Wednesday, January 22, 2014

அஞ்சறைப்பெட்டி 23/01/2014


  


உள்ளுரில் இருந்து உலகம் வரை........

வணக்கம் வலை நண்பர்களே...

2014ம் ஆண்டின் முதல் அஞ்சறைப்பெட்டி உங்களை அன்போடு வரவேற்கின்றது. 2014ம் ஆண்டிற்கான திட்டங்கள் அனைத்தையும் வகுத்து செயல்பட்டுக்குகொண்டு இருப்பீர்கள் அனைவருக்கும் சிறப்பாக இருக்க என் வாழ்த்துக்கள்...

நிறைய எழுதவேண்டும் என்ற எண்ணம் மனதில் இருந்தாலும் அதற்கான காலத்தை சரியாக பின்பற்றாததே எழுத இயலாமல் போகிறது என்பதை அறியமுடிகிறது.. பார்ப்போம் இந்த வருடமாவது காலத்தை சரியாக ஒதுக்குகிறோமா என்று.

.......................................

ஆம் ஆத்மியின் போராட்டங்கள் மக்கள் மனதில் நிறைவாக போய்ச்சேருகின்றது. போலீசார் அமைச்சர்கள் பேச்சை கேட்பதில்லை என்று தர்ணாவில் ஈடுபட்டு கடைசியாக அவர்களை கட்டாய விடுப்பில் அனுப்பிவிட்டு  முதல்வர் அன்றாட பணிகளை தொடர்கிறார். கட்டாய விடுப்பில் சென்றால் போதுமா? அந்த பிரச்சனைக்கு என்னதான் தீர்வு என்று பத்திரிக்கைகளில் செய்தியை தேடினால் கெஜ்ரிவால் புகழ்தான் இருக்கிறது தீர்வைக்காணம். ஆக மொத்தம் தர்ணா போராட்டத்தின் மூலம் பிரதமர் ரேசில் கெஜ்ரிவால் இருப்பது அவர் பெருமைப்பட வேண்டிய விசயமே...

.......................................

சமூக வலைத்தளங்களில் கேப்டனை புகழ்பாடமல் கழுவி ஊற்றியவர்கள் தான் அதிகம் எல்லோர் வாயையும் அடைக்கும் படி உள்ளது இன்று திமுக, காங்கிரஸ், பாஜக என எல்லா கட்சிகளும் எங்க கூட்டணிக்கு வாங்க வாங்க என்று கேப்டனை மலேசியா வரை போய் ஆதரவு கேட்பது. கேப்டன் தெளிவாக முடிவெடுக்கவேண்டிய கட்டாயத்தில் உள்ளார் அவர் ஜெயிக்கும் குதிரையை சரியாக தேர்ந்தெடுத்து அதன் மீது பயனித்தாள் அவர் கட்சியின் எதிர்காலம் டெல்லியிலும் ஓர் நிலையான இடம் கிடைக்கும். அதிக பாராளுமன்ற இடங்கள் கொடுக்கிறார்கள் என்று சீட்டுக்கு ஆசைப்பட்டு கூட்டணி அமைத்தால் நிச்சயம் முடிவு அவர் எதிர்பார்க்கும் அளவிற்கு இருக்காது.

.......................................

தமிழகத்தை பொறுத்தவரை கூட்டணிக்கு எல்லா கட்சிகளும் கூடி கூடி விவாதிக்கின்றன. அதிமுக தனித்து போட்டி என்று சொல்லிக்கொள்கின்றனர் நிச்சயம் தனித்து போட்டி இருக்காது என்பது என் கருத்து. கம்யூனிஸ்ட்டுகளுடன் கூட்டணி நிச்சயம் இருக்கும். மேல்சபை தேர்தலில் இதன் வெளிப்பாடு தெரியவரும் என்பதில் ஐயமில்லை.

.......................................  

சென்னையில் இப்போது தான் புத்தக திருவிழா ஓய்ந்திருக்கிறது சென்னை மக்கள் மட்டுமில்லாமல் அனைத்து பகுதியில் இருப்பவர்களும் சென்னை சென்றால் புத்தக திருவிழாவில் கால் பதிக்காமல் திரும்புவதில்லை முகநூலிலும், டிவிட்டடிரிலும் திறந்தாலே நான் வாங்கிய, வாங்க மறந்த புத்தகம் என்ற பட்டியல் நீண்டு கொண்டே இருக்கிறது. இதுவரை அதிகம் புத்தக கண்காட்சிக்கு எல்லாம் நான் சென்றது இல்லை அடுத்த முறை புத்தக கண்காட்சிக்கு செல்லவேண்டும் என்று இந்த முறையே தேதி குறித்து வைத்துக்கொண்டேன். ( இந்த முறை வருவதாகத்தான் இருந்தேன் பட்ஜெட் ரொம்ப உதைத்தால் கம்முன்னு இருந்து விட்டேன். எனக்கு வேண்டிய புத்தகத்தை மட்டும் மச்சி ஆரூர்மூனாவிடம் சொல்லி இருந்தேன் இன்று கையில் கிடைக்கும் என்று நினைக்கிறேன்... மச்சி அனுப்பீட்டீங்க தானே?? )

.......................................  


எனது வலைப்பூவில் புதிதாக சோத்துக்கடை எழுத ஆரம்பித்துள்ளேன் கொங்கு மண்டல பகுதியில் தரமான நிறைய உணவகங்கள் உள்ளன. 5 பேர் மட்டுமே உட்கார்ந்து வயிறார சாப்பிடும் உணவகங்களாக பதிய இருக்கிறேன். பெரிய கடைகளுக்கு சென்று ஒரு புரோட்டோவும், கறிக்கொழும்பும் 250 ரூபாய்க்கு தின்பதற்கு பதில் புரோட்டாவும், நாட்டுக்கோழி குழம்பும் 50 ரூபாய்க்கு கிடைக்கும் கடைகள் இங்கு நிறைய உள்ளன அந்த கடைகள் தான் நம் சோத்துக்கடை. 

சோத்துக்கடை இன்னும் எந்த மாதிரி இருக்கவேண்டும் என்று தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன...

என்றும் அன்புடன்
சதீஸ் சங்கவி...

14 comments:

  1. கேஜ்ரிவால் போராட்டம் ஏற்றுக் கொள்ளக் கூடியதாக இல்லை! :)))

    சோத்துக்கடையில் சைவ ஐட்டங்களும் குறிப்பிடவும்!

    ReplyDelete
    Replies
    1. சைவத்துக்கும் முக்கியத்துவம் உண்டு பாஸ்...

      Delete
  2. கேப்டனை கூட்டணிக்கு வாங்க வாங்க என்று அழைப்பவர்களை நினைத்தால் தான் ஹா... ஹா... நிலைமை அந்த மாதிரி...! கேப்டனுக்கு வாழ்த்துக்கள்...

    இந்த ஆண்டு அஞ்சறைப்பெட்டி 'நிறைய' வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும், கருத்துக்கும் நன்றி பாஸ்...

      Delete
  3. சோத்துக்கடை வாயில் நீர் ஊற வைக்கிறது, அடுத்தது எப்போ ?

    ReplyDelete
  4. எனது வலைப்பூவில் புதிதாக சோத்துக்கடை எழுத ஆரம்பித்துள்ளேன்
    >>
    நல்ல விஷயம். ஏதொ ஒரு ஹோட்டலுக்கு விளம்பரம் சேர்க்காம நம்ம தெரு, ஊர் ஹோட்டல்களை விளம்பரம் செய்வது நல்லது.

    ReplyDelete
    Replies
    1. நிச்சயம் உண்மைதானக்கா...

      Delete
  5. சுவையான தகவல்கள்! புதிய பகுதிக்கு வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  6. அடுத்த ஆண்டு புத்தகக் கண்காட்சிக்கு அவசியம் வரவும்.நிறைய சோத்துக்கடைக்கு போகவும் ஆசிர்வாதம்..

    ReplyDelete
  7. சங்கவி சதீஷ்,

    //அடுத்த முறை புத்தக கண்காட்சிக்கு செல்லவேண்டும் என்று இந்த முறையே தேதி குறித்து வைத்துக்கொண்டேன். ( இந்த முறை வருவதாகத்தான் இருந்தேன் பட்ஜெட் ரொம்ப உதைத்தால் கம்முன்னு இருந்து விட்டேன். எனக்கு வேண்டிய புத்தகத்தை மட்டும் மச்சி ஆரூர்மூனாவிடம் சொல்லி இருந்தேன் இன்று கையில் கிடைக்கும் என்று நினைக்கிறேன்... மச்சி அனுப்பீட்டீங்க தானே?? )//

    போன நவம்பர் முடிவில் கோவையில புத்தக்கண்காட்சி நடைப்பெற்றது,ஆனால் அதைப்பத்தி கோவைக்காரங்க யாரும் மூச்சே விடலை,ஒரு வேளை கோவைக்காரங்களுக்குலாம் புத்தகக்கண்காட்சிக்கு போறப்பழக்கம் இல்லைப்போலனு நெனைச்சுக்கிட்டேன்,ஆனால் சென்னை புத்தகக்கண்காட்சிக்கு பிளானிங்க் அவ்வ்!

    ReplyDelete
  8. வாங்க வவ்வால் அண்ணே...

    கோவை புத்தக கண்காட்சிக்கு சென்றேன் அங்கு கூட்டமே இல்லை ரொம்ப வெறிச் என்று எனது முகநூலில் பதிவு செய்திருக்கேனுங்கோ...

    அங்க மட்டுமல்ல ஈரோடு புத்தக கண்காட்சியை பற்றி பதிவே எழுதி இருக்கேன் அண்ணே...

    நீங்க என்னைப்போல சின்னப்பையன் ஏரியாவிற்கு எல்லாம் வருவது இல்லை போலும் அதனால தெரிய வாய்ப்பில்லை...

    நன்றி அண்ணே.. இன்றைய வருகைக்கும், கருத்துக்கும்...

    அவ்வப்போது வாங்க அண்ணே வந்து நாலு விமர்ச்சனம் சொன்னாத்தானே நான் எல்லாம் எழுதி பழக இயலும்...

    ReplyDelete
  9. அஞ்சறைப்பெட்டி - தகவல்கள் நன்று.

    ReplyDelete