Saturday, January 23, 2010

சாலையோரம் தொடர்....


சாலையோரம் தொடர் இடுக்கைக்கு என்னை அழைத்த தீபாவிற்கு நன்றி. சாலையோரத்தைப்பற்றி நமது சக பதிவர்கள் எல்லாம் அழகாக எழுதி இருந்தார்கள். அவர்களின் அனுபவம் இனிமையாக இருந்தது.

முதன் முதலாக ஓட்டிய மிதிவண்டி
நான் ஐந்தாம் வகுப்பு படித்த சமத்தில் எங்கள் ஊரில் இருந்த மிகப்பெரிய மிதிவண்டி நிலையம் (10 மிதிவண்டி வாடகைக்கு கொடுக்க) இருந்தது. அங்கு சிறுவர்களுக்கான மிதிவண்டி 1 மணி நேரத்திற்கு 50 பைசா வாடகையில் முதலில் ஓட்டிப்பழகினேன். எங்கள் ஊரில் மைதானம் இருந்ததால் சாலைக்கு வராமல் அங்கேயே விழுந்து புரண்டு ஓட்டிவிட்டேன். நான் ஏழாம் வகுப்பு படிக்கும் போது மிதிவண்டி ஒன்று எங்க அப்பாவிற்கு அடமானத்திற்கு வந்தது அந்த மிதிவண்டியை என்னிடம் கொடுத்து ஓட்டிப்பழகு என்றார்.

குரங்குப்பெடல்
மிதிவண்டியில் என் நண்பன் பரந்தாமன் குரங்குப்பெடல் ஓட்டிக்காண்பித்து இப்படி ஓட்டு என்றான். குரங்குப்பெடல் என்றால் மிதிவண்டியின் தண்டிற்கு கீழ் காலை உள்ளே விட்டு ஒரு கையில் ஹேண்டில்பாரை பிடித்துக் கொண்டு ஓட்ட வேண்டும் ஒரு வழியாக குரங்குப்பெடல் ஓட்டிப் பழகினேன். கொஞ்ச நாட்களில் நண்பனின் உதவியுடன் மிதிவண்டி ஓட்டிப்பழகினேன். வீட்டில் புது வண்டி வாங்கச் சொல்லி அழுது புரண்டேன் ஆனால் மசியவில்லை இதுதான் உனக்கு வண்டி என்று சொல்லிவிட்டார்கள்.

எனது காதல் வாகனம்
வண்டியை அழகாக்கி எனது பெயர் எழுதி கம்பிகளில் கலர் பூக்கள் கைப்பிடியில் பூ போல் தொங்கும் கைப்பிடி என்று அப்பா சட்டையில் தினமும் 1 ருபாய் திருடி எனது மிதிவண்டியை அழகாக்கினேன். நான் 9 மற்றும் 10வது படிக்கும் போது விடுதியில் இருந்ததால் எனக்கு டியூசன் செல்ல மிதிவண்டி தேவைப்பட்டது எனது காதல் வாகனத்தை விடுதிக்கு கொண்டு சென்றேன். கோபியில் விடுதி விடுமுறை நாட்களில் பாரியூர் கோயிலுக்கு மிதிவண்டியில் தான் செல்வோம் அனைவரும் போட்டி போட்டு வேகமாக செல்வோம் இதில் நானும் சம்பத் என்ற நண்பனும் கடைசியாகத்தான் வருவோம் மெதுவாக ஓட்டினால் தான் பொண்ணுங்களை சைட் அடித்து விட்டு அப்படியே பராக் பார்த்துவிட்டு ஓட்டலாம். அப்படியே பவளமலை சென்று முருகனை தரிசிப்போம். முருகனை தரிசிப்போம் என்ற பேரில் அங்கு வரும் எஞ்சோட்டுப் பெண்களை தரிசிப்போம். ஒரு நாள் பவளமலையில் இருந்து வரும் போது ஒரு திருப்பத்தில் வேகமாக வரும் போது என்னால் சரியாக திருப்ப முடியவில்லை அப்புறம் வந்த வேகத்தில் திருப்பத்தில் இருந்த கல் மேல் அடித்து நான் மலையில் இருந்து ஒரு பக்கம் உருள அந்தப்பக்கம் என் சைக்கிள் உருள அடுத்த வளைவிற்கு கொஞ்சம் மேல் விழுந்து கிடந்தேன். மற்ற நண்பர்கள் வேகமாக சென்றதால் சம்பத் மட்டும் என்னையும் என் மிதிவண்டியையும் தூக்கினான். முதன் முதலாக நான் கீழே விழுந்து அடிபட்டது எனது காதல் வாகனமும் செலவு வைத்து விட்டது.
அன்று முதல் இன்று வரை வாகனத்தை எடுத்தால் வேகமாக செல்வதை குறைத்துக்கொண்டேன் அதிகபட்சம் 60கிலோ மீட்டர் வேகத்தில் செல்வேன்.

முதல் இருசக்கர வாகனம்

நான் முதன் முதலில் இரு சக்கர வாகனம் ஓட்டியது நான் 10ம் வகுப்பு படிக்கும் போது எனது மாமா அப்போது மிகவும் பிரபலமான யமாகா வாங்கி இருந்தார். அவ்வாகனத்ைத்தான் நான் ஓட்டி பழகிய இருசக்கர வாகனம். எப்ப மாமா வீட்டிற்கு செல்வோம் வண்டி ஓட்டலாம் என காத்து இருப்பேன். நன்றாக வண்டி ஓட்டி பழகியது அப்போது தான். யமாகா மேல் இருந்த காதலால் ஒரு ஒன்றரை வருடத்திற்கு முன் நானும் யமாகா கிளாடியேட்டர் வாகனத்தை வாங்கி ஓட்டி வருகிறேன்.

விபத்து
முதல் விபத்து 10வது படிக்கும் போது நடந்தது அப்போது எனக்கு அடி அந்த அளவிற்கு இல்லை. இரண்டாவதாக நான் கல்லூரியில் படித்துக் கொண்டு இருக்கும் போது நான் எனது நண்பர்கள் வசந்த், கண்ணன் மூவரும் கள் குடிக்க பக்கத்து கிராமத்துக்குச் சென்றோம் மூன்று பேரும் ஒரே இரு சக்கர வாகனத்தில் சென்று குடித்தோம் அங்கு கள் பத்தவில்லை என்று குருவரெட்டியூர் என்ற ஊரிற்கு பக்கத்தில் கிடைக்கும் என்று சொன்னார்கள் அங்கு சென்று ஆளுக்கு 5 டம்ளர் குடித்து விட்டு திரும்பி வரும் போது ஒரு இடத்தில் சிற்றாறுக்கு பாலம் அமைக்கும் வேலை நடப்பதால் பாலத்திற்கான குழி வெட்டி இருந்தார்கள் அந்த இடத்தில் டேக் டைவர்சன் அட்டை இல்லை கொஞ்சம் மப்பில் நண்பன் கண்ணன் ஓட்ட அடுத்து நான் எனக்குப் பின் வசந்த் நண்பன் வேகமாக ஓட்ட நேராக வண்டி குழி இருக்கும் இடத்தில் விட பாலத்திற்காக செங்கல், கல் மணல் கொட்டி இருந்தார்கள் வண்டி செங்கள் மீது மோதி தூக்கி எரிந்தது மூவரும் சிற்றாரில் விழ மற்ற இருவரும் அதிஷ்டவசமாக தண்ணீரில் விழ நான் மட்டும் பாறையின் ஓரத்தில் விழுந்து கை முறிந்தது.
அன்று முதல் ஒன்றரை வருடத்திற்கு முன் வரை குடித்ததால் வண்டி ஓட்டுவதில்லை.


சாலை விதிகள்
சாலை விதிகள் தெரியாது அதனால் முன்பொல்லாம் மீறினேன் இப்பொழுது தெரிந்து கொண்டேன் அதனால் சாலை விதிகளை மீறுவதில்லை. வாகனங்கள் ஓட்டும் போது கவனிக்க வேண்டிய சில குறிப்புகள்

1. நிர்ணயிக்கப்பட்ட இடத்தில் நிர்ணயிக்கப்பட்ட வேகத்தில் செல்லுங்கள்
2. தலைக்கவசம் கண்டிப்பாக அணியுங்கள்
3. மது அருந்திவிட்டு கண்டிப்பாக ஓட்டாதீர்கள்
4. கை பேசியில் பேசிக்கொண்டு வாகனம் ஓட்டாதீர்கள்
5. திருப்பங்களில் இண்டிகேட்டர் பயன்படுத்துங்கள்
6. வாகனங்களில் பின்வருபவர்களை பார்க்க கண்ணாடி கண்டிப்பாக பொறுத்துங்கள்
7. வலைவில் முந்தாதீர்
8. மலைப்பகுதியில் செல்லும் போது மேலே செல்லுபவர்களுக்கு வழி விட்டு செல்லுங்கள்
9. காரில் செல்லும் போது சீட் பெல்ட் அணியுங்கள்
10. வாகனம் ஓட்டும் போது கவனத்தை சிதறவிடாதீர்கள் (பராக் பார்த்து விட்டு ஓட்டாதீங்க)

இவை எல்லாம் எல்லாருக்கும் தெரியும் ஆனால் காவலர்களை பார்க்கும் போது மட்டும் பயன்படுத்துவது மற்ற நேரங்களில் நமது மக்கள் பயன் படுத்துவதில்லை.

30 comments:

  1. வித்தியாசமா இருக்கு பாஸ்... நம்ம இளமைக்காலத்துக்கு இழுத்துகிட்டு போயிட்டீங்க... குரங்கு பெடல் அது இதுன்னு... அருமை.

    பிரபாகர்.

    ReplyDelete
  2. அழைப்பை ஏற்று எழுதியதற்கு நன்றி சங்கவி!
    ரொம்பவும் அழகா உங்க அனுபவங்களைப் பகிர்ந்திருக்கீங்க.

    //வண்டியை அழகாக்கி எனது பெயர் எழுதி கம்பிகளில் கலர் பூக்கள் கைப்பிடியில் பூ போல் தொங்கும் கைப்பிடி என்று அப்பா சட்டையில் தினமும் 1 ருபாய் திருடி எனது மிதிவண்டியை அழகாக்கினேன்.//
    ஹேய் ஆமாம், இந்தக் கலர் பூக்கள் நினைவுக்கு வருகிறது. நானும் என் சைக்கிளுக்குச் செய்திருக்கிறேன். :)

    உங்கள் விபத்து அனுபவம் திகிலூட்டுகிறது. தயவு செய்து இனிமேல் கவனமாக இருங்கள்.

    ReplyDelete
  3. ///அன்று முதல் ஒன்றரை வருடத்திற்கு முன் வரை குடித்ததால் வண்டி ஓட்டுவதில்லை.

    :-(
    Y u left that policy now??

    ReplyDelete
  4. வாங்க பிரபாகார்....

    இளைமையின் சுகத்தை அனுபவிப்பதற்காகத்தான் பதிவே....

    வருகைக்கும், கருத்துக்கும் நன்றி....

    ReplyDelete
  5. வாங்க கனிமொழி...

    ///அன்று முதல் ஒன்றரை வருடத்திற்கு முன் வரை குடித்ததால் வண்டி ஓட்டுவதில்லை.

    :-(
    Y u left that policy now??//

    Yes after marriage left this policy

    தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி...

    ReplyDelete
  6. கம்பெனி ரகசியங்கள் ஒண்ணொண்ணா வெளிய வருது...விழுப்புண்கள் இல்லாமல் ஒரு வாகனம் ஓட்டுதலா....

    ReplyDelete
  7. வாங்க தீபா...

    //அழைப்பை ஏற்று எழுதியதற்கு நன்றி சங்கவி!
    ரொம்பவும் அழகா உங்க அனுபவங்களைப் பகிர்ந்திருக்கீங்க.//

    எனது இளமைக்காலத்தில் மிதிவண்டி ஓட்டி பழகிய அனுபவத்தை ஞாபகப்படுத்தியதே நீங்கதான்...

    //ஹேய் ஆமாம், இந்தக் கலர் பூக்கள் நினைவுக்கு வருகிறது. நானும் என் சைக்கிளுக்குச் செய்திருக்கிறேன். :)//

    மிதிவண்டிக்கு பூ மட்டுமல்ல மணியோசை வித்தியாசமாக கேட்கவேண்டும் என்பதற்காக ரிங் மணி எல்லாம் வைத்து இருந்தேன் என் காதல் வாகனத்திற்கு...

    //உங்கள் விபத்து அனுபவம் திகிலூட்டுகிறது. தயவு செய்து இனிமேல் கவனமாக இருங்கள்.//

    உங்கள் அன்பிற்கு நன்றி... இப்பவெல்லாம் வாகனத்தை நிறுத்தி நிதானமாகத்தான் ஓட்டுகிறேன்...

    தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி சகோதரி...

    ReplyDelete
  8. வாங்க கண்ணகி...

    //கம்பெனி ரகசியங்கள் ஒண்ணொண்ணா வெளிய வருது...விழுப்புண்கள் இல்லாமல் ஒரு வாகனம் ஓட்டுதலா....//

    விழுப்புண்தானே வீரமே...

    ReplyDelete
  9. நிறைய அடிபட்டிருக்கீங்க போல. அப்புறம், இப்பவும் குடிக்காமத்தான் வண்டி ஓட்டணும்.

    அனுபவம் அழகாக இருந்தது.

    ReplyDelete
  10. வாங்க பின்னோக்கி...

    //நிறைய அடிபட்டிருக்கீங்க போல. அப்புறம், இப்பவும் குடிக்காமத்தான் வண்டி ஓட்டணும்.//

    ஆமாங்க நீங்க சொல்வது சரிதான்....

    ReplyDelete
  11. எனது காதல் வாகனம் :)
    காதல் வாகனத்தில் விழுந்தேன்...

    ///அன்று முதல் ஒன்றரை வருடத்திற்கு முன் வரை குடித்ததால் வண்டி ஓட்டுவதில்லை///
    அது..
    ம்ம்
    அருமையான பதிவு மகவும் ரசித்துப்படித்தேன்.... பல ஞாபகக்கிடக்கைகளை கிளறிவிட்டு தித்திக்க வைச்சிருக்கு.
    வாழ்த்துக்கள் தொடருங்கள்
    உங்க சாலையோரம் 100 டம்ளர் கள் குடிச்சிட்டோம்

    ReplyDelete
  12. அவர்களின் அனுபவம் இனிமையாக இருந்தது.//

    கூடவே ’வலியும்’ என்று சேர்த்து விடுங்கள் சங்கவி..:)
    -----
    அடுத்த தொடர் கதை பாகத்திற்கு தயாராய் இருங்கள்..:)

    ReplyDelete
  13. குரங்கு பெடல் விடயம் அருமை .. எங்க வீட்டுல அப்ப தான் புது சைக்கிள் வாங்கி இருந்தாங்க.. அதை தினமும் தெரியாம எடுத்து ஒட்டுறதே ஒரு தனி சந்தோசம் தான் ..

    ReplyDelete
  14. அன்று முதல் ஒன்றரை வருடத்திற்கு முன் வரை குடித்ததால் வண்டி ஓட்டுவதில்லை.

    சரியான முடிவு. யாவரும் பின் பற்ற வேண்டிய விதி. நல்லா சம்பவங்களை தொகுத்து கொடுத்து இருக்குறீர்கள்.

    ReplyDelete
  15. எங்கடா ரொம்பக்காலம் தொடர்ன்னு சத்தத்தைக் காணோமேன்னு இப்போ
    2- 3 நாளைக்கு முதல்தான் யோசிச்சேன்.வந்திடிச்சா.
    ஆகா...இனி ஒரு வலம்தான் !

    நல்ல இளமைக்கால நினைவு மீட்டல்கள் சங்கவி.

    ReplyDelete
  16. யூத்துன்னா அப்படித்தான் ....
    நல்லாருக்கு சங்கவி
    அருமையான அனுபவ குறிப்புகளை அறிய தந்தத‌ற்கு மிக்க நன்றி

    ReplyDelete
  17. சாலையோர பயணம் மிகவும் வித்தியாசமாக அமைந்தது.பத்து கட்டளைகள் வெகு சிறப்பு.

    ReplyDelete
  18. வாங்க றமேஸ்...

    //உங்க சாலையோரம் 100 டம்ளர் கள் குடிச்சிட்டோம்//

    நீங்களும் நம்ம ஆள்தானா...

    ReplyDelete
  19. வாங்க பாலா...

    அவர்களின் அனுபவம் இனிமையாக இருந்தது.//

    //கூடவே ’வலியும்’ என்று சேர்த்து விடுங்கள் சங்கவி..:)//

    சரியாகச் சொன்னீங்க... வலியும் சேர்த்துக்கிறேன்

    -----
    அடுத்த தொடர் கதை பாகத்திற்கு தயாராய் இருங்கள்..:)

    நிச்சம்.. தொடரை ஆரம்பியுங்கள் கலக்கிவிடுவோம்...

    ReplyDelete
  20. வாங்க மீன்துள்ளியான்...

    //குரங்கு பெடல் விடயம் அருமை .. எங்க வீட்டுல அப்ப தான் புது சைக்கிள் வாங்கி இருந்தாங்க.. அதை தினமும் தெரியாம எடுத்து ஒட்டுறதே ஒரு தனி சந்தோசம் தான் ..//

    அமாங்க திருட்டுத்தனமா ஓட்டுற சுகமே தனிதான்...

    ReplyDelete
  21. வாங்க சித்ரா வாங்க...

    வருகைக்கும், கருத்துக்கும் நன்றி..

    ReplyDelete
  22. வாங்க ஹேமா...

    //எங்கடா ரொம்பக்காலம் தொடர்ன்னு சத்தத்தைக் காணோமேன்னு இப்போ
    2- 3 நாளைக்கு முதல்தான் யோசிச்சேன்.வந்திடிச்சா.
    ஆகா...இனி ஒரு வலம்தான் !//

    நீங்களும் ஒரு தொடர் போடுங்க...

    ReplyDelete
  23. வாங்க ஸ்டார்ஜன்...

    //யூத்துன்னா அப்படித்தான் ....//

    இது கூட நல்லாயிருக்கே...

    ReplyDelete
  24. வாங்க இராதாகிருஷ்ணன்

    தங்கள் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி...

    ReplyDelete
  25. நல்ல பதிவு. சுவாரசியமாய் இருந்தது. வாழ்த்துக்கள்

    ReplyDelete
  26. நல்லா இருக்கு தம்பி.எனக்கும் கொசுவத்தி சுத்துது.

    ReplyDelete
  27. வாங்க லதானந்த் சார்...

    தங்கள் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி...

    ReplyDelete
  28. வாங்க ஸ்ரீ...

    தங்கள் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி...

    ReplyDelete