Wednesday, May 28, 2014

வாழ்த்துக்கள் மகனே....


நான்கு ஆண்டுகளுக்கு முன் தனியார் மருத்துவனையில் லேபர் வார்டு முன் குடும்பத்தில் உள்ள 30 பேரும் குழுமியிருந்தோம். ஆப்பரேசன் செய்ய வேண்டும் என்று சொன்னாதால் கிழமை, நேரம் எல்லாம் குறித்து மருத்துவர்களிடம் சொல்லி விட்டோம், சொந்த பந்தங்கள் எல்லாம் குழந்தையை பார்க்க காத்திருந்தனர் கூடவே நானும்... என்ன என் மனதில் இனம் புரியாத பயமும், பல தமிழ் படங்களின் பிரசவ சீன்கள் கண் முன்னே வந்தோடியது, படத்தில் வரும் மழை போல அன்றும் மழை பெய்து இடி இடித்ததால், உதட்டில் சிரிப்பும் உள்ளத்தில் நடுக்கமுமாக காணப்பட்டேன். சரக்கடிக்கவும் தைரியமில்லை அடிச்சிருந்தாலாவது போதையில் பயம் தெளிந்திருக்கும். 10 மணியில் இருந்து 11 மணி வரை என்று நேரம் கொடுத்திருந்ததால், பிரசவ அறையின் சுவற்றில் காது வைத்து கேட்டுக்கொண்டு இருந்தேன்.

மகனின் முதல் குரலை நான் தான் கேட்க வேண்டும் என்ற ஆவலில், ஒரு சத்தமும் கேக்கவில்லை அந்த அளவிற்கு கெட்டியான பில்டிங்போல. 10.55க்கு வழக்கம் போல நர்ஸ்தான் முதலில் வந்தாங்க, எதுவும் பேசாம வேக வேகமா சென்றதால் மீண்டும் சினிமா காட்சிகள் நினைவில் வந்து கலக்கத்தை ஏற்படுத்தியது. உள்ளே சென்ற அனஸ்திசியா டாக்டரும் வெளியே வந்துவிட்டார், எங்கள் நெருங்கிய நண்பரான மருத்துவர் கடைசியாக பையனை கொஞ்சிக்கொண்டே கொண்டு வந்தார், நானும் சினிமா போல அப்பனிடம் தான் பையனை கொடுப்பார்கள் என்று தூரத்தில் இருந்தே என்னை கூப்பிடுவாங்கன்னு ஆவலா இருந்தேன். எங்க குடும்பம் இந்த சாங்கியம், சம்பிரதாயங்கள் நிறைந்த குடும்பம், குழந்தை பிறந்தால் வெள்ளித்தட்டில் வீட்டின் பெரியவர்கள் தான் முதலில் வாங்குவார்கள்.
குடும்பமே போய் பையன பார்த்து விட்டு எல்லோரும் அவ அம்மா மாதிரின்னு சொல்லிகிட்டே என்னைய பார்க்கவிடல, இங்கேயும் கடைசியாத்தான் என் கையில் வாங்கி கொஞ்சினேன். சொன்ன போலவே அவ என் கலர் இல்லை என்பதில் நிறைய மகிழ்ச்சிதான் எனக்கு...
செக்கச்சிவந்து கண் கூட திறக்காமல் அந்த மழலை மொழி எனக்கு.... எப்படியோ என்ன பாடாப்படுத்தி நீ அப்பானிட்டே என்றது போல இருந்தது...

இது நடந்து இன்றோடு 4 வருடம் ஆனாலும் எனக்கு நேற்று நடந்தது போல தான் உள்ளது எனக்கு..
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.. என் அன்பு பிரசன்னஸ்ரீஹரிக்கு...




8 comments:

  1. பிரசன்னஸ்ரீஹரிக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்..

    ReplyDelete
  2. இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்! பிரசன்ன ஸ்ரீ ஹரி நீண்ட ஆயுளுடன் நிறைவான செல்வங்கள் பெற்று வளர்க!

    ReplyDelete
  3. உங்கள் மகனுக்கு பிறந்த நாள் வாழ்த்துகள்.

    ReplyDelete
  4. Great.

    Happy Birthday Hari!

    Seshan

    ReplyDelete
  5. செல்லத்திற்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  6. நேற்று பிறந்தநாள் கொண்டாடிய அன்பு பிரசன்னாவுக்கு வாழ்த்துக்கள்§ அன்று தான் என் மக்னின் பிறப்பும் பேசுவோம் வலையில்!

    ReplyDelete
  7. Belated Birthday wishes to Prasanna

    ReplyDelete