Monday, February 14, 2011

சிங்கை பிரபாகர் இப்ப தெடாவூர் பிரபா...


கடந்த வார இறுதியில் நெருங்கிய தோழியின் திருமணத்திற்காக பெரம்பலூர் செல்ல நானும் மனைவியும் முடிவு செய்தோம் என் இனிய பங்காளி பிரபாகரிடம் பேசியபோது எங்க ஊர் பக்கத்தில் தான் இருக்கும் வாங்க என்று அழைத்தார். துறையூர் வழியாக சென்றால் வர முடியாது என்று கூறிவிட்டு சந்திக்க முயற்சிக்கிறேன் என்றேன்.

சித்தார் சென்று விட்டு திருமணத்திற்கு செல்லலாம் என்று முடிவு செய்து இருசக்கர வாகனத்தை பவானியில் விட்டு விட்டு சேலம் , ஆத்தூர் செல்லும் போது பங்காளி ஞாபகம் வந்து போன் செய்து இந்த வழியாகத்தான் வருகிறேன் ஆனால் வீட்டுக்கு வர நேரம் இல்லை என்றேன் பரவாயில்லை என்று எனக்கு பேருந்து எங்க நிற்கும் எந்த பேருந்தில் ஏறவேண்டும் என அடிக்கடி போன் செய்து எங்கே இருக்கறீங்க என்றார். கெங்கவல்லி தாண்டியதும் இன்னும் 10 நிமிடத்தில் எங்க ஊரைக்கடந்து விடுவீர்கள் என்றார்.

தெடாவூர் வந்ததும் அங்கு மூன்று இடத்தில் பேருந்து நிற்கும் என்றார்கள் இரண்டவாது பேருந்து நிலையத்தில் திடீரென பேருந்தில் ஏறி என்னையும், என் மனைவியையும் ஆச்சர்யப்படுத்தினார். எனக்கு மிக மிக மகிழ்ச்சி ஒரு போன் தான் செய்தோம் வீட்டுக்கு வர இயல வில்லை என்றோம் நம்மை சந்திப்பதற்காக பேருந்தில் ஏறி இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தினார். பேருந்தில் ஏறியதும் எங்க மகன் என்றார் நாங்க இரண்டு பேர்தான் வந்தோம் என்றார் அவர் ஊரில் இருந்து ஒரு 7 கிலோமீட்டர் எங்களுடன் பயணம் செய்து எதிர்பாராத இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தினார் என் பங்காளி.

வலைப்பூ மூலம் நண்பராகி அப்புறம் பேச பேச என் பங்காளி ஆகி வாரம் ஒரு முறை தொலைபேசியில் பேசி கடந்த ஈரோடு சங்கமத்தில் சந்தித்தது எல்லாம் இந்த வலைப்பூவின் நட்பால் எதிர்பார்க்கவில்லை பங்காளி இந்த அளவிற்கு எங்களை மகிழ்ச்சியில் தில்லாட வைப்பீர்கள் என்று.

சிங்கையில் இருந்த நண்பர் இப்ப வீட்டுக்கு வந்ததும் குடும்பத்தின் மேலும் தன் மகனின் அன்பாலும் மீண்டும் சிங்கை செல்லவில்லை இங்கேயே இருந்து மகனுடன் நேரம் செலவழிக்கிறேன் என்று சொன்னது மிக்க மகிழ்ச்சியாக இருந்தது சிங்கை பிரபாகராக இருந்து இனி தெடாவூர் பிரபாவாக மாறிவிட்டார்.

பிரபாரவை சந்தித்தும் என் மனைவி என்னிடம் நம்ம ஊர் வழியாக யாராவது வந்தால் நிச்சயம் வீட்டுக்கு வாங்க என்போம் நேரம் இல்லை அடுத்த முறை வருகிறேன் என்றால் சரிங்க என்போம் இல்லை எனில் பேருந்து நிலையத்தில் நின்று கை அசைப்போம் ஆனால் இவர் தனது குழந்தைகளை விட்டு நம்மை சந்திப்பதற்காக பேருந்தில் ஏறி சந்தித்து ஆச்சசர்யப்படுத்தினார் நிச்சயம் நாம் இதை செய்திருக்க மாட்டோம் இப்படி எல்லாம் இணையத்தின் மூலம் நண்பர்கள் கிடைப்பார்களா என்றால் ஆச்சர்யந்தான்.

என் பங்காளி தெடாவூர் பிரபாவிற்காக இப்பதிவு...

26 comments:

  1. நாங்களும் வாங்குவோமில்ல..

    ReplyDelete
  2. திடீரென பேருந்தில் ஏறி என்னையும், என் மனைவியையும் ஆச்சர்யப்படுத்தினார். எனக்கு மிக மிக மகிழ்ச்சி ஒரு போன் தான் செய்தோம் வீட்டுக்கு வர இயல வில்லை என்றோம் நம்மை சந்திப்பதற்காக பேருந்தில் ஏறி இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தினார். ///
    பங்காளிடா!!! நண்பேன்டா ஸ்டைலில் படிக்கவும்..

    ReplyDelete
  3. நாங்க ஓட்டும் போடுவோமில்ல..

    ReplyDelete
  4. வாழ்த்துக்கள்..
    .com லும் முன்னனி வதிவராக வர வாழ்த்துகிறேன்..

    ReplyDelete
  5. //சிங்கையில் இருந்த நண்பர் இப்ப வீட்டுக்கு வந்ததும் குடும்பத்தின் மேலும் தன் மகனின் அன்பாலும் மீண்டும் சிங்கை செல்லவில்லை இங்கேயே இருந்து மகனுடன் நேரம் செலவழிக்கிறேன் என்று சொன்னது மிக்க மகிழ்ச்சியாக இருந்தது சிங்கை பிரபாகராக இருந்து இனி தெடாவூர் பிரபாவாக மாறிவிட்டார்.
    //

    தம்பி பிரபாகர் எங்கிருந்தாலும் வாழ்க !

    :)

    ReplyDelete
  6. நாங்களும் பார்த்திட்டோமில்லே....? :-))

    ReplyDelete
  7. >>>>
    வலைப்பூ மூலம் நண்பராகி அப்புறம் பேச பேச என் பங்காளி ஆகி வாரம் ஒரு முறை தொலைபேசியில் பேசி கடந்த ஈரோடு சங்கமத்தில் சந்தித்தது எல்லாம் இந்த வலைப்பூவின் நட்பால் எதிர்பார்க்கவில்லை பங்காளி இந்த அளவிற்கு எங்களை மகிழ்ச்சியில் தில்லாட வைப்பீர்கள் என்று.

    நாமும் டெயிலி பேசிட்டுதான் இருக்கோம்.. ஹி ஹி

    ReplyDelete
  8. நண்பர்களை எதிர்பாராதவிதமாக சந்திப்பது மகிழ்ச்சி,அவர்கள் தேடி வந்து ,நமக்காக மெனக்கெட்டு சந்தித்தால் இன்னும் மகிழ்ச்சி. உங்கள் நட்பு தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  9. super
    பதிவுலகம் கொடுத்த நட்பு வாழ்க

    ReplyDelete
  10. nice sharing shangavi..

    ReplyDelete
  11. தொடரட்டும் உங்கள் நட்பூ

    ReplyDelete
  12. என்ன பங்காளி... சந்தித்ததை இடுகையாய் எழுதி அன்பால் குளிப்பாட்டிட்டீங்க!... உம் அன்பிற்கு நன்றி...

    பிரபாகர்...

    ReplyDelete
  13. சந்திப்புகளை அழகாக பகிர்ந்து கொண்டமைக்கு வாழ்த்துக்களும் நன்றிகளும் :)

    ReplyDelete
  14. பதிவுலகம் கொடுத்த நட்பு.

    ReplyDelete
  15. நட்பு வாழ்க..பதிவுக்கு வாழ்க!!

    ReplyDelete
  16. //அப்புறம் பேச பேச என் பங்காளி ஆகி\\

    நடந்துங்க நடத்துங்க!

    சங்கவி - பிரபாவின் நட்பிற்கு வாழ்த்துகள்!!!

    ReplyDelete
  17. இப்படிப்பட்ட இனிய நிகழ்வுகள் குறித்து படிக்கும்போதே இதயத்தில் நெகிழ்ச்சி!
    மகிழ்ச்சி!!

    ReplyDelete
  18. இதெல்லாம் பத்தாது,, இன்னும் எதிர்பார்கிறோம்

    ReplyDelete
  19. சங்கவி...நட்பு எங்களையும் மகிழ்ச்சிப்படுத்துகிறது !

    ReplyDelete
  20. எங்கள் ஒட்டு ராமதாசுக்கு

    ReplyDelete
  21. பதிவுலகம் கொடுத்த நட்பு வாழ்க

    ReplyDelete