இருமல் குணமாகும். அனலில் வாட்டிய வெற்றிலையை மார்பிலும் பற்றாகப் போட சளி குறையும்.
  • குழந்தைகளுக்கு மலர்ச்சிக்கல் ஏற்பட்டால் வெற்றிலைக் காம்பை ஆமணக்கு எண்ணையில் தோய்த்து ஆசன வாயில் செலுத்த உடனடியாக மலம் கழியும்.
  • வெற்றிலையை அரைத்து கீல்வாத வலிகளுக்கும், விதைப்பையில் ஏற்படும் வலி, வீக்கம் முதலியவைகளுக்கு வைத்துக் கட்ட நல்ல பலன் தரும்.
  • கம்மாறு வெற்றிலைச் சாறு 15 மி.லி. அளவு வெந்நீரில் கலந்து கோடுக்க வயிற்று உப்புசம், மந்தம், சன்னி, சீதளரோகம், தலைவலி, நீர் ஏற்றம் வயிற்று வலி குணமாகும்.
  • வெற்றிலையில் சிறிது ஆமணக்கு எண்ணெய் தடவி லேசாக வாட்டி கட்டிகளின் மேல் வைத்துக்கட்டி வர கட்டிகள் உடைந்து சீழ் வெளிப்படும். சிறப்பாக இதை இரவில் கட்டுவது நல்லது.
  • சுக்கு, மிளகு, திப்பிலி சம அளவு கலந்த திரிகடுக சூரணத்துடன் வெற்றிலைச் சாறு தேன் கலந்து சாப்பிட ஆஸ்துமா குணமாகும். 5 கிராம் சூரணம்+10 மி.லி. வெற்றிலைச்சாறு தேன் 10 கிராம் கலந்து காலை, மாலை நோயிக்குத் தக்க வாறு 48-96 நாள் சாப்பிட வேண்டும்.
  • குழந்தை பெற்ற பின்னர் தாய்க்கு அதிகமாக பால் சுரக்க வெற்றிலையை சிறிது ஆமணக்கு எண்ணெய் விட்டு வதக்கி மார்பில் வைத்துக் கட்டி வர தாய்பால் அதிகமாகச்சுரக்கும்.
  • வெற்றிலைச் சாறு நான்கு துளி காதில் விட எழுச்சியினால் வரும் வலி குணமாகும்.
  • விடாது மூக்கில் ஒழுகும் சளிக்கும் வெற்றிலைச்சாற்றை மூக்கில் விட குணமாகும்.
  • ஒரிசாவில் சில பகுதிகளில் பெண்கள் குழந்தைகள் பிறக்காமல் தடுக்க 10 கிராம் வெற்றிலை வேரையும், மிளகையும் சம அளவு வைத்து அரைத்து 20-40 நாட்கள் சாப்பிட்டு வருகிறார்கள்.
  • வெற்றிலையின் வேரை சிறுதளவு எடுத்து வாயிலுட்டு மென்று வர குரல் வளம் உண்டாகும். எனவே இசைக்கலைஞர்கள் இதனை அதிகம் பயன்படுத்துகிறார்கள்.
  • நுரையீரல் சம்பந்தமான நோய்களிக்கு வெற்றிலைச்சாறும், இஞ்சிச் சாறும் சம அளவு கலந்து அருந்திவர நன்மை ஏற்மடும்.
  • சிறுவர்களுக்கு அஜீரணத்தைப் போக்கி பசியைத் தூண்ட வெற்றிலையோடு மிளகு சேர்த்து கஷாயம் செய்து கொடுத்து வரலாம்.

41 comments:

  1. இவ்வளவு இருக்கா வெற்றிலையில?

    நிறைய தெரிந்துகொள்ளமுடிந்தது.

    பகிர்வுக்கு நன்றி சங்கவி!

    ReplyDelete
  2. வாங்க இராதாகிருஷ்ணன்...

    தங்கள் வருகைக்கும், கருத்துக்கம் நன்றி...

    ReplyDelete
  3. வாங்க சுந்தரா....

    தங்கள் வருகைக்கும், கருத்துக்கம் நன்றி...

    ReplyDelete
  4. அங்க சிலருக்கு வெற்றிலை வேணுமாம் சங்கவி...

    ReplyDelete
  5. வடிவமைப்பு, எழுத்துரு எல்லாமே சிறப்பாக இருக்கிறது. புத்தகம் படித்த திருப்தி.

    ReplyDelete
  6. நல்ல தகவல்கள்..பகிர்வுக்கு நன்றி சங்கவி

    ReplyDelete
  7. ஆகா... இத்தன நல்ல விசயங்கள் இருக்கா... நன்றிங்க...

    ReplyDelete
  8. வெற்றிலையின் மகத்துவம் மிகவும் அருமை சங்கவி.

    ReplyDelete
  9. வாங்க தண்டோரா....

    //அங்க சிலருக்கு வெற்றிலை வேணுமாம் சங்கவி...//

    யார்னு சொல்லுங்க பார்சல் அனுப்பிடலாம்....

    ReplyDelete
  10. வாங்க நேசமித்தரன்...

    தங்கள் வருகைக்கும், கருத்துக்கம் நன்றி...

    ReplyDelete
  11. வாங்க ஜோதிஜி....

    //வடிவமைப்பு, எழுத்துரு எல்லாமே சிறப்பாக இருக்கிறது. புத்தகம் படித்த திருப்தி.//

    நான் ஒரு வடிவமைப்பாளர் சார்....

    தங்கள் வருகைக்கும், கருத்துக்கம் நன்றி...

    ReplyDelete
  12. வாங்க ஆருரன்...

    தங்கள் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி..

    ReplyDelete
  13. வாங்க பாலாசி...

    தங்கள் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி..

    ReplyDelete
  14. வாங்க பாலாசி...

    தங்கள் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி..

    ReplyDelete
  15. வாங்க இராதாகிருஷ்ணன்...

    தங்கள் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி..

    ReplyDelete
  16. அட! செமத்தியான தகவல் பதிவா இருக்கே. பகிர்வுக்கு நன்றி

    ReplyDelete
  17. தெரியாத விசயங்கள் பல் வெற்றிலை பற்றி தெரியவந்தது.

    ReplyDelete
  18. வாங்க அமிர்தவர்ஷினி அம்மா....

    தங்கள் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி...

    ReplyDelete
  19. வாங்க கண்ணகி...

    தங்கள் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி...

    ReplyDelete
  20. நல்ல பதிவு சங்கவி..

    கை,கால்,மூட்டு வலிகளுக்கு,எலும்பு உறுதிக்கு இப்ப டாக்டர்களே பெண்களை மதிய உணவுக்கு பிறகு வெத்தலை பாக்கு போடுங்கன்னு சொல்றாங்க..:))

    பழசெல்லாம் திரும்புது..:))

    ReplyDelete
  21. வெற்றிலை வெற்று இலையில்லை:). நல்ல பகிர்வு. நன்றி

    ReplyDelete
  22. வெற்றிலையப்பற்றி எல்லா விவரங்களையும் அருமையாய் தொகுத்து கலக்கியிருக்கிறீர்கள்... வாழ்த்துக்கள் சங்கவி...

    பிரபாகர்.

    ReplyDelete
  23. வாங்க பாலா...

    //கை,கால்,மூட்டு வலிகளுக்கு,எலும்பு உறுதிக்கு இப்ப டாக்டர்களே பெண்களை மதிய உணவுக்கு பிறகு வெத்தலை பாக்கு போடுங்கன்னு சொல்றாங்க..:))

    பழசெல்லாம் திரும்புது..:))//

    உணவு வகைகளைப் பொறுத்த மட்டில் பழசெல்லாம் திரும்பினால் தான் நலமாய் வாழ முடியும்...

    ReplyDelete
  24. வாங்க வானம்பாடிகள் சார்...

    //வெற்றிலை வெற்று இலையில்லை:)//

    நல்ல கவிதை...

    தங்கள் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி...

    ReplyDelete
  25. வாங்க பிரபாகர்...

    தங்கள் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி...

    ReplyDelete
  26. வெற்றிலை வெத்து இலை இல்லை.இவ்ளோ நல்லதா ?

    ReplyDelete
  27. வாங்க ஸ்ரீ.....

    தங்கள் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி...

    ReplyDelete
  28. வாங்க ஹேமா....

    தங்கள் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி...

    ReplyDelete
  29. பயனுள்ள பதிவு.

    ReplyDelete
  30. நிறைய தகவல்கள். நன்றி சங்கவி.

    ReplyDelete
  31. வாங்க ஜெர்ரி சார்...

    தங்கள் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி...

    ReplyDelete
  32. வாங்க அம்பிகா...

    தங்கள் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி...

    ReplyDelete
  33. நல்ல பயனுள்ள இடுகை.. பாராட்டுக்கள்

    ReplyDelete
  34. வெற்றிலை நம்ம ஊரிலயும் தோட்டம் இருக்கு இதுபற்றி பதிவு நானும் எழுதணும் எண்டு இருக்கன்
    விரைவில் வரும்
    மிக நல்ல பதிவு சங்கவி.

    ReplyDelete
  35. உபயோகமான மருத்துவ பதிவுகளுக்கு நன்றி. பிரியாணி சாப்பிட்டு விட்டு, வெற்றிலை போட்டால், ஜீரணம் அவ்வளவு எளிதாக இருக்கும். அனுபவம்.

    ReplyDelete
  36. இந்த பதிவிற்கு உங்களுக்கு தாம்பூலம் கொடுத்து பாராட்டணும்.

    சூப்பர்.

    ReplyDelete
  37. அடேங்கப்பா இவ்வளவு இருக்கா வெற்றிலையில சங்கவி அருமையான பகிர்வு

    ReplyDelete
  38. மறைவாய் சொன்ன கதைகள் என்ற புத்தகத்தில் வெற்றிலை எங்கிருந்து, எப்படி வந்ததுன்னு ஒரு கதை இருக்குமே படிச்சிருக்கிங்களா!?

    ReplyDelete