Wednesday, October 10, 2012

அஞ்சறைப்பெட்டி 11/10/2012


உள்ளுரில் இருந்து உலகம் வரை........
 
தற்போதைய மிகப்பெரிய பிரச்சனை முதலில் மின்வெட்டு மின்சாரம் இல்லை என்றால் எந்த தொழிலும் செய்வது இயலாத காரியம் என்பது அனைவரும் அறிந்ததே இருந்தாலும் தினமும் 14 மணி நேரம் மின்சாரம் இல்லாமல் இருப்பது நிச்சயம் வேற்று கிரகத்தில் இருப்பது போலத்தான். இரவுகளில் கொசுக்கடியில் தூங்காமல் இருப்பது ரொம்ப வேதனையான ஒன்று தான்... என்று விடிவுகாலம் பிறக்குமோ...
..............................................................................................

காவிரி நீரை திறந்து விட்டு விட்டு மீண்டும் அடைத்தது ரொம்ப கேவலமான ஒன்று அதைவிட அதற்காக கர்நாடக மத்திய அமைச்சர்கள் பிரதமருக்கு கடிதம் எழுதுகிறார்கள்.. இங்க தமிழக மக்கள் ஓட்டு போட்டு தேர்தெடுத்த மத்திய அமைச்சர்கள் அதைப்பற்றி பேச்சையேக் காணம் அவர்களை விட இங்கு தான் மத்திய அமைச்சர்கள் அதிகம் ஆளுக்கு ஒரு கடிதம் எழுதி இருந்தால் மக்களாவது சந்தோசமடைந்துருப்பர்.. என்ன செய்வது தமிழனின் தலைவிதி...
..........................................................................................



உலக கோப்பை 20 / 20 மேட்ச் பார்த்துக்கொண்டு இருக்கும் போது இலங்கை அடித்துவிடுவார்களோ என்று கொஞ்சம் தயக்கத்துடன் பார்த்து வந்ததேன்.. நமது இந்தியா அணிக்கு அப்புறம் எனக்கு பிடித்த அணி வெஸ்ட் இண்டியன்ஸ் தான் விவியன் ரிச்சட்ஸ், ரிச்சி ரிச்சட்ஸ், அம்புரோஸ், வால்ஸ், கூப்பர், லாரா, சந்திரப்பால் என எனக்கு பிடித்த வீரர்கள் நிறைய உண்டு அந்த அணியில். ரொம்ப வருடங்களுக்கு அப்புறம் இறுதி போட்டிக்கு வந்ததால் அவர்கள் தான் வெற்றி பெற வேண்டும் என விரும்பினேன்..

இலங்கை கொஞ்சம் பாமில் இருப்பதால் சந்தேகமாக இருந்தது ஆனால் இறுதி போட்டியை காண வந்திருந்து அவர்களின் சனாதிபதியை பார்த்ததும் நிச்சயம் அவர்களுக்கு தோல்வி தான் என்று என் மனசு சொல்லுச்சு அது போலவே நடந்தது... சிகப்பு கலர் பிடிச்ச அவர் எங்கே இறுதி போட்டிக்கு போனாலும் எதிர் அணியினர் மிக்க சந்தோசமாக இருக்கலாம் இனி....

................................................................................................

 
 
பல ஆண்டுகளுக்கு முன்பு தயாரிக்கப்பட்ட விஸ்கிகளை ஸ்காட்லாந்தின் எடின்பர்க்கில் உள்ள பொன் ஹாம்ஸ் நிறுவனம் ஏலம் விடுகிறது. அதில் 12 வகை விஸ்கிகள் இன்று ஏலத்திற்கு வருகின்றன.

ஜலே தீவில் 55 ஆண்டுக்கு முன்பு அதாவது 1957-ல் தயாரிக்கப்பட்ட விஸ்கி பழமையானது. இந்த விஸ்கி பாட்டில் குறைந்தது ரூ.85 லட்சத்தில் இருந்து அதிகபட்சமாக ரூ.1 கோடியே 25 லட்சம் வரை ஏலம் போகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த விஸ்கி பலவகை சுவை கொண்டது. இதை குடிக்கும்போது முதலில் அத்திப்பழம், உப்பு, புளு பெர்ரி மற்றும் பூகலிப்டஸ் போன்றவற்றின் சுவை தெரியும். பின்னர் சாக்லெட் மற்றும் திராட்சையின் சுவையை அறிய முடியும். இந்த விஸ்கியை குடித்த பின்னரும், பெருஞ்சீரகத்தின் சுவை நீண்ட நேரம் நாவில் இருக்கும். எனவேதான் இதற்கு அதிக கிராக்கி உள்ளது.

ஆகவே பெரிய தொகைக்கு ஏலம் போகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

...............................................................................................


தோல் புற்று நோயை குணப்படுத்த தற்போது புதிய வகை கிரீம் மருந்தை ஆஸ்திரேலிய நிபுணர்கள் கண்டுபிடித்துள்ளனர். தோல் புற்று நோயின் ஆரம்ப அறிகுறியான ‘மெலனோமா’ என்றழைக்கப்படும் கருப்பு நிற கட்டிகளால் பாதிக்கப்பட்டவர்களிடம் மெல்போர்ன் ‘ஆர்.எம்.ஐ.டி’ பல்கலைக்கழக நிபுணர்கள் இந்த கிரீம் மூலம் சிகிச்சை மேற்கொண்டனர்.
 
அதில், நல்ல முன்னேற்றம் காணப்பட்டது. தோல் புற்று நோயின் தாக்கம் குறைந்திருந்தது. அந்த ‘கிரீம்’ மருந்தில் உள்ள ரசாயன வேதி பொருள் புற்று நோயை உருவாக்கும் வைரஸ் கிருமிகளையும், புற்று நோய் ‘செல்’களையும் அழிக்கும் திறன் கொண்டது. இந்த மருந்தினால் நோய் பாதிக்காத மற்ற ‘செல்’களுக்கு பாதிப்பு எதுவும் ஏற்படவில்லை. எனவே தோல் புற்று நோயை குணப்படுத்தும் அரிய மருந்தாக இந்த ‘கிரீம்‘ விளங்கும் என நிபுணர் டாக்டர் தக்ரீத் இஸ்டிவான் தெரிவித்துள்ளார். 

...............................................................................................

 
இங்கிலாந்தில் உள்ள லிவர்பூல் நகரை சேர்ந்தவர் ஆலிவியா மேன்னிங். 12 வயதான இவள் இளம் வயதிலேயே மிகவும் அறிவாளியாக திகழ்கிறாள். உலகிலேயே மிகவும் பழமையான, மிகப்பெரிய அறிவு திறன் சமூக நிறுவனமான 'மென்சா' சமீபத்தில் அறிவு திறன் போட்டி நடத்தியது.
 
அதில் பங்கேற்ற அவள் 162 மதிப்பெண்கள் பெற்றாள். அறிவியல் அறிஞர்கள் ஐன்ஸ்டீன் மற்றும் ஸ்டீபன் ஹாக்கிங்கை விட இவள் 2 மதிப்பெண்கள் அதிகம் பெற்று அவர்களை விட அறிவு திறன் பெற்றவர் என்ற சாதனை படைத்துள்ளார்.
 
இதனால் உலகில் அதிக நுண்ணறிவு கொண்டவர்களின் பட்டியலில் முதலிடம் பிடித்து இருக்கிறாள். மேலும் 'மென்சா'வில் இணையும் வாய்ப்பையும் பெற்று இருக்கிறாள்.


தகவல்
 
 
உயிரினங்கள் வாழமுடியுமா என ஆய்வு நடத்த அமெரிக்காவின் நாசா விண்வெளி மையம் செவ்வாய் கிரகத்துக்கு கியூரியாசிட்டி என்ற ஆய்வுக்கூட விண்கலத்தை அனுப்பியுள்ளது.

2 ஆண்டுகள் அங்கு தங்கி ஆய்வு மேற்கொள்ள இருக்கும் அந்த விண்கலம் தற்போது பல அரிய சாதனைகளை நிகழ்த்தி வருகிறது. பாறையை வெட்டி எடுத்து போட்டோக்களை அனுப்பியது. மற்றும் செவ்வாய் கிரகத்தின் தோற்றத்தை பல கோணங்களில் படம் எடுத்து அனுப்பி வருகிறது.

இந்த நிலையில், கியூரியாசிட்டி விண்கலம் கடந்த 8-ந்தேதி எடுத்து அனுப்பிய போட்டோவில் செவ்வாய் கிரக மண்ணில் ஒரு ஒளிரும் பொருள் உள்ளது. அது என்னவாக இருக்கும் என விவாதம் தற்போது நடந்து வருகிறது. இது விண்கலத்தில் இருந்து கழன்று விழுந்த அதன் ஒரு பாகமாக இருக்கலாம் என்று நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

அதே நேரத்தில் ஆய்வு செய்தபோது கியூரியாசிட்டியின் 7 அடி நீளமுள்ள ரோபோட் கரங்களின் வெளிச்சம் மண்ணில் விழுந்திருக்கலாம். அதன் நிழல் ஒளிரும் அதிசய பொருள் போன்று தெரிகிறது என்று மற்றொரு தரப்பினரும் கூறுகின்றனர்.

எது எப்படியிருப்பினும் அதுகுறித்த தீவிர ஆய்வு நடைபெற்று வருவதாக கியூரியாசிட்டி விண்கலத்தின் ஆய்வுக்குழு தெரிவித்துள்ளது.

அறிமுக பதிவர்
 
இந்த வார அறிமுக பதிவர் நிஜமாகும் நிழல்கள் என்ற பெயரில் விஷ்ணு என்பவர் எழுதி வருகிறார். இவரது கவிதைகள் ஒவ்வொன்றும் காதல் மொழிகள் பேசுகிறது..

http://www.vichu-vishnu.blogspot.in
 
தத்துவம்
 
தவறு நேர்ந்து விடுமோ என்று அஞ்சி அஞ்சி எந்த செயலையும் செய்யாமல் பின் வாங்குவது இழிவானது.
 
உனக்கு கொடுத்த வேலையை சிறப்பாக செய்....  உயர் வாய்ப்புக்கள் தானாக வரும்....
 
அரிய சாதனைகள் அனைத்தும் வலிமையினால் செய்யப்பட்டவை அல்ல; விடாமுயற்சியினால் தான்.

17 comments:

  1. //வெஸ்ட் இண்டியன்ஸ் தான் விவியன் ரிச்சட்ஸ், ரிச்சி ரிச்சட்ஸ், அம்புரோஸ், வால்ஸ், கூப்பர், லாரா, சந்திரப்பால் என எனக்கு பிடித்த வீரர்கள் நிறைய உண்டு அந்த அணியில்.///

    இருந்தாங்க.....

    ReplyDelete
  2. அஞ்சறை பெட்டியில் உள்ள அனைத்து தகவல்களும் மிகஅருமை

    ReplyDelete
  3. புற்று நோய் பற்றிய தகவலோடு அனைத்தும் பயனுள்ளவை.

    ReplyDelete
  4. மிக அருமையான பதிவு
    வணக்கம் வளர்ந்து வரும் புதிய திரட்டி தினபதிவு
    உங்களை வரவை விரும்புகிறது
    தினபதிவு திரட்டி

    ReplyDelete
  5. ஆலிவியாவைப் பற்றிய தகவல் வியக்க வைத்தது. விஸ்கியா...? அது என்ன கலர்ல இருக்கும்? தத்துவங்கள் அனைத்தும் இம்முறை வெகு அழகு. அஞ்சறைப் பெட்டி தவறாமல் நறுமணம் வீசுகிறது.

    ReplyDelete
  6. ஐயா! சனாதிபதி ரஜ பட்சே வல்ல! இரண்டு முறை அவர் இதற்கு முன் வந்த போது இலங்கை தோற்றது.அதனால அவர் டி.வி,லதான் பாத்தாறு..மேற்கு இந்தியர்களின் ஃப்ராங்க் வொரல், அலக்சாண்டர்,கில்கிரிஸ்,ஹால், வாலண்டைன் விளையாட்டைப் பார்த்தவன் நான் .இப்பவுள்ள எந்த நாட்டு வீரர்களும் அவங்க பக்கத்துல் நிக்க முடியாது---காஸ்யபன்

    ReplyDelete
  7. பேசாம விஸ்கி இப்போ தயாரிச்சு வைச்சுட்டா நம் பேரனோ,பேத்தியோ பயனடையட்டுமே.

    ReplyDelete
  8. நல்லா குடுக்குறாங்கய்யா டீடெய்லு..
    எப்புடித்தான் புடிக்கிறாங்களோ..

    வர வர அஞ்சறைப்பெட்டி நீஈஈஈளமா போய்கிட்டு இருக்கே..

    ReplyDelete
  9. திண்டுக்கல் தனபாலன் கமெண்ட் இல்லைன்னா அது தப்பாச்சே

    ReplyDelete
  10. ஆச்சரியப்படவைக்கும் சிறுமி என அஞ்சறைப்பெட்டி நிறைந்திருக்கின்றது.

    ReplyDelete
  11. ஆஹா, நான் கூட வெஸ்ட் இண்டீஸ் தான் ஜெயிக்கணும் என்று ஆசைப்பட்டேன். :-)

    ReplyDelete
  12. அஞ்சறை பெட்டி பல்சுவை தகவல்கள் நிறைந்த பெட்டி

    ReplyDelete
  13. இங்கு 16 hours Power cut

    தத்துவங்கள் மிகவும் அருமை...

    நன்றி...

    ReplyDelete
  14. மேற்கிந்தியத் தீவுகள் கோப்பையை வென்றது மகிழ்ச்சி.

    ReplyDelete
  15. அஞ்சறைப் பெட்டி... - நல்ல தகவல்கள்.... பகிர்வுக்கு நன்றி தோழரே.

    ReplyDelete
  16. அருமையான தகவல்கள் அடங்கிய வாசனைப் பெட்டி... அஞ்சறைப் பெட்டி

    ReplyDelete