உள்ளுரில் இருந்து உலகம் வரை........
கடந்த வாரம் அஞ்சறைப்பெட்டி எழுத இயலவில்லை எனது கிராமத்து திருவிழாவிற்கு சென்று 3 நாட்கள் திருவிழாவை கொண்டாடியதால் இணையத்துப்பக்கம் வரஇயலவில்லை மீண்டும் இந்தவாரத்தில் இருந்து நம் அஞ்சறைப்பெட்டி தகவல்கள் தொடரும்.
.............................. .............................. .............................. .....
நாளை., நாளை., நாளை தமிழகத்தின் அடுத்த 5 வருடத்திற்கான தலைவிதி என்ன வென்று தெரிந்து விடும் கடந்த ஒரு மாதமாக பதிவுலகம் மட்டுமின்றி அரசியல், அரசு சம்பந்தப்பட்ட அனைத்து துறையும் சப்பென்று இருந்தது தமிழகமெங்கும் அடுத்த ஆட்சி யார் யார் என்று மக்கள் அனைவரும் எதிர்பார்த்துக்கொண்டு இருந்தனர் அது நாளை தெரியும்.. யார் மீண்டும் தமிழகத்தை ஆண்டு சம்பாரிக்கப்போகிறார்கள் என்று.... .............................. .............................. .............................. .....
திருவிழாவிற்கு சென்றதன் மூலம் ஒரு புத்துணர்வு ஏற்பட்டுள்ளது மனதில் கடந்த வாரம் கிராமிய திருவிழாவை செவ்வாய் இரவு தொடங்கி வெள்ளி வரை கொண்டாடினோம் உற்றார் உறவுகளுடன்..
இந்த வருடத் திருவிழாவில் வழக்கம்போல் கரகாட்டம், நையாண்டி மேளம், குத்தாட்டம், நடன நிகழ்ச்சி என்று கண்ணுக்கு குளிர்ச்சியாக இருந்தது.
எங்க ஊர் பெரியவர்கள் புதிதாக கேரளவில் இருந்து பெண்களை இறக்கி சிங்காரி நடனம் என்று ஒரு நடனத்தை எங்கள் பகுதியில் அறிமுகப்படுத்தினஙா அற்புதமாக இருந்தது அந்த சிங்காரி நடனம். கேரள பெண்கள் ஒரு 15 பேர் மேளத்தை இசைத்துக்கொண்டே அவர்கள் ஆடிய நளினமாக ஆட்டம் காண்பவர் அனைவரைம் கொள்ளை கொண்டது..
.............................. .............................. .............................. ..............
கனிமொழி ஆஜர் ஆவரா மாட்டாரா என்ற அனைவரின் கேள்விக்கும் பதில் கிடைத்தது ஆஜர் ஆகிவிட்டார். அடுத்த தீர்ப்பு வரும் 14ம்தேதி பார்ப்போம் ஜாமீன் கிடைக்குமா கிடைக்காதா என்று....
.............................. .............................. .............................. ..............
இந்த வருடம் ப்ளஸ் 2 தேர்வில் வழக்கம்போல் பெண்களே அதிக தேர்த்தி பெற்றுள்ளவனர்.... வாழ்த்துக்கள் மகளிருக்கு...
இந்த வருடம் ஐஏஎஸ், ஐபிஸ் தேர்வில் தமிழகத்தை சேர்ந்தவர்கள் முதல் 3 இடங்களில் தேர்வாகி இருப்பது நமக்கு பெருமையான விசயம். அவர்களுக்கு என் வாழ்த்துக்கள்...
.............................. .............................. .............................. ..............
இங்கிலாந்து இளவரசர் சார்லஸ்-டயானா தம்பதியின் மூத்த மகன் வில்லியம். இவருக்கும் கேட்மிடில்டனுக்கும் சமீபத்தில் திருமணம் நடந்தது. இவர்கள் கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக காதலித்தது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் இளவரசர் வில்லியம்மின் தம்பியும், சார்லஸ்-டயானா தம்பதியின் இளைய மகனுமான ஹாரியும் காதலில் விழுந்துள்ளார். இவர் ஆலிவுட் நடிகை சார்லிஷ் தெரோன் என்பவருடன் ஊர் சுற்றி வருகிறார். இவர்கள் இருவரும் காதல் ஜோடியாக வலம் வருகின்றனர்.
நடிகை சார்லிஷ் தெரோன் தென்ஆப்பிரிக்காவை சேர்ந்தவர். அங்கு இவர் எய்ட்ஸ் நோய் தடுப்பு பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். இளவரசர் ஹாரியும் இதுபோன்ற சமூக சேவையில் ஈடுபட்டுள்ளார்.
தென்ஆப்பிரிக்காவில் அனாதைகள், ஏழைகள், சமுதாயத்தில் புறக்கப்பட்டவர்கள், எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிபுரிந்து வருகிறார். அப்போது தான் இவர்களுக்குள் நட்பு ஏற்பட்டு பின்னர் அது காதலாக மலர்ந்துள்ளதாக கூறப்படுகிறது.
இத்தனைக்கும் நடிகை சார்லிஷ் தெரோன் இளவரசர் ஹாரியை விட 9 வயது மூத்தவர். அவருக்கு 35 வயதாகிறது. ஹாரிக்கு 26 வயதே ஆகிறது. ஏற்கனவே இவர் செஸ்லி டேவி என்ற பெண்ணை நீண்ட நாட்களாக காதலித்து வந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்பு
ஜெயிக்கப் போவது யாரு...? தி.மு.க.வா? அ.தி.மு.க.வா? இந்த கேள்விக்கு நாளை பிற்பகலில் விடை தெரியும். பரீட்சை எழுதிவிட்டு தேர்வு முடிவுக்காக காத்திருக்கும் மாணவர்களை போல் பதட்டத்தில் வேட்பாளர்கள் காத்திருக்கிறார்கள்.
தகவல்
அறிமுக பதிவர்
இந்த வார அறிமுகப்பதிவர் ஸ்ரீ தேவியின் பதிவுகள் என்ற பெயரில் ஸ்ரீ தேவி என்பவர் எழுதி வருகிறார். இவரின் கவிதைகள் அனைத்தும் நேரில் நடப்பது போலவே இருக்கும் அற்புதமான வரிகளை கொண்டு எழுதி இருக்கிறார்...
http://srithought.blogspot.com/
http://srithought.blogspot.com/
தத்துவம்
அரிய சாதனைகள் அனைத்தும் வலிமையினால் செய்யப்பட்டவை அல்ல; விடாமுயற்சியினால் தான்.
“நான் எதையும் சாதிக்க வல்லவன்” என்று சொல். நீ உறுதியுடன் இருந்தால் பாம்பின் விஷம்கூட சக்தியற்றது ஆகிவிடும்.
“நான் எதையும் சாதிக்க வல்லவன்” என்று சொல். நீ உறுதியுடன் இருந்தால் பாம்பின் விஷம்கூட சக்தியற்றது ஆகிவிடும்.
நல்ல தொகுப்பு!
ReplyDeleteஇந்த வாரச் செய்திகள் வாசித்தேன் !
ReplyDelete