Monday, January 18, 2010

நடிகர் சூர்யாவின் அகரம் & விதை


இந்த பொங்கல் விடுமுறையில் நான் மிகவும் ரசித்து பார்த்த என்னை கண்கலங்க வைத்த ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சி விஜய் டிவியில் பொங்கலன்று காலை ஒளிபரப்பாகிய சூர்யாவின் ஒரு கோடி ஒரு தொடக்கம் நிகழ்ச்சி.
நான் படிக்கும் காலத்தில் 90 சதவீதம் மதிப்பெண் எடுக்கும் மாணவன் இல்லை. தோராயமாக 65 சதவீதம் மதிப்பெண் எடுக்கும் மாணவன் தான் ஆனால் மிகவும் பின் தங்கிய கிராமத்தில் பிறந்த எனக்கு மேலே என்ன படிக்கலாம் என்று சொல்ல அப்பாவிற்கு நண்பரோ அல்லது ஊரில் நன்கு படித்த நண்பர்களோ யாரும் எனக்கும் இல்லை அப்பாவிற்கும் இல்லை. பக்கத்து ஊரில் இருக்கும் படித்தவர்கள் வெளியில் வேலை செய்கிறார்கள் நாம் எங்கே தேடி செல்வது. அந்த கால கட்டங்களில் நாம் இந்தப் பாடம் படித்தால் இந்த வேலைக்கு செல்லாம் என்று தெரியவில்லை எனக்கு தெரிந்ததெல்லாம் கல்லூரிக்குச் செல்லவேண்டும் பேருந்தில் படிக்கட்டில் செல்லவேண்டும் இது தான்.
பள்ளி இறுதி ஆண்டு முடிக்கும் போது தான் கணினி படிப்பு படித்தால் நல்ல வேலை கிடைக்கும் என்று கல்லூரி வாசலில் கேள்விப்பட்டு அதற்கு விண்ணப்பம் வாங்கலாம் என்று கேட்டால் நீங்க படித்தது வணிகவியல் நீங்க எல்லாம் கணினி படிப்பிற்கு ஏற்றவர்கள் இல்லை. சரி என்ன செய்வது எனது அன்றைய நிலை கல்லூரி செல்ல வேண்டும் எதாவது படிக்க வேண்டும் சரி இளங்கலை வணிகவியல் தான் கிடைத்தது அதை படித்தேன்.

என்னைப்போல் எங்க கிராமத்து நண்பர்களும் வணிகவியலே படித்தோம் அப்போது தெரியவில்லை என்ன செய்வது என்று. ஆனால் இப்போது 10ம் வகுப்பு முடிக்கும் போது நானும் எனது நண்பர்களும் எங்க கிராமத்து எங்கள் தம்பிகளுக்கெல்லாம் இதை படி இந்த வேலை கிடைக்கும் மற்றும் எந்நதக் கல்லூரியில் என்ன படிக்கலாம் என்று இன்று சொல்கிறோம். எங்களுக்குத் தேவை எல்லாம் அனைவரும் கல்வி கற்க வேண்டும் எங்களால் முடிந்தது எதைப் படிக்கலாம் எங்கு படிக்கலாம், கவுன்சிலிங் போவது எப்படி, அதற்கு எங்கு விண்ணப்பம் வாங்கலாம் என்று மட்டுமே சொல்ல முடியும் அவர்களுக்கு பண உதவி செய்ய இயலாது காரணம் எனது வருமானம் எனது குடும்பத்திற்கே சரியாக உள்ளது.
நன்கு படிக்கும் மாணவர்களுக்கு பணம் இருக்காது, பணம் இருக்கும் மாணவனுக்கு படிப்பு இருக்காது. நான் 65 சதவீதம் மதிப்பெண்தான் எடுத்தேன் என் நண்பன் 50 சதவீதம் தான் எடுத்தான் அவனது அப்பா 15 ஆயிரம் பணம் கட்டி அவனை ஆசிரியர் பயிற்சியில் சேர்த்தார் இன்று அவன் தலைமை ஆசிரியர் நல்ல சம்பளம். இது தான் இன்றைய நிலை.
என்னைப் பொருத்தவரை தானம் நிறைய வகையில் செல்லலாம் ஆனால் வாழ்வில் அடிப்படை வசதி இல்லாத மாணவர்களுக்கு நம்மால் முடிந்த வரை கல்வி கற்க உதவுவது தான் மிகப்பெரிய தானம் என்று சொல்வேன் இதை தான் சூர்யா செய்கிறார்.
பொங்கலன்று இந்நிகழ்ச்சியை பார்கும் போது 1133 மதிப்பெண் எடுத்த மாணவன் படிக்க வசதி இல்லை ஆயிரம் மதிப்பெண்ணிற்கு மேல் படித்த பெண்ணிற்கு உடுத்த துணி இல்லை இப்படி அங்கு இருந்த மாணவர்கள் எல்லாம் சொல்வதைக் கேட்டு எங்க வீட்டில் அனைவருக்கும் கண்கலங்கியது. அப்போது சூர்யா சொன்னார் உங்களுடன் அகரம் இருக்கும் என்று.
சூர்யாவின் தந்தை சிவக்குமார் அகரம் என்ற அமைப்பைத் தொடங்கி நடத்தி வருகிறார். அவர்களை தொடர்பு கொண்டு நல்ல மதிப்பபெண் உள்ளவர்களை மேற்படிப்பு படிக்க வைக்கிறார்கள் அற்புதமான விசயம் நிச்சயம் 1 கோடி பேரில் ஒருத்தருக்குத்தான் இந்த மனசு வரும். இன்று தான் அவர்களது வலைத்தளத்தைப் பார்த்தேன். சூர்யா விதை என்று புதிய அமைப்பைத் தொடங்கி தந்தை எட்டடி பாய்ந்தால் மகன் 16 அடி பாய்வான் என்ற இப்பழமொழிக்கு ஏற்ப சூர்யா தமக்கு நெருங்கிய 10 பேரைக் கொண்டு ஒவ்வொருவரும் தலா 10 லட்சம் போட்டு 1 கோடி ரூபாய் மூலதனமாகக் கொண்டு 100 பேரை தேர்ந்தெடுத்து வரும் ஜீன் மாதம் முதல் படிக்க வைக்கிறோம் என்றார்.
அதே நிகழ்ச்சியில் எல்லோரிடமும் காசோலை வாங்கி இது உங்கள் பணம் நீங்க நல்லா மதிப்பெண் வாங்குங்க படிக்க வைக்க நாங்கள் இருக்கின்றோம் என்றார். சூர்யாவிற்கும் அவரது இந்த கல்விப் பணிக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள். மனது நெகிழ்ந்தது எனக்கு மட்டுமல்ல என் குடும்ப நண்பர்கள் அனைவருக்கும் இந்நிகழ்ச்சியை பார்த்ததில் இருந்து நான் இப்படி ஒரு அமைப்பு இருக்கிறது நல்ல மதிப்பெண் எடுத்தால் அகரம் என்று நடிகர் சூர்யா நடத்தி வருகிறார் நீ மதிப்பெண் எடு அவரை தொடர்பு கொள்ள அவரது வலைத்தளத்தில் முகவரி கொடுத்து உள்ளார் என கூறிவருகிறேன் வலையுலக சகோதர, சகோதரிகளே நீங்களும் இவ்வலைத்தளத்தை பாருங்கள் http://agaram.in உங்களுக்கு தெரிந்த ஏழை மாணவனை தொடர்பு கொள்ள சொல்லுங்கள்.
என்னிடம் ஏழை மாணவர்களை படிக்க வைக்க பணம் இல்லை ஆனால் அவர்களுக்கு அகரம் போல் உள்ள தன்னார்வ நிறுவனங்களுக்கு அறிமுகப்படுத்தலாம் என்று இருக்கிறேன் இதற்காக எனது நண்பர்கள் மூலம் ஒரு அமைப்பை ஏற்படுத்தி தகுதி உள்ள மாணவர்களைத் தேர்ந்தெடுத்து அவர்களுக்கு என்னாலும் எனது நண்பர்களாளும் முயன்ற உதவிகளை செய்யலாம் என்று இருக்கிறேன் வருகிற மே மாதத்திற்குள் அமைப்பை பலப்படுத்த என்னி இருக்கிறேன்.
வலையுலக நண்பர்களே உங்கள் அனைவரையும் இவ்வமைப்பிற்கு வரவேற்கிறேன். நீங்களும் இவ் அமைப்பில் இணைந்து உங்கள் ஊரில் உள்ள ஏழை மாணவனின் கல்வி கணவை நனவாக்க வாருங்கள் என உங்களை அன்புடன் வரவேற்கிறேன். இவ் அமைப்பிற்கான பெயர், இந்த அமைப்பு என்ன என்ன செய்ய வேண்டும், அமைப்பை எவ்வாறு தொடங்க வேண்டும், எப்படி பதிவு செய்ய வேண்டும் என என் அரிமா சங்க நண்பரை கேட்டு உள்ளேன் நீங்களும் உங்கள் அறிவுரைகளை கூறுமாறு வேண்டுகிறேன். அடுத்த மாத தொடக்கத்தில் இவ் அமைப்பிற்கான முழுப்பதிவை வெளியிட முயற்சிகள் மேற்கொண்டு உள்ளேன். வலையுலக நண்பர்களே உங்கள் அறிவுரையை கூறுங்கள் நீங்களும் வாருங்கள் நாம் ஒன்று பட்டால் உண்டு ஒரு ஏழைமாணவனக்கு கல்வி.

28 comments:

  1. நல்ல பகிர்வு. நிகழ்ச்சியை பார்க்க முடியவில்லை. தகவலுக்கு நன்றி.

    ReplyDelete
  2. வாங்க சூர்யா..,

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி...

    ReplyDelete
  3. வாங்க பின்னோக்கி..,

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி...

    ReplyDelete
  4. தேவையான பதிவு.உங்கள்
    அனுபவம் மன நெகிழ்வாக இருந்தது சங்கவி.உங்கள் நல்ல மனதிற்கு வாழ்வு சந்தோஷமாய் அமையும்.

    ReplyDelete
  5. அன்பின் சங்கவி

    அருமையான பணி - வெற்றிபெர நல்வாழ்த்துகள் - சூர்யாவின் பணி சிறக்க நல்வாழ்த்துகள்

    ReplyDelete
  6. நல்ல பதிவு நண்பரே..::)) வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  7. வாங்க மீன்துள்ளியான்

    உங்கள் கருத்துக்கும் வருகைக்கும் நன்றி...

    ReplyDelete
  8. வாங்க ஹேமா..

    உங்கள் கருத்துக்கும் வருகைக்கும் நன்றி..

    ReplyDelete
  9. //அருமையான பணி - வெற்றிபெர நல்வாழ்த்துகள் - சூர்யாவின் பணி சிறக்க நல்வாழ்த்துகள்//

    வாங்க சீனா சார்.

    உங்கள் கருத்துக்கும் வாழ்த்துக்கும் நன்றி...

    ReplyDelete
  10. வாங்க பலா...

    உங்கள் கருத்துக்கும் வாழ்த்துக்கும் நன்றி...

    ReplyDelete
  11. நானும் பார்த்தேன் அந்த நிகழ்ச்சியை..மேலும் உணர்ந்தேன் கல்வியின் அவசியத்தை...அந்த தாயோட கல்வி தாகம் தம் குழந்தைகள் படிக்கவேண்டும் என்ற அவரின் தீர்க்கமான எண்ணம் நம்பிக்கை மெய் சிலிர்க்க வைத்தது...

    ReplyDelete
  12. வாங்க தமிழரசி....

    //நானும் பார்த்தேன் அந்த நிகழ்ச்சியை..மேலும் உணர்ந்தேன் கல்வியின் அவசியத்தை...அந்த தாயோட கல்வி தாகம் தம் குழந்தைகள் படிக்கவேண்டும் என்ற அவரின் தீர்க்கமான எண்ணம் நம்பிக்கை மெய் சிலிர்க்க வைத்தது...//

    உங்கள் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி...

    ReplyDelete
  13. அந்த நிகழ்ச்சியினை பார்க்கமுடியவில்லை.. உங்களின் தகவல் பயனுள்ளதாக இருக்கு.. வாழ்த்துக்கள்

    ReplyDelete
  14. நண்பர் சங்கவிக்கு,
    உள்ளத்திலிருந்து எழுதி இருக்கிறீர்கள். நடிகர் சூர்யா பாராட்டப்பட வேண்டியவர் தான். நானும் விஜய் டிவி பார்த்தேன். மற்றவர்களுக்கும் இது தூண்டுகோலாக இருந்தால் நல்லது.

    ReplyDelete
  15. நல்ல பகிர்வு. வாழ்த்துக்கள் சங்கவி

    ReplyDelete
  16. வாங்க Mrs. Faizakader...

    உங்கள் கருத்துக்கும் வருகைக்கும் நன்றி...

    ReplyDelete
  17. வாங்க முரளி சார்...

    //நண்பர் சங்கவிக்கு,
    உள்ளத்திலிருந்து எழுதி இருக்கிறீர்கள். நடிகர் சூர்யா பாராட்டப்பட வேண்டியவர் தான். நானும் விஜய் டிவி பார்த்தேன். மற்றவர்களுக்கும் இது தூண்டுகோலாக இருந்தால் நல்லது.//

    உங்கள் அன்பும், அறிவுரையும் என்றும் தேவை...

    ReplyDelete
  18. வாங்க விக்னேஸ்வரி

    உங்கள் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி...

    ReplyDelete
  19. அவசியமான பதிவு.வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  20. தாயைப் போல் பிள்ளை, நூலைப் போல் சேலை என்பார்கள். இங்கே தந்தையைப் போல் அவர் பிள்ளை சூர்யாவும் சேவை மனப்பான்மையோடு இருப்பது பாராட்ட வேண்டிய விஷயம். நல்ல பதிவு.

    ReplyDelete
  21. வாங்க கிருபாநந்தினி...

    உங்கள் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி...

    ReplyDelete
  22. வாங்க ஸ்வாதிகா...

    உங்கள் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி...

    ReplyDelete
  23. வாழ்த்துகள் சங்கவி

    ReplyDelete
  24. அருமையான எண்ணங்கள் சங்கவி -
    உங்கள் முயற்சியும் எண்ணங்களும் மேலும் சிறக்க வாழ்த்துக்கள்..

    ReplyDelete
  25. வாழ்த்துக்கள் சஙகவி...அடுத்த கட்டத்திற்குச் செல்கிறீர்கள்.

    அகரம் இணைப்பு பயனூள்ள தகவல்..

    தொடருங்கள்...தொடருங்கள்...

    ReplyDelete
  26. இதே திட்டத்துடன் தான் ஒரு பெரிய அமைப்பை நாங்கள் இங்கே உருவாக்கி செயல்பட இருக்கிறோம். வாழ்த்துகள் அகரம், விதை அமைப்புகளுக்கு. நன்றி சங்கவி பகிரந்தமைக்கு.

    ReplyDelete