Thursday, August 5, 2010

திருமணத்திற்கு முன் இரத்தப் பரிசோதனை அவசியமா?


திருமணத்திற்கு முன் இரத்தப் பரிசோதனை ஆண் பெண் இருவருக்கும் அவசியமா என்று கேட்டால் நிச்சயம் அவசியம் என்றே கூறுவேன். திருமணத்திற்கு முன் இரத்தப்பரிசோதனை செய்வதன் மூலம் என்ன நோய் இருக்கிறது என்பதை முன் கூட்டியே அறியலாம்.

இன்று நிறைய ஆணுக்கும் பெண்ணுக்கும் அவர்களுக்கு என்ன நோய் இருக்கிறது என்று அறியாமல் திருமணத் செய்வதன் மூலம் திருமணத்திற்கு பின் அவர்களுக்கு இருக்கும் நோய் அறிகுறி தெரியவந்தால் இருவருக்குமே அந்த வாழ்க்கை நிலையும் இல்லை, நிம்மதியும் இல்லை. இருவர் குடும்பதிற்கும் ஊர் உலகத்தில் அவப்பெயர்தான். திருமணம் நிச்சயம் ஆவதற்கு முன் ஆணும் பெண்ணும் தங்கள் கருத்துக்களை பரிமாறுவதற்கு இன்று நம் வீட்டில் அனுமதிக்கின்றனர் அது போல் ஆண், பெண் ஜாதகத்துடன் பரிசோதனை சான்றிதழையும் இணைக்கலாம் என்பது என் கருத்து. இது நடக்கக் கூடிய காரியமா என்றால் நிச்சயம் வீட்டில் உள்ள பெரியவர்கள் எதிர்ப்பு தெரிவிப்பார்கள் ஆனால் அவர்களுக்கு எடுத்துச் சொல்ல வேண்டும்.

வாழ்வில் ஒவ்வொருவருக்கும் பட்டால் தான் புரியும். எப்போதும் நாம் ஒரு வேதனையையோ, சந்தோசத்தையோ அனுபவிக்கும் போது தான் அதன் வலி தெரியும். அதுபோல் வேதனையையும், வலியையும் நான் அனுபவித்ததால் தான் என் வேதனையையும் வலியையும் உங்களுடன் பகிர்கிறேன். இதை பதிவாக்கும் போது பலர் படிக்கும் வாய்ப்பு கிடைக்கும் இதை படித்த ஒருவர் ஆண் அல்லது பெண் வீட்டில் இரத்தப்பரிசோதனை சான்றிதழ் கேட்டாலே என் பதிவால் பயன் தான் என்று நினைத்து எழுதுகிறேன்.

சமீபத்தில் என் நண்பன் எனக்க போன் செய்தான் எனக்கும் அவனுக்கும் 12 வருட நட்பு படிக்கும் போது நட்பு ஏதாவது நிகழ்ச்சி எனில் அவன் வீட்டுக்குச் செல்வேன். அவனுக்கு அம்மா இல்லை சித்தி தான். நாங்கள் எப்போது வீட்டுக்கு சென்றாலும் எங்களையும் மகன் போல் தான் பாப்பங்க அவங்க சித்தி அவன் சொல்வான் எங்க அம்மா இருந்தாக் கூட என்னை இப்படி பார்த்து இருப்பாங்களா என்பது சந்தேகம் அப்படி பார்க்கின்றார்கள். சித்தியின் மகள் நாங்கள் அவன் வீட்டிற்கு செல்லும் போது 2ம் வகுப்பு படித்தார்கள் என்று நினைக்கிறேன் அவன் அப்பா கூலி வேலைதான்.

நண்பன் என்னை அழைத்து சொன்ன விசயம் தங்கைக்கு 20 வயதில் திருமணம் முடித்தோம் மூன்று மாதம் தான் குடும்பம் நடத்தினாள் கணவனுடன் கருத்து வேறுபாடு காரணமாக கடந்த ஒன்றரை வருடமாக எங்க கூட தான் இருக்கிறோள். அவளுக்கு வேறு திருமணம் செய்ய ஏற்பாடு செய்து கொண்டு இருக்கிறேன் இந்நிலையில் அவள் முதல் கணவர் கடந்த மாதம் இறந்துவிட்டார். அவர் இறந்தது எய்ட்ஸ் என்னும் ஆட்கொல்லி நோயினால் என்று சொல்றாங்க தங்கை அவன் கூட வாழ்ந்ததால் தங்கைக்கு பரிசோதனை செய்யலாமா? திருமண ஏற்பாடு நடக்கிறது என்ன செய்யலாம் என்று கேட்டான் நான் நிச்சயம் இரத்தப்பரிசோதனை எதற்கும் செய்து கொள்ளலாம் என்றேன். எங்கள் ஊரில் பரிசோதனை செய்தால் ஊர் எல்லாம் தெரிந்து விடும் எனக் கூற நான் இங்கே வந்து விடு என்றேன். இங்கு பரிசோதனை செய்தோம் ஒரு பத்து வருடத்திற்கு அப்புறம் அன்றுதான் தங்கையைப் பார்த்தேன். பரிசோதனை முடித்து விட்டு 3 மணிக்கு சென்று பரிசோதனை விவரத்தைப் பார்த்தால் பாசிட்டிவ் என்று இருந்தது என் கையால் வாங்கி அதைப்பார்த்த உடன் என்ன செய்வது என்று தெரியாமல் என் கண் கலங்கியது.

நண்பனை மட்டும் அழைத்து விவரத்தை சொல்லி விட்டு தங்கையிடம் இன்னும் 2 நாள் ஆகுமாம் மும்பை அனுப்பி அதன் பின் சொல்கிறார்கள் என்று சொல்லி அனுப்பினேன் என்ன செய்வது இன்று வரை சொல்லவில்லை. புதிதாக பார்த்த மாப்பிள்ளையிடம் தங்கை உங்களை பிடிக்கவில்லை என்று கூறி அவரை வேறு இடம் பார்க்க சொல்லிவிட்டதாக சொன்னான்.

வாழ்க்கையில் மறக்கக முடியாத தருணம் அது எத்தனையோ நல்லது கெட்டது செய்திருந்தாலும் அந்த பரிசோதனை விபரத்தை என் கையில் வாங்கி கண்ணீர் விட்டதை எப்படி மறப்பது தூக்கமில்லாமல் தவிக்கிறேன் அவர்களுக்கு எப்படி உதவி செய்வது. மருந்து மாத்திரை எங்கு வாங்குவது என்று ஒவ்வொன்றாக விசாரித்துக்கொண்டு இருக்கிறேன். 22 வயதுப் பெண் ஆட்கொல்லி நோயால் பாதிக்கப்பட்டுள்ளார் என் நண்பன் தங்கை என்பதால் மனது அடித்துக்கொள்கிறது. இத்தனை நாள் எத்தனையோ முகம் தெரியாதவர்கள் பாதிக்கப்பட்டு இருப்பார்கள் இப்போது தான் வலியை உணர்கிறேன். நமக்கு பக்கத்தில் நடக்கும் போது தான் உரைக்கிறது. இது போல் விபரம் தெரியாமல் இன்று நம் ஊரில் இந்நோயால் பாதிக்கப்பட்டவர்கள் நிச்சயம் இருப்பார்கள். அவர்கள் மனவலி மனவேதனை நினைத்தாலே கண்ணீர் தான்.

இனி வரும் காலங்களில் திருமணத்தின் போது பரிசோதனை சான்றிதழ் வேண்டும் என அனைவரும் கேட்க வேண்டும். நாம் கேட்கவில்லை என்றாலும் அரசாங்கம் கேட்கும் படியான சட்டம் இயற்றலாம். திருமண பதிவு சட்டம் கட்டாயமாக்கப்பட்டு உள்ளது வரவேற்கத்தக்கது. திருமணம் பதியும் போது இருவரது உடல் பரிசோதனை சான்றிதழ் நிச்சயம் வேண்டும் என்று அரசு சட்டமியற்றினால் பல அப்பாவிகள் இந்நோயில் இருந்து தப்புவதற்கு வாய்ப்பு உண்டு...

32 comments:

  1. மிகவும் சங்கடமான விஷயம்.. அற்ப சுகத்திற்க்காக அவன் செய்த தவறுக்கு.. இன்று இந்த சிறு வயது பெண் தண்டனை அனுவபித்து கொண்டிருக்கிறாள்.. வாழ்க்கையை தொலைத்த அந்த பென்ன்னின் மனது எவ்வளவு வேதனை படும்.. நினைக்கவே வேதைனையா இருக்கிறது..

    திருமணத்திற்கு முன் ரத்த பரிசோதனை தேவை தானா என்றால் .. கண்டிப்பாக தேவையான விஷயம்.. இன்றைய ஆண்களும் பெண்களும் திருமணத்திற்கு முன்னரே பல கெட்டவழிகளில் சென்று விடுகிறார்கள்.. அதை நாம் இன்று கண்கூடாகவே பார்க்கிறோம்.. நமக்கு தெரிந்து நண்பர் கூறியது போல ஒரு சில நபர்களே.. ஆனால் இதுபோல பாதிக்கப் பட்டவர்கள் பல்லாயிரக்கணக்கான அப்பாவிகள் உள்ளனர் குழைந்தைகள் உட்பட..

    ஆகையால் இது தேவையான ஓன்று தான்.. திருமணத்திற்கு ஆண் பெண் விவரங்களையும் ஜாதகங்களையும் கொடுக்கும் போது அதனுடன் மருத்துவ சான்றிதலையும் கொடுக்கும் நிலை வரும்..கூடிய விரைவில்

    ReplyDelete
  2. இதை படித்தவுடன் யாருக்கும் மனது கலங்காமல் இருக்காது !!! கொஞ்சம் யோசிக்க வேண்டிய விஷயம் தான் சங்கவி...!! திருமணத்திற்கு முன் இரத்தப் பரிசோதனை அவசியம் என்பதை எல்லோரும் உணரவேண்டும்
    ஆனால் அது அவ்வளவு எலிதள்ள!! இன்றும் பழைய நம்பிகைஹளில் ஊறி கிடக்கும் நம் மக்கள் யோசிக்க வேண்டும் அப்புறம் தான் இது சாத்தியம் !! அது விரைவில் நடக்க வேண்டும் என்பது மட்டும் நிதர்சனமான உண்மை....

    ReplyDelete
  3. மிகவும் தேவையான இடுகை சங்கமேஷ்.

    திருமணத்திற்கு முன்பு இரத்தப் பரிசோதனை, பாலியல் நோய்களுக்கான பரிசோதனை எல்லாமே தேவை தான்.

    ReplyDelete
  4. உங்கள் கண்ணீருக்கு என்ன ஆறுதல் சொல்வது என்று தெரியாமல் தவிக்கிறேன்.

    திருமணத்துக்கு முன் இரத்தப் பரிசோதனை அவசியம் என்ற உங்கள் கருத்துட்ன் முழுக்க முழுக்க உடன்படுகிறேன். ஆம், பெற்றோர் நிச்சயிக்கும் திருமணத்தில் ஜாதகம் ஜாதி என்ற தேவையில்லாமல் ஆயிரம் பார்க்கும் போது உயிர் காக்கும் இந்தப் பரிசோதனையைச் செய்து பார்ப்பது மிக அவசியமாகிறது.

    இதை அரசு சட்டத்திலேயே கொண்டு வரவேண்டும்.

    ReplyDelete
  5. ///அந்த பரிசோதனை விபரத்தை என் கையில் வாங்கி கண்ணீர் விட்டதை எப்படி மறப்பது தூக்கமில்லாமல் தவிக்கிறேன் ///
    அவசியமான பதிவு அண்ணா ..!!
    நிச்சயம் திருமணத்திற்கு முன்பு ரத்தப்பரிசோதனை செய்வது தேவையான ஒன்று. சம்பந்தமே இல்லாத ஒருவரின் வாழ்க்கை சீரழிவது இதன் மூலம் காப்பாற்றப்படும்.

    ReplyDelete
  6. திருமணத்திற்கு முன் இரத்தப் பரிசோதனை அவசியம்.... அவசியம்.... அவசியம்....

    ReplyDelete
  7. கடவுளே.. அந்தப் பெண்ணுக்கு என்ன சொல்றதுன்னு தெரியல..

    கண்டிப்பா ரத்தப் பரிசோதனை செய்யணும்.. போலி சான்றிதழ் காட்டி ஏமாத்துவான்கப்பா அதுலவும்
    :((((

    ReplyDelete
  8. சங்கமேஷ்,

    உங்களின் கேள்விக்கு “அவசியம்” என்பதே என் பதிலும்.

    இது போன்ற சம்பவங்கள் தற்போது மிக அதிகமாகவே கேள்வியுற நேர்கிறது.

    என் நண்பனும் கூட ஒருவன் கடந்த ஆண்டு “அந்த” நோயால் இறந்து போனான் எனும் தகவல் அறிந்து வருந்த மட்டுமே முடிந்தது என்னால்.

    தவறான உடலுறவு வேண்டாம் என்றால் யார் காதில் போட்டுக் கொள்கிறார்கள்?

    அவர்களின் அலட்சியத்தால், இதோ இப்போது ஒரு சகோதரியின் நிஜ சம்பவம் போல் இன்னும் எத்தனையோ சகோதரிகளின் எதிர்க்காலம் பாதித்தபடியே தான் இருக்கிறது.

    இதற்கெல்லாம்,

    ”பரிசோதனைத் தேவையா?”, என்ற கேள்வியை விடவும்,” தகாத உடலுறவு தேவையா?”, என ஒவ்வொருவரும் சிந்தித்தால்..... மனித சமூகம் மிளிரும் என்பது என் கருத்து.

    ReplyDelete
  9. உங்கள் பதிவைப் பார்த்தால் திருமணத்திற்கு முன் இரத்தப் பரிசோதனை தேவைப்போலத்தான் இருக்கு.ஆனால் புரிந்துணர்வு இல்லாதவர்கள் தங்களைச் சந்தேகப்படுவதாகக் கோபித்துக் கொள்வார்களே !

    ReplyDelete
  10. really a sad incident ... pray to god for her ...

    ReplyDelete
  11. வாங்க வெறும்பய...

    தங்கள் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி....

    ReplyDelete
  12. வாங்க ரமேஷ்...

    தங்கள் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி...

    ReplyDelete
  13. வாங்க செந்தில்வேலன்...

    தங்கள் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி...

    ReplyDelete
  14. வாங்க தீபா...

    தங்கள் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி...

    ReplyDelete
  15. வாங்க ப.செல்வகுமார்...

    தங்கள் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி...

    ReplyDelete
  16. வாங்க தமிழ் உதயம்

    தங்கள் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி...

    ReplyDelete
  17. வாங்க சசி...

    தங்கள் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி...

    ReplyDelete
  18. வாங்க சத்திரியன்...

    தங்கள் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி...

    ReplyDelete
  19. வாங்க ஹேமா...

    தங்கள் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி...

    ReplyDelete
  20. வாங்க ஏஞ்சல்...

    தங்கள் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி...

    ReplyDelete
  21. very good information shared ,
    it holds good in many cases , routine mediacal examination is must in many cases but if u tel , people even te educated ones wil laugh at u , i have faced such situations many a times -people think we r acting too smart -let change start frm us

    ReplyDelete
  22. Rh compatibility can also be seen , so we can avoid future threatance in pregnancy , same way some genetic diseases also sud be noted , athuku than family , thatha paati , ellar pathiyum thernjukirathu ...but makal jatham matum parthu , vasathi parthu than thirumanam seiyarathu valakkama vetchu irukaanga ,
    lets change first , den teach others

    ReplyDelete
  23. பங்காளி, மிகவும் அவசியமான இடுகை. எல்லோரும் திருமணத்துக்கு மு இரத்தப் பரிசோதனை செய்துகொள்ளவேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டால் வேண்டும், இதில் மாற்றுக்கருத்தே கிடையாது. இது போன்ற பல இழப்புக்களை கண்ணுற்றும், கேள்வியுற்றும் இருக்கிறேன்.

    பிரபாகர்...

    ReplyDelete
  24. பதிவிற்கு நன்றி

    மிகக் கடினமான தருனம் தான்...

    திருமணத்திற்கு முன் இரத்தப் பரிசோதனை அவசியம் தான் என்றாலும்.. அது ஒரு தீர்வல்ல.. ஓரளவிற்குதான் கட்டுப்படுத்த முடியும்..

    நீங்கள் எங்கே இரத்தப் பரிசோதனை செய்தீர்கள் என்பது தெரியவில்லை.. இரத்தப் பரிசோதனையின் போது கடைக்க பிடிக்க வேண்டிய முறைகள் சரியாக கடைபிடிக்கபட்டதா?

    அதாவது அந்தப் பெண்ணிற்கு எச் ஐவி என்றால் என்ன என்பது போன்ற தகவல்கள் கொடுத்த பின்பு தான் இரத்தப் பரிசோதனை செய்திருப்பீர்கள் என்று நம்புகிறேன்..

    பரிசோதனைக்கு முன்னும் பரிசோதனைக்கு பின்னும் முறையான அலோசனை வழங்கப்படவேண்டும்... அதை எதிர்கொள்ள பயந்து இந்த இரண்டாம் ஆலோசனையை பெரும்பாலானோர் தவிர்த்து வருகின்றனர்.. முறையான பயிற்சி பெற்ற ஒரு ஆலோசகர் கண்டிப்பாக உங்களுக்கு உதவுவார்..

    தங்கைக்கு சொல்லித்தான் ஆகவேண்டும்..வேறு வழியில்லை.. ஏனென்றால் அவரின் உடலை இனி தான் அக்கறையுடனும் கவனமுடனும் பார்த்துக் கொள்ளவேண்டும்..

    அவருக்கு ஆறுதலாக, பக்க பலமாக இருங்கள்... பரிதாபத்தை காட்டினால் பயமும் சோர்வும் கலக்கமும் தொற்றி கொள்ளும்... நீங்கள் பரிசோதனை செய்த இடத்தில் உள்ள ஆலோசகரிடம் பேசி அழைத்துச் செல்லுங்கள்... உங்களாலேயே சொல்லமுடியும் என்ற நம்பிக்கை இருந்தால் சொல்லி விடுங்கள்..

    என் உதவி தேவைப்பட்டால் உதவ தயாராக இருக்கிறேன்...

    ReplyDelete
  25. விரைவில் சட்டம் வந்தாலும் ஆச்சரியப்படுவதிற்கில்லை. மேலும், மேட்ரிமோனியலில், ரத்தப் பரிசோதனை கட்டாயம் என இருபாலாரும் கேட்டும் நாளும் தொலைவிலில்லை.

    ReplyDelete
  26. மிக பயனுள்ள பகிர்வுங்க........ கண்டிப்பாக இரத்தப் பரிசோதனை இன்றைய காலகட்டத்தில் மிக அவசியம்.

    ReplyDelete
  27. நிஜமாவே கேட்கவே ரொம்பக் கஷ்டமாக இருக்கே சங்கவி..

    ReplyDelete
  28. அருமையான பதிவு!!

    ReplyDelete
  29. தனிப்பதிவாவே ஒன்னு எழுதிரட்டுமா!

    ReplyDelete
  30. ரொம்பவே கொடுமைங்க. பாவம் உங்கள் நண்பரின் தங்கை நிலைமை

    ReplyDelete
  31. அந்தப்பெண்ணை நினைத்து மனசு அப்ப்டியே கலங்கிவிட்டது....கணவனின் தவறுக்கு பலிகடா இவள்.....

    கண்டிப்பாக ரத்தப்பரிசோதனி அவசியம் என்று சட்டம் கொண்டுவரவேண்டும்...அப்போதுதான் மக்கள் நடைமுறைப்படுத்துவார்கள்...

    மிக நல்ல பதிவு..

    ReplyDelete