Tuesday, August 10, 2010

ஆதரவற்ற வேர்கள்....


வேர்கள் இல்லை எனில் மரமும் இல்லை கிளைகளும் இல்லை. நான் சொல்லும் வேர் பெற்றோர்கள் நாம் உருவாக காரணமே இவர்கள் தான் ஆனால் இன்று 100ல் 20 பேர் தங்களது தாய் தந்தையை கவனிப்பதில்லை இது தான் அதிகம் உள்ள குற்றச்சாட்டு. நேற்று இரவு வானொலி கேட்டுக்கொண்டு இருந்தேன் அப்போது கேட்டவை கோவையில் கடந்த வாரத்தில் மகன் என்னை கவனிப்பதில்லை என்று காவல்துறைக்கு வந்த தொலைபேசி எண்ணிக்கை மிக அதிகம். இந்த  தொலைபேசி அழைப்புகளுக்கும் அவர்கள் சார்ந்த காவல் நிலையத்தில் இருந்து காவல் துறை ஆய்வாளர்களை அனுப்பி பிரச்சனைகளை விசாரித்து தீர்வு காணப்பட்டது என்று மேற்கு மண்டல உயர் அதிகாரி கூறினார்..

அந்த தொலை பேசி அழைப்புகழ் எல்லாம் பெற்றோரிடம் இருந்து வந்தது. என் மகன் என்னை கவனிப்பதில்லை சொத்தை பிரித்துக்கொடு என்று துன்புறுத்துகிறான். எனக்கு சாப்பாடு போடுவதில்லை என்று தன் மகன் மீது வைத்த குற்றச்சாட்டுகள் தான் ஏராளம். இது நடைமுறையில் நாமே நிறைய இடங்களில் நிச்சயம் பார்த்து இருப்போம்.

மகனை பெத்து வளர்த்தி, படிக்கவைத்து, வேலை வாங்கிக்கொடுத்து, திருமணமும் செய்து வைக்கும் வரை அவனுக்கு பார்த்து பார்த்து செய்கின்றனர் பெற்றோர் ஆனால் இன்று வேலை நிமிர்த்தமாக வெளியூரில் வேலை செய்யும் பலர் தனது பெற்றோருக்கு உடல் நிலை சரியில்லை எனில் விடுமுறை வாங்கி வந்து கவனிக்கும் நிறைய பேரை பார்த்து இருக்கிறேன். ஆனால் சிலர் தனது சுயநலத்திற்காகவும், சந்தோசத்திற்காக தனது பெற்றோரை கவனிக்காமல் பக்கத்து ஊரிலேயே இருந்தாலம் அவர்களுக்கு எந்த உதவியும் செய்யாமல் அப்படியே விட்டு விடும் சிலர் இருக்கின்றனர். இவர்களுக்கு மேல் பெத்த தகப்பனையும், தாயையும் தன்னிடம் பணம் இருக்கிறது ஆனால் உங்களை பார்க்க நேரமில்லை என்று முதியோர் இல்த்திற்கு அனுப்பும் சில கயவர்களும் இருக்கிறார்கள் இவ்வாறு அனுப்பும் சிலரை என்னைக் கேட்டால் வளைகுடா நாடுகளில் நடப்பது போல் கொடூர தண்டணை அளிக்கலாம் என்று தான் கூறுவேன்.

இன்று பெற்றோரை தெய்வமாக பார்க்கும் மகன்களையும் பார்த்திருக்கிறேன், வெளியூருக்கு வேலையில் இருந்தால் தினமும் இரவு பெற்றோருக்கு போன் செய்து நலம் விசாரிக்கும் எத்தனையோ இளைஞர்கள் உள்ளனர். இப்படி இருப்பவர்கள் தான் அதிகம். ஆனால் பெற்றோரை காப்பகத்துக்கும், வீட்டுக்கு அருகிலேயே தனி குடிசை ஒன்று போட்டு அவர்களை தனியாக சமையல் செய்யச் சொல்வது அவர்களுக்கு எந்த உதவியும் செய்யமால் இருப்பது இது போன்று இருப்பவர்கள் குறைவுதான் அந்தக்குறைவு தான் மனவழியை அதிகப்படுத்துகிறது. இப்படி குடிசையில் உன் பெற்றோர் வசிக்கிறார்களே ஏன் சரியாக பார்ப்பதில்லை என்றால் எங்க அம்மாவுக்கும், எங்க அப்பாவுக்கும சரியான வாய் தேவையில்லாமல் பேசி வீட்டில் பிரச்சனையை கிளப்பிகின்றார்கள் என்றான் ஒருவன் அட சண்டாள நீ குழந்தைகயாக இருக்கும் போது என்ன வெல்லாம் பேசி இருப்பாய் அப்போது அவர்கள் உன்னை ஒதுக்கினார்களா பெரியன் ஆனவுடன் உனக்காக எத்தனை பிரச்சனைகளை அவர்கள் சமாளித்து இருப்பார்கள் அப்போது நீ பேசாததையா அவர்கள் பேசிவிட்டார்கள். இதை எல்லாம் யாரும் யோசிப்பதில்லை நாளை நமக்கும் இது தான் என்று.

தனது மகன் மகள் யாரும் இல்லாமல் உழைத்து ஓய்ந்து போன போது பெரியோர்கள் செல்லும் இடம் காப்பகமாக இருக்கலாம். ஆனால் மகன் உயர் நிறுவனத்தில் வேலை கை நிறைய சம்பளம் என வசதி வாய்ப்புகளோடு இருந்து விட்டு தன் தாய் தகப்பனை வேலைக்கு அனுப்புவது என இருப்பார்கள் கேட்டால் நான் சொன்ன எங்க கேக்கு இந்த கிழம் என்று கூறுவார்கள். நல்ல நிலையில் இருக்கும் மகன் குறைந்த பட்சம் மாதம் 1000 ரூபாய் கொடுத்தால் அந்தப் பெற்றோரின் சந்தோசம் சொல்லிமாளாது.

ஒவ்வொருவரும் இன்று எப்படி தன் தாய் தந்தையை நடத்துகிறார்களோ நாளை அவர்களது குழந்தையும் அவர்களை அப்படித்தான் நடத்தும் இது மனதில் இருந்தால் பெற்றோரை நன்றாக வைத்துக்கொள்வர். நாம் எப்படி நடந்து கொள்கிறோமோ அப்படித்தான் நம் குழந்தைகளும் நம்மை வழிநடத்துவார்கள் இது எல்லோருக்கும் நினைவில் இருக்கவேண்டும்...

26 comments:

  1. //ஆனால் உங்களை பார்க்க நேரமில்லை என்று முதியோர் இல்த்திற்கு அனுப்பும் சில கயவர்களும் இருக்கிறார்கள்///
    அவுனுக எல்லாம் எப்பத்தான் திருந்தப்போரானுகளோ..?
    அவுங்களுக்கும் வயசாகும்னு நினைச்சுப் பார்த்தா தெரியும் ..!!

    ReplyDelete
  2. சில சமயம் உங்கள் தளம் லோட் ஆக வெகு நேரம் எடுக்கிறது . கவனிக்கவும். வேர்களை கவனிக்கவிடில் மரம்
    வீழ்ந்துவிடும்

    ReplyDelete
  3. அவசியமான பதிவு சங்கவி..

    ReplyDelete
  4. இறுதி வரிகள் மிகச்சரியானவை...
    நாம் நமது குழந்தைகள் முன்பு எதைச் செய்கிறோமோ, அவர்களும் அதையே செய்வார்கள்...

    பார்க்க வேண்டிய ஒரு வீடியோ...
    They see... They do...

    http://www.youtube.com/watch?v=6JfHB2cruJU

    ReplyDelete
  5. என்ன சொல்வதென்று தெரியவில்லை.. பெற்றவர்களை தெருவில் விடும் சாக்கடை புழுக்களை பற்றி...

    ReplyDelete
  6. பணம் தான் பெரிய பிரச்சனையாக இருக்கிறது பலருக்கும்!இதுவே அடிப்படை பிரச்சனை.அன்பு,கருணை எல்லாவற்றையும் அழிக்க வல்லது

    ReplyDelete
  7. வேதனைங்க...
    இதைப் படிக்கும் போது, நான் எழுதிய ஒரு ஹைக்கூ நினைவுக்கு வருகிறது.
    இனி பிரயோஜனமில்லை !!!
    முடிவானதும்
    அடுத்த மாநிலத்துக்கு
    அடி மாடுகள்
    முதியோர் காப்பகத்திற்கு
    பெரிசுகள்

    ReplyDelete
  8. ஒரு குழந்தையின் கதறல் என்று இதை பற்றி நான் எழுதிய பதிவை பார்த்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன்,...


    http://verumpaye.blogspot.com/2010/08/blog-post_09.html

    ReplyDelete
  9. //ஒவ்வொருவரும் இன்று எப்படி தன் தாய் தந்தையை நடத்துகிறார்களோ நாளை அவர்களது குழந்தையும் அவர்களை அப்படித்தான் நடத்தும் இது மனதில் இருந்தால் பெற்றோரை நன்றாக வைத்துக்கொள்வர். நாம் எப்படி நடந்து கொள்கிறோமோ அப்படித்தான் நம் குழந்தைகளும் நம்மை வழிநடத்துவார்கள் இது எல்லோருக்கும் நினைவில் இருக்கவேண்டும்...//

    நிதர்சன வரிகள்..........

    ReplyDelete
  10. பல அனாதை விடுதிகளின் உள்ளே சென்று விட்டு வெளியே வரும் போது அங்கு அவர்கள் சொல்லும் விசயங்கள் நாம் நாகரிக உலகில் தான் வாழ்ந்து கொண்டு இருக்கிறோமே என்று யோசிக்கத் தோன்றுகிறது.

    ReplyDelete
  11. உருக்கமாவும் இருக்கு... அதே நேரத்துல நினைவூட்டுப் பதிவாகவும் இருக்கு......

    ReplyDelete
  12. நல்ல பகிர்வு,

    ReplyDelete
  13. சங்கவி,

    நாகரிக உலகின் இளைஞர்களுக்கு மிகமிக அவசியமானதொரு பதிவு.

    ReplyDelete
  14. ம் அருமையான பதிவு
    நேற்றிரவு ஓர் அம்மா என்னிடம் இது பற்றி பல மணிநேரம் கதைத்தார்கள். ஆனால் அது பற்றியே பதிவு வந்திருக்கு எனக்கும் இந்தப்பதிவுக்கும் இவ்வளவு ஒற்றுமை கண்டு வியக்கிறேன்.
    "உன் கடமையைச் செய் இல்லயேல் உனக்கான கடமை தவறிவிடும்"

    ReplyDelete
  15. நல்ல பதிவு..

    கடைசி பத்திய அப்டியே வழி மொழிகிறேன்.

    ReplyDelete
  16. வினை விதைத்தவன் வினை அறுப்பான்.யோசிக்க வைக்கும் பதிவு.

    ReplyDelete
  17. தனது மகன் மகள் யாரும் இல்லாமல் உழைத்து ஓய்ந்து போன போது பெரியோர்கள் செல்லும் இடம் காப்பகமாக இருக்கலாம். ஆனால் மகன் உயர் நிறுவனத்தில் வேலை கை நிறைய சம்பளம் என வசதி வாய்ப்புகளோடு இருந்து விட்டு தன் தாய் தகப்பனை வேலைக்கு அனுப்புவது என இருப்பார்கள் கேட்டால் நான் சொன்ன எங்க கேக்கு இந்த கிழம் என்று கூறுவார்கள். நல்ல நிலையில் இருக்கும் மகன் குறைந்த பட்சம் மாதம் 1000 ரூபாய் கொடுத்தால் அந்தப் பெற்றோரின் சந்தோசம் சொல்லிமாளாது.//

    நல்ல விழிப்புண்ர்வான வரிகள்! வாழ்த்துகள்!

    ReplyDelete
  18. இன்றைய காலகட்டத்திற்கு மிகவும் அவசியமான பதிவு..! முற்பகல் செய்யின் பிற்பகல் தாமே வரும் என்பதை உணர்த்தும் பயனுள்ள பதிவு..!

    ReplyDelete
  19. தொடர்பதிவுக்கு அழைத்திருக்கேன். சிறப்பிக்கவும்.
    http://kayalsm.blogspot.com/2010/08/blog-post.html

    ReplyDelete
  20. பெற்றவர்களை கவனியாமல் விடும் பாதவர்களையும் விட கொடும் பாவிகள் யாரும் இல்லை பங்காளி. கடைசிப் பத்தியில் முத்தாய்ப்பாய் எழுதியிருக்கிறீர்கள். நாம் நன்கு அவர்களைப் பேணி மற்றோருக்கு உதாரணமாய் இருப்போம்.

    பிரபாகர்...

    ReplyDelete
  21. அந்த கயவாலிகளுக்கு புரிந்தால் சரி

    எப்படி இத்தனை வருடம் கஷ்டப்பட்டு வளத்து ஆளாக்கியவர்களை முதியோர் இல்லத்தில் கொண்டு போய் விட மனசு வலிக்காதா இல்ல மனசே இல்லயா

    ரொம்ப தேவையான பதிவு

    ReplyDelete
  22. ஒவ்வொருவரும் இன்று எப்படி தன் தாய் தந்தையை நடத்துகிறார்களோ நாளை அவர்களது குழந்தையும் அவர்களை அப்படித்தான் நடத்தும்

    அருமையான வார்த்தைகள்...

    ReplyDelete
  23. ஒவ்வொருவரும் இன்று எப்படி தன் தாய் தந்தையை நடத்துகிறார்களோ நாளை அவர்களது குழந்தையும் அவர்களை அப்படித்தான் நடத்தும்

    அருமையான வார்த்தைகள்...

    ReplyDelete
  24. சொன்ன கருத்து நெஞ்சை சுடுகிறது.

    ReplyDelete
  25. தேவையான பதிவு சங்கவி. well written.

    ReplyDelete