Sunday, December 20, 2009

ஈரோட்டில் வலைப்பதிவர்களின் அட்டகாசமான ஆரம்பம்.......


நிகழ்ச்சி நடந்த இடம்

ஈரோட்டில் வலைப்பதிவர் சங்கமம் என சொன்னதுமே நானும் கலந்துக்குறதுன்னு முடிவு பண்ணிட்டேன். ஆனால் நமக்கு யாரையும் தெரியாது எனது சொந்த முயற்சியிலே நான் வலைப்பதிவை தொடங்கினேன். கதிர் சாரின் வாசகன் நான் ஆனால் அவரை தெரியாது, அவர் ஈரோடு நண்பர்கள் பலரது பெயரை கொடுத்து இருந்தார். அதில் இருக்கும் நண்பர்களில்
எனது வலைப்பதிவிற்கு அடிக்கடி வருபவர் நண்பர் பாலசி அவரைத் தொடர்பு கொண்டேன். அதற்கடுத்து வலைப்பதிவர்களிடம் என்னை அறிமுகப்படுத்தியவர் நண்பர் தண்டேரா அவரை தொடர்பு
கொண்டேன் நாங்களும் சென்னையில் இருந்து வருகிறோம் என்றார். நமக்கு தொலைபேசியிலேயே ஒரு வட்டம் கிடைத்துவிட்டது இனி தயக்கம் இன்றி செல்லாம் என முடிவு செய்து கதிர் சாரை தொடர்பு கொண்டு வருவதை உறுதி செய்தேன்.
                                                    இங்கதாங்க தங்கியிருந்தாங்க.........


ஞாயிறு காலை நண்பர் தண்டேராவை தொடர்பு கொண்டேன். அவர் நாங்கெல்லாம் ரூம் போட்டு குளிச்சுகிட்டு (தண்ணீல) இருக்கிறோம் நீங்களும் வாங்க என்றார். நானும் முகம் அறியா நண்பர்கள் அனைவரையும் கானும் ஆவலுடன் அந்தியூரில் இருந்து பஸ் ஏறினேன். வழியெங்கும் ஒரே யோசனை நாம இப்பதான் வலைப்பதிவே ஆரம்பித்து இருக்கிறோம் அங்க இருக்கும் நண்பர்கள் எல்லாம் வலைப்பதிவில் பழம் தின்று கொட்டை போட்டவர்கள் நாம எப்படி பேசுவோம் என்றென்னியவாறு அந்தியூரில் இருந்து பவானி செல்லும் வழியில் வழியெங்கும் பச்சை பசேல் என நெற்பயிர்களை ரசித்து
விட்டு யோசித்துக் கொண்டு சென்றேன். ஒரு 45 நிமிடத்திற்குப்பின் ஈரோட்டை அடைந்தேன்.

நண்பர்கள் தங்கியிருந்த ராஜேஸ்வரி விடுதியில் நம்மாளுங்க எங்க தங்கியிருப்பாங்கன்னு போன அங்க உள்ள போனதும் ஓரே கூச்சலா இருந்தது உடனே முடிவு செய்தேன் இதுதாண்டா நம்மாளுங்க ரூம்னு உள்ளே சென்றால் நண்பர் தண்டோரா வாங்கன்னு சொல்லி நண்பர்களை அறிமுகப்படுத்தினார். அப்ப ஒரு நண்பர் சிங்கிள் பீஸ் டிரஸ்ல நடந்துகிட்டே இருந்தார் (கொஞ்ச ஓவரா போய்ருச்சுன்னு நண்பர்கள் சொன்னாங்க) அவர் யாருன்னு பார்த்த பின்னாடி வால் இருந்துச்சு ஓ இவர் தான் அவரான்னு கேட்ட அமாங்க நான் தான்னு சொன்னார். புதுகை அப்துல்லா, அகநாழிகை வாசுதேவன், பட்டர்பிளை சூர்யா மற்றும் நண்பர்கள் இருந்தனர். பாத்ரூம்ல குளிக்கறங்கற பேர்ல ஓரே சத்தம் யாருன்னு கேட்டா யூத்ன்னு சொன்னாங்க... அப்புறம் 2 நிமிடத்தில் வெளியே வந்துட்டார் (குளிச்சிட்டராமா). உண்மையிலயே அவருடைய பேச்சாலும் எண்ணத்தாலும் யூத்தாத்தாங்க இருந்தார் நம்ம கேபிள் ஜீ...

வா...வா....வந்துட்டங்க............

நிகழ்ச்சி ஆரம்பித்து விட்டார்கள் எல்லாம் போகலாம்னு புறப்பட்டா வாலு சிங்கிள் பீஸ்ல இருந்து மாறவே இல்லை. ஒரு வழியா நிகழ்ச்சிக்கு வந்தோம் நண்பர் ஆரூரான் நிகழ்ச்சிகளை அழகாக நடத்திக்கொண்டு இருந்தார். நண்பார்கள் ஒவ்வொருவரும் அறிமுகம் செய்யப்பட்டார்கள். ஒவ்வொரு தலைப்பைக் கொடுத்து நண்பர்கள் பேசினார்கள் இதில் பழமைபேசி தனது கருத்துக்களை அழகாக சொன்னார், நண்பர் பட்டர்பிளை சூர்யா உலக சினிமாவைப்பற்றி பேசும்போது நான் 6 படங்களைப்பார்த்தால் அனைத்தைப்பற்றியும் எழுதுவதில்லை அதில் எது நல்ல படமோ அதைப்பற்றி மட்டுமே எழுதுகிறேன் தேவையில்லாததை எழுதி எனக்கும் டைம் வேஸ்ட் அதை படிக்கும் உங்களுக்கும் டைம் வேஸ்ட் செய்ய விரும்பவில்லை என்று அழகாக கூறினார். அகநாழிகை வாசுதேவன் தனது கருத்துக்களை சுருங்கச் சொன்னாலும் நிறைவான கருத்தை கூறினார்.

 
ஆமர்களம் ஆரம்பிச்சர்சசு............



வெட்டிப்பேச்சு ஆரம்பிச்சாச்சு............


அப்துல்லா  ரொம்ப யோசிக்கிறாரு.........

 

ஆள விட்டாப்போதும்ன்னு நினைக்கிறாரோ.............



இதுக்குப்பேர் தான் போஸ் கொடுக்கறது..............

கதிர் அவர்கள் கலந்தாய்வுக்கூட்டத்தை நடத்தினார். அக்கூட்ட்திற்குப்பின் விழா நிறைவுபெற்று அனைவருக்கும் உணவுகள் பறிமாறப்பட்டது. பல நண்பர்கள் சாப்பிட்டு விட்டு (சரக்குதான்) அப்புறம் சாப்பிடவந்தனர்.
உணவுகள் கொங்கு மண்ணிற்கே உண்டான சுவையில் நன்றாக இருந்ததது நான் என்ன சாப்பிட்டேன்னா இட்லி, புரோட்டா, காளிபிளவர் சில்லி, பிரைடுரைஸ், பள்ளிபாளையம் சிக்கன்,
தயிர்சாதம், முட்டைதோசை, ஆம்லெட் என போட்டுத் தாக்கிட்டு இருந்தேன் அப்போது தான் நண்பர்கள் மதுரை ஸ்ரீ, சீனா, திருப்பூர் வெயிலான், சுமஜ்லா, ரம்யா, நாகா, பழமைபேசி, விட்டலன் மற்றும் பல நண்பர்களிடம்
கலந்துபேசிக்கொண்டு இருந்தேன் (நிறையபேரை விட்டுவிட்டேன் கோவிச்சுக்காதீங்க). பல நண்பர்கள் சாப்பிட்டுக்கொண்டு இருந்தர்கள் (சரக்குதான்) அங்க சென்று நண்பர்களிடம் விடை பெற்றுக்
கொண்டு இருந்தேன் அப்ப நம்ம யூத்து புல்லா வந்து ஒரு சின்ன ஆட்டம் போட்டார், நம்ம வால் முத்தம் கொடுத்து வழியனுப்பினார் எல்லோரிடமும் விடை பெற்று நண்பர் பாலாசி பஸ்நிலையத்தில் இறக்கி விட்டார் அங்க நம்ம மதுரை நண்பர்கள் அவர்களிடம் பேசிகிட்டே ஈரோடு பேருந்து நிலையம் சென்று பிரியமனமில்லாமல் பிரிந்து எங்க ஊர் பஸ் ஏறினேன். நமக்கு முகமறியா நண்பர்கள் இவ்வளவு பேரா அனைவரும் என்ன உதவி என்றாலும் கேளுங்க என்னால் முடிந்த அளவு உதவுகிறேன் என்று சொன்னவிதம், ஏதோ குழந்தையில் இருந்து பழகியவாறு அனைவரையும் கதிர் சார் வரவேற்ற விதம்,
நண்பர் தண்டோரா மற்றும் புதுகை அப்துல்லாவின் அழகான அன்பு வார்த்தைகள், வால்பையன் அடித்த லூட்டிகள் அனைத்தும் மறக்கமுடியாமல் இரவு முழுவதும் அந்த நினைவலையிலேயே உறங்கினேன் கலை முதல் இக்கட்டுரையை பதிவேதே எனது முதல் வேளையானது....
நிறைய பேரை விட்டுவிட்டேன் கோவித்துக்கொள்ளாதீர்கள், நிறைய விஷயங்களையும் விட்டுவிட்டேன் அதை எல்லாம் மற்ற பதிவார்கள் போட்டு விடுவார்கள் படித்துக்குங்க.. இக்கட்டுரை ரொம்ப போர் அடிச்சுருந்தா கோவிச்சுக்காம படிச்சதற்கு ரொம்ப நன்றி......
இச்சந்திப்பை இவ்வளவு அழகாகவும், நேர்த்தியாகவும் நடத்திய ஈரோடு பதிவர் நண்பர்கள் அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றிகளையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்கிறேன்.


நண்பர்கள் போட்டாவில் சின்ன சின்ன கமெண்ட்ஸ் போட்டு இருக்கிறேன்.. ஏதாவது தவறாக இருந்தால் கோவிச்சுக்காதீங்க நண்பர்களே...........

18 comments:

  1. "நாங்கெல்லாம் ரூம் போட்டு குளிச்சுகிட்டு (தண்ணீல) இருக்கிறோம் "
    காலையிலேவா..? நல்லா ‘கல்க்கிட்டீங்க’ போங்க...

    ReplyDelete
  2. ஆஹா.... நல்ல பகிர்வு


    நன்றி

    ReplyDelete
  3. ஈரோடு வலைப்பதிவர் சங்கமத்தில் கலந்து கொண்டதற்கும், இதை உங்கள் தளத்தில் இடுகையாக்கியதற்கும் நன்றி....

    விழா பரபரப்பில் உங்களோடு உரையாடும் வாய்ப்பினை இழந்து விட்டேன். விரைவில் சந்திப்போம்.

    அன்புடன்
    ஆரூரன்

    ReplyDelete
  4. உங்களைச் சந்தித்தது குறித்து மகிழ்ச்சி சங்கமேஸ்.

    ReplyDelete
  5. மிக்க மகிழ்ச்சி தங்களை சந்தித்ததிலும்...

    இடுகைக்கும் நன்றிகள்...

    ReplyDelete
  6. மிக்க மகிழ்ச்சி நண்பரே.

    ஈரோடு ”பட்டை” ய கிளப்பிடுச்சு..

    அனைவருக்கும் நன்றியும் வாழ்த்தும்.

    ReplyDelete
  7. அருமையான நிகழ்வு. உங்களை சந்தித்ததில் எங்களுக்கும் மகிழ்ச்சி. சென்னை பதிவர்கள் சார்பாக நன்றியும், வாழ்த்துக்களும்..

    ReplyDelete
  8. இந்த நண்பர்கள் கிடைப்பதற்கு அரியவர்கள்.
    பகிர்வுக்கு மிக்க நன்றி.

    ReplyDelete
  9. இனிய சந்திப்பு..

    ReplyDelete
  10. //நண்பர்கள் போட்டாவில் சின்ன சின்ன கமெண்ட்ஸ் போட்டு இருக்கிறேன்.. ஏதாவது தவறாக இருந்தால் கோவிச்சுக்காதீங்க நண்பர்களே........... //

    அதெல்லாம் முடியாது.நாங்க கோபப்படுவோம்.

    ReplyDelete
  11. ஆஹா சங்கவி. கலக்கல்=))

    ReplyDelete
  12. சங்கவி அண்ணா,

    உங்களைப் பார்த்ததில் ரொம்ப மகிழ்ச்சி. அடுத்த முறை வரும்போது மறக்காமல் தோட்டத்திற்குக் கூட்டிட்டுப்போங்க.

    ReplyDelete
  13. இவ்வளவு முயற்சி எடுத்து நடத்தியவர்களுக்கு பாராட்டுக்கள்.

    ReplyDelete
  14. பதிவுகளை படிக்கும் போது நிகழ்ச்சியில் கலந்து கொண்டது போன்ற சந்தோஷம்....

    ReplyDelete
  15. புது பேண்ட் சர்ட் வாங்கி சொல்லியிருந்தேன் தல!

    அதுகுள்ள போட்டோவெல்லாம் எடுத்துடிங்களா, அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்!

    ஏற்கனவே ஆன டேமேஜ் பத்தாதா!?

    ReplyDelete
  16. ஆஹா அருமையா விளக்கமான பதிவு போங்க! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  17. அன்பின் சங்கவி

    அழகான படங்கள் - அருமையான இடுகை

    நானும் பேசினதா நினைவு - பதிவுல காணோமே - மறந்து போச்சா - பரவா இல்ல

    நல்வாழ்த்துகள் சங்கவி

    ReplyDelete
  18. நல்லா எழுதிருக்கீங்க. பதிவு முடிந்து இரவு முழுதும் அதன் தாக்கம் இருந்ததை சொன்னது நல்லா இருந்தது.

    என்னால் தான் வர முடியலை. வந்திருந்தால் பல நண்பர்களை சந்தித்திருக்கலாம்

    ReplyDelete