தந்தை தினம் வருகிறது பல பேர்களுக்கு அது வந்து போவதே தெரிவதில்லை. தாய் தினம் வருகிறது அதை நாம் யாரும் அந்த அளவிற்கு கொண்டாடுவதில்லை இன்னும் நம் நாட்டின் சுதந்திரத்திற்காக உயிரை அர்ப்பித்த பல தியாகிகளின் பிறந்த நாட்கள் நமக்கு நினைவுக்கு வருவதில்லை. ஆனால் இந்தக் காதலர் தினம் மட்டும் ஒரு பத்து நாட்கள் முன்பாகவே சூடு பிடிக்கத் தொடங்கி அனைவரையும் எதிர்பார்ப்புக்கு உள்ளாக்கி உள்ளது அதற்கு மிக முக்கிய காரணம் மீடியாக்கள் கொடுக்கும் முக்கியத்துவம். இந்த வருடம் வாரப்பத்திரிக்கைகளில் எல்லாம் நல்ல முக்கியத்துவம் கொடுத்து நிறைய கவிதைகளை வெளியிட்டு காதலர் தினத்தை இளம் தலைமுறையினரிடையே சூடக்கி உள்ளது.
முகநூலில் எங்கு பார்த்தாலும் இப்போதே காதலர் தினத்தை கொண்டாட ஆரம்பித்துவிட்டனர். சமூகவலைத்தளங்கள் எல்லாம் கொண்டாடிக்கொண்டு இருக்கின்றன காதல்ர் தினத்தை அதுமட்டுமில்லாமல் இன்று பள்ளி, கல்லூரி, வேலை பார்க்கும் இடங்கள், பேருந்து பயணம் என எங்கு பார்த்தாலும் ஒரே பேச்சு காதலர் தினம் தான்.
கடைவீதிகளில் பரிசுகள் இந்த வருட புதுமை என அறிமுகப்படுத்தி அங்கும் கல்லாகட்டுன்றனர் காதலர் தினத்தால். காதலர் தினம் மிடியாக்கலின் பெரும் வரவேற்பால் குழந்தைகள் கூட இன்று காதலர் தினம் என்று சொல்லும் அளவிற்கு ஆகிவிட்டது.
ஒருவருக்கு அன்புடன் பரிசு கொடுப்பதில் தவறொன்றுமில்லை. பரிசு கொடுக்க கொடுக்கத்தான் எதிர்பார்ப்புகள் அதிகமாகி அன்பு அதிகமாகும். பரிசுகளை காதலர்கள் மட்டுமே கொடுக்க வேண்டும் என்று அவசியம் இல்லை நாம் அன்பு வைத்திருக்கும் எவருக்கும் கொடுக்கலாம். நம் ஊர்க்கலாச்சாரம் காதல்ர் தினத்தை ஒரு மாதிரியாகத்தான் பார்க்கிறது. காதலர் தினம் காதலி இருந்தால் தான் கொண்டாடவேண்டும் என்று அவசியம் இல்லை நட்புக்களுடனும், பெற்றோருடனும் கொண்டாடுவதில் தவறென்ன இருக்கிறது..
ஊரில் யார் யார் காதலிக்கிறார்கள் என்று இந்த தினத்தில் அவர்கள் உடுத்தும் உடையை வைத்தே சில வருடங்களுக்கு முன்னால் சோதிடம் சொல்லியது எல்லாம் தற்போது நினைவில்.. ஒரு 15 வருடங்களாகத்தான் நம்ம ஊரில் இந்த தினம் பேசப்படுகிறது எனக்கு முதன் முதலாக காதலர் தினம் அறிமுகமான புதிதில் இன்று பச்சை கலர் துணி அணிய வேண்டுமாம் அப்போது தான் நமக்கு காதலி இல்லை என்று எல்லாருக்கும் தெரியுமாம் நம்மை காதலிக்க வாய்ப்பிருக்கிறது என்று நண்பர்கள் போற போக்கில் பிட்டைப்போட பள்ளியில் கலர் துணி போட முடியாதே அதனால் பச்சை கலந்த சட்டையை வீட்டில் இருந்து பள்ளி பையில் ஒளித்து வைத்து பஸ்ஸ்டேண்டு கடையில் மாற்றிக்கொண்டு பஸ் பயணத்தின் போதும் பள்ளிக்உள் செல்லும் வரை பச்சை சட்டையும் அப்புறம் சீருடைக்கு மாறி மீண்டும் மாலை பச்சை சட்டை போட்டும் பயன் இல்லை அப்போது 7வது படிக்கிறேன் என்று நினைக்கிறேன்...
பச்சை சட்டை போட்டு டியூசன் வரை சென்று அன்று முழுவதும் பச்சை சட்டையை நேரம் கிடைக்கும் போதெல்லாம் போட்டு இருந்தேன் கை மேல் பலன் கிடைப்பது போல் நினைப்பு என்னை சுத்தி சுத்தி வந்தது ஆனால் ஒருத்தரும் திரும்பி கூட பார்க்கவில்லை என்றாலும் வருடா வருடம் அந்த வருடம் எந்த கலர் என்று கேட்டுத் தெரிந்து அந்த கலர் சட்டை போட்டும் பயன் இல்லை பச்சி ஒன்னும் சிக்கலை நமக்கு கொடுத்து வைத்தது அவ்வளவு தான் என்று அடுத்தவனை வேடிக்கை பார்க்கும் கூட்டத்தில் நானும் ஒருவன் ஆனேன்...
இதனாலயே காதலர் தினத்தின் மேல் கோபமாக வரும்.. இருந்தும் அந்த நாள் சந்தோசமாக போதும் என்பதால் இன்று வரை அதை வரவேற்க கடமைப்பட்டு இருக்கேன்.. காதலர்களுக்கு காதலர் தின வாழ்த்துக்கள்...

