Monday, August 30, 2010

மூக்குத்தி முத்தழகு...


மூக்குத்தியைப்பற்றி ஒரு காலத்தில் பல பாடல்கள் வந்து உள்ளன, அதற்கு காரணம் அப்போதெல்லாம் மூக்குத்திய பெண்களை நிறைய பார்க்க முடியும் ஆனால் இப்போது மிக மிக குறைவு....அழகாக இருந்தால் யாருக்குத்தான் பிடிக்காது. மூக்குத்தி குத்திய பெண்ணின் அழகு தனிதான். பெண்கள் மூக்குத்தி அணிந்திருந்தால் அவர்களின் அழகு மிளிர்கிறது என்பார்கள். மூக்குத்தி குத்துவது அமைத்தனம் என்றும் கூற கேள்விப்பட்டு இருக்கிறேன். மூக்குத்தி அணிகலன் மட்டுமல்ல உடலுக்கும் நல்லது என்று கூறுகிறார்கள்.

கிராமப்புறங்கிளில் மூக்குத்தி அணிந்த பெண்கள் அதிகம் காணலாம் அன்று. இன்று மூக்குத்தி குத்திய பெண்களை கிராமம் மட்டுமல்ல எங்கும் பார்த்தாலும் கிடைக்கமாட்டர்கள் தேடினால் தான் கிடைப்பார்கள். முன்காலத்தில் பெண்கள் மூக்குத்தி அணிந்தது மருத்துவக்காரணம் அதிகம் அதனால் தான் மூக்குத்தி அணிந்துள்ளனர் காலப்போக்கில் அது அடிமைத்தனம் என்று கூறி கணவன் இறந்தால் பெண் மூக்குத்தியையும் கழட்ட வேண்டும் என்ற அடிமைத்தனத்தால் பல பெண்கள் மூக்குத்தி குத்துவதை தற்போது விரும்புவதில்லை. அதனால் மூக்குத்தி குத்திய பெண்களை இப்போது பார்ப்பது அரிதாகிவிட்டது. மூக்குத்தியை பெண்கள் பலங்காலத்தில் குத்தியதற்கு மருத்துவ காரணங்கள் தான் அதிகம்.



மருத்துவ காரணங்கள்

உடலிலுள்ள வெப்பத்தைக் கிரகித்து நீண்ட நேரம் தன்னுள்ளே வைத்திருக்கூடிய ஆற்றல் தங்கத்துக்கு இருக்கிறது. மூக்குப் பகுதியில் ஒரு துவாரத்தை ஏற்படுத்தி அந்த துவாரத்தில் தங்க மூக்குத்தி அணிந்தால், அந்த தங்கம் உடலில் உள்ள வெப்பத்தை கிரகித்து தன்னுள்ளே ஈர்த்து வைத்துக் கொள்ளும் சக்தியைப் பெறும். அதுமட்டுமல்ல, மூக்கின் மடல் பகுதியில் ஒரு துவாரம் ஏற்பட்டால் அதன் மூலம் நரம்பு மண்டலத்தில் உள்ள கெட்ட வாயு அகலும். சிறுமியர் மூக்குத்தி அணிவதில்லை. பருவப் பெண்களே அணிகிறார்கள். ஏனெனில் பருவ வயதை அடைந்த பெண்களுக்கு கபாலப் பகுதியில் அதாவது, தலைப்பகுதியில் சிலவிதமான வாயுக்கள் இருக்கும். இந்த வாயுக்களை வெளிக் கொண்டு வருவதற்குத்தான் மூக்குக் குத்தப் படுகிறது.  மூக்குக் குத்துவதால் பெண்கள், சளி, ஒற்றைத் தலைவலி, மூக்கு சம்பந்தமான தொந்தரவுகள், பார்வைக் கோளாறுகள், நரம்பு சம்பந்தமான நோய்கள், மனத்தடுமாற்றம் என்பவற்றிலிருந்து பாதுகாக்கப் படுகிறார்கள். 
 
மூக்குக் குத்துவற்கு இப்படிப் பல காரணங்கள் உண்டு. மூக்குத்தி அணிவதால் பல நன்மைகள் உண்டு. ஆனால் கணவனை இழந்ததும் பெண் மூக்குத்தியைக் கழற்ற வேண்டுமென்பது  எப்படி வந்தது என்பது  தெரியவில்லை. அப்படிக் கழற்றும்  போதுதான் மூக்குத்தி அடிமைச்சின்னமாக மாறுகிறது.

25 comments:

  1. உண்மைதான் அண்ணா...

    மூக்குத்தி அணிவது சமீப காலங்களில் காண்பதற்கரிய ஒன்றாகிவிட்டது...

    ReplyDelete
  2. மருத்துவ காரணங்கள் ---- பிரயோசனமான பதிவு

    ReplyDelete
  3. இவ்ளோ காரணம் இருக்கா பிண்ணனியில.... ஆயிரம் சொல்லுங்க. மூக்குத்தி இருக்குற முகம் ரொம்ப ஷார்ப்பா இருக்கும்...தகவலுக்க் நன்றி தோழர்....!

    ReplyDelete
  4. வித்தியாசமான பதிவுங்க

    வாழ்த்துக்கள்

    சக்தி

    ReplyDelete
  5. Useful information. Thanks For Sharing..

    ReplyDelete
  6. நல்ல தகவல்கள் நண்பரே

    ReplyDelete
  7. //மூக்குக் குத்துவதால்பெண்கள், சளி, ஒற்றைத் தலைவலி, மூக்கு சம்பந்தமான தொந்தரவுகள், பார்வைக் கோளாறுகள், நரம்பு சம்பந்தமான நோய்கள், மனத்தடுமாற்றம் என்பவற்றிலிருந்து பாதுகாக்கப் படுகிறார்கள். //
    இவ்ளோ நன்மைகள் இருக்கா ..? அப்ப நாம கூட மூக்கு குத்திக்கலாம் போல இருக்கே ...?

    ReplyDelete
  8. நல்ல பகிர்வுங்க... அறிந்துகொண்டேன்.

    ReplyDelete
  9. இன்று வரை மூக்குத்தி என்பது அழகுக்காக மட்டும் தான் அணிவது என்றிருந்தேன்... அருமையான தகவல்கள்..


    இப்போதெல்லாம் புடவை கட்டிய பெண்களியே பார்க்க முடிவதில்லை...

    ReplyDelete
  10. இப்பல்லாம் மூக்குத்தி, தாவணி போட்ட பொண்ணுங்கள எங்கங்க பாக்க முடியுது..
    ஹூம் நம்ம பொலம்பி என்ன ஆக போகுது..

    ReplyDelete
  11. ஏனெனில் பருவ வயதை அடைந்த பெண்களுக்கு கபாலப் பகுதியில் அதாவது, தலைப்பகுதியில் சிலவிதமான வாயுக்கள் இருக்கும். இந்த வாயுக்களை வெளிக் கொண்டு வருவதற்குத்தான் மூக்குக் குத்தப் படுகிறது. மூக்குக் குத்துவதால் பெண்கள், சளி, ஒற்றைத் தலைவலி, மூக்கு சம்பந்தமான தொந்தரவுகள், பார்வைக் கோளாறுகள், நரம்பு சம்பந்தமான நோய்கள், மனத்தடுமாற்றம் என்பவற்றிலிருந்து பாதுகாக்கப் படுகிறார்கள்.

    ....... முற்றிலும் புதிய தகவல். உடம்பு பூரா piercing பண்ணிக்கிட்டு இங்கே நிறைய பேர் சுத்துறாங்க. ம்ம்ம்ம்ம்ம்......

    ReplyDelete
  12. ஆமா தல பாஸ் என்கிற பாஸ்கரன் படத்துல நயன்தாரா போட்டு இருக்குற மூக்குத்திதான் நல்லா இருக்கு !

    ReplyDelete
  13. மூக்குத்தி அணிதலும் அதனாலும் பலனா? பயனுள்ள பதிவையே தருவது லட்சியம் போலும்... நானும் மூக்குத்தி போட்டு இருக்கேன்..என்ன வைரமூக்குத்தி போடனுமுன்னு ஆசை..

    ReplyDelete
  14. நண்பரே! நல்ல மருத்துவம் சார்ந்து தகவல்களை தந்திருக்கின்றீர்கள். நன்றி!

    படிக்கும் அன்பர்களுக்கு! இயற்கை மருத்துவ முறைகளை படிக்க ஆர்வம் இருக்குமானால் என்னுடைய வலைபக்கம் வாருங்கள்!

    http://uravukaaran.blogspot.com

    நன்றி!

    சங்கவி அவர்களே! நீங்களும் கட்டாயம் வந்து படித்து பார்த்து கருத்துக்களை இட வேண்டும்

    ReplyDelete
  15. மருத்துவ குணங்கள் பற்றிய தகவல்கள் புதுசு.. நன்றி நண்பா

    ReplyDelete
  16. நல்ல பல விசயங்கள்.. நன்றி நண்பா

    ReplyDelete
  17. இவ்வளவும் சொல்லிட்டு சொல்லவேண்டியதைச் சொல்லாமப் போயிட்டீங்களே சங்கவி.
    மூக்கணங்கயிறு போடுறதுன்னும் சொலுவாங்க !

    ReplyDelete
  18. //ஏனெனில் பருவ வயதை அடைந்த பெண்களுக்கு கபாலப் பகுதியில் அதாவது, தலைப்பகுதியில் சிலவிதமான வாயுக்கள் இருக்கும். இந்த வாயுக்களை வெளிக் கொண்டு வருவதற்குத்தான் மூக்குக் குத்தப் படுகிறது.//

    முற்றிலும் புதிய தகவல். இது உண்மையா?

    ReplyDelete
  19. மூக்குத்திய‌வ‌ர்க‌ளே எனக்கு பிடிக்காது,ஆனால்
    அவ‌ள் ம‌ட்டும் மூக்குத்தி குத்தியிருந்த‌தால் தான்
    பிடித்திருந்த‌து. ப‌திவின் ப‌ட‌ங்க‌ளின் பாதிப்பால்
    பின்னோட்ட‌ம்.

    ReplyDelete
  20. ம்ம்ம் இத்துனுண்டு மூக்குத்தில இவ்வளவு மேட்டரா :)

    உங்ககிட்ட கத்துக்க வேண்டியது நிறைய இருக்கு தல

    ReplyDelete
  21. இதில் இருக்கும் எல்லாமே புதிய தகவல்கள் பங்காளி... ஆனால் சிலபேர் தோடு சைசுக்கு மூக்கில் போட்டிருப்பது தான் சகிக்காது!

    பிரபாகர்...

    ReplyDelete
  22. வித்தியாசமான பதிவுங்க

    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  23. மூக்குத்தி குத்தி, மூக்குத்தி அணிவது பற்றிய கதை கட்டுரை தமிழில் எழுதுங்கள்.
    Shanthi
    shnthi_1900@yahoo.in

    ReplyDelete