Tuesday, September 3, 2013

பதிவர் சந்திப்பும் பாமரனின் பட்டைய கிளப்பும் பேச்சும்...



தமிழ் வலைப்பதிவர்களின் 2ம் ஆண்டு பதிவர் சந்திப்பு விழாக்குழுவில் என்னையும் நண்பர்கள் சேர்த்தது மிக்க மகிழ்ச்சியான ஒன்று. எனக்கு கொடுத்த வேலையை சரியாக செய்யவேண்டும் என்று திட்டமிட்டுக்கொண்டு என்னால் இயன்ற வரை செய்து கொடுத்ததில் மிக்க மகிழ்ச்சி.

பதிவர் சந்திப்போடு எனது கவிதை நூல் வெளியீட்டு விழாவும் வைத்துக்கொள்ளலாம் என்று முடிவு செய்ததால் எனது பொறுப்பு இன்னும் அதிகமாகியது. விழா ஏற்பாட்டுக்காக சென்னையில் வாரம் வாரம் நடக்கும் சந்திப்புக்கு மட்டும் தான் செல்லவில்லை மற்ற தகவல்கள் என்க்கான வேலைகளை என ஆருர்மூனாவிடம் தினமும் அப்டேட் செய்துகொள்வேன் விழா சிறக்க எனது பங்களிப்பும் இருந்தது என்பதில் மகிழ்ச்சி.

பதிவர் சந்திப்பு என்றாலே மிக முக்கியமானது பதிவர் அறிமுகம்தான் அது தான் முதல் நிகழ்ச்சியாக இருக்கவேண்டும் அப்போது தான் அனைவருக்கும் யார் வந்து இருக்கிறார்கள் என்பது தெரியும் என்பதால் திட்டமிட்டு அற்புதமாக நடந்தது இந்நிகழ்ச்சி. ஒவ்வொரு பதிவருக்கும் சிறப்பான வரவேற்பை கொடுத்தனர் நம் சக பதிவர்கள். ஒவ்வொரு பதிவர் பேசும் போதும் கைதட்டலும் விசிலும் அள்ளி சென்றனர்.

பதிவர் சந்திப்பு திருவிழா என்றதுமே யார் சிறப்பு பேச்சாளர் என்று தான் அடுத்த கேள்வி இருக்கும் அந்த அளவில் இந்த முறை பாமரன் என்று அறிவித்ததுமே மிக்க மகிழ்ச்சி கடந்த 2010ம் ஆண்டு நடந்த ஈரோட்டு சந்திப்பில் இவரின் பேச்சை கேட்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது மீண்டும் கேட்க வேண்டும் என்பதால் ஆர்வம் அதிகமாகியது இந்த பதிவர் சந்திப்பு. இவரும் பதிவர் என்பது மிக சிறப்பு.



திருவிழாவில் பாமரன் பேசியதாவது.

வணக்கம் தோழர்களே... பொதுவா ஒரு படத்துக்கு அதிகமாக பில்டப் கொடுக்கும் போது ட்ரைலர் பயங்கரமாக இருந்தால் அந்த படம் அதிகம் ஓடாது என்பதை போல என்னைப்பற்றி அதிகமாக பில்டப் கொடுத்துட்டாங்க இனி நான் என்ன கதிக்கு ஆளாகப்போறேன் என்று தெரியவில்லை. என்னைப்பற்றி கூறும் போது என் பெயர் எழில்கோ என்று சொன்னார் அதற்காக நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் எழில் என்றால் அழகு கோ என்றால் அரசன் நான் பிறக்கும் போது எப்படி இருப்பேன் என்று அவர்களுக்கு தெரியாது நம்பிக்கையில் இந்த பேரை வைத்திருக்கின்றனர். பொதுவாக நம் நாட்டில் ஆஸ்மா இருப்பவர்களுக்கு ஆரோக்கிய சாமி என்று பெயர் இருக்கும் அது போலத்தான் இதுவும்.

என்னை இந்த நிகழ்விற்கு உங்களில் ஒருவனாக மதித்து பேச கூப்பிட்டு இருப்பது மனநிறைவான ஒன்று. ஆனா நான் ஏன் எழுத வந்தேன் என்னைய ஏன் அனைவரும் எழுத்தாளன் எழுத்தாளன் என்று சொல்றாங்க என்று நானும் மண்டைய போட்டு குழம்பிகிட்டு இருக்கேன். நானும் மண்டைய துடைச்சி பார்த்துட்டேன் கடைசியா யாரும் எனக்கு ஞானப்பாலும் கொடுக்கல, எனக்கான சமூக அக்கறையும் அல்ல, ஒரு வெங்காயமும் இல்ல, நான் எழுதியதற்கு மிக முக்கிய காரணம் அந்தகாலத்தில் பெண்கள், பெண்கள், பெண்கள் தான். எனக்கு அந்த காலத்தில் பெண்களை பார்த்தால் ரொம்ப பிடிக்கும் காரணம் என்னவென்றால் நான் இருபாலரும் படித்த பள்ளியில் படிக்க வில்லை.

பெண்கள் தான் என்னை  எழுத வைத்தனர் அவர்களின் ரசிப்பைத்தான் நான் எழுத ஆரம்பித்தேன் பெண்களை பற்றி எழுத வேண்டும் என்றால் அனைவரையும் போல நானும் முதலில் எழுதியது கவிதை தான்.

கண்ணே நீ காகிதம்
போல் என்று தெரிந்திருந்தால்
நான் கழுதையாக பிறந்திருப்பேன்

டிஆர் கொடி கட்டி பறந்த காலம் அது அப்ப அவரைப்போல எழுத ஆரம்பித்தேன் அவரின் பாதிப்பு அதிகம், பாடாத பாடு பட்ட காலம் அது, என அவர் பாணியில் கொஞ்ச நாள் கவிதை எழுதினேன். இதற்கெல்லாம் நண்பர்களுடன் கூடி பட்டி மன்றம் போட்ட காலம் அது. 

இந்த கேள்விக்களுக்கு
பதில் எழுதினால்
மதிப்பெண் கிடைக்கும்
மதிப்பெண் கிடைத்தால்
தேர்வு கிடைக்கும்
தேர்வு கிடைத்தால்
வெற்றி கிடைக்கும்
வெற்றி கிடைத்தால்
பட்டம் கிடைக்கும்
பட்டம் கிடைத்தால்
வேலை கிடைக்குமா
என்ற ஒரு கேள்வி கிடைக்கும்

என்று எழுதிய காலம் எல்லாம் உண்டு இதற்கு மதிப்பெண் கிடைத்த காலம் எல்லாம் உண்டு. நான் பச்சையாக சொல்கிறேன் இந்த தமிழ் சமூகத்திற்கு நான் செய்த நல்ல காரியம் கவிதை எழுதுவதை விட்டது தான்.


கல்லூரியில் படிக்கும் போதும் சரி, வேலைபார்க்கும் போதும் சரி நம்மை ஈர்க்கவேண்டும் என்ற என்னம் இருக்கும். அந்த கால கட்டங்களில் 10 ரூபாய் கொடுத்து ரப்பர் ஸ்டாம்ப் ஒன்று வைத்திருந்தேன் எழில் கோ. கோவை 14. என்று போட்டு இருக்கும் ரப்பர் ஸ்டாம்ப் வைத்து எழுதுவேன். அப்ப எல்லாம் குமுதம் வாங்கி வாசகர் கடித்ம் எழுதுவேன். வாசகர் கடிதம் எழுதினால் அதை வெளியிடுவார்கள் என்று இருபது முப்பது வாசகர் கடிதம் எழுதிய அனுபவமும் உண்டு. வாசகர் கடிதம் ஒன்னு குமுதத்தில் வந்திருந்தது அதை ஊரே காட்டியது அனுபவம் உண்டு.

இதற்கு அடுத்தது தான் துணுக்கு எழுதுவது துணுக்கு எழுதினால் பத்திரிக்கையில் வெளியிடுவார்கள் என்பால் அதை எழுத ஆரம்பித்தேன் அதற்கு பல துணுக்குகள் எழுதுதியதால் மணியார்டர் வர ஆரம்பித்தது ஆரம்பத்தில் இப்படி கேவலமாக எழுதியவன் தான் இன்று உங்க முன்னால் நின்று கொண்டு இருக்கேன். 

1983 ஆம் ஆண்டு இறுதி கல்வி கட்டம் வெளிக்கடை சிறையில் குட்டிமணி, ஜெகன் தங்கதுரை கொடூர கொலை என்று செய்தி வெளிவந்திருந்தது. இவர்கள் மூவரும் நீதி மன்றத்தில் ஆஜர் படுத்திய போது நாங்கள் நிரபாராதிகள் நாங்கள் எங்கள் தமிழர்களுக்காக போராடுகிறோம் நாங்கள் இறக்க நேர்ந்தால் எங்கள் கண்களை எடுத்தி தமிர் இளைஞர்களுக்கு பொறத்துங்கள் என்றனர். இந்த செய்தியை அப்படியே நிவர்த்தி செய்தனர் சிங்களர்கள். அவர்கள் வெளிக்கடைக்கு சென்று 53 பேரை கோர கொலை செய்து இவர்களின் கண்களை நோண்டி பூட்ஸ் காலால் அழித்தனர். அதை படிக்க படிக்க தான் மிக யோசித்தேன் அப்போது தான் இத்தனை மக்கள அழிகின்றனர் அவர்களுக்கு எதாவது செய்யவேண்டும் நாம் ஏன் இவர்களுக்காக எழுதக்கூடாது என்று அப்போது தான் உணர்ந்தேன். நம் சமகாலத்தில் இத்தனை பேர் இறந்து கிடக்கின்றனர் தமிழர்களுக்கு இலட்சக்கணக்கான மக்கள் வந்த நேரம் என்னிடம் குறைந்தபட்சம் நல்ல விசயம் இருக்கும் என்று நம்பினீர்கள் என்றால் ஈழத்தமிழர்களின் நிகழ்வு தான்.

அப்புறம் நானும் ஒரு கம்பெனியில் வேலை செய்தேன் அப்போது பிரபல கட்சியில் கொஞ்சநாள் வேலை செய்தேன் எதுவாக இருந்தாலும் தலைவர் தான் அப்போது என்க்கு ஒரு பையன் இருந்தான். கரும்பலகைகளில் போராட்டத்தை வரைந்து விளக்குவான் அந்த குட்டி தான் மண்ணாக இருந்த என்னை மனிதனாக்கியவன். இன்றும் அவன் என் மனதில் இருக்கிறான். தலைவர் பற்றியும் தலைவரின் பத்திரிக்கை பற்றியும் இதற்கு இந்த பெயர் தேவைதான என்று பல கேள்விகளுக்கு எனக்கு பதில் ஊட்டியவன் அந்த குட்டி தான். நம்ம தலைவர் நம்ம தலைவன் என்று என்னை கவுத்தியன் அவன் அதற்கு பின் நான் எந்த கம்பெனியிலும் வேலை செய்யவில்லை எந்த கட்சியிலும் இருக்க வில்லை.

ஒவ்வொரு பத்திரிக்கைக்கும் எழுதும் போதும் அதாவது குமுதத்திற்கு எழுதினால் குமுதம் போலவும், விகடனுக்கு எழுதினால் விகடன போலவும் வண்ணத்திரைக்கு எழுதினால் அது போலவும் தான் எழுதனும் சுயமாக எழுதிட முடியாது சுயமாக கருத்து சொல்ல இயலாது என்று முடிவெடுத்தேன். இனி எந்த பத்திரிக்கைக்கும் அவர்களைப்போல எழுதுவதில்லை என்று.

தோழர்களே என்ன என்னைப்பற்றியே பேசிக்கொண்டு இருக்கிறான் என்று நினைக்காதீர்கள் எப்படி பிறந்து எப்படி வளர்ந்து என் பயணத்தை உங்களுக்கு அறியச்செய்தேன்.

கொஞ்ச நாளைக்கு பின் அன்புத்தோழி என்ற முதல் பத்திரிக்கை வெளியிட்டேன் அதில் பெரியாரைப்பற்றியும், காரல் மார்க்ஸ் பற்றியும் எழுதுவேன். இது நிறைய பேருக்கு பொறுத்தமானதாக இல்லை. பொதுவுடமைகளைப்பற்றியும், திராவிடக்கட்சிகளைப்பற்றியும் எழுதுவேன் எனக்கு இரண்டும் பிடித்த ஒன்று இதனால் என்னை இரு கட்சிக்காரர்களும் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள்.

அப்புறம் சுற்றுப்புற சூழல் பற்றி எழுதினேன் அதை இலண்டனில் வரை நல்ல பெயரை வாங்கிகொடுத்தது. அதை ஐயா கோவை ஞாநி அவர்கள் எல்லாம் வெளியே எடுத்துரைத்தனர்.

சினிமாப்பாடல்கள் எல்லாம் என் பையன் பாடுவான் என்னடா இப்படி பாடுகிறாய் என்றால் சினிமா பாட்டுப்பா என்பான் அட நாமதான் எந்த சினிமாவும் பார்ப்பதில்லை என்று  இருந்தேன். தமிழ் சினிமாவில் இவ்வளவு கேலமான பாடல்கள் எல்லாம் உள்ளதா என்று யோசித்தேன் மற்றும் நான் கவனிக்காதது நிறைய இருக்கு என்று. அப்போது தான் 1996 வைரமுத்து அவர்கள் பற்றி ஆபாசம் என்ற  நூழை மிக கடுமையாக எழுதினேன். அந்த நேரத்தில் மாலன் அவர்கள் படித்து விட்டு எனக்கொரு கடிதம் எழுதினார் நிறைய படித்திருக்கிறேன் உங்கள் எழுத்துக்களை என்று என்னைப்பற்றியும் கிண்டல் அடித்திருந்தீர்கள் நீங்கள் குமுதத்தில் எழுதமுடியுமா என்றார். அப்போது தான் எழுதலாமா வேண்டாமா என்று யோசிக்கும் போது நான் கொடுப்பவற்றை அப்படியே வெளியிடுவதாக இருந்தால் எழுதுகிறேன் என்றேன் அவரும் சரி  என்றார் அப்போது தான் பகிரங்க கடிதங்கள் என்ற பெயரில் குமுதத்தில் ஒரு தொடர் எழுதினேன்.

அதில் முதல்  கட்டுரையே என்னை அடிக்க துரத்தியது மரியாதைக்குய ஐயா பாலச்சந்தர் ஆல்ப்ஸ் சிகரம் என்று ஒன்று எழுதினேன் அதில் அவரை விமர்ச்சிருந்தேன் அப்போது மிக புரட்சியான படமான கல்கி என்ற படம் வந்திருந்தது அதில் வெறும் பிள்ளை பெறும் இயந்திரம் அல்ல பெண் என்று கேட்டு எழுதி இருந்தேன். நிறைய பேருக்கு நிறைய கண்டம் இருக்கும் எனக்கு எழுத்தில் கண்டம் என்பது போல அப்போது அவரை கேட்டு எழுதி இருந்தேன் இதுவரை நான் எழுதியது உங்கள் நாடகத்தை பற்றித்தான் எப்போது சினிமா எடுக்க போறீங்க அதுவும் வீடு, உதிரிப்பூக்கள் போன்ற படங்கள் என்றேன் அப்போது சினிமா உலகம் பற்றிக்கொண்டது பலத்த எதிர்ப்புக்கள் எனக்கு நான் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றனர் அது அந்த கால கட்டடத்தில் பெரிய பஞ்சாயாத்து ஆகியது.

அப்புறம் வைகோ மற்றும் தலைவர்களுக்கு எல்லாம் எழுதினேன் அப்புறம் இளையராஜாவிற்கு எழுதினேன் மற்றவர்களுக்கெல்லாம் நான் மூளையில் இருந்து எழுதினால் இவருக்கு மட்டும் நான் இதயத்தில் இருந்து எழுதுகிறேன் என எழுதினேன் இப்படி ஒரு பயணத்தில் நான் வந்தேன்.

இனி பேசவேண்டியது தான் நம்ம மேட்டர் இணையதளம் பற்றி தான் நம்மாளுக பதிவ எழுதி கமெண்ட் என்ற பெயரில் வியற்காலை 3 மணிக்கு எழுதி அடுத்தவன் என்ன எழுதி இருந்தாலும் அடுத்தவனை போட்டு தாக்குவது. இப்படி யார் எல்லாம் நமக்கு நல்ல கமெண்ட் போடுகிறார்களோ அவர்களை நம்மாளக்கி வெச்சிகிட்டேன் அப்பதான் நம்ம பேமஸ் ஆகமுடியும். அப்புறம் தேவதர்ஷனி என்று ஒரு பெண் பெயரில்  நிறைய சாட் செய்து நண்பர்களை கலாய்த்தேன். அப்புறம் எனக்கு ஒரு வலைப்பூ ஒன்று நண்பன் எழுதுவது என்று சொல்லி கொடுத்தார் அப்புறம் எப்படி தமிழ்மணத்தில் எழுதுவது என்று ஓசை செல்லா சொல்லிக்கொடுத்தார்.

அப்புறம் தமிழ்மணத்தில் ஓட்டிங்க எல்லாம் இருக்காம் எப்படி ஓட்டிங் வருது போகுது 7 ஓட்டு போட்டால் தான் முன்னாடி வரும் என இப்பதான் இருந்தனர். அதுவும் 6 ஓட்டுக்கு அப்புறம்  7வது ஓட்டுக்கு மச்சிக்கு போன் செய்து ஓட்டு போடு என்று திருமங்கலம் தேர்தலை மிஞ்சும் அளவிற்கு உள்ளது தமிழ்மணம் ஓட்டு.

வலைப்பதிவுகளில் நான் நிறைய படித்திருக்கிறேன் நிறைய அறிந்திருக்கிறேன் நிறைய இடங்களை பற்றியும் பல தகவல்களை பற்றியும் அறிய நிறைய உதவி இருக்கிறது இந்த இணையதளம். உலக சுற்றுச்சுழல், ஈரான், ஈராக் என பல தகவல்கள் இவர்கள் ஏன் இப்படி எழுதுகிறார்கள் என்று கூட யோசித்திருக்கிறேன் அனால் இங்கு எழுதக்கூடியவர்கள் எந்த நேரத்திலும் எந்த இடத்திலும் மனித நேயத்திற்கு யாருக்கும் சலித்தவர்கள் இல்லை என்பதை அறிந்திருக்கிறேன் அவர்களை வாழ்த்துகிறேன். 2009 இலங்கை பிரச்சனையில் நம் பதிவர்கள் சோடை போகாமல் எழுதியது பாராட்டத்தக்கது.

அடுத்தது என் மனைவியே என்னுடன் பேசுகிறேன் என்றால் பேஸ்புக்கில் நண்பனாக்கினால் தான் பேசுவேன் என்கிறார், அதுவும் இன்று எனக்கு 4000 நண்பர்கள் என்பார்கள் ஆனால் எதிர்தத வீட்டுக்காரரையும், பக்கத்து வீட்டுக்காரரையும் அவருக்கு தெரியாது அந்த அளவிற்கு உள்ளது பேஸ்புக் மோகம். பேஸ்புக் கொசுத்தொலைக்கு எல்லையே இல்லை நேற்று கீரை சாப்பிட்டேன் இன்று வயிறுஆடுதுங்கிறான். வீட்டில் உள்ள நாய்கிட்ட போட்டோ எடுத்து நாயும் நானும் என்கிறான். பிரசவத்துக்கு போற பெண் கூட் நான் ஆஸ்பத்திரிக்கு போகிறேன் என் குழந்தையை பார்க்க போகிறேன் என்கிறார். அடுத்து ஒருவன் அப்பா இறந்துவிட்டார் என்று ஒரு ஸ்டேட்டஸ் போடுகிறான் அதற்கு 200 லைக் வேற.

அடுத்து சண்டை இவ ஒரு கருத்து அவன் ஒரு கருத்து என்று மாத்தி மாத்தி போட்டுதாக்கிக்கிறாங்க. பேஸ்புக்கில் இருக்கும் ஒருவன் 65 வருடம் உயிர் வாழ்கிறான் என்றால் தொடர்ந்து இருந்தால் அவன் 35 வருசம் தான் இருப்பான். இந்த அளவிற்கு போகுது முகநூல்.

இணையம் என்பது இணைப்பதற்கான தளம் உலகில் எங்கிருப்பவர்களிடம் தொடர்பு கொள்ளலாம் நிறைய நிறையவான நட்புக்களை பெறலாம் அதை நோக்கி நாம் செல்வோம் என்று மிக சிறப்பாக பேசினார்.

இவரின் பேச்சுக்கு பின் மதிய உணவும், கண்மணி குணசேகரனின் பேச்சும், புத்தகம் வெளியீடும் சிறப்பாக நடந்தது..

( இந்த சந்திப்பை பற்றி நிறைய பதிவுகள் வரும் ஆனால் இவரின் சிறப்பான பேச்சை தொகுப்பாக கொடுக்க வேண்டும் என்ற ஆர்வத்தால் நான் சந்தித்த நண்பர்களின் பெயரை குறிப்பிடாமல் இந்த பதிவை வெளியிடுகிறேன் வழக்கமான பானியில் சந்திப்பு பற்றிய கட்டுரை மிக விரைவில்)
 

43 comments:

  1. பாமரனின் பேச்சு என்னையும் வெகுவாக ஈர்த்தது. அவர் பேச்சை மீண்டும் அசைப்போட வைத்ததற்கு நன்றி சங்கவி!

    ReplyDelete
    Replies
    1. யக்கா., அத்தனை வியர்வையிலும் நகராமல் ரசித்தேன் அண்ணனின் பேச்சை...

      Delete
  2. அருமையான பேச்சை அருமையாகப்
    பதிவு செய்து மீண்டும் ரசிக்கத் தந்தமைக்கு
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
    Replies
    1. நன்றி ஐயா., தங்களை சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி..

      Delete
  3. கலந்து கொள்ளாதவர்களும் மிக்க மகிழ்ச்சி தரும் பகிர்வு... நன்றி...

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும், கருத்துக்கும் நன்றி தனபாலன்...

      Delete
  4. பாமரன் அவர்களின் பேச்சை அப்படியே அள்ளித் தந்துவிட்டுள்ளீர்களோ.. மிகவும் அருமை.
    நேரில் வந்து கலந்துகொள்ள முடியாத என்போன்றோர்க்கு மனநிறைவைத் தருகிறது உங்கள் பதிவு சகோ!

    வாழ்த்துக்கள்!

    த ம.4

    ReplyDelete
    Replies
    1. நன்றி சகோ... எல்லோரும் சந்தித்ததை எழுதி இருப்பார்கள் நாம் அவரின் பேச்சை எழுதுவோமே என்று தான் எழுதினேன்...

      Delete
  5. அருமை சங்கவி.... கலக்கல்...

    ReplyDelete
    Replies
    1. நன்றி நண்பா.. இதற்கு உதவியதே நீர்தானய்யா...

      Delete
  6. எல்லாருக்கும் படிக்கக் கொடுத்ததற்கு நன்றி

    ReplyDelete
    Replies
    1. தங்களை சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி சார்...

      Delete
  7. காலையில் வந்திருந்து இவரது பேச்சுக்களைக் கேட்காமல் போனேனே என்று வருந்திக் கொண்டிருந்தேன். இவர் குமுதத்தில் எழுதியவைகளை ரசித்த பல்லாயிரக்கணக்கான நபர்களில் நானும் ஒருத்தி. இப்போது உங்களது இந்தப் பதிவு மூலம் இவரது பேச்சை படித்தது சற்று ஆறுதல்.
    நன்றி!

    ReplyDelete
    Replies
    1. நன்று.. தங்களை சந்தித்து அளவாடியதில் மிக்க நன்றி அம்மா...

      Delete
  8. திரு பாமரன் அவர்கள் பேச்சைப் பதிவிட்டது சிறப்பு.

    ReplyDelete
  9. Replies
    1. சித்தப்பு சாரி சித்தப்பு சொல்லாம வந்துட்டேன்...

      Delete
  10. பாமரனின் பேச்சை எழுத்துக்களாக பதிவிட்டதற்கு நன்றி!

    ReplyDelete
  11. நேரில் ரசித்ததை அழகாய் பதிவு செய்து உள்ளீர்கள் ,வாழ்த்துகள்!

    ReplyDelete
    Replies
    1. ஆமாங்க...

      வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி..

      Delete
  12. Replies
    1. அண்ணே உங்கள சந்திக்க எதிர்பார்த்தேன்...

      Delete
  13. //இணையம் என்பது இணைப்பதற்கான தளம் உலகில் எங்கிருப்பவர்களிடம் தொடர்பு கொள்ளலாம் நிறைய நிறையவான நட்புக்களை பெறலாம் அதை நோக்கி நாம் செல்வோம் என்று மிக சிறப்பாக பேசினார்.// -- அருமை நண்பர்களே.

    ReplyDelete
  14. Replies
    1. அடுத்த வருடம் சந்திப்போம் வாங்க..

      Delete
  15. பேஸ்புக்கில் இருக்கும் ஒருவன் 65 வருடம் உயிர் வாழ்கிறான் என்றால் தொடர்ந்து இருந்தால் அவன் 35 வருசம் தான் இருப்பான். இந்த அளவிற்கு போகுது முகநூல்.// hahaha

    நன்றி சங்கவி பகிர்விற்கு..

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும், கருத்துக்கும் நன்றி விஜி..

      Delete
  16. Replies
    1. தங்களை சந்தித்ததும், தங்களிடம் புகைப்படம் எடுத்ததும் மிக்க மகிழ்ச்சியான ஒன்று கவியாழி...

      Delete
  17. சங்கவி உங்களை சந்தித்தது மிக்க மகிழ்ச்சி...

    ReplyDelete
  18. பட்டைய கிளப்பிய பதிவு. தொகுப்பு அருமை

    ReplyDelete
  19. என்னால் விழாவிற்கு வரமுடியவில்லை. பகிர்ந்தமைக்கு நன்றி..

    விழா சிறக்க உழைத்த அனைத்து நட்புகளுக்கும் பாராட்டுகள்.

    ReplyDelete
  20. அருமையாக தந்துள்ளீர்கள்.நன்றி.

    புத்தக வெளியீட்டுக்கு வாழ்த்துகள். தொடரட்டும் உங்கள் பணி.

    ReplyDelete