Sunday, October 16, 2011

உள்ளாட்சி தேர்தலும்... பண மழையும்...

நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் பெருமளவு பணப்புழக்கம் தடுக்கப்பட்டது. ஆனால் உள்ளாட்சி தேர்தலில் எங்கு பார்த்தாலும் பணமே மூலதனமாக கொண்டு வாக்காளர்களை நன்கு கவனிக்கின்றனர். இன்று பட்டி தொட்டி எல்லாம் பேச்சு தேர்தலிப்பற்றித்தான். தேர்தல் முடிவு வந்த பின் வெற்றி பெற்றவர் கிளம்பிவிடுவார் செலவு செய்த தொகையை சம்பாரிப்பதற்கு.

உள்ளாட்சி தேர்தலில் மாநகராட்சி, நகராட்சி, ஊராட்சி என்று பிரித்து பல பதவிகள் இருந்தாலும் கிராமப்புறங்களில் அனைவருக்கும் ஈர்ப்பு ஊராட்சி மன்ற தலைவருக்குத்தான். இந்திய அரசியல் அமைப்பில் மற்ற தலைவர்களுக்கு இல்லாத தகுதி இவருக்கு உண்டு அதுதான் செக் பவர். நமது சட்ட அமைப்பில் குடியரசுத் தலைவரை President என்று அழைக்கிறோம் அவருக்கு அடுத்து ஊராட்சி மன்ற தலைவருக்கு அந்த பெருமை உண்டு.

பச்சை மையில் கையெழுத்திடும் அதிகாரம் ஊராட்சி மன்ற தலைவருக்கு உண்டு. அதனால் தான் ஊராட்சி அமைப்பில் கவுன்சிலர், மாவட்ட கவுன்சிலர் போன்ற பதவிகள் இருந்தும் ஊராட்சி மன்ற தலைவருக்கு தான் அநேகம் பேர் வேட்பாளராக போட்டியிடுகின்றனர்.

4000 ஓட்டுக்கள் கொண்ட ஊராட்சியில் தலைவருக்காக குறைந்த பட்சம் 7 பேராவது போட்டியிடுகின்றனர். 7 பேரும் தங்கள் மாமன், மச்சான், அண்ணன், தம்பி என அனைவரையும் அழைத்து பணத்தை தண்ணீராக செலவழிக்கின்றனர் என்றால் அது மிகையாகது.

கடந்த வாரத்தில் சிலநாட்கள் மேற்கு மண்டலத்தில் சுற்றும் வாய்ப்பு கிடைத்தது எங்கு காணினும் மினி வேன்களில் வேட்பாளரது பெயருடன் இரு பக்கமும் ப்ளக்ஸ் பேனர் வண்டி மேற்கூரையில் ஸ்பீக்கர் என களை கட்டுகிறது. அதுவும் கிராமப்புறங்களில் முச்சந்திப்பு இருக்கும் அங்கு எல்லா வாகனமும் நின்று என் சின்னத்துக்கு போடுங்க என்ற குரல் விண்ணைப்பிளக்கும்.

வேட்பாளர்கள் ரொம்ப பிஸியான நேரம் மாலை 7 மணிக்கு மேல் தான் ஒவ்வொரு வீடாக சென்று வாக்கு சேகரிக்க தன்னுடன் ஒரு 50 பேரை சேர்த்துக்கொண்டு இரவு 11 மணி வரை வாக்கு சேகரித்து பின் வந்தவர்கள் அனைவருக்கும் ஒரு குவாட்டர் மற்றும் இரவு விருந்து நடைபெறுகிறது. இன்னும் வெற்றி செலவு செய்பவர்கள் கிடாவிருந்து நடத்துகின்றனர்.

ஒரு சில  வேட்பாளர்கள் தன் வீட்டருகே பந்தலிட்டு அதில் டேபிள் சேர் போட்டு எப்போது யார் அந்த பக்கம் வந்தாலும் உட்கார வைத்து விருந்திட்டு கையில் ஒரு குவாட்டர் கொடுத்து எங்களுக்கே உங்கள் வாக்கு என்று சத்தியம் வாங்கி அனுப்புகின்றனர். தங்களது ஊராட்சியில் உள்ள குக்கிராமங்களை பிரித்து தினமும் ஒரு ஊரில் உள்ள மக்களை அழைத்து அனைவருக்கும் கிடா விருந்து வைத்து ஓட்டு கேக்கின்றனர்.
 
பல இடங்களில் பரிசுப்பொருட்கள் கொடுத்து வாக்கு கேட்டால் மக்கள் கூச்சப்படாமல் வாங்கி மகிழ்கின்றனர். பொதுமக்களைப் பொறுத்த வரை கிடைத்தவரை இலாபம் என்று உற்சாகமாகத்தான் இருக்கின்றனர். வேட்பாளர்கள் பெண்கள் ஆராத்தி எடுக்கும் போது பணம் கொடுத்து வாக்கு சேகரித்தல் அனைத்து இடங்களிலும் நடக்கும்.
வாக்காளர்கள் உள்ளாட்சி தேர்தலால் சட்டமன்ற தேர்தலில் கிடைக்காத அனைத்தும் இப்போது கிடைக்கின்றது என்று பாகுபாடு இன்றி அனைத்து வேட்பாளர்களிடமும் உங்களுக்குத்தான் எங்கள் வாக்கு என்று சந்தோசமாக அனுபவிக்கின்றனர்.

இந்த உள்ளாட்சி தேர்தலால் அதிக இலாபம் அரசுக்குத்தான். தினமும் டாஸ்மார்க்கில் பெட்டி பெட்டியாக சரக்கு விற்பனையாகின்றது. தினமும் 100 கோடிக்கு விற்பனை ஆகிறது என்றால் கடந்த 15 நாட்களாக விற்பனை இரு மடங்கை நிச்சயம் எட்டி இருக்கும். 5 நாட்கள் டாஸ்மார்க்கு விடுமுறை என்றதும் கடைசி நாள் மட்டும் தமிழகம் முழுவதும் கிட்டத்தட்ட 100 கோடியைத்தாண்டும் விற்பனை என்கிறார்

இத்தனை பணத்தை தண்ணீராக  செலவழித்தாலும் நிச்சயம் செலவு செய்பவருக்குத்தான் உங்கள் ஓட்டா என்று மக்களிடம் பேசியதில் அறிந்தது அது எங்களுக்கு பிடித்தவர்களுக்கும் எங்கள் ஊர் முடிவு செய்யும் வேட்பாளருக்கும், யார் வந்தால் நமக்கு எளிதாக காரியம் ஆகும் என்று மக்கள் பார்த்து தான் வாக்களிக்கின்றனர்.
எவ்வளவு தான் பண மழை பெய்தாலும் மக்கள் கொடுப்பதை வாங்கிக்கொண்டு பிடித்தவருக்கு வாக்களிப்போம் என்று தெளிவாகத்தான் இருக்கின்றனர்....

12 comments:

  1. உள்ளாட்சி தேர்தல் அலசல் நல்லாருக்கு சங்கவி

    ReplyDelete
  2. அம்மாவுக்கு எதிர் பதிவு போல?

    ReplyDelete
  3. உள்ளாட்சி தேர்தல் குறித்து நல்ல பரிசீலனை.. . இறுதி வாக்கியம் நிஜம்....பாராட்டுக்கள்...

    ReplyDelete
  4. சி.பி.செந்தில்குமார் said...

    அம்மாவுக்கு எதிர் பதிவு போல?

    ஊராட்சி மன்ற தேர்தலில் கட்சி இல்லை...

    ReplyDelete
  5. நல்ல அலசல் சார்..

    வேணாம்ன்னு சொல்லுற மனசு எப்ப சார் நமக்கு வரும்?

    ReplyDelete
  6. உள்ளாட்சி தேர்தல் அலசல் நல்லாருக்கு.

    ReplyDelete
  7. ஊழலை அடி மட்ட மக்களிடம் வரை கொண்டு செல்லும் முயற்சி அருமையாக நடக்கிறது...நேர்மை கிலோ எவ்வளவு என்று கேட்க்காமல் இருக்கும் வரை ஓகே தான்

    ReplyDelete
  8. நல்ல பதிவு.பதிவில் உள்ள் நிஜங்கள் சுடுகின்றன.

    ReplyDelete
  9. எவ்வளவு தான் பண மழை பெய்தாலும் மக்கள் கொடுப்பதை வாங்கிக்கொண்டு பிடித்தவருக்கு வாக்களிப்போம் என்று தெளிவாகத்தான் இருக்கின்றனர்....//

    ஆமாம்ய்யா மக்கள் மிக தெளிவாத்தான் இருக்கிறார்கள்!!!!!

    ReplyDelete
  10. நல்ல அலசல்; சட்டமன்றத் தேர்தலை விஞ்சும் வண்ணம் பிரச்சாரம்! ரிசல்டைப் பார்ப்போம்!

    ReplyDelete
  11. thavarugalai ulagukku suttikkattum thangalin pani thodarattum.pala oodagangalin vazhiyaga anaivarukkum nadappavaigal ariyappada vendum kollaiyargal puthu vesham kondu kalathil.athu makkalin panam makkalidame serattum.kavanamai tharam parthu makkal thernthedukkattum.ambalapaduthi kayavarkalai adayalam kattungal oodagangale ithu nam bharatham .ozhukkam anaivarukkum vendum .jaihind

    ReplyDelete