Wednesday, August 21, 2013

அஞ்சறைப்பெட்டி 22.08.2013



  



உள்ளுரில் இருந்து உலகம் வரை........




விடுமுறை விட்டாலே பதிவு எழுதுவது தோய்ந்து விடுகிறது. ஆம் கடந்த வியாழனன்று விடுமுறை வெள்ளியன்று அஞ்சறைப்பெட்டி எழுதலாம் என்று நினைத்ததோடு சரி முடியவில்லை. எப்பவும் ஒரு காரியத்தை தொடர்ந்து செய்து கொண்டு இருக்கும் போது ஒரு சின்ன கேப் விட்டாலும் அது தடை போலத்தான் மீண்டும் தொடர்வது கொஞ்சம் கடினம் என்பது உண்மை தான் போலும். நமது பதிவர்கள் நிறைய எழுதிய காலம் எல்லாம் கரை ஏறிவிட்டது அதற்கு காரணம் நிச்சயம் இந்த கேப் ஆக இருக்கலாம். மீண்டும் தொடர்ந்து எழுத முயற்சிக்கிறேன்...
.......................................


இலங்கை அமைச்சர் அதுவும் காமென்வெல்த் மாநாட்டிற்கு அழைக்க வந்தவர் கொடுக்கும் பேட்டியில் இந்திய மீனவர்கள் எல்லை தாண்டி வருகின்றனர் அதனால் நாங்கள் கைது செய்தோம் இப்போதைக்கு விடமாட்டோம் இதற்கு ஒரு தீர்வு வரவேண்டும் என்று பேட்டியளிக்கிறார் நம் தலைநகரில் அவரை யாரும் கண்டித்தாக தெரியவில்லை. என்ன செய்வது நமக்கு நட்பு நாடு என்று கருத்து தெரிவிக்காமல், கண்டனம் தெரிவிக்காமல் இருக்கிறார்கள் போலும்.

 .......................................

நம் நாட்டை சுற்றி இருக்கும் நாட்டை எல்லாம் நாம் நண்பர்களாக நினைக்க ஆனால் அவர்கள் நம்மை பங்காளிகளாத்தான் நினைக்கின்றனர். இந்த பக்கம் பாகிஸ்தான் எல்லை தாண்டி வருகின்றனர் அந்த பக்கம் சீனா கொஞ்சம் அதிகப்படியாக 20 கிலோமீட்டர் வரை உள்ளே வந்து கூடாரம் போட்டு தங்குகின்றனர் மிகுந்த பேச்சு வார்த்தைக்கு பின் போனால் போகுது என்று வெளியேறுகின்றனர். அந்த அளவிற்கு உள்ளது நமது நட்பு..

இதற்கு என்று விடிவு காலம் பிறக்குமோ...
.......................................


தெலுங்கான அமைப்பது மத்திய அரசின் முடிவு அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கிறேன் என்ற பெயரில் ஆந்திராவை ஸ்தம்பிக்க வைத்து விட்டனர். போராட்டம் அமைதி வழியில் நடந்தால் சரி அது பொதுமக்களின் இயல்பு வாழ்க்கைக்கு மாற இருக்கும் போது தான் வருத்தப்பட வைக்கின்றது.

முடிவில் மாற்றம் இல்லை என்று ஒரு கட்சியினரும் எதிர்க்கிறோம் என்று ஒரு புறமும் தொடர்ந்து தொல்லைகளாகத்தான் இருக்கிறது ஆர்ப்பாட்டங்களும், போரட்டங்களும்...
 
....................................... 

'ஃபேஸ் புக்', 'நெட்லாக்', 'யூடியூப்' போன்ற இணையதளங்களில் கடந்த சில நாட்களாக வலம் வந்த சீன போலீசார் தொடர்பான புகைப்படங்கள் உலகெங்கும் பெரும் வரவேற்பை பெற்றது.

சீனாவின் தென்கிழக்கு மாகாணங்களில் ஒன்றான ஜியாங்சியின் வடக்கு பகுதியில் குளுகுளு மலைப் பிரதேசமான லுஷான் பகுதி உள்ளது. யுனெஸ்கோவின் பட்டியலில் இடம் பெற்றுள்ள இந்த சுற்றுலா தளத்திற்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் வந்து செல்வதால் எப்போதும் இப்பகுதியில் போலீசார் காவல் பணியில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர்.

இப்பகுதியில் கடமையாற்ற சென்ற போலீசார், சீருடைகளை எல்லாம் ஒரு நீர்நிலையின் கரையோரம் கழற்றி வைத்துவிட்டு, நிர்வாணமாக நீந்தி கும்மாளமடிக்கும் காட்சிகளை சில குறும்புக்கார இளைஞர்கள் வீடியோவில் படம் பிடித்தனர்.

இணையதளங்களில் பதிவேற்றம் செய்யப்பட்ட இந்த காட்சிகள் விறுவிறுவென காட்டுத்தீ போல் பரவியதால் சீன போலீஸ் உயரதிகாரிகள் அதிர்ச்சியடைந்தனர்.

அந்த காட்சிகளை உன்னிப்பாக கவனித்த உயரதிகாரிகள் கடமையின் போது கண்ணியக் குறைவாக நடந்துக்கொண்ட 8 போலீசாரை அதிரடியாக டிஸ்மிஸ் செய்து நேற்று உத்தரவிட்டனர்.

மேலும், 3 போலீஸ் அதிகாரிகளுக்கும் பதவி குறைப்பு அல்லது பதவி பறிப்பு தண்டனை வழங்கப்படும் எனவும் மாகாண போலீஸ் உயரதிகாரிகள் தெரிவித்தனர்.



..............................

உலகில் எத்தனையோ சாதனையாளர்கள் குறித்து செய்திகள் வந்திருக்கக்கூடும். அனால், நீளத் தலைமுடி குறித்த சாதனையாளர் இந்தப் பெண் ஒருவராகத்தான் இருக்கமுடியும். இவரது சாதனையை முறியடிக்க வேறு எவரேனும் வருவார்களா என்பது சந்தேகத்திற்குரிய விஷயம் ஆகும்.

ஜார்ஜியா நாட்டின் அட்லாண்டா நகரில் தனது மகனுடனும், இரண்டாவது கணவருடனும் வசித்து வருபவர் ஆஷா மண்டேலா ஆவார். 50 வயதாகும் இவர் கடந்த 25 வருடங்களாகத் தனது முடியைக் கத்தரித்துவிடாமல் கவனமுடன் பாதுகாத்து வருகின்றார்.

கடந்த 2008ஆம் ஆண்டில் நீளமான கூந்தலுக்கான முதல் பெண்ணாக இவர் கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் இடம் பெற்றார். அடுத்த வருடம் இவரது ஒரு முடிக்கற்றையின் நீளம் 19 அடி,6 அங்குலமாக இருந்தது. இதனால், இவரே இவரது சாதனையை முறியடித்தவராக அறியப்பட்டார். அதற்கு அடுத்த வருடம் இதுபோல் பின்னப்பட்டிருக்கும் முடிக்கற்றைகள் மிக நீளமாக வளரும் தன்மை கொண்டிருப்பதால் கின்னஸ் புத்தகமே அந்த சாதனையைக் குறிப்பிடுவதை நிறுத்திவிட்டது. 

சிறுசிறு பின்னல்களாக தனது முடியினை அலங்கரித்துக் கொள்ளும் ஆஷா வெளியில் செல்லும்போது குழந்தைகளை சுமந்து செல்லுவது போன்ற குறுக்குத் துணியினைத் தோளில் கட்டிக்கொண்டு அதில் தனது முடியை சுருளாக்கி வைத்துக் கொள்கின்றார். சென்ற வாரம் அளந்தபோது இவரது முடிக்கற்றையின் நீளம் 55அடி, 7 அங்குலமாக இருந்துள்ளது. 39 பவுண்டு எடை கொண்ட இவரது முடி இவருக்கு ஏராளமான ரசிகைகளைப் பெற்றுத்தந்துள்ளது. இவரது முடி ஒன்பதாவது உலக அதிசயம் என்றும் இவரை நடமாடும் சரித்திரம் என்றும் இவரது ரசிகைகள் அழைக்கின்றனர்.

இரண்டு முறை மாரடைப்பு வந்தபோதும், கான்சர் நோயினால் தாக்கப்பட்டு மருத்துவம் செய்துகொண்ட போதும் இவரது முடி கொட்டவில்லை. மருத்துவர்கள் இத்தனை நீளமான முடி சுகாதரத்திற்குக் கெடுதல் என்று கூறியுள்ள போதிலும், இதனைக் கத்தரிப்பதில் ஆஷாவிற்கு விருப்பமில்லை.



..............................

 


பதிவர் நண்பர்களே...


சென்னையில் வருகிற செப்டம்பர் 1ம் தேதி ஞாயிறு அன்று பதிவர்கள் திருவிழா நடைபெற இருக்கிறது. அது சமயம் நம் வீட்டுத் திருவிழாவில் பங்கேற்க அனைவரும் வாரீர் வாரீர்


..............................


வணக்கம் நண்பர்களே...

சென்னையில் செப்டம்பர் 1 ஞாயிறு அன்று நடக்கும் பதிவர்கள் மாநாட்டில் எனது இதழில் எழுதிய கவிதைகள் என்ற எனது முகநூல் கவிதை தொகுப்பு புத்தகமாக வெளியிடுகிறேன் தங்களின் பேராதரவோடு....


Place: Cine Musicians Auditorium, 297 N.S.K. Salai, Vadapalani
Time: 2.30 pm


அகநாழிகை வாசுதேவன் அவர்களின் அகவொளி பதிப்பகத்தின் மூலம் வெளியாகும் இத்தொகுப்பை

கொங்கு மண்ணின் மைந்தர்கள்
ஈரோடு தாமோதர் சந்துருவும்,
திருப்பூர் வெய்யிலான் ரமேஷ் அவர்களும்
வெளியிட...
 இயக்குநர் IRS செல்வக்குமார் அவர்களும்
கவிதை தென்றல் கவிஞர் கோவை சக்திசெல்வி

அவர்களும் பெற்றுக்கொள்கிறார்கள்..

வாழ்த்துரை

அகநாழிகை வாசுதேவன்
கவிஞர் மதுமதி


ஏற்புரை
சதீஸ் சங்கவி..

பதிவர்கள் மற்றும் முகநூல் நண்பர்கள் அனைவரையும் வருக வருக என அன்போடு வரவேற்கிறேன்...
 
தகவல்




மூளையின் செயல்திறனை மட்டுப்படுத்தி, அறிவாற்றலை இழக்கச் செய்யும் ஆல்சைமர் நோயினால் 2006-ம் ஆண்டு கணக்கெடுப்பின்படி, உலகளாவிய அளவில் சுமார் 3 கோடி பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக கண்டறியப்பட்டது.

2050ம் ஆண்டிற்குள் சுமார் 12 கோடி பேர் இந்த நோயினால் பாதிக்கப்படுவார்கள் எனவும் தெரிய வந்துள்ளது.

ஆரம்பத்தில் சிறிய நினைவாற்றல் இழப்பு என்ற நிலையில் தொடங்கும் ஆல்சைமர் நோய், நாளடைவில் மனக்குழப்பம், மனச்சிதைவு, நீண்டகால நினைவாற்றல் இழப்பாக உருமாறி இறுதிகட்டத்தில் புலன் உணர்வுகளை குறைத்து இறப்பை ஏற்படுத்திவிடும்.

இந்நோய்க்கு முழு நிவாரணம் அளிக்கக்கூடிய மருந்துகள் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. எனினும், மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் இந்நோய் தொடர்பான நிறைய ஆய்வுகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

அமெரிக்காவை சேர்ந்த ஆய்வாளர்கள் இந்நோய் தொடர்பாக நடத்திய ஆய்வில், குடிநீர் மற்றும் உணவு வகைகளில் அதிக அளவில் காணப்படும் தாமிரம் (செம்பு) மூளை மண்டலத்தில் காரைப் படலத்தை ஏற்படுத்தி ஆல்சைமர் நோயை தீவிரப்படுத்துகிறது என்பது உறுதிபடுத்தப்பட்டுள்ளது.

ஈரல், சாக்லேட், பருப்பு, எள், சிப்பி மற்றும் கனவா மீனில் தாமிர சத்து அதிகமாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

நரம்பு மண்டல செயல்பாடு, எலும்பு வளர்ச்சி, இயங்கு தசைகள் மற்றும் ஹார்மோன் சுரப்பி ஆகியவற்றில் தாமிரத்தின் பங்கு முக்கியமானதாக இருந்தாலும், நாம் அன்றாடம் உட்கொள்ளும் உணவு மற்றும் குடிநீர் நமது அறிவாற்றலுக்கும் அச்சுறுத்தலாக உள்ளது என நியூயார்க்கில் உள்ள ரோசெஸ்டர் பல்கலைக்கழக பேராசிரியர் ரஷீத் டியென் குறிப்பிட்டுள்ளார்.



தத்துவம்

புத்தகங்களும், நண்பர்களும் குறைவாக இருந்தாலும் சிறந்ததாக இருக்க வேண்டும்.

ஆண்டவன் ஒவ்வொரு நல்ல உள்ளங்களிலும் அழகாக வீற்றிருக்கிறான், நாங்கள்தான் அதைக் கண்டுகொள்வதில்லை.

கிரீடங்களை விட கனிந்த இதயங்கள் மேலானவை..

20 comments:

  1. இதழில் எழுதிய கவிதைகள் தலைப்பே படிக்கும் ஆர்வத்தை ஏற்படுத்துகிறது. வாழ்த்துக்கள்.

    இவ்வளவு பெரிய முடியா ?

    குடிநீரை உணவை தவிர்த்து மனிதன் எப்படித்தான் உயிர் வாழ்வது. என்னென்னவோ நோய் வருதுங்க.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும், கருத்துக்கும் நன்றி சசி...

      Delete
  2. "
    கிரீடங்களை விட கனிந்த இதயங்கள் மேலானவை"

    அருமையான தத்துவம்.

    ReplyDelete
    Replies
    1. நன்று... தங்களின் வருகைக்கும்,கருத்துக்கும்

      Delete
  3. அவ்ளோ முடி எப்படி தான் வெயிட் தாங்குகிறாரோ.

    ReplyDelete
    Replies
    1. அதுதான் எனக்கும் புரியலீங்க...

      Delete
  4. அன்பின் சதீஷ் சங்கவி - அஞ்சறைப் பேட்டி அருமை. - இதழில் எழுதிய கவிதைகள் புத்தக வெளியீட்டு விழா சிறப்புடன் நடைபெற நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வாழ்த்துக்கு மிக்க நன்றி ஐயா...

      Delete
  5. பல்வேறு தகவல்கள் கொண்ட உண்மையான அஞ்சறைப்பெட்டி -பதிவௌ நன்று - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    ReplyDelete
  6. ஐயோ இவ்வளவு பெரிய முடியா?!

    ReplyDelete
  7. அஞ்சறைப் பெட்டி அசத்தல்... நூல் வெளியீட்டு விழா சிறப்பாக நடத்திடுவோம்... வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  8. பாதி தூக்கத்தில் கூந்தலைத் தடவி ரசிப்பதில் இன்பம்ன்னு சொல்லுவாங்க ...இப்படி நீளமா கூந்தல் இருந்தால் ...சரி சரி ,நமக்கு எதுக்கு அந்த கவலை ?

    ReplyDelete
  9. புத்தகங்களும், நண்பர்களும் குறைவாக இருந்தாலும் சிறந்ததாக இருக்க வேண்டும்.

    ஆண்டவன் ஒவ்வொரு நல்ல உள்ளங்களிலும் அழகாக வீற்றிருக்கிறான், நாங்கள்தான் அதைக் கண்டுகொள்வதில்லை.

    கிரீடங்களை விட கனிந்த இதயங்கள் மேலானவை..//
    அஞ்சறை பெட்டி செய்திகள் அனைத்தையும் மிஞ்சும் தத்துவம் மிக அருமை

    ReplyDelete
  10. அஞ்சறைப் பெட்டி அசத்தல்

    ReplyDelete
  11. 'இதழில் எழுதிய கவிதைகள் ' நூல் வெளியீட்டு விழா
    சிறப்புடன் நடைபெற நல்வாழ்த்துகள் சங்கவி.

    ReplyDelete
  12. எப்பவும் போல அஞ்சறைப் பெட்டி எல்லா மணமும் சுமந்து...

    பதிவர் விழாவுக்கு அயல்நாட்டில் இருக்கும் நாங்கள் வருவதென்பது இயலாத ஒன்று... விழா குறித்து உங்களது பகிர்வுகளில் கண்டு மகிழக் காத்திருக்கிறோம்... விழா சிறக்க வாழ்த்துக்கள்...

    புத்தக வெளியீட்டிற்கு வாழ்த்துக்கள்....

    ReplyDelete
  13. அஞ்சறைப்பெட்டி உண்மையிலேயே அபாரம் நண்பா... முடி விஷயத்தைத்தவிர மீதியெல்லாமே ஏற்கனவே அறிந்ததுதான் என்றாலும்கூட எல்லாவற்றையும் ரசித்துப்படித்தேன்... புத்தக வெளியீடு சிறக்க வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  14. மயிறு இவ்வளவு நீளமா இருப்பது பெரிய ஆச்சரியம். மயிறு ரொம்ப நீளமாக இருந்தாலும் தொந்தரவு தான்.!

    ReplyDelete
  15. நீளமாக இருந்தாலும் ரசிக்க வைத்தது, நான் பதிவைச் சொன்னேன். அஞ்சறைப் பெட்டி = அழகுப் பெட்டி. எனது தளத்துக்கும் கொஞ்சம் வரலாமே?

    http://newsigaram.blogspot.com/2013/09/then-kinnam-paarappa-pazhaniyappa.html#.Ui4K3z-FHzy

    ReplyDelete
  16. சுவையான தகவல்களுடன் அஞ்சறைப்பெட்டி அருமை
    தங்கள் கவிதை நூலை நேற்றுதான் வாசித்து முடித்தேன்
    என் இளமைகாலத்தில் பயணம் செய்ய நினைக்கும்போதெல்லாம்
    அதைத் தொடர்ந்து படிக்க உத்தேசித்துள்ளேன்
    சித்தத்தில் பித்தம் ஏற்படுத்திப்போகும்
    அருமையான முத்தக் கவிதைகள்
    முத்து முத்தான கவிதைகள் தந்தமைக்கு
    மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete