Monday, March 11, 2013

தாய்


இன்று கணவன் மனைவி ஏற்படும் பிரச்சனைகளால் நிறைய பிரிவுகள் ஏற்படுகின்றன தினமும் நாம் பத்திரிக்கையில் படிக்கும் செய்திகளில் இதுவும் ஒன்று. விவாகரத்து கேட்டு கியூவில் நிற்பவர்கள் ஏராளம் இதற்கு நிறைய காரணங்கள் உண்டு அதில் ஓர் முக்கியமான காரணம் தாய்ப்பாசம்...

மனைவிகள் சொல்லும் அதிக புகார் அம்மா பேச்சை கேட்கிறார். அம்மா பேச்சை கேட்டு என்னைத் திட்டுகிறார் இதனால் தனிக்குடித்தனம் போகலாம் என்றால் அம்மாவை விட்டு வர மறுக்கிறார் இது தான் அதிக குற்றச்சாட்டுகள். இந்த குற்றச்சாட்டுகள் இருந்தாலும் இன்றும் கூட்டுக்குடும்பம் இருக்கத்தான் செய்கிறது. கூட்டுக்குடும்பத்திற்கு முக்கிய காரணமே தாய்ப்பாசம்தான்.

இன்று மனைவி நாளை அம்மா நாளை மறுநாள் மாமியார் இதுதான் இன்றைய நிகழ்வு. நிறைய மனைவிகள் யோசிப்தில்லை நாளை நாமும் மாமியார் ஆகப்போகிறோம் அப்போது நம் மகனை நம்மிடம் இருந்து பிரித்தால் இதை யோசித்தால் போதும் இப்பிரச்சனைக்கு எளிய தீர்வு உண்டு.

ஒரு பெண் திருமணம் ஆகி கணவனிடம் வருகிறாள் அவள் கருவுற்றதற்கு முன் கணவன் மேல் இருக்கும் அன்பு கருவுற்றதற்கு அப்புறம் குறையத்துவங்குகிறது. தனக்கு குழந்தை பிறந்த பின் அத்தாய் தன் மகனை தன் கண்ணுக்குள் வைத்து காக்கிறாள் கூடவே தனது அனைத்து அன்பையும் குழந்தையின் மீது காட்டுகிறாள். குழந்தையின் ஒவ்வொரு அசைவையும் வைத்து அவனுக்கு என்ன வேண்டும் என்ன எதிர்பார்க்கிறான் என அவனை பார்த்து பார்த்து வளர்க்கிறாள். மகனின் முதல் ரசிகையே தாய். மகனுக்கு முதலில் தெரிவது தாய் தான் பின்பு தான் மற்றவர்கள். மகன் குப்புற விழுந்து, தவழ்ந்து, எழுந்து நின்று மேதுவாக விழுந்து விழுந்து நடந்து ஒவ்வொன்றையும் முதலில் ரசிப்பவள் தாய் மட்டுமே..

குழந்தைப்பருவத்திலேயே அம்மா மீது அதிக அன்பு கொள்கிறான். தன்னிடம் யார் விளையாடினாலும் அவன் அம்மாவைப் பார்த்த உடன் சிரிக்கும் சிரிப்பு இப்படியே எனக்கு உசிரு போய்விட வேண்டும் என்று தான் தாய் கூறுவாள். மகனுக்கு விபரத் தெரியும் போது தான் தன் அம்மா அப்பாவின் மனைவி என்று அவனுக்கு தெரியவருகிறது. மகனுக்கும் தாய்க்கும் உள்ள பாசத்திற்கு ஈடு இணை இல்லை. 

மகனுக்கு திருமணம் செய்து வைக்கும் போது பெண் மகனுக்கு பிடிக்கிறதோ இல்லையோ தாய்க்கு நிச்சயம் பிடித்திருக்க வேண்டும் என்பது மகனின் விருப்பமாக இருக்கும். திருமணம் முடிந்து வரும் மருமகள் தன் மகன் மீது பொழியும் அன்பை தாய் ஏற்றால் அக்குடும்பத்தில் மகிழ்ச்சியே... தாய்ப்பாசத்திற்கு இவ்வுலகில் ஈடு இணை எதுவும் இல்லை..

9 comments:

  1. சிறப்பிற்கு சிறப்பு சேர்த்தமைக்கு வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  2. என்ன திடீர்னு இப்படி ஒரு பதிவு? வீட்டுல அம்மாவும் மனைவியும் சௌக்யமா?

    ReplyDelete
  3. திருமணத்திற்கு முன் ஒரு ஆணுக்குத் தாய்தான் எல்லாம்.
    திருமணம் ஆனபின்... தாயினிடத்தில் மனைவி!!

    ஆனால் தாய் தான் பாவம்...!
    தன்தாயைவிட்டு வந்து....
    உங்களுக்கு (ஆண்களுக்குத்) தாயாகி...
    பின் குழந்தைகளுக்குத் தாயாகி...

    வாழ வரும் தாயை..
    தன் மகனுக்கு இன்னொறு தாய்
    கிடைத்திருக்கிறாள்
    என்று நினைத்து
    வாழ்ந்து விட்ட தாய்
    விட்டுக் கொடுத்தால்
    பிரட்சனை ஏது...?

    பதிவு “பெண்மை“ என்னும் “தாய்மை“யைச் சிந்திக்க வைக்கிறது.
    நன்றி.

    ReplyDelete
  4. அருமையான பகிர்வு...

    இன்றைய மனைவியர் நாளைய அன்னை , மாமியார் என்பதை நினைக்க மறப்பதே நிறைய பிரச்சினைகளுக்கு மூலகாரணியாக இருக்கிறது என்பது முற்றிலும் உண்மை.

    ReplyDelete
  5. Soak the saffron strands in 1 tablespoon of warm milk for 10 minutes.
    Soak the almonds in hot water for 15 minutes and take out the skin.oil the remaining milk by adding cardamom,( i added 2 pinches of cardamom powder) cinnamon and cloves. Keep the flame low.
    grind the almonds with little milk into a smooth paste.After 5 minutes , add the ground almond paste to the milk and the soaked saffron.
    Boil in a low flame for 5 minutes.
    Switch off the flame and strain the milk.
    Add sugar and mix well and garnish with pisatchios or cashew nuts or sliced almonds.வாசனை வேண்டுவோர் நெத்திலி மீனை அதில் மிக்ஸ் செய்யவும். அதன் பின் அது நெத்திலி மசாலா பால் எனப்படும்

    ReplyDelete
  6. நிலாவைக் கானாது நீண்ட நேரம் நின்றிருந்தேன்.காரிருள் கருப்பாக சூழ்ந்திருந்தது. யாரோ தோளில் தட்டியது போல் உணர்ந்து திரும்பிப் பார்த்தால் நிலா நீல நிற டி சர்டில். இங்கே என்ன செய்கிறாய் என்றேன். சும்மா வாக்கிங் வந்தேன் என்று சொல்லி விட்டு வானில் ஏறித் தேய ஆரம்பித்தது. அம்மா சொன்னாL, அம்மாவசை அன்னைக்கு வெளியே போகதேன்னு சொன்னா கேட்டியா ? என்று

    கவிதை நல்லாருக்கா சார்

    ReplyDelete
  7. [url=http://buyonlineretinanow.com/#jrhwy]buy retin a cream[/url] - retin a online , http://buyonlineretinanow.com/#hzayy cheap retin a

    ReplyDelete