Thursday, January 21, 2010

தலையில் பொடுகா? கவலைப்படாதீர்கள்...


 
கூந்தலைப் பற்றி பல காப்பியங்களிலும், இதிகாசங் களிலும் அதிகம் காணப்படுகிறது. நீண்ட தலைமுடியை கூந்தல் என அழைக்கிறோம். நீண்ட கூந்தலை விரும்பாத பெண்கள் எவரும் இருக்க முடியாது. நம் முன்னோர்களில் ஆண்களும், பெண்களும் பாரபட்சமின்றி கூந்தல் வளர்த்தனர். நாகரிகம் வளர வளர இன்று பெண்கள் கூட கூந்தலை கத்தரித்துவிட்டு மிகக் குறைந்த அளவே முடிவைத்துக் கொண்டுள்ளனர்.

இன்றைய நவீன இரசாயனம் கலந்த உணவுகள் மற்றும் பருவ மாற்றங்களால் நீண்ட கூந்தல் என்பது சில பெண்களுக்கு கனவாக அமைந்துவிடுகிறது.கூந்தலை வளர்ப்பது பெரிதல்ல... அதை பராமரிப்பதுதான் மிகவும் கஷ்டமான விஷயம். சிலர் முடி உதிர்வதால் பெரிதும் மனவேதனைக்கு ஆளாகியிருக்கின்றனர். பகட்டு விளம்பரங்களில் வரும் இரசாயனக் கலவையான ஷாம்புகளை பயன்படுத்தி சிலர் மேலும் முடிகளை இழக்கின்றனர்.
முடி உதிர்வதைத் தடுக்கவும், நீண்ட நெடிய கூந்தலைப் பெற பொடுகின் தொல்லை இல்லாமல் இருப்பது அவசியம். பொடுகினால்தான் அநேக பேருக்கு முடி உதிர்கிறது.

தலையில் அரிப்பு இருந்தாலே பொடுகு இருக்கிறது என்று உணர்ந்துகொள்ளலாம்.

பொடுகு எவ்வாறு உண்டாகிறது:
பொடுகு என்பது ஒருவகை நுண்ணிய காரணிகளால் தலையில் உண்டாகும் நோய். இந்த நோய் தாக்கினால் தலையில் அரிப்பு ஏற்படும். அந்த அரிப்பு உள்ள இடத்தை சொரிந்தால் தவிடு போல் தலையிலிருந்து உதிரும். பின் அரிப்பானது தலை முழுவதும் பரவி சொரியச் செய்துவிடும். அந்த இடங்கள் வெண்மையாய் சாம்பல் பூத்தது போல் தோன்றி முடி உதிர ஆரம்பிக்கும்.
சிலருக்கு இந்நோயின் தாக்கம் புருவத்திலும் ஏற்படுவதுண்டு. தலையை சொரிந்த கையால் பிற இடங்களையும் சொரிந்தால் அங்கு இந்நோய் பரவும் (குறிப்பாக காதில் கதவும்) இது உடலில் தேவையான அளவு எண்ணெய் பசை இல்லாததால் உண்டாவதாகும். 


சருமத்தின் இறந்த உயிரணுக்களின் அதிக உற்பத்திதான் டேன்ட்ரஃப் என்று அழைக்கப்படும் தலைப்பொடுகாகும். தலையின் மேற்புறத்திலிருந்து இறந்த உயிரணுக்கள் மிக வேகமாக உதிர்வது என்றும் இதைக் கூறலாம்.
பொடுகு என்பது தலையின் மேற்புறத்தில் சாதாரணமாக வளரும் சரும உயிரணுக்களின் விளைவாகும். இது நம் தலையின் மேற்புறமும், ஏன் உடல் முழுதுமே சரும உயிரணுக்களால் நிறைந்தது. சருமம் தன்னைத்தானே புதுப்பித்துக் கொள்ளும்போது, பழைய செல்களின் லேயர்கள் இறந்து உதிரத் தொடங்குகிறது.
சில சந்தர்ப்பங்களில் செல்கள் அதிகமாக பெருகுவதால், இறந்த செல்கள் டேன்ட்ரஃப் என்ற பொடுகு வடிவம் அடைகிறது.பொடுகு எந்த வயதினருக்கும், எக்காலத்திலும் ஏற்படலாம். நீண்ட நாளைய பொடுகு மூக்கு, கண்கள், காதுகள் மற்றும் மார்புப் பகுதிகளில் உள்ள சருமத்தையும் பாதிப்படையச் செய்யும் வாய்ப்புகள் அதிகம்.



பொடுகு வராமல் தடுக்க
 * பொடுகவராம‌லதடு‌க்ம‌ற்றவ‌ரபய‌ன்படு‌த்‌திய ‌சீ‌ப்பபய‌ன்படு‌த்துவதை‌தத‌வி‌ர்‌க்கவு‌ம்.
* வாரம் இருமுறை எண்ணெய்த் தேய்த்துக் குளிக்க வேண்டும். தலையதூ‌ய்மையாவை‌த்து‌ககொ‌ள்வே‌ண்டு‌ம்.
 * நெய், பால், வெண்ணெய் முத‌லிய உணவுகளை ‌சி‌றிது உண‌வி‌ல் சே‌ர்‌த்து‌க் கொ‌ள்ளலா‌ம்.
 * இந்தக் கொழுப்பு சத்துள்ள உணவுகளால் தோலுக்குத் தேவையான எண்ணெய்ப் பசை கிடைக்கிறது. இதனால் பொடுகு கிருமிகளின் தாக்கத்திலிருந்து முடியைக் காப்பாற்றலாம்.

பொடுகை அழிக்க
 *மிளகு தூளுடன் பால் சேர்த்து தலையில் தேய்த்து சில நிமிடங்கள் ஊறிய பின் குளித்தால், பொடுகு தொல்லை நீங்கும்.

*வெந்தயத்தை தலைக்கு தேய்த்து குளித்தால், உடல் உஷ்ணம் குறைவதுடன் பொடுகு தொல்லை நீங்கும்.

*தலையில் சிறிதளவு தயிர் தேய்த்து சில நிமிடங்கள் கழித்து ஷாம்பு அல் லது சீயக்காய் தேய்த்து குளித்தால், பொடுகு நீங்கும்.

*வேப்பிலை கொழுந்து, துளசி ஆகியவற்றை நைசாக அரைத்துத் தலையில் தேய்த்து சிறிது நேரம் கழித்து குளித்தால் பொடுகு தொல்லை நீங்கும்.

*வசம்பை நன்கு பவுடராக்கி, தேங்காய் எண்ணெயில் ஊற வைத்து, அந்த எண்ணெயை தலையில் தேய்த்து வந்தால் பொடுகு மறைந்து போகும்.

* எலுமிச்சம் பழச்சாற்றுடன், தேங்காய் எண்ணெய் கலந்து தலையில் தேய்த்து வந்தாலோ அல்லது எலுமிச்சம் பழச்சாறுடன், தயிர் மற்றும் பச்சை பயிறு மாவு கலந்து தலையில் தேய்த்து சில நிமிடங்கள் கழித்து ஷாம்பு போட்டு குளித்தாலும் பொடுகு நீங்கும்.

*தலைக்கு குளிக்கும் போது, கடைசியாக குளிக்கும் தண்ணீரில், வினிகர் கலந்து குளித்தால், பொடுகு நீங்கும்.

*நெல்லிக்காய் தூள், வெந்தயப் பொடி, தயிர் மற்றும் கடலைமாவு கலந்து தலையில் தேய்த்து, சிறிது நேரம் கழித்து குளிக்க வேண்டும். இவ்வாறு வாரம் ஒரு முறை செய்து வர பொடுகு நீங்கும்.

*வாரம் ஒரு முறை, மருதாணி இலையை அரைத்து, சிறிதளவு தயிர் மற்றும் எலுமிச்சை சாறு கலந்து தலையில் தேய்த்தால், பொடுகு தொல்லை நீங்கும்.
 
*தேங்காய் எண்ணெயில் வெந்தயத்தை சேர்த்து காய்ச்சி, தலையில் தேய்த்து வந்தால், பொடுகு பிரச்னை நீங்கும்.

*தேங்காய் பால் எடுத்த பின் கையை தலையில் நன்றாகத் தேய்த்து, சிறிது நேரம் கழித்து மிதமான நீரில் தலையை அலசினால் பொடுகு, மறைந்து விடும்.

*முதல்நாள் சாதம் வடித்த தண்ணீரை எடுத்து வைத்து, மறுநாள் அதை தலையில் தேய்த்து குளித்தால், பொடுகு நீங்கும்.

*தயிர், முட்டை மற்றும் எலுமிச்சை சாறு கலந்து தலையில் தேய்த்துக் குளிக்க பொடுகு மறையும்.

*துளசி, கறிவேப்பிலையை அரைத்து எலுமிச்சம்பழச்சாற்றுடன் கலந்து தலையில் தடவி சிறிது நேரம் கழித்து குளித்தால் பொடுகு பிரச்னை நீங்கும்.


இத்தனை குறிப்புகளில் ஏதாவது ஒன்றை பயன்படுத்தி பொடுகை நீக்கி அழகான நீண்ட கூந்தலைப் பெறலாம்.

40 comments:

  1. நல்ல உபயோகமான குறிப்புகள்.Thanks

    ReplyDelete
  2. இத்தனை குறிப்புகளில் ஏதாவது ஒன்றை பயன்படுத்தி பொடுகை நீக்கி அழகான நீண்ட கூந்தலைப் பெறலாம். ............ choose the best answer!

    ReplyDelete
  3. நல்ல பயனுள்ள பதிவு நண்பரே..:))

    ReplyDelete
  4. வாங்க சின்னஅம்மிணி...

    தங்கள் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி...

    ReplyDelete
  5. வாங்க சித்ரா வாங்க...

    தங்கள் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி...

    ReplyDelete
  6. வாங்க பாலா...

    தங்கள் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி...

    ReplyDelete
  7. அன்பின் சங்கவி

    பெண்களுக்குத் தேவையான இடுகை

    நல்வாழ்த்துகள்

    ReplyDelete
  8. ஆகா... நல்லா இருக்கு பயனுள்ள பதிவு
    வாழ்த்துக்கள்

    ReplyDelete
  9. வாங்க பழமை பேசி...

    தங்கள் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி...

    ReplyDelete
  10. வாங்க சீனா சார்...

    தங்கள் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி...

    ReplyDelete
  11. வாங்க றமேஸ்...

    தங்கள் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி...

    ReplyDelete
  12. எது போட்டும் பிரயோஜனம் இல்லைங்க. கடைசியில Nizoral blue ஷாம்பூ தான் வேலை பண்ணுச்சு. :(

    ReplyDelete
  13. அட இயற்கையான முறையில் beauty tips கூட கொடுக்கிறீர்களா?GOOD!!

    ReplyDelete
  14. sir
    very useful blog
    keep it up

    karurkirukkan.blogspot.com

    ReplyDelete
  15. வாங்க பின்னோக்கி...

    தங்கள் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி...

    ReplyDelete
  16. வாங்க ஸாதிகா...

    தங்கள் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி...

    ReplyDelete
  17. வாங்க பாஸ்...

    தங்கள் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி...

    ReplyDelete
  18. அத்தனையும் நல்ல தேவையான விஷயங்கள் சங்கவி.நான் அறிந்திருக்கிறேன்.நீங்கள் மேலதிகமாகவும் தந்திருக்கிறீர்கள்.நன்றி.

    ReplyDelete
  19. நன்றி ஹேமா...

    தங்கள் வருகைக்கும், கருத்துக்கும்...

    ReplyDelete
  20. ரொம்ப பயனுள்ள தகவல்கள் சங்கவி !

    எதாவது டிஸ்கி இருக்கான்னு தேடிப் பார்த்தேன்...நல்ல வேலை எதுவும் இல்லை : )

    ReplyDelete
  21. வாங்க விக்னேஸ்வரி

    தங்கள் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி...

    ReplyDelete
  22. வாங்க கபிலன்

    தங்கள் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி...

    ReplyDelete
  23. எனக்கு ​பொடுகுத் ​தொல்லையில்லை..!
    நான் ​செய்வது:
    1. தினமும் த​லைக்கு ​வெந்நீர் குளியல் (காய்ச்சலாக இருந்தாலும்)
    2. த​லைக்கு தினமும் ஷாம்பூ (அதில் ஏன்டி டான்ட்ருப் என்ற வார்த்​தை இடம்​பெற்றிருக்க ​வேணும்)
    2.1. அடப்பாவி முடி உதிரு​மேன்னு கதறுகிறவர்களுக்கு..
    2.1.1. மண்​டை​யோட்டு மஜாஜ் என்று ​​சொன்னால் பயந்து ​போவீர்கள். ஆதலால் scalp massage என்று இயம்புகி​றேன். அது ​செய்தால் ம.க. ம​லை​யை இழுக்கலாம்
    3. த​லை​யை உலர்த்த சன்னமான துண்​டை பயன்படுத்துகி​றேன் (இப்படியாவது ​கைத்தறி வாழட்டும்)
    4. அப்புறம் ப்ரில்க்ரீம் (அதிலும் ஏன்டி டான்ட்ரூப் ​போட்டிருக்கும்)
    5.த​லை சீவும் சீப்பு எனக்​கான ப்ரத்​யேகம் (அதாவது த​​லைக்​கொரு சீப்பு)
    6. ​ரொம்ப முக்கியம்: ​​சொந்த சீப்பானாலும் மாதம் ஒருமு​றை அதற்கு பல்​தேய்த்து (அதாவது ப்ரஸ்ஸால் ​சோப்பு ​போட்டு சுத்தம் ​செய்வது) பயன்படுத்துவது நல்லது.

    அவ்​ளோதாங்க.. எதுவும் தப்பாயிருந்தா, ​போடா மயிருன்னு ​நெனச்சுக்​​கோங்க!

    ReplyDelete
  24. எக்கச்சக்கமான பேருக்கு உபயோகமா இருக்கு. நல்ல பகிர்வு.

    ReplyDelete
  25. உபயோகமான பதிவு சஙகவி

    ReplyDelete
  26. சங்கவி. பழம் கொடுத்த இர்ண்டு பேருக்கும் எட்டு ரூபாய் பங்கு எப்படி தெரியுமா.

    ஒவ்வொருவரும் அவரிடம் உள்ள பழத்தை மூன்று துண்டுகளாக்கினால் எவ்வளவு வரும்..

    அதில் ஒவ்வொருவரும் மூன்றாம் நபருக்கு எவ்வளவு கொடுத்திருப்பார்கள்.

    அதன்படி பணத்தையும் பங்கவேண்டும்.

    என்ன தலை சுத்துதா. கண்டுபிடிச்சுட்டீங்களா.

    ReplyDelete
  27. அருமையான பதிவு. வாழ்த்துகள். குறிப்பாக பெண்களுக்கு இந்த பதிவு மிகவும் பயன் உள்ளதாக உள்ளது.
    தங்கள் பதிவுகள் இது போல் என்றென்றும் தொடர வேண்டும். என் ப்ளாக்கு தங்கள் வருகை ஆனது
    மிக்க மகிழ்ச்சி ..என் ப்ளாகில் இனைந்ததுக்கு நன்றி.தொடரட்டும்..

    ReplyDelete
  28. ஆண், பெண் இருபாலருக்குமே உபயோகபடும் குறிப்புகள் நிறைய தந்திருக்கிறீர்கள்.
    எனக்கு தெரியாத குறிப்புகள் சில இடம் பெற்றிருந்ததால் குறித்துக் கொண்டுவிட்டேன்.
    நன்றி, சங்கவி.

    ReplyDelete
  29. வாங்க புஷ்பராஜ்

    தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி...

    ReplyDelete
  30. வாங்க ஜெகநாதன்

    உங்கள் கருத்தும் வரவேற்கத்தக்கதுதான்...

    ReplyDelete
  31. வாங்க நவாஸூதீன்...

    தங்கள் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி...

    ReplyDelete
  32. வாங்க கதிர்...

    தங்கள் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி...

    ReplyDelete
  33. வாங்க கண்ணகி...

    எனக்கு பங்கே வேண்டாம் ஆழ விடுங்க சாமி

    ReplyDelete
  34. வாங்க கீதா...

    தங்கள் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி...

    ReplyDelete
  35. வாங்க அம்பிகா...

    தங்கள் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி...

    ReplyDelete