Wednesday, November 7, 2012

அஞ்சறைப்பெட்டி 8/11/2012


உள்ளுரில் இருந்து உலகம் வரை........


ஒரு ஆண்டுக்கு 6 சிலிண்டர் தான் கொடுப்பார்களாம் அப்ப இரண்டு மாதத்திற்கு ஒரு சிலிண்டர் என்ற கணகில் தருகின்றனர். இதனால் இலபாம் அடைவது நிச்சயம் அரசாங்கம் அல்ல. கேஸ் விற்பனையாளர்கள் தான் ஏற்கனவே நஷ்டம் நஷ்டம் என்று பெட்ரோல் டீசல் விலையை உயர்த்துகின்றனர். ஆனால் ஆண்டு இறுதியில் அந்த நிறுவனங்கள் எல்லாம் எப்படித்தான் பலகோடி இலாபங்கள் பெறுகின்றன என்பது அனைவருக்கும் புரிந்த புதிராக உள்ளது. 
உப்பைத்திண்ற நாம் தண்ணியை குடித்து தானே ஆகவேண்டும்...
  ................................................................
 தீபாவளி விற்பனை ஊரெங்கும் பின்னி எடுக்கிறது கோவையில் மாலை வேலைகளில் முக்கிய வீதிகளில் நடந்து செல்வதே பெரும் பாடாக உள்ளது அந்த அளவிற்கு மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. நண்பர் ஒருவர் 1 வாங்கினால் 1 இலவசம் என்று துண்டுகளை விற்று கொண்டு இருந்துள்ளனர் நம்மால் இலவசம் என்றதும் கூட்டத்தில் புகுந்து 10 துண்டுகள் வாங்கிவிட்டு பாக்கெட்டில் கைவிடும் போது தான் தெரிந்துள்ளது பர்ஸ் பனால் என்று ... கூட்டத்தில் பார்த்து செல்லுங்க மக்களே கொஞ்சம் ஏமாந்தீர்கள் என்றால் அப்புறம் அம்போ தான்...
..........................................................................................

மீண்டும் ஒபாமா அமெரிக்காவின் ஜனாதிபதி ஆகி உள்ளார் அவருக்கு உலகம் முழுவதும் வாழ்த்துக்கள் குவிந்து கொண்டு இருக்கும் எதோ நம்மால் முடிந்தது இந்த இணையம் மூலம் வாழ்த்துக்கள் சொல்லிக்கொள்வோம்...
................................................................................................


மதிமுகவில் எஞ்சி இருந்த ஒரே பேச்சாளர் மற்றும் தமிழகம் முழுவதும் அறிந்த சிறந்த மேடைப்பேச்சாளர் நாஞ்சில் சம்பத்தும் வெளியேருகிறார் என்பது வைகோவிற்கு மிக வருத்தமான செய்திதான். தன்னோடு வந்தவர்களில் இன்று ஒரு சிலர்தான் உள்ளனர் அவர்களையே தக்க வைக்காத இவர் எப்படி கூட்டணி கட்சிகளை தக்க வைத்து ஆட்சியை பிடிக்க முடியும்.. வைகோ சிறந்த பேச்சாளர், நேர்மையாளர், போராட்ட குணம் உள்ளவர் தான் ஆனால் தமிழகத்தில் அரசியல் நடத்துவது அவருக்கும் வெகு தூரம் என்பது என் பார்வை...
...............................................................................................



இங்கிலாந்தை சேர்ந்த பிரபல ஆண்கள் ஆடை தயாரிப்பு நிறுவனம் சமீபத்தில் ஒரு ஆய்வு மேற்கொண்டது. அப்போது ஆண்கள் எந்த வயதில் மகிழ்ச்சியாக உள்ளனர் என்று கருத்து கேட்கப்பட்டது. அதில் ஆண்கள் 37 வயதில் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பது தெரிய வந்துள்ளது.
ஏனெனில் அப்போதுதான் அன்பான மனைவியும், பெருமை படதக்க குழந்தைகளும் கிடைத்திருப்பர். மிக நெருங்கிய நண்பர்களும் கிடைப்பது இந்த வயதில்தான். எனவே, 37 வயதில்தான் ஆண்களுக்கு மிகவும் மகிழ்ச்சியான நிகழ்வுகள் அமையும்.
அதே வேளையில் வீடு, கார் போன்ற சொத்துகள் வாங்குவது, பட்டம், பதவியில் உயர்வு பெறுவது போன்றவையும் இந்த வயதில்தான் பெரும்பாலும் நிகழ்கிறது. எனவே, 37 வயதில்தான் ஆண்களுக்கு சந்தோஷமான தருணங்கள் அமைகின்றன என ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
...............................................................................................

இந்த வருட தீபாவளியை அனைவரும் தொலைக்காட்சியின் முன் அமராமல் குடும்பத்தோடு காலையில் எண்ணெய் தேய்த்துக்குளித்து புத்தாடை அணிந்து இனிப்புகள் உண்டு பட்டாசு வெடித்தும் குடும்பத்தோடு அளவாடி கொண்டாடுங்கள் என என் குடும்பம் சார்பாக அணைவரையும் வாழ்த்துகிறேன்...

இனிய தீபாவளி திருநாள் வாழ்த்துக்கள்...




தீபாவளிக்கு பட்டாசுகளை பாதுகாப்பாக வைப்பது எப்படி ??

* ராக்கெட்டுகளை பாட்டிலில் வைத்து வெடிக்கக் கூடாது.

* குடிசைப் பகுதியில் ராக்கெட் வெடிக்கக் கூடாது.

* 5 வயதுக்குட்பட்ட சிறுவர்-சிறுமிகளை பட்டாசு வெடிக்க அனுமதிக்கக் கூடாது.

* மத்தாப்புக்களை கொளுத்தும் போது கையுறை அணிய வேண்டும்.
கொளுத்தி முடிந்ததும் அவற்றை தண்ணீரில் நனைத்து தனியாக எடுத்து வைக்க வேண்டும்.

* பாக்கெட்டுகளில் பட்டாசுகளை வைக்கக் கூடாது.

* எக்காரணம் கொண்டும் பட்டாசுகளை கொளுத்தி தூக்கி எரியக்கூடாது. அப்படிச் செய்வது கிரிமினல் குற்றமாகும்.

* அணுகுண்டு வெடிகள் வெடிக்கும் போது நீண்ட குச்சி உதவியுடன் வெடிக்க வேண்டும்.

* காற்றழுத்தம் அதிகமான நேரங்களில் பட்டாசு வெடிக்கக் கூடாது.

* வீட்டுக்குள் பட்டாசை உலர வைக்கக்கூடாது.

* திறந்த வெளியில் தான் பட்டாசு வெடிக்க வேண்டும்.

* தரமான பட்டாசுகளையே வாங்கி வெடிக்க வேண்டும்.

* இறுக்கமான மற்றும் கதராடை அணிந்து பட்டாசு வெடிக்கலாம்.

* பள்ளி மற்றும் ஆஸ்பத்திரி அருகில் பட்டாசு வெடிக்க கூடாது.

* ஏதேனும் அசம்பாவிதம் ஏற்பட்டால் 101-க்கு உடனே தகவல்
தெரிவிக்க வேண்டும்.

சிறிய தீப்பொறிதான் விபத்துக்கு காரணம் என்பதை உணர்ந்து ஒவ்வொருவரும் உன்னிப்பாக செயல்பட வேண்டும்.

முடிந்த அளவிற்கு தீ விபத்துக்களை தவிர்ப்போம்... தவிர்ப்பது நம் கையில் தான் உள்ளது...
தகவல்


லண்டனைச் சேர்ந்த கட்டிடக்கலை நிபுணரான ஜேக் மன்றோ அனைத்து வகையான செங்கற்களையும் கொண்டு கட்டிடங்களை வடிவமைப்பதில் கைதேர்ந்தவர். கட்டுமானத்தில் அடிக்கடி புதுமையை புகுத்தி வரும் இவர் தற்போது சர்ச்சைக்குரிய, அதே சமயத்தில் நினைத்தாலே அறுவறுக்கத்தக்க ஒரு செங்கல்லை தயாரித்துள்ளார்.

26 வயதான ஜேக் மன்றோ, விலங்குகளை வெட்டி இறைச்சி தயாரிக்கும் தொழிற்கூடங்களில் இருந்து ரத்தத்தை ஒட்டுமொத்தமாக வாங்கி அதனுடன் மணலை கலந்து செங்கல் போன்று தயாரித்து, அவற்றை மின்அடுப்பில் 70 டிகிரி வெப்பநிலையில் சுமார் ஒரு மணி நேரம் வேக வைத்து பதப்படுத்துகிறார். ஒவ்வொரு ரத்த செங்கல் தயாரிப்பதற்கும் அவர் 35 லிட்டர் ரத்தத்தை பயன்படுத்துகிறார்.

இதுபற்றி ஜேக் கூறுகையில், ‘இந்த செங்கல் தண்ணீர் புக முடியாத அளவுக்கு மிகவும் கெட்டியாக உள்ளது. இரும்பு கம்பிக்குப் பதில் இதனை பயன்படுத்த முடியும். மேலும் இந்த செங்கற்களைக் கொண்டு எகிப்தில் முன்மாதிரியான ஒரு கட்டுமானத்தை நிர்மாணிக்க திட்டமிட்டிருக்கிறேன். இருப்பினும் இந்த செங்கற்களைகொண்டு வீடு கட்டினால் அதில் மக்கள் வசிக்க விரும்புவார்களா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்’ என்றார்.

எனினும், வளர்ச்சியடையாத நாடுகளில் மண் கற்களுக்குப் பதில் ரத்த செற்கற்களை பயன்படுத்துவார்கள் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

சுருக்கமாக சொல்லப்போனால், ரத்தத்தை சமைத்து உருவாக்கிய இந்த சிவப்பு செங்கற்கள் பற்றி நினைத்தாலே நிச்சயம் தலை சுற்றும்.


அறிமுக பதிவர்

இந்த வார அறிமுக கதம்ப மாலை என்ற பெயரில் சாய்ரோஸ் என்பவர் எழுதி வருகிறார் இவரின் ஒவ்வொரு கவிதைகளும் நிகழ்வுகளை அற்புதமாக எடுத்துக்காட்டுகின்றன.

http://jeevanathigal.blogspot.com/

 
தத்துவம்
 தோல்விகள் எல்லாம் தோல்விகள் அல்ல;  தென்னங்கீற்றின் வீழ்ச்சிதான் தென்னை மரத்தின் வளர்ச்சி.

வாழ்க்கையில் நீ சந்திக்கும் ஒவ்வொரு மனிதனும் உனக்கு ஆசான்.அவனிடம் நீ கற்றுக்கொள்ள ஏதாவது இருக்கும்.

வெற்றியை சிந்தியுங்கள், வெற்றியை உருவகப்படுத்திப் பாருங்கள்,வெற்றியை உருவாக்குவதற்கு தேவையான சக்தி உங்களிடம் செயல்படத் தொடங்கும்

11 comments:

  1. உங்களின் வயது முப்பத்தேழு ஆச்சா? :P

    தகவல்கள் அனைத்தும் சூவாரிஸ்யம். தீபாவளி வாழ்த்துகள்.

    ReplyDelete
  2. ரத்த செங்கல் என்ன ஒரு யோசனையோ? வைகோ கட்சியினை விஜயகாந்த் கட்சியுடன் சேர்த்து விடலாம்.

    ReplyDelete
  3. தீபாளி வாழ்த்துக்கள்.

    ரத்த செங்கல் அறுவறுப்பா தான் இருக்கு.

    ReplyDelete
  4. நல்ல தகவல்கள் , பகிர்ந்ததற்கு நன்றி

    ReplyDelete
  5. சிலிண்டர் உபயோகம் ஒரு குடும்பத்திற்கு என்று முன் வைக்கப்படும் கருத்தில், இந்தியாவில் கூட்டு குடும்பம் கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்டதா ? ரேசன் கார்டு மூலமே சிலிண்டர் கண்ரோல் செய்யப்படுவதாக இருக்கும் பட்சத்தில் பெரிய குடும்பத்திற்கு இந்த வரையறை எப்படி போது மானதாக இருக்கும். உங்களை போல் எனக்கும் ஒரு டவுட்டு நாம் இந்தியாவில் தான் இருக்கிறோமா ?

    ReplyDelete
  6. //தென்னங்கீற்றின் வீழ்ச்சிதான் தென்னை மரத்தின் வளர்ச்சி.

    வாழ்க்கையில் நீ சந்திக்கும் ஒவ்வொரு மனிதனும் உனக்கு ஆசான்.அவனிடம் நீ கற்றுக்கொள்ள ஏதாவது இருக்கும்.// உண்மை அருமை

    ReplyDelete
  7. அதிபர் ஒபாமாவுக்கு வாழ்த்துக்கள்.
    த்த்துவங்கள் அருமை.அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள்..

    ReplyDelete
  8. மச்சி..கமெண்ட் லாம் வருது...நிறைய...அப்புறம் 37 ஆச்சு தானே உங்களுக்கு..

    ReplyDelete
  9. தீபாவளி நல்வாழ்த்துக்கள்..

    ReplyDelete
  10. வைகோ பற்றிய என் கருத்தும் அதே! தமிழக அரசியலுக்கு அவர் லாயக்கல்ல! தகவல்கள் சிறப்பு!

    ReplyDelete
  11. தத்துவங்கள் அருமை...

    தீபாவளி நல்வாழ்த்துக்கள்...

    ReplyDelete