உள்ளுரில் இருந்து உலகம் வரை........
சமீபத்தில் ஈரோடு அருகே உள்ள
வெள்ளோடு பறவைகள் சரணாலயத்துக்கு ஒரு திடீர் விசிட் அடித்தோம். அழகான ஒரு
ஏரி நடுவில் இரண்டு மரங்கள் அதில் கிட்டத்தட்ட ஒரு 9 விதமான 500
பறவைகளைப்பார்த்தோம் அமைதியாக இருந்த அந்த இடத்தில் தற்போது தண்ணீர்
குறைவாக உள்ளதால் பறவைகளின் வருகையும் குறைவாக இருக்கின்றது என்றனர். ஒரு ஒ
மணி நேரம் அமைதியாக உட்கார்ந்து பறவைகளை ரசித்தோமானால் இது 2 மணி நேரம்
ஆனாலும் நேரம் போவதே தெரியவில்லை. ஈரோட்டில் இருந்து 13 கிலோமீட்டர் தான்
ஈரோடு செல்பவர்கள் 2 மணி நேரம் கிடைத்தால் ஒரு எட்டு போய் வரவும்...
கண்ணுக்கும், மனதுக்கும் இனிமையான இடமாக காட்சி அளிக்கிறது...
............................................................ .............................. .....
ஒலிம்பிக்கில் பதக்கம் கிடைக்குமா கிடைக்காதா என்று வலைத்தளங்களில் கழுவி ஊத்திக்கொண்டு இருந்த நிலையில் நம் நாட்டைச்சேர்ந்த கதக் நரங் வெங்கலப்பதக்கம் வென்றது திருப்தி அளிக்கிறது.
100 கோடி பேர் வாழும் நம்ம நாட்டில் ஒரு பதக்கத்துக்கு தூக்கி வைத்து கொண்டாடுகிறோம்... இன்னும் நிறைய அள்ளினால்??? நமது மனமும் துள்ளும்...
............................................................ .............................. .....
இந்த வாரம் மிக சோக வாரம் தில்லியில் இருந்து வந்த இரயிலில் தீப்பிடித்து 40க்கு மேற்பட்டவர்கள் இறந்தது மிக வருந்ததக்கது. எத்தனை கனவுகளுடன் பயணித்திருப்பர். சிறு தீக்குச்சியை கண்டால் பயந்தவர்க கூட பயந்திருப்பர். நினைத்துப்பாருங்கள் அந்த உடலில் தீப்பட்டவுடன் அவர்களின் மரண ஒலத்தை கேட்பதற்கே நம் மனதில் வலிமை இல்லை அதை பார்த்தவர்களும், அந்த தீ பட்டு இறந்தவர்களையும் நினைத்தாலே கண்ணீர் வருகிறது...
............................................................ .............................. ......
மதுரை பைபாஸ் ரோடு சொக்கலிங்கநகரில், தன்னிடம் சிகிச்சை பெற்ற பிளஸ் 2 மாணவியை கற்பழித்த டாக்டர் சங்கரநாராயணன்,55, கைது செய்யப்பட்டார். "சபலத்தில் செய்துவிட்டேன்' என போலீசிடம் தெரிவித்து உள்ளார். இவரை எல்லாம் நடு ரோட்டில் நிற்க வைத்து கல்லால் அடித்து கொன்றாலும் தவறில்லை.
........................................................... .............................. ......
கடந்த சில நாட்களாக வடமாநிலங்களில் மின்சாரம்
இல்லை என்று வடநாட்டு பத்திரிக்கைகள் எல்லாம் கூப்பாடு போடுகின்றன. இங்கு
கடந்த 3 வருடங்களாக சரியாக மின்சாரம் இல்லை ஒரு நாளைக்கு 15 மணி நேரம்
மின்சாரம் இல்லாத ஊர் எல்லாம் இருக்கின்றது அப்போது கூவாத மீடியாக்கள்
எல்லாம் இப்போது கூவுகின்றன..
......................................................... .............................. ........
சீனாவில் ஒலிம்பிக் போன்ற போட்டிகளில் தங்கம் வெல்வதாற்காக சிறுவயதில் இருந்து கடுமையான கட்டாயமான பயிற்சி அளிக்கிறார்களாம் இதனால் தான் அவர்கள் போட்டியில் வெல்கிறார்கள் என்று தகவல்கள் வருகின்றன. சிறுவயதில் இருந்து பயிற்சியை மேற்கொண்டால் தான் வெற்றி வாய்ப்பு அதிகரிக்கும் என்பதால் சிறுவயதிலேயே அழைத்து சென்று ராணுவத்தில் கூட இல்லாத பயிற்சியை தந்து சிறுவர்களை வதைக்கிறார்களாம்...
கொடுமையான விசயம் பதக்கம் வாங்குவதற்காக விரும்பம் இல்லாதாவனை போட்டு தாக்கு தாக்கு என்று தாக்கி பரிசு வாங்கி என்ன லாபம்...
.............................. .............................. .............................. ........
அடுத்த ஊழல் குற்றச்சாட்டு கிராணைட் கல் மீது
அதுவும் மதுரையில் இருந்து கிளம்பி உள்ளது இதில் யார் யார் எல்லாம்
சிக்கப்போறாங்களோ.. பொறுத்திருந்து பார்ப்போம் யார் என்று...
............................................................ .............................. ........
சமீபகாலமாக இங்கிலாந்தில் குழந்தைகள் குற்றச் செயல்களில் ஈடுபடுவது அதிகரித்து வருகிறது. எனவே, இதற்கான காணரம் குறித்து அரசு சார்பில் ஒரு சர்வே நடத்தப்பட்டது. அதில் பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகின.
இன்ப உலகில் மிதப்பதற்காக அவர்கள் போதை பொருட்களை பயன்படுத்துவது கண்டறியப்பட்டுள்ளது. இந்த பழக்கம் 7 வயதில் இருந்தே தொடங்கி விடுகிறது. அப்போது கேன்னபிஸ் எனப்படும் ஒரு வகை போதை செடியை சிகரெட் போன்று வடிவமைத்து அவற்றை புகைக்கின்றனர்.
அதில் இருந்து படிப்படியாக முன்னேறி 9 வயதில் கோகைன், எஸ்டாசி போன்ற போதை பொருட்களை பயன்படுத்தும் அளவு முன்னேறுகின்றனர். 7 வயதில் தொடங்கும் இந்த பழக்கம் 56 வயது வரை தொடர்கிறது.
கோகைன், எஸ்டசி, கேன்ன பிஸ் போன்ற போதைப் பொருட்கள் சமூக விரோதிகளிடம் இருந்து பள்ளிகளிலேயே தாராளமாக கிடைக்கிறது. அதனால்தான் மிக இளம் வயதிலேயே குழந்தைகள் போதைப் பழக்கத்துக்கு அடிமையாகி கடும் குற்றச் செயல்களில் ஈடுபடுவது ஆய்வில் தெரிய வந்துள்ளது.
எனவே, சிறு வயதிலேயே குழந்தைகளை பெற்றோர் தீவிரமாக கண்காணித்து போதைப் பழக்கத்தில் இருந்து குழந்தைகளை காப்பாற்ற வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
............................................................ .............................. ........
எங்கள் ஊரின் மிக பிரபலமான திருவிழாவான குருநாதசுவாமி தேர்த்திருவிழா வருகிற 8 ம்தேதி தொடங்கி 12 ம் தேதி வரை நடைபெறுகிறது. இத்திருவிழாவோடு ஆசியாவின் மிகப்பெரிய குதிரை மற்றும் மாட்டுச்சந்தையும் நடை பெற உள்ளது. இத்திருவிழாவைப்பற்றி கடந்த இரண்டு வருடங்களாக பதிவிட்டு வருகிறேன் அப்போது நிறைய நண்பர்கள் அடுத்த வருடம் சொல்லுங்க வர முயற்சிக்கிறேன் என்றனர் அவர்களுக்காகத்தான் இவ்வரிகள்...
நண்பர்களே கிட்டத்தட்ட 1000 குதிரைகள் ஒரே இடத்தில் விற்பனைக்கு இருக்கும் யாராவது பார்க்க விரும்பினால் சனி, ஞாயிறுகளில் நான் அந்தியூரில் தான் இருப்பேன் என்னைத் தொடர்பு கொள்ளுங்கள் இதுவரை பார்க்காத ஒரு வித்தியாசமான திருவிழாவை காணலாம்...
தகவல்
மனிதனின் பரிணாம வளர்ச்சி குறித்து அகழ் வாராய்ச்சி துறை நிபுணர்கள்
இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா, பிரான்ஸ், இத்தாலி, நார்வே மற்றும்
அமெரிக்காவை சேர்ந்த நிபுணர்கள் ஆய்வு மேற்கொண்டுள்ளனர்.
தென் ஆப்பிரிக்காவில் கவாசுலு நட்டால் என்ற இடத்தில் உள்ள லெமாம்போ மலையின் அடிவாரத்தில் பார்டர் கேவ் என்ற இடத்தில் நடத்திய ஆராய்ச்சியின் போது சில ஆயுதங்கள், அணிகலன்கள் கிடைத்தன. அவை மரத்தினால் செய்யப்பட்டிருந்தது.
குழி தோண்ட பயன்படுத்தப்படும் குச்சிகள், கற்களால் ஆன ஆயுதங்கள், விஷம் தேய்க்கப்பட்ட ஆயுதங்கள், போன்றவை ஆகும். மேலும் அணிகலன்கள், நெருப்பு கோழி முட்டையின் தோடுகள் மற்றும கடல் சிப்பிகளில் இருந்து தயாரிக்கப்பட்டிருந்தன.
இவை, சுமார் 44 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு மனிதர்கள் பயன்படுத்தி இருக்க வேண்டும் என கண்டுபிடித்துள்ளனர். இந்த ஆயுதங்கள் மற்றும் நகைகள் அனைத்தும் கிட்டத்தட்ட தற்போதைய நாகரீக கால மனிதர்கள் பயன்படுத்துவது போன்று உள்ளது.
அந்த ஆபரணங்களும் நகைகளும் தற்போதைய மனிதர்களின் கலாசாரம் மற்றும் தொழில்நுட்பத்துடன் ஒத்து போகிறது. எனவே நாகரீக மனிதன் 44 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் தோன்றியிருக்க வேண்டும் என அகழ்வாராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர்.
தென் ஆப்பிரிக்காவில் கவாசுலு நட்டால் என்ற இடத்தில் உள்ள லெமாம்போ மலையின் அடிவாரத்தில் பார்டர் கேவ் என்ற இடத்தில் நடத்திய ஆராய்ச்சியின் போது சில ஆயுதங்கள், அணிகலன்கள் கிடைத்தன. அவை மரத்தினால் செய்யப்பட்டிருந்தது.
குழி தோண்ட பயன்படுத்தப்படும் குச்சிகள், கற்களால் ஆன ஆயுதங்கள், விஷம் தேய்க்கப்பட்ட ஆயுதங்கள், போன்றவை ஆகும். மேலும் அணிகலன்கள், நெருப்பு கோழி முட்டையின் தோடுகள் மற்றும கடல் சிப்பிகளில் இருந்து தயாரிக்கப்பட்டிருந்தன.
இவை, சுமார் 44 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு மனிதர்கள் பயன்படுத்தி இருக்க வேண்டும் என கண்டுபிடித்துள்ளனர். இந்த ஆயுதங்கள் மற்றும் நகைகள் அனைத்தும் கிட்டத்தட்ட தற்போதைய நாகரீக கால மனிதர்கள் பயன்படுத்துவது போன்று உள்ளது.
அந்த ஆபரணங்களும் நகைகளும் தற்போதைய மனிதர்களின் கலாசாரம் மற்றும் தொழில்நுட்பத்துடன் ஒத்து போகிறது. எனவே நாகரீக மனிதன் 44 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் தோன்றியிருக்க வேண்டும் என அகழ்வாராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர்.
அறிமுக பதிவர்
இந்த வார அறிமுக பதிவர் மழை கழுவிய பூக்கள் என்ற பெயரில் எழுதி வருகிறார் அதிசயா. இவரின் கவிதையின் ஒவ்வொரு வரிகளிலும் வார்த்தை கோர்வை பலமாக பயன்படுத்தி இருப்பார். கவிதையில் காதலை அற்புதமாக சொல்லியிருக்கிறார்....
http://athisaya.blogspot.in
தத்துவம்
தனக்கு நிகழும்வரை எல்லாமே வேடிக்கைதான்.
அதிகப் பேச்சு,பொய் இரண்டுமே நெருங்கிய நண்பர்கள்.
எச்சரிக்கை உணர்வு ஒருபோதும் தவறுக்கு துணை நிற்பதில்லை.
