Friday, September 5, 2014

ரயில் பயணங்களில் தமிழன் மட்டும் தான் இளிச்சவான் போல...

ரயில்களில் நமக்கான உரிமை தமிழக எல்லையை தாண்டியதும் மறுக்கப்படுகிறது என்பது மறுக்க இயலா உண்மை. சேலத்தை கோட்டாமாக மாற்றுவதற்கு சில ஆண்டுகளுக்கு முன் நாம் பட்ட பாடு நன்றாக தெரியும். ரயில் பயணங்களில் நியாமாக நடந்து கொள்பவர்கள் இந்தியாவில் நம் தமிழர்கள் தான் என சத்தியம் செய்து சொல்லாம். ஆனால் நிறைய உரிமைகள் நமக்கு மறுக்கப்படுகின்றன என்பது தான் நிதர்சனம்.

தினமும் சென்னையில் இருந்து கேரளாவிற்கு நிறைய சூப்பர் பாஸ்ட் ரயில்கள் இயக்கப்படுகின்றன ஆனால் அதில் பாதி ரயில்கள் கோவைக்குள் வராது. கோவைக்கு வெளியே உள்ள போத்தனூர் வழியாக சென்று விடுகின்றன. அதே போல் இந்த சூப்பர் பாஸ்ட் ரயில்கள் தமிழகத்தில் சில இடங்களில் மட்டுமே நிற்கும். ஆனால் கேரளாவில் எல்லா இடங்களிலும் நின்று செல்லும் நம்ம ஊர் டவுன் பஸ் போல.

சூப்பர் பாஸ்ட் ரயில்களில் நம்ம ஊரிற்கு ஒதுக்கப்படும் டிக்கெட்டுகள் மிக குறைவாகவே இருக்கும், ஆனால் பக்கத்தில் உள்ள பாலக்காட்டுக்கு இன்னும் கூடுதல் டிக்கெட்டுகளை ஒதுக்குவார்கள், இதனால் கோவையில் பலர் பாலக்காட்டில் இருந்து டிக்கெட் புக் செய்து விட்டு கோவையில் இருந்து ஏறிச்செல்கின்றனர் பலர்.

இது நமக்கும், நமக்கு மிக பக்கமாக உள்ள கேரளாவிற்கும் உள்ள வேறு பாடு தான், இன்னும் வட மாநிலங்களை கணக்கில் எடுத்துக்கொண்டால் நம்மை இளிச்சவாயர்கள் என்று தான் சொல்வார்கள். பார்க்கப்போனால் நம்ம ஊரில் வித் அவுட்டில் அதுதாங்க டிக்கெட் இல்லாமல் செல்லும் நபர்களின் எண்ணிக்கை மிக குறைவு.

சில வருடங்களுக்கு முன்பு பீகாரில் இருந்து இராமேஸ்வரம் சுற்றுலா வந்த பலர் வித் அவுட்டில் வந்தனர். திரும் செல்லுகையில் பிரச்சனை ஆகி கடைசியில் என்ன ஆனது, அவர்கள் டிக்கெட் எடுக்காமலே சென்றனர் என்பது தான் ஹைலைட். நம்ம தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள் வடநாட்டில் இந்த மாதிரி பிரச்சனை செய்ய இயலுமா, அல்லது அந்த அளவிற்கு செல்ல நம் ஆட்கள் தான் இடம் கொடுத்துவிடுவார்களா??.

இன்னும் வடமாநிலங்களில் பயணித்தவர்களின் இரயில் பயண அனுபவங்களை கேட்டால் தலைசுத்துகிறது. என் நண்பரின் அந்த இம்சையான அனுபவம் பற்றி கூறியதாவது. எதிர்  சீட்டில் உட்கார்ந்திருப்பவர் மேலே கூட கால் போட்டுவிட்டு  கவலைப்படாமல் இருக்கும் பிரயாணிகளை நிறையவே பார்த்திருக்கிறேன். இது சம்பந்தமாக  பயணிகளுக்கு இடையில்  வாக்குவாதமோ சண்டையோ வந்தால் பக்கத்தில் இருக்கும் ரயில்வே ஊழியர்கள் கூட நமக்கேன் வம்பு என்று ஒதுங்கிவிடுவார்கள். தொடரும் சண்டை சில சமயம் ஊர் போய்ச் சேரும் வரை கூட நீடிப்பதுண்டு. வடநாட்டு பகுதிகளில் ரயில் சண்டை இன்னும் உக்கிரமாக இருக்கும். அசந்தால் சாமான்களைக் கூட  ஆட்கள் மேல் அடுக்கிவிடும் வேடிக்கை நடப்பதுண்டு.

     இரண்டாம் வகுப்பு பயணத்தைப் பொறுத்தவரை வடநாட்டு பகுதிகளில்  ரிசர்வேஷன் பெட்டிகளுக்கும் ரிசர்வேஷன் இல்லாத பொதுப் பெட்டிகளுக்கும் (ஜெனரல் கம்பார்ட்மென்ட்) இடையில் அதிக வித்தியாசம் இருக்காது. ரிசர்வ் செய்தவர்களும் ரயிலில் உட்கார்ந்து கொண்டு பயணம் செய்யலாம். அவ்வளவுதான். முதல் வகுப்பு பயணம் இன்னும் அந்த அளவுக்கு மோசமாகி விடவில்லை.

        ரயில்வேயில் பணி செய்தவனாகையால் நிறைய ரயில்பயணம் செய்யும் அனுபவமும் அந்த பயணங்களில் வகை வகையான மனிதர்களைப் பார்த்து வேதனைப் பட்ட அனுபவமும் எனக்கு உண்டு. இன்னும் சொன்னால் சொல்லிக்கொண்டே போகலாம் என முடித்தார்.


நேற்று என் அலுவலக நண்பரிடம் இதைப்பற்றி பேசும் போது அவர் கண்ணீர் விடாத குறையாக கூறினார்.  குர்லாவில் இருந்து கோவை வரும் லோக்மான்யா திலக் எக்ஸ்பிரசில் சில நாட்களுக்கு முன் பயணித்துள்ளார். அப்போது இரயிலில் நடைபெற்ற சம்பவங்களால் வடமாநிலங்களுக்கு இரயிலில் செல்வதை இனி யோசிக்கவேண்டி இருக்கு இல்லை எனில் ஏசி கோச்சில் தான் செல்லவேண்டும் என முடிவு செய்து அப்பாவிடமும் சொல்லிட்டேன் என்றார். அப்படி என்ன நடந்தது என்று கேக்கும் போது அவர் கூறியதாவது...

இந்த முறை அவசரமாக குடும்பம் முழுதும் சென்றால் ஏசி கோச்சில் டிக்கெட் கிடைக்காமல், பர்த்தில் டிக்கெட் கிடைத்தால் புக் செய்து ரிட்டன் வந்துள்ளனர். ரயில் ஏறியதில் இருந்து டிடிஆர் என்னும் நபர் வரவே இல்லையாம்.


3 பேர் அமரும் இடத்தில் ஆறு பேர் அமர்ந்துள்ளனர். எட்டு பேர் படுக்கும் அளவில் உள்ள அந்த இடத்தில் 30 பேர் இருந்துள்ளனர். பாத்ரூம் செல்ல வேண்டும் என்று சென்றால் கழிவறையில் 3 பேர் நின்று கொண்டு பயணிக்கின்றனராம். நண்பருக்கு இந்தி தெரியும் ஆனால் பேசியும் பயணில்லை. எதவாது சொன்னால் அனைவரும் மிரட்டும் தோணியில் பேசுகின்றனராம்.

குழந்தைக்கு பால் கலக்குவதற்குள் பாடாத பாடு பட்டுள்ளனர். அருகே உள்ள ஏசி கோச்சில் உள்ள டிடிஆரைப்பாத்து சொன்னால் பதிலே சொல்லாமல் கதவை சாத்துவதிலேயே குறியாக இருந்திருக்கிறார். அங்கு இருந்த பணியாளரிடம் பேசி இருக்கிறார், அவர் தலைவிதி சாரே நாம ஒன்னும் பண்ண இயலாது இவர்களை எல்லாம். பேசாம காசு போன போகுதுன்னு ஏசில போன தப்பிச்சிகிட்டோம் என்றாராம்.

இவருடன் பயணித்த இன்னொரு தமிழ் குடும்பம் அபாயச் சங்கிலியை இழுத்துள்ளனர். ஆனால் ரயில் நின்றும் நிக்காமலும் வேகம் எடுத்துள்ளது. யாரும் இதைப்பற்றி கேக்கவும் இல்லை, பார்க்கவும் இல்லை. பகலில் தான் இந்த பிரச்சனை என்றால் இரவில் அதற்கு மேலாம், அங்கேயே படுத்து உறங்கி உள்ளனர். பெண்கள் கழிப்பறைக்கு செல்வதற்கு படும் பாடு பட்டு உள்னர். அன்று இரவு முழுவதும் இவர்கள் தூங்கவே இல்லையாம். பெட்டி படுக்கையையும், இவர்களையும் பார்த்துக்கொண்டே இருந்துள்ளனர்.

ஆனால் டிக்கெட் எடுக்காமல் வித்அவுட்டில் வந்த அவர்கள் பேப்பரை விரித்து நன்கு குறட்டை இட்டு நடக்கமுடியாத அளவில் படுத்து தூங்கி உள்ளனர். பெங்களூருக்கு முன் தான் டிடிஆர் வந்துள்ளார் அவரிடம் முறையாடியதற்கு நான் என்ன செய்ய இதெல்லாம் இங்க சகஜமுங்க, எங்க புகார் செய்தாலும் இதைத்தான் செய்வாங்க, டிக்கெட் எடுக்காமல் வித்தவுட்டில் தான் வருகின்றனர், நாம் தான் விலகிப்போய்க்கனும் என அட்வைஸ் மழை பொழிந்தாராம்.

இதே தமிழ்நாட்டில் ஒருவர் டிக்கெட் இல்லாமல் வந்தால் இந்த டிடிஆர்கள் படுத்தும் பாடு இருக்கே, சொன்னால் கதை கதையாக சொல்லலாம்.

ஆக இந்த ரயில்வேக்கு தமிழன் மட்டும் தான் இழிச்சவாயன் போல...

7 comments:

  1. கேள்விப்பட்டிருக்கிறேன். இளிச்சவாய் என்று நினையாமல் நாம் நேர்மையாக இருப்பதை நினைத்து பெருமைப் படுவோம்.

    ReplyDelete
  2. tamilnaadu ரயில்வே திட்டங்களிலும் தொடர்ந்து புறக்கணிக்கப் பட்டே வருகிறது ,உதாரணம் .மதுரை போடி ரயில் நிறுத்தப் பட்டு ,தண்டவாளம் கூட பெயர்த்தெடுக்கப்பட்டு பல் வருடங்கள் ஆகியும் எந்த முன்னேற்றமும் இல்லை !
    த ம 4

    ReplyDelete
  3. மும்பையில் நைட் ரிசர்வ் கோச்சில் ட்ரையின் ஏறினால் காலை 10 டி.டி.ஆர் வந்தார். காலை 6 முதல் 9 வரை ஒரு ரிசர்வேஷன் கோச்சில் ஏறிய 100க்கும் மேற்பட்ட்டோரை கேக்க ஒரு ஆள் இல்லை. நிதானமாக அதன் பிறகு வந்த டிடி சென்னை வரை ரிசர்வ் செய்து வந்திருந்த தமிழர்களிடம் டிக்கெட் புக் செய்த போது கொடுத்திருந்த அதே ஐடி ஒரிஜினல் இல்லை என்று கோச்சிற்கு 5 பேரிடம் செமையா ஃபைன் போட்டு கொண்டிருந்தார். யாரும் ஒரு வார்த்தை கேக்கலை.நான் இது வரை ஏறி இறங்கிய பயணிகளை செக் செய்யாமல் தமிழர்களிடம் மட்டும் இப்படி வசூலிக்கிறீங்கன்னு கேட்கவும் அந்த கோச்சில் ஃபைன் கட்டிய அனைவரும் கத்தினார்கள். சென்னையில் இறங்கியதும் அங்கே போய் கம்ப்ளெய்ண்ட் செய்துகோங்கன்னு சொல்லிட்டு அடுத்த கோச்சில் வசூலிக்க போய் விட்டார் அந்த தமிழ் டிடிஆர். வடக்கே செகண்ட் க்ளாசில் இப்படி ஏறி ஏறி இறங்குவார்கள். ஏசியில் வர மாட்டார்கள்.

    ReplyDelete
  4. We should be happy to see that we still have some discipline left in us. The atrocities you have mentioned are very common, once you leave the border of our state.

    ReplyDelete
  5. ரயில் பயணங்களில் அதுவும் குறிப்பாக வட இந்தியாவில் ரயிலில் பயணம் செய்யும் போது கிடைக்கும் அனுபவங்கள் மிக மோசமானவை - குறிப்பாக இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி கொண்ட பெட்டிகளில். உங்கள் படுக்கையில் மூன்று நான்கு பேர் அமர்ந்து இருப்பார்கள்.... :(

    ReplyDelete
  6. வட இந்தியாவில் மட்டும் அல்ல .சமீபத்தில் ராமேஸ்வரம் குடும்பத்தோடு சென்று வந்தோம் .அங்கு இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி உள்ள பெட்டியில் நிறைய பேர் இருந்தார்கள் .அதில் டிக்கெட் இல்லாதவர்கள் ஒவ்வொரு இருக்கையாக இது எங்கள் இருக்கை என்று தகராறு செய்தார்கள் .மீறி பேசினால் இந்தியில் பேசுகிறார்கள் .டி டி ஆரிடம் சொன்னால் அப்படி தான் என்று சொல்கிறார் .பணம் செலுத்தி செல்பவன் பயித்தியக்காரன் .

    ReplyDelete