Tuesday, August 28, 2012

மீண்டும் உயிர்த்தெழுந்த பதிவுலகம்...


2009களில் பதிவுலகம் நிறைய புது பதிவர்களையும், புதுக்கட்டுரைகளையும் தினம் தினம் ஒரு எதிர்பார்ப்புக்குள்ளாக்கியது. அவ்வளவு பதிவுகள் நம் மனதில் பிடித்தவற்றை நாம் எழுதி பத்திரிக்கைகளுக்கு அனுப்பினால் இது வெளிவருவதற்குள் நமக்கு வயதாகிவிடும் என்ற காலம் இருந்தது உண்மை. கூகுள் நமக்களித்த வரப்பிரசாதமான BLOGG க்கு பின் நாம் எதை எழுதுகிறோமோ அதை உடனடியாக வெளியிட முடியும் அதைப்படிப்பவர்கள் நம்மை ஊக்கப்படுத்தி வந்தனர். பதிவுலகமும் ஆரோக்கியமாக இருந்தது..

2012 ஆரம்பத்தில் இருந்து நிறைய மூத்த பதிவர்கள் பதிவுலகில் இருந்து ஒதுங்கினர் இன்னும் சொல்லப்போனால் அவர்களின் பதிவையே மறந்துவிட்டனர் என்றும் கூட சொல்லலாம். புதியவர்களின் வருகை அதிகமாக இருந்தாலும் அதில் குறிப்பிட்ட சிலர் மட்டுமே வெளியில் வர ஆரம்பித்தனர் மற்றவர்களை அடையாளம் காண இயலவில்லை. பல அற்புதமாக எழுத்துக்கு சொந்தக்காரர்கள் எல்லாம் வெளியில் தெரிவதில்லை.

இது வரை நடைபெற்ற சந்திப்புகளின் போது இருந்ததை விட இந்த முறை நடைபெற்ற சென்னை சந்திப்பு 10 நாட்களுக்கு முன் பதிவுலகை கலக்க ஆரம்பித்தது அப்போது மீண்டும் வாசகர்களின் வட்டம் அதிகமானது எல்லாருடைய பதிவும் நன்றாக வெளிக்கொண்டு வரப்பட்டது இதனால் பதிவர் சந்திப்பும் வெற்றிகரமாக நடைபெற்றது.

இது அப்படியே தொடரவேண்டும் மீண்டும் பதிவர்கள் எழுச்சி பெறவேண்டும் தங்களின் எழுத்துக்கள் மூலம் அனைவரையும் கட்டிப்போட வேண்டும் தங்களுக்கு பிடித்தவற்றை எழுதுங்கள் அது சரியோ தவறோ கருத்து மோதல் தான் நமக்கு வேண்டும்.

இன்று மீடியாக்கள் எழுத தயங்கும் தலைப்புக்களை நாம் பகீரங்கமாக எழுதுகிறோம் நம் எழுத்துக்களை படித்தபின் அந்த பிரச்சனைகளை பெரிதாக்குகிறார்கள் மீடியாக்கள் அந்த அளவிற்கு நாம் மாற்று ஊடகமாக செயல் படுகிறோம் என்பது யாரும் மறுக்க இயலாத உண்மை.

இன்று பத்திரிக்கைகளில் ஒரு கட்டுரை எழுத வேண்டும் என்றால் அவர்களுக்கு நிச்சயம் இந்த பதிவுலகம் உதவுகிறது நமது எழுத்துக்களை அவர்களுக்கு பயன்படுகிறது..

முகநூலுக்கும், டுவிட்டருக்கம், பதிவுக்கும் இன்று பத்திரிக்கைகள் குறைந்த பட்சம் 3 பக்கங்களை நமக்காக பிரசுரிக்கும் அளவிற்கு இருக்கிறது நம் முன்னேற்றம். அந்த அளவிற்கு எழுத்தின் தாக்கம் இன்று அனைவராலும் அறியப்படுகிறது. இன்று விற்பனையாகும் புத்தகங்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்ததற்கு பதிவர்களும் ஒரு காரணம் என்றால் யாரும் மறுக்க இயலாது.

நம்மால் பகிரங்கமாக எழுதுவதற்கு காரணம் நாம் மக்களோடு மக்களாக இருக்கிறோம். சமூக அவலங்களை அங்கு தட்டி கேட்கும் தைரியம் தவறு நடக்கும் இடத்தில் இல்லை என்றாலும் நம் எழுத்தில் தட்டி கேட்கும் தைரியம் இந்த பதிவிலகில் உள்ள எல்லோருக்கும் இருக்கிறது. ஒரு அரசாங்க அதிகாரியை திட்டி பதிவுலகில் எழுதினால் அவரின் காதுகளுக்கு போகது என்று நினைக்க வேண்டாம் இன்று நிச்சயம் போகும் அளவிற்கு வளர்ந்துள்ளது நமது வளர்ச்சி.

நம் எழுத்தின் வலிமையை உணர்ந்து தவறுகளை தங்கள் பதிவுகளில் சுட்டிக்காட்டி எழுதலாம் நான் இங்கே சென்றேன் இந்த தவறு நடந்தது அந்த இடத்திற்கு போகுபவர்கள் பார்த்து பத்திரமாக இருங்கள் என்று முன் எச்சரிக்கை செய்யலாம்.

நமக்கு என்ன வேண்டுமோ அத்தனையும் நம் பதிவுலகில் கிடைக்கிறது. நண்பர்கள் சுற்றுலா செல்கிறார்களா உடனே எந்த ஊர் என்று கேட்டு தேடினால் அங்கே எங்கே தங்கலாம் எவ்வளவு செலவு எதாவது ஏமாற்றுகிறார்களா என அங்கம் அங்கமா அந்த ஊரைப்பற்றி இங்கு நம்மால் படிக்க இயலுகிறது.

நம் ஊரில் இயற்கையான பல அழகான இடங்கள் உள்ளன அதை எல்லாம் வெளியில் இருப்பவர்களுக்கு தெரிய வாய்ப்பில்லை இதை நாம் வெளிக்கொண்டு வரும்போது இப்படி எல்லாம் இருக்கிறதா ஏன் இதை சுற்றுலா மையமாக மாற்றக்கூடாது என்று அரசாங்கத்துக்கு ஒரு பதிவு எழுதலாம்.

இப்போதுல்ல எழுச்சி நம்மிடையே மாறமல் இருக்க வேண்டும் தினமும் அனைவரும் பதிவு எழுதுங்கள் என்று சொல்லவில்லை வாரத்திற்கு இரண்டு பதிவாவது எழுதுங்கள் பதிவுகளை படிக்கும் போது புது பதிவர்களை ஊக்குவித்து அவர்களுக்கு ஒரு பின்னூட்டமிடுங்கள் இப்படி எழுது அப்படி எழுது என்று அறிவுரை கூறுங்கள் தவறுகளை தட்டிக்கேளுங்கள்.

எங்கு சென்றாலும் அங்கு நடக்கும் தவறுகளை மறக்காமல் எழுதுங்கள் அப்போது தான் அனைவரும் அறிய இயலும். சமூக அவலங்களை படித்த நாம் தான் தட்டி கேக்கவேண்டும் வாங்க நம் எழுத்தின் மூலம் தட்டிக் கேட்போம்..

நிறைய ஆக்கப்பூர்வமாக எழுதுவோம்... சமூகத்திற்கு நம்மாள் ஆன உதவிகளை செய்வோம்.. பதிவர்களே மீண்டும் உயிர்த்தெழுந்து பதிவுகள் எழுதுங்கள்... நிச்சயம் மாற்றத்தை உருவாக்க முடியும்...

46 comments:

  1. நன்றாக சொல்லி இருக்கிங்க...கண்டிப்பா ஒரு மாற்றம் உருவாகும்

    ReplyDelete
  2. //தட்டிக் கேட்போம்..///
    TAK அப்படின்னு எதாவது க்ரூப் பண்ண போறீங்களா

    ReplyDelete
  3. என்னங்க கோவை நேரம் TAK " தட்டிக்கேட்போர் சங்கமா ? விளங்கல..

    ReplyDelete
  4. பிச்சிடலாம் பிச்சு..

    ReplyDelete
  5. நல்ல கருத்துக்களுக்கு நன்றி... தொடர வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  6. அக்கறையான பதிவு. நீங்க குறிப்பிடுவது போலவே நிச்சயம் இந்திய மொழிகளில் தமிழ் மட்டுமே இவ்வளவு வளமான, ஆக்கப்பூர்வமான பதிவுகளை கொண்டுவருகிறது. கூகிள் பஸ், அப்புறம் ப்ளஸ், முகநூல், கீச்சு போன்றவை இன்னும் சுவாரசியமாக இருக்கவே தற்சமயம் பதிவுகள் மீதான ஆர்வம் கொஞ்சம் குறைந்திருக்கிறது. இந்த திரட்டிகள், பின்னுட்ட அரசியல்கள் போன்றவை இல்லாதிருந்தால் இன்னும் சிறப்பாக இருக்கும்/

    ReplyDelete
  7. ஆக்கப்பூர்வமான சிந்தனைகளை ஏற்படுத்தும் பதிவு!

    ReplyDelete
  8. அய்யா கேப்போமுங்க...

    ReplyDelete
  9. ஆரோக்கியமான பதிவுலகம் வேண்டும்...



    நல்லதொரு அழைப்பு...

    ReplyDelete
  10. ///////
    நம்மால் பகிரங்கமாக எழுதுவதற்கு காரணம் நாம் மக்களோடு மக்களாக இருக்கிறோம். சமூக அவலங்களை அங்கு தட்டி கேட்கும் தைரியம் தவறு நடக்கும் இடத்தில் இல்லை என்றாலும் நம் எழுத்தில் தட்டி கேட்கும் தைரியம் இந்த பதிவிலகில் உள்ள எல்லோருக்கும் இருக்கிறது. ஒரு அரசாங்க அதிகாரியை திட்டி பதிவுலகில் எழுதினால் அவரின் காதுகளுக்கு போகது என்று நினைக்க வேண்டாம் இன்று நிச்சயம் போகும் அளவிற்கு வளர்ந்துள்ளது நமது வளர்ச்சி.

    /////////////


    100 சதவீதம் உண்மை...

    ReplyDelete
  11. s..
    நிறைய ஆக்கப்பூர்வமாக எழுதுவோம்...

    ReplyDelete
  12. // எங்கு சென்றாலும் அங்கு நடக்கும் தவறுகளை மறக்காமல் எழுதுங்கள் அப்போது தான் அனைவரும் அறிய இயலும். சமூக அவலங்களை படித்த நாம் தான் தட்டி கேக்கவேண்டும் வாங்க நம் எழுத்தின் மூலம் தட்டிக் கேட்போம்..//

    இப்படி உசுப்பேத்தி உசுப்பேத்தியே ரணகளமாக்கிர்ராய்ங்கப்பா!

    ReplyDelete
  13. ///விக்கியுலகம் said...

    அய்யா கேப்போமுங்க.../////

    ஆமா.... கேப்போமுங்க.......

    ReplyDelete
  14. அப்புறம் நம்ப பிளாக்கு பிரீயாத் தேன் இருக்குய்யா...

    யாராச்சும் வாடகைக்கு வாங்கிக்குற மேரி இருந்தா, சொல்லி அனுப்பவும்...

    ReplyDelete
  15. //
    நிறைய ஆக்கப்பூர்வமாக எழுதுவோம்... சமூகத்திற்கு நம்மாள் ஆன உதவிகளை செய்வோம்.. பதிவர்களே மீண்டும் உயிர்த்தெழுந்து பதிவுகள் எழுதுங்கள்... நிச்சயம் மாற்றத்தை உருவாக்க முடியும்...
    //

    ஆம் நிச்சயம் நம்மால் மாற்றத்தை உருவாக்க முடியும் (TM 2)

    ReplyDelete
  16. #இன்று மீடியாக்கள் எழுத தயங்கும் தலைப்புக்களை நாம் பகீரங்கமாக எழுதுகிறோம் நம் எழுத்துக்களை படித்தபின் அந்த பிரச்சனைகளை பெரிதாக்குகிறார்கள் மீடியாக்கள் அந்த அளவிற்கு நாம் மாற்று ஊடகமாக செயல் படுகிறோம் என்பது யாரும் மறுக்க இயலாத உண்மை.#


    இதுவே பதிவர்களுக்கு கிடைத்த வெற்றி..

    ReplyDelete
  17. //இப்படி உசுப்பேத்தி உசுப்பேத்தியே ரணகளமாக்கிர்ராய்ங்கப்பா!//

    சித்தூராருக்கு ஒரு ரிப்பிட்டேய் :-))

    ----------

    சங்கவி,

    நல்ல பகிர்வு, அருமையான சிந்தனை, கேட்கத்தான் ஆள் இல்லை. ஊதுற சங்கை ஊதி வைப்போம்!

    ReplyDelete
  18. //என்னங்க கோவை நேரம் TAK " தட்டிக்கேட்போர் சங்கமா ? விளங்கல..//

    TAK= தலையில் அடித்து கேட்போர் சங்கம் "தலையில் அடித்தால் கிடைக்கும்" :-))

    ReplyDelete
  19. நம்மால் பகிரங்கமாக எழுதுவதற்கு காரணம் நாம் மக்களோடு மக்களாக இருக்கிறோம். சமூக அவலங்களை அங்கு தட்டி கேட்கும் தைரியம் தவறு நடக்கும் இடத்தில் இல்லை என்றாலும் நம் எழுத்தில் தட்டி கேட்கும் தைரியம் இந்த பதிவிலகில் உள்ள எல்லோருக்கும் இருக்கிறது

    இணையம் நமக்கு கொடுத்த வரம் இது

    நம்மால் முடியும்

    ReplyDelete
  20. மச்சி TAK ஆரம்பிச்சிட்டா போச்சு...

    ReplyDelete
  21. ...ஜானகிராமன் said...

    அக்கறையான பதிவு. நீங்க குறிப்பிடுவது போலவே நிச்சயம் இந்திய மொழிகளில் தமிழ் மட்டுமே இவ்வளவு வளமான, ஆக்கப்பூர்வமான பதிவுகளை கொண்டுவருகிறது. கூகிள் பஸ், அப்புறம் ப்ளஸ், முகநூல், கீச்சு போன்றவை இன்னும் சுவாரசியமாக இருக்கவே தற்சமயம் பதிவுகள் மீதான ஆர்வம் கொஞ்சம் குறைந்திருக்கிறது. இந்த திரட்டிகள், பின்னுட்ட அரசியல்கள் போன்றவை இல்லாதிருந்தால் இன்னும் சிறப்பாக இருக்கும்/ ...


    நிச்சயம்...

    ReplyDelete
  22. ..விக்கியுலகம் said...

    அய்யா கேப்போமுங்க.....

    மாமு வழிமொழிகிறேன்...

    ReplyDelete
  23. சௌந்தர்.,

    ஆரோக்கியமாகவும் வேண்டும், ஆக்கப்பூர்வமாகவும் வேண்டும்....

    ReplyDelete
  24. ...வவ்வால் said...

    //இப்படி உசுப்பேத்தி உசுப்பேத்தியே ரணகளமாக்கிர்ராய்ங்கப்பா!//

    சித்தூராருக்கு ஒரு ரிப்பிட்டேய் :-))

    ----------

    சங்கவி,

    நல்ல பகிர்வு, அருமையான சிந்தனை, கேட்கத்தான் ஆள் இல்லை. ஊதுற சங்கை ஊதி வைப்போம்!...

    நாம் ஊதியாச்சு.. இனி எல்லாரும் ஊதினால் சந்தோசந்தான்...

    ReplyDelete
  25. நல்லதொரு பகிர்வு.

    பதிவுலகம் ஆரம்பத்திலிருந்த வேகத்திலிருந்து சற்று சோர்வடைந்தது உண்மைதான். இதுபோன்ற பதிவர் சந்திப்புகளும், அங்கீகாரமும் தான் பதிவர்களை மீண்டும் மீண்டும் எழுதத்தூண்டுகிறது.
    சுயதம்பட்டங்களைத் தவிர்த்து, யதார்த்தங்களும் சமூக நிகழ்வுகளும் எழுத்துக்களில் கொண்டுவர வேண்டும்.
    பாராட்டுக்கள் மட்டுமின்றி பதிவு பற்றிய வாக்குவாதங்களும் சரமாரியான விமர்சனங்களும் வந்தாலே பதிவுலகிற்கு ஆரோக்யமான விஷயம் தான். நட்பு வட்டாரங்களில் மட்டுமே கும்மியடிக்காமல் பரவலான கண்ணோட்டத்தில் கருத்துக்களை வழங்கிட முன்வரவேண்டும்.

    பதிவுலகம் பழைய சுறுசுறுப்பை எட்டும் என்ற நம்பிக்கையுடன்..

    ReplyDelete
  26. வவ்வால் ///TAK= தலையில் அடித்து கேட்போர் சங்கம் "தலையில் அடித்தால் கிடைக்கும்" :-))///

    ஆமா..இது நல்லா இருக்கே...TAK ...

    ReplyDelete
  27. நல்லதொரு கருத்துக்கள்! பதிவுலகம் எழுச்சி பெற்றது வறவேற்கத்தக்கது! புது சாதனை படைப்போம்! நன்றி!

    இன்று என் தளத்தில்!
    கழுதை கௌரவம் கிடைக்கலேன்னா!
    http://thalirssb.blogspot.in/2012/08/blog-post_29.html
    ஹன்சிகா ரகசியங்கள்!
    http://thalirssb.blogspot.in/2012/08/blog-post_7318.html

    ReplyDelete
  28. நல்ல பதிவு.இது போன்ற ஆக்கபூர்வமான சிந்தனையில் தான் சங்கவியின் தழல் வீரம் தெரிகிறது.

    ReplyDelete
  29. நிச்சயம் மாற்றத்தை உருவாக்க முடியும்...சிற்ப்பான பகிர்வு.

    ReplyDelete


  30. தங்கள் கருத்தை நான் முழு மனதோடு வரவேற்கிறேன் நன்றி

    ReplyDelete
  31. நல்ல கருத்து. ஆதார பூர்வமாக எந்த விஷயமானாலும் எடுத்துச் சொல்லலாம். வாழ்த்துகள்.

    ReplyDelete
  32. பதிவுலகம் தனது புதிய பரிணாமத்தை அடைந்துகொண்டிருக்கிறது தோழரே...

    நல்ல பதிவு நன்றி..



    தொழிற்களம் உதவி ஆசிரியர் பணி

    ReplyDelete
  33. ஆக்கபூர்வமான கருத்துக்கள் கொண்ட பதிவுகள் அதிகம் வருவதற்குத் தங்கள் பதிவு ஊக்கம் தரட்டும். சிறப்பான பதிவு.

    ஸ்ரீ....

    ReplyDelete
  34. நல்லதொரு பதிவு ! முழுமையாக ஆமோதிக்கின்றேன் !

    ReplyDelete
  35. மிகச் சரியாகச் சொல்லியுள்ளீர்கள்!

    //புது பதிவர்களை ஊக்குவித்து அவர்களுக்கு ஒரு பின்னூட்டமிடுங்கள்//

    இதைக் கட்டாயம் ஒரு கடமையாகச் செய்து, புதியவர்களுக்கு ஆர்வத்தை ஏற்படுத்துங்கள்

    ReplyDelete
  36. நல்ல பகிர்வு... வாழ்த்துகள் சங்கவி.

    ReplyDelete
  37. சங்கவின்னு அனுஷ்கா ரேஞ்சுல எதிர்பார்த்த என்னைய கவுத்துப்புட்டியே ராசா? :))

    ReplyDelete
  38. அருமை சங்கவி.

    நீங்க போனில் ரெண்டு நாள் முன்பு இந்த கருத்தை சொல்லும்போதே இந்த விஷயம் உண்மை என உணர்ந்தேன் . சரியா எழுதிருக்கீங்க

    ReplyDelete
  39. ரொம்ப சரியான கருத்துக்கள்....

    ReplyDelete
  40. நினைத்ததைத் தயங்காமல் ஆக்கபூர்வமாக எழுதுவோர் அதிகமாக வேண்டும். சரியாகச் சொன்னீர்கள்.

    ReplyDelete
  41. இந்தப் பதிவர் சந்திப்பு மறைமுகமாக அறிவித்த ஒரு மாபெரும் உண்மை - மாற்றுக்கருத்துக்கள் இருப்பினும், அவற்றையும் கடந்து ஒரு ஒத்த கருத்தில் அனைவரும் ஒன்றிணைந்து செயலாற்ற முடியும்; வெற்றி பெறுவது சாத்தியம் - என்பதே! அந்த ஒற்றைப்புள்ளியிலிருந்து தொடங்கி, பதிவர்களால் நிச்சயம் தாம் சார்ந்திருக்கும் சமூகத்துக்குக் கடுகளவேனும் ஏதேனும் சேவை செய்ய முடியும்! செய்யணும்!

    நல்ல பகிர்வுக்கு நன்றி!

    ReplyDelete
  42. ஆண்கள் பெண்களை போல என்னை போன்ற திருநங்கைகள் எழுதுவதையும் அணைத்து பதிவுலக நல்ல உள்ளங்கள் வரவேற்க வேண்டும் என்பது என் கருத்து...தோழரே! நன்றி!

    ReplyDelete
  43. வலையுலகம் சோர்ந்தது மிகக்கவலையான விஷயம்.அருமையான பதிவு சங்கவி !

    ReplyDelete