Tuesday, January 19, 2010

நலமாய் வாழ மாதுளையின் பங்கு


மாதுளையில் இனிப்பு, புளிப்பு, துவர்ப்பு ஆகிய மூன்று ரகங்கள் உள்ளன. இனிப்பு மாதுளம் பழத்தைச் சாப்பிட்டால் இதயத்திற்கும், மூளைக்கும் மிகுதியான சக்தி கிடைக்கிறது. பித்தத்தைப் போக்குகிறது இருமலை நிறுத்துகிறது.
புளிப்பு மாதுளையைப் பயன்படுத்தினால் வயிற்றுக் கடுப்பு நீங்குகிறது. இரத்த பேதிக்குச் சிறந்த மருந்தாகிறது. தடைபட்ட சிறுநீரை வெளியேற்றுகிறது. பித்தநோய்களை நிவர்த்தி செய்கிறது. குடற்புண்களை ஆற்றுகிறது. எந்த வகையான குடல் புண்ணையும் குணமாக்குகிறது. மாதுளம் விதைகளைச் சாப்பிட்டால் இரத்தவிருத்தி ஏற்படும். சீதபேதிக்குச் சிறந்த நிவாரணம் அளிக்கும்.
மாதுளம்பழம் சாப்பிடுவதால் ஏற்படும் பயன்கள்:
  • தொடர்ந்து நோயின் பாதிப்பால் பலகீனம் அடைந்தவர்கள் மாதுளம் பழத்தைச் சாப்பிட்டால் உடல் தேறும், உடல் எடை கூடும்.
  • தொண்டை, மார்பு, நுரையீரல், குடலுக்கு அதிகமான வலிமையை உண்டாக்குகிறது.
  • ஆண் தன்மையில் பலகீனம் உள்ளவர்கள் மாதுளம்பழம் சாப்பிடுவதால் மிகுந்த சக்தியை அடைய முடிகிறது.
  • மாதுளம்பழத்தைச் சாப்பிட்டால் விக்கல் உடனே நிற்கும்.
  • அதிக தாகத்தைப் போக்கும்.
  • மாதுளம் பழச்சாற்றில் கற்கண்டு சேர்த்து சாப்பிட்டால் உடல் சூட்டு நோய்கள் நீங்கும். சரீரம் குளிர்ச்சியடையும். காய்ச்சல் தணியும்.
  • மாதுளம் பழச்சாற்றில் தேன் கலந்து காலை ஆகாரத்துக்குப் பின் தினமும் சாப்பிட்டால், ஒரு மாத உபயோகத்தில் உடல் ஆரோக்கியமும் தெம்பும் உண்டாகும். புதிய இரத்தம் உற்பத்தியாகிவிடும்.
  • மாதுளம் பழத்திற்கு மலத்தை இளக்கும் சக்தி உணடு. மலச்சிக்கலால் கஷ்டப்படுபவர்கள் தொடர்ந்து மூன்று நாட்கள் மாதுளம் பழத்தை சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கலிலிருந்து குணம் பெறலாம்.
  • வறட்டு இருமல் உள்ளவர்கள் தொடர்ந்து மூன்று நாட்களுக்கு மாதுளம் பழம் சாப்பிட்டு வந்தால் இருமல் குணமாகும்.
  • பித்த சம்மந்தமான அனைத்து உடல்நல குறை பாட்டிற்கும் மாதுளம் பழத்தை சாப்பிட்டு வரலாம்.


மாதுளம்பழம் பூவின் பயன்கள்:
  • மாதுளம் பூக்களை உலர்த்திப் பொடித்து வைத்துக் கொண்டு வேளைக்கு ஒரு சிட்டிகை வீதம் சாப்பிட்டால், இருமல் நிற்கும்.
  • மாதுளம் பூச்சாறு, அருகம்புல் சாறு சமமாகச் சேர்த்து வேளைக்கு 30 மில்லி வீதம் தினசரி மூன்று வேளையாக மூன்று தினங்களுக்குக் கொடுத்தால் பெண்களுக்கு ஏற்படும் உதிரப்போக்கு நிவர்த்தியாகும்.
  • மாதுளம் பூக்கள் 15 கிராம் எடுத்து 25 கிராம் சீனி சேர்த்து மசிய அரைத்து காலை, மாலை ஒரு தேக்கரண்டி வீதம் சாப்பிட்டு வந்தால், தொல்லைப் படுத்தும் பெண்களின் வெள்ளைப்பாடு நிவர்த்தியாகும்.
  • மாதுளம் பூச்சாற்றை 15 மில்லியளவு சேகரித்து சிறிது கற்கண்டு சேர்த்து தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், இரத்த மூலம் நீங்கும். மூலக் கடுப்பும், உடல் சூடும் தணியும். வாந்தி, மயக்கத்திற்குக் கொடுத்தால் நோய் தீரும்.
  • மாதுளம் பூக்களைத் தலையில் வைத்துக் கொண்டால் தலைவலி, வெப்பநோய் தீரும்.
மாதுளம்பழத் தோலின் பயன்கள்:
மாதுளம் பழத்தின் தோலை அம்மியில் மை போல் வைத்து அரைத்து அதில் எலுமிச்சம்பழம் அளவு எடுத்து அரை ஆழாக்கு எருமை தயிரில் கலந்து மூன்று நாள் காலையில் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் பிற மருந்துகள் கொடுத்தும் குணமாகாத சீதபேதி உடன் நிற்கும்.


44 comments:

  1. பயனுள்ள இடுகை . எனக்கும் மாதுளை பிடித்த ஒன்று

    ஆனால் ஹை ப்ரீட் தானே கிடைக்கிறது நாட்டு மாத்துளை எஙு கிடைக்கிறது அதில் இருக்கிறதா சொன்ன எல்லாம் ?
    :)

    ReplyDelete
  2. கோவையில் எங்கள் வீட்டில் மாதுளை மரங்கள் இருந்தன. குழந்தைகளுக்கு பேதி என்றால் எல்லாரும் வந்து பிஞ்சுகளை வாங்கிச்செல்வர்.

    ReplyDelete
  3. மாதுளையில் இத்தனை மருத்துவ குணமா? பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete
  4. அரிய தகவல்கள்...பகிர்வுக்கு நன்றி

    ReplyDelete
  5. வாங்க ஆரூரன்...

    தங்கள் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி...

    ReplyDelete
  6. வாங்க நேசமித்ரன்...

    //ஆனால் ஹை ப்ரீட் தானே கிடைக்கிறது நாட்டு மாத்துளை எஙு கிடைக்கிறது அதில் இருக்கிறதா சொன்ன எல்லாம் ?//

    ஹை ப்ரீட்ல இருக்குதான்னு இனிமேல் தான் விசாரிக்க வேண்டும் தோழரே...

    தங்கள் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி...

    ReplyDelete
  7. வாங்க சின்னஅம்மிணி...

    தங்கள் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி...

    ReplyDelete
  8. வாங்க சித்ரா வாங்க...

    தங்கள் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி...

    ReplyDelete
  9. பயனுள்ள தகவல் சங்கவி. தொடர்க..

    ReplyDelete
  10. நல்ல பயனுள்ள இடுகை.

    மாதுளைமரம் படம் பழங்களுடன் அழகு கூட்டுகிறது.

    ReplyDelete
  11. மாதுளைக்கு இத்தனை சக்தியா? வியந்தேன்...பயனுள்ள பதிவு சங்கவி....

    ReplyDelete
  12. வாங்க கண்ணகி...

    தங்கள் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி...

    ReplyDelete
  13. வாங்க மாதேவி...

    தங்கள் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி...

    ReplyDelete
  14. வாங்க தமிழரசி...

    தங்கள் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி...

    ReplyDelete
  15. நாட்டு மாதுளை கண்டால் விடுறதில்லை. இவ்வளவு நல்லதுன்னு இப்போ தெரிஞ்சது.

    ReplyDelete
  16. வாங்க வானம்பாடிகள் சார்

    தங்கள் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி...

    ReplyDelete
  17. வாங்க வித்யா...

    தங்கள் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி...

    ReplyDelete
  18. நல்ல பகிர்வு.அழகான படங்கள்.வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  19. நல்ல தகவல்கள். நன்றி

    ReplyDelete
  20. வாங்க ஸாதிகா...

    தங்கள் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி...

    ReplyDelete
  21. வாங்க பின்னோக்கி...

    தங்கள் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி...

    ReplyDelete
  22. வாங்க ஸ்ரீ...

    தங்கள் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி...

    ReplyDelete
  23. வாங்க ஸ்ரீ...

    தங்கள் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி...

    ReplyDelete
  24. மாதுளையின் நற்பலன்களை நானும் அனுபவித்திருக்கிறேன். இவ்வளவு சிறப்புகள் இருக்கிறது என்று தெரியாமலேயே...

    நல்ல இடுகை..பகிர்வு...

    ReplyDelete
  25. உங்க கான்வென்ட் தோழிகளுக்கு சொல்லிட்டீங்களாம்மா? நல்ல பயனுள்ள பதிவு.மாதுளை விலைதான் யோசனை!
    அன்புடன்
    க.நா.சாந்தி லெட்சுமணன்

    ReplyDelete
  26. வாங்க பாலசி...

    உங்கள் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி...

    ReplyDelete
  27. வாங்க சாந்திலெட்சுமணன்...

    உங்கள் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி...

    ReplyDelete
  28. எங்க வீட்டிலும் மாதுளையை ருசிக்காக மட்டுமல்லாமல் அதனோட மருத்துவ குணங்களுக்காகவும் உபயோகப்படுத்தறோம்.

    ReplyDelete
  29. வாங்க பழமைபேசி...

    தங்கள் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி...

    ReplyDelete
  30. வாங்கஅமைதிச்சாரல்...

    முதன் முறையாக வந்து இருக்கறீங்க...
    தங்கள் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி...

    ReplyDelete
  31. நல்ல பகிர்வு சங்கவி,
    மாதுளை பழம் சாப்பிடும் போதே இடையில் உள்ள தோலையும் கீழே போடாமல் சாப்பிட்டால் இன்னும் நல்லது...
    நம்மில் நிறைய பேர் அதை புறக்கணித்து விடுகிறோம்...

    ReplyDelete
  32. வாங்க கனிமொழி...

    //மாதுளை பழம் சாப்பிடும் போதே இடையில் உள்ள தோலையும் கீழே போடாமல் சாப்பிட்டால் இன்னும் நல்லது...
    நம்மில் நிறைய பேர் அதை புறக்கணித்து விடுகிறோம்...//


    உண்மைதான் நீங்கள் சொல்வது..

    ReplyDelete
  33. பயனுள்ள பதிவு சங்கவி.
    வெளிநாட்டுக்காரர்களும் மாதுளை விரும்பிச் சாப்பிடுகிறார்கள்.அதன் பயனையும் அறிந்திருக்கிறார்கள்.
    இங்கு ஒரு மாதுளம்பழம் 5 Fr.

    ReplyDelete
  34. நல்ல பயனுள்ள தகவல்களை கொடுத்திருக்கிறீர்கள் , சங்கவி . வாழ்த்துக்கள். தொடரட்டும் பயணம்.

    ReplyDelete
  35. வாங்க ஹேமா...

    //வெளிநாட்டுக்காரர்களும் மாதுளை விரும்பிச் சாப்பிடுகிறார்கள்.அதன் பயனையும் அறிந்திருக்கிறார்கள்.
    இங்கு ஒரு மாதுளம்பழம் 5 Fr.//

    ஏற்றுமதி செய்யலாம் போல....

    ReplyDelete
  36. வாங்க மலர்விழி...

    தங்கள் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி...

    ReplyDelete
  37. நன்றி சங்கவி
    பயனுள்ள தகவல்களுக்கு

    ReplyDelete
  38. இவ்வளவு இருக்கா மாதுளையில?

    அதனாலதான் நிறையபேர் கிலோ கணக்குல அள்ளறாங்க இங்கே...

    ReplyDelete
  39. ஆகா நல்ல பகிர்வு நண்பா வாழ்த்துகள்

    ReplyDelete
  40. Good
    useful information.
    udtgeeth.blogspot.com

    ReplyDelete
  41. தல மாதுளை சக்கரை ஐய்ஸ் போட்டு ஜீஸாத்தான் சாப்புடுவேண் அதுல இந்த அடங்கி இருக்குமா இல்ல அதன் தன்மை மாறிவிடுமா.

    நன்றி

    ReplyDelete